என் மலர்
நீங்கள் தேடியது "வெஸ்ட் இண்டீஸ் இந்தியா தொடர்"
- வெஸ்ட் இண்டீஸ் அணியை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தாலும் அவர்களின் இடம் உறுதியாக இல்லை.
- ஐசிசி டெஸ்ட் அணிகள் தரவரிசையில் இந்திய அணி 121 ரேட்டிங் பெற்று முதலிடத்தில் உள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது நாளில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் ஜூலை 20-ந் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் தற்போது, ஐசிசி தரவரிசையின்படி, இந்தியா உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக உள்ளது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தாலும் அவர்களின் இடம் உறுதியாக இல்லை.
ஐசிசி டெஸ்ட் அணிகள் தரவரிசையில் இந்திய அணி 121 ரேட்டிங் பெற்று முதலிடத்தில் உள்ளது. அவர்களுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா 116 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது நடந்து வரும் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக களமிறங்கும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான அணி, இந்தியாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலை வகிக்கிறது. ஆஷஸ் தொடரை குறைந்தபட்சம் 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றால் முதல் இடத்தை பிடிக்கும். மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் ஜூலை 19-ம் தேதி மான்செஸ்டரிலும், நான்காவது ஆஷஸ் ஜூலை 27-ம் தேதி ஓவல் மைதானத்திலும் தொடங்கும்.
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தால், ஆஷஸ் தொடரை குறைந்தபட்சம் 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்ல வேண்டும்.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்தால், பேட் கம்மின்ஸ் தலைமையிலான அணி முதல் இடத்தைப் பெற இரண்டு வழிகள் உள்ளன.
1. ஆஷஸ் தொடரின் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்து தொடரை 2-1 என ஆஸ்திரேலியா கைப்பற்றினால்.
2. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 3-2 என வென்றால் போதுமானது.
- இரண்டாவது டெஸ்ட் போட்டி இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 100-வது சர்வதேச டெஸ்ட் போட்டி ஆகும்.
- ரேமன் ரெய்பர் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டு உள்ளார்.
குயின்ஸ் பார்க் ஓவல்:
வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி முடிவைடைந்தது. அதில் இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது. அந்த போட்டிக்கான 13 வீரர்கள் கொண்ட குழுவை வெஸ்ட் இண்டீஸ் இன்று அறிவித்து உள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் மோசமாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ரேமன் ரெய்பர் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டு உள்ளார். அவர் 3-வது வரிசையில் பேட்டிங் செய்து 2 மற்றும் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவருக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் தேர்வுக் குழு, புதுமுக வீரர் ஆல்-ரவுண்டர் கெவின் சின்க்ளேரை 2-வது டெஸ்ட்டிற்கு தேர்வு செய்து உள்ளது. கெவின் சின்க்ளேருக்கு இதுதான் முதல் சர்வதேச டெஸ்ட் ஆகும்.
2-வது டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம் பின்வருமாறு:-
கிரெய்க் பிராத்வைட் (கேப்டன்), அலிக் அதானாஸ், ஜெர்மைன் பிளாக்வுட், டேகனரைன் சந்தர்பால், ரக்கீம் கார்ன்வால், ஜோசுவா டா சில்வா, ஷானன் கேப்ரியல், ஜேசன் ஹோல்டர், அல்ஸாரி ஜோசப், கிர்க் மெக்கென்சியர், கெமர் ரோச்,கெவின் சின்க்ளேர் மற்றும் ஜோமல் வாரிக்கன்.
இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 100-வது சர்வதேச டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
- 2-வது டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் சுழற்பந்து வீரர் சின்கிளேர் சேர்க்கப்பட்டு உள்ளார்.
- பிராத்வெயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்த டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.
போர்ட் ஆப் ஸ்பெயின்:
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 2 டெஸ்ட் தொடரில் டொமினிகாவில் நடந்த முதல் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நாளை (20-ந் தேதி ) தொடங்குகிறது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த டெஸ்டிலும் வென்று தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. முதல் டெஸ்டில் 3 தினத்திலேயே இந்திய அணி வெஸ்ட் இண்டீசை சுருட்டி வீசி இருந்தது. இந்தியாவின் ஆதிக்கம் இந்த டெஸ்டிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பலவீனமான வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்தியா சாதித்தது. ஜெய்ஷ்வாலின் பேட்டிங்கும், அஸ்வினின் பந்துவீச்சும் அபாரமான வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
ஜெய்ஷ்வால் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார். அவர் அறிமுக டெஸ்டிலேயே 171 ரன் குவித்து சாதனை புரிந்தார். இதேபோல கேப்டன் ரோகித் சர்மா (103 ரன்), விராட் கோலி ஆகியோரும் பேட்டிங்கில் சாதித்தனர்.
அஸ்வின் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தார். அவர் 12 விக்கெட்களை வீழ்த்தி (முதல் இன்னிங்ஸ் 5+ இரண்டாவது இன்னிங்ஸ் 7) முத்திரை பதித்தார். வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் அஸ்வின் 2-வது டெஸ்டிலும் ஆதிக்கம் செலுத்துவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இதேபோல ஜடேஜாவும் சிறப்பான நிலையில் உள்ளார்.
When in Trinidad, you do not miss catching up with the legendary Brian Lara ??#TeamIndia | #WIvIND | @BrianLara pic.twitter.com/t8L8lV6Cso
— BCCI (@BCCI) July 19, 2023
நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது. ஒருவேளை வேகப்பந்து வீரர் ஜெய்தேவ் உனட்கட் நீக்கப்பட்டால் நவ்தீப் சைனி அல்லது புதுமுக வீரர் முகேஷ் குமார் இடம் பெறலாம்.
பிராத்வெயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்த டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. இதில் தோற்றால் அந்த அணி தொடரை இழந்து விடும். இதனால் வெற்றிக்காக வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மிகவும் கடுமையாக போராட வேண்டும்.
அந்த அணி 2002-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியை டெஸ்டில் வீழ்த்தியது கிடையாது.
2-வது டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் சுழற்பந்து வீரர் சின்கிளேர் சேர்க்கப்பட்டு உள்ளார். ஆல் ரவுண்டர் ரேமேன் ரீபெர் நீக்கப்பட்டுள்ளார்.
நாளை டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
- டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பிராத்வெயிட் பவுலிங் தேர்வு செய்தார்.
- இந்திய அணியில் முகேஷ் குமார் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிறார்.
டிரினிடாட்:
இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டிரினிடாடில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பிராத்வெயிட் பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் முகேஷ் குமார் அறிமுக வீரராக களமிறங்குகிறார்.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் இருவரும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.
இந்தியா அணி விவரம் பின்வருமாறு:
ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ரகானே, ரவீந்திர ஜடேஜா, இஷான் கிஷன், அஸ்வின், முகேஷ் குமார், ஜெய்தேவ் உனத்கட், முகமது சிராஜ்.
வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம் பின்வருமாறு:
கிரெய்க் பிராத்வைட் (கேப்டன்), அலிக் அதானாஸ், ஜெர்மைன் பிளாக்வுட், டேகனரைன் சந்தர்பால், ஜோசுவா டா சில்வா, ஷானன் கேப்ரியல், ஜேசன் ஹோல்டர், அல்ஸாரி ஜோசப், கிர்க் மெக்கென்சி, கீமர் ரோச், ஜோமல் வாரிக்கன்.
- டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.
- இந்திய கேப்டன் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோர் அரை சதமடித்தனர்.
டிரினிடாட்:
இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டிரினிடாடில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் முகேஷ் குமார் அறிமுக வீரராக களமிறங்குகிறார்.
அதன்படி, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் இருவரும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் பொறுப்புடன் ஆடினர். கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் அரை சதமடித்து அசத்தினர்.
முதல் நாள் உணவு இடைவேளை வரை இந்தியா விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் எடுத்துள்ளது.
- இந்தியா முதல் நாள் முடிவில் 288 ரன்கள் எடுத்திருந்தது.
- தொடர்ந்து ஆடிய விராட் கோலி சதமடித்தார்.
டிரினிடாட்:
இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டிரினிடாடில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீரர்களான ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோர் அரை சதமடித்து அசத்தினர். ரோகித் சர்மா 80 ரன்னும், ஜெய்ஸ்வால் 57 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
முதல் நாள் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 87 ரன்னும், ஜடேஜா 36 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. விராட் கோலி சிறப்பாக ஆடி சதமடித்து அசத்தினார். ஜடேஜாவும் அரை சதமடித்தார்.
500- வது சர்வதேச போட்டியில் விளையாடும் விராட் கோலி சதமடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய அணி முதல் இன்னிங்சில் 438 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 255 ரன்கள் எடுத்துள்ளது.
டிரினிடாட்:
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டிரினிடாடில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 438 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடி சதமடித்த விராட் கோலி 121 ரன்னில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 80 ரன்னும், ஜடேஜா 61 ரன்னும், யஷஸ்வி ஜெய்ஷ்வால் 57 ரன்னும், அஷ்வின் 56 ரன்னும் எடுத்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச், வாரிகன் தலா 3 விக்கெட்டும், ஹோல்டர் 2 விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. பிராத்வெய்ட் 75 ரன்கள் எடுத்தனர். அலிக் 37 ரன்னும், சந்தர்பால் 33 ரன்னும், மெக்கென்சி 32 ரன்னும் எடுத்தனர். மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது தடைப்பட்டது. 3ம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிராஜின் பந்துவீச்சில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில 255 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 183 ரன்கள்
முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா சார்பில் சிராஜ் 5 விக்கெட்டும், முகேஷ்குமார், ஜடேஜா தலா 2 விக்கெட்டும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
- ஜெயவர்தனே 29 முறை தொடர்ச்சியாக இரட்டை இலக்க ரன்னை கடந்திருந்தார்
- ரோகித் சர்மா கடந்த 2021-ல் இருந்து ஒற்றையிலக்க ரன்னில் அவுட்டாகவில்லை
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 438 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் 255 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
2-வது இன்னிங்சில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 365 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 4-வது நாள் ஆட்டம் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதல் இன்னிங்சில் 80 ரன்களும், 2-வது இன்னிங்சில் 57 ரன்களும் சேர்த்தார்.
இதன்மூலம் தொடர்ச்சியாக 30 இன்னிங்சில் இரட்டை இலக்க ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் கடந்த 2021-ம் ஆண்டில் இருந்து இரட்டை இலக்க ரன்களுக்கு கீழ் அடித்தது கிடையாது.
இதற்கு முன் இலங்கை வீரர் ஜெயவர்தனே 2001-02-ல் 29 இன்னிங்சில் இரட்டை இலக்க ரன்கள் அடித்திருந்தார்.
1951-53-ல் லென் ஹட்டன் 25 முறையும், 1961-65-ல் ரோஹன் ரஹ்காய் 25 முறையும, ஜெயவர்தனே 2002-2004-ல் 24 முறையும், 2012-14-ல் டி வில்லியர்ஸ் 24 முறையும் தொடர்ச்சியாக இரட்டை இலக்க ரன்களை சேர்த்திருந்தனர்.
- சர்வதேச கிரிக்கெட்டில் 712 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்
- வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 75 டெஸ்ட் விக்கெட்
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் டிரினிடாட்டில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். 2-வது இன்னிங்சில் இதுவரை வீழ்ந்த இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியதன் மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
கபில்தேவ் 89 விக்கெட்டுகளுடன் முதல் இடம் பிடித்துள்ளார். அஸ்வின் 75 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். கும்ப்ளே 74 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 2-வது பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அனில் கும்ப்ளே 956 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார். அஸ்வின் 712 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.
ஹர்பஜன் 711 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். கபில்தேவ் 687 விக்கெட்டுகளுடன் 4-வது இடத்தில் உள்ளார்.
- ரோகித் சர்மா 44 பந்தில் 57 ரன்கள் அடித்தார்
- இஷான் கிஷன் 34 பந்தில் 52 ரன் விளாசல்
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் நடைபெற்று வருகிறது. நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தின்போது வெஸ்ட் இண்டீஸ் ஆல்அவுட் ஆனதும், இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது.
விரைவாக அதிக ரன்கள் குவித்து டிக்ளேர் செய்ய இந்திய அணி முடிவு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களான ரோகித் சர்மா- ஜெய்ஸ்வால் ஆகியோர் அதிரடியாக விளையாடினர். ரோகித் சர்மா 44 பந்தில் 57 ரன்களும், ஜெய்ஸ்வால் 30 பந்தில் 38 ரன்களும் சேர்த்தனர். அடுத்து வந்த இஷான் கிஷன் 34 பந்தில் 52 ரன்கள் விளாசினார். இந்தியா 24 ஓவரில் 181 ரன்கள் எடுத்திருக்கும்போது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
இந்தியா 12.2 ஓவரில் 100 ரன்களை எடுத்தது. இதன்மூலம் விரைவாக 100 ரன்களை கடந்த அணி என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்குமுன் 2001-ம் ஆண்டு ஆசிய டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வங்காளதேச அணிக்கெதிராக இலங்கை 13.2 ஓவரில் 100 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது. தற்போது 22 ஆண்டு கால சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.
- ஷிம்ரன் ஹெட்மயர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஓஷேன் தாமஸ் ஆகியோர் மீண்டும் அணியில் இணைந்துள்ளனர்.
- முன்னாள் கேப்டன்கள் பூரன், ஹோல்டர் ஆகியோர் அணியின் இடம் பெறவில்லை.
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 27-ந் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டது. இதில் அதிரடி ஆட்டக்காரர் ஷிம்ரன் ஹெட்மயர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஓஷேன் தாமஸ் ஆகியோர் மீண்டும் அணியில் இணைந்துள்ளனர்.
15 பேர் கொண்ட அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்டன் சீல்ஸ் மற்றும் லெக்ஸ் ஸ்பின்னர் யானிக் கரியா ஆகியோர் அறுவை சிகிச்சையில் இருந்து மறுவாழ்வு பெற்றதைத் தொடர்ந்து சேர்க்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் குடாகேஷ் மோட்டியும் காயத்திற்குப் பிறகு அணிக்கு திரும்பியுள்ளார். முன்னாள் கேப்டன்கள் பூரன், ஹோல்டர் ஆகியோர் அணியின் இடம் பெறவில்லை.
வெஸ்ட் இண்டீஸ் அணி:-
ஷாய் ஹோப் (கேப்டன்), ரோவ்மேன் பவல் (துணை கேப்டன்), அலிக் அதானாஸ், யானிக் கரியா, கீசி கார்டி, டொமினிக் டிரேக்ஸ், ஷிம்ரன் ஹெட்மயர், அல்ஸாரி ஜோசப், பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், குடகேஷ் மோட்டி, ஜெய்டன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், கெவின் சின்க்ளேர், கெவின் சின்க்ளேர்.
- இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
- சிராஜ் கடைசியாக மார்ச் 2022-ல் இந்தியாவுக்காக ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
பிரிட்ஜ்டவுன்:
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனையடுத்து 3 ஒருநாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகள் நடக்கிறது.
அதன்படி இந்தியா- வெஸ்ட்இண்டீஸ் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடக்கிறது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ்க்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணி ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலியா, அயர்லாந்து மற்றும் ஆசிய கோப்பை தொடரில் விளையாட உள்ளது. இந்திய அணிக்கான பிஸியான அட்டவணையைக் கருத்தில் கொண்டு சிராஜ்க்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
சிராஜ் கடைசியாக மார்ச் 2022-ல் இந்தியாவுக்காக ஒருநாள் போட்டியில் விளையாடினார்.