என் மலர்
நீங்கள் தேடியது "Vannarpettai"
- நெல்லை மாநகராட்சிக் குட்பட்ட வண்ணார் பேட்டை சாலை தெரு வில் மாநகராட்சி புதிய நடு நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
- இங்குள்ள ஒரு கட்டிடத்தின் முதல்தளத்தில் ரூ. 13.60 லட்சம் செலவில் புதிய வகுப்பறை கட்டப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சிக் குட்பட்ட வண்ணார் பேட்டை சாலை தெரு வில் மாநகராட்சி புதிய நடு நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
புதிய வகுப்பறை
இங்குள்ள ஒரு கட்டிடத்தின் முதல்தளத்தில் ரூ. 13.60 லட்சம் செலவில் புதிய வகுப்பறை கட்டப்பட்டுள்ளது.
அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய வகுப்பறையை திறந்து வைத்தார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட துணை செயலாளர் எஸ்.வி. சுரேஷ், கவுன்சிலர் கந்தன், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் லெனின், சுகாதார ஆய்வாளர் சங்கர நாராய ணன், தலைமை ஆசிரியர் கஸ்தூரிபாய் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக பள்ளி மாண வர்கள் சார்பில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ.வுக்கு தாரை தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- வட்டார அளவிலான விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
- உதவி திட்ட அலுவலர் சிவராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
நெல்லை:
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் எழுத்தறிவு திட்டத்தின் கீழ் பள்ளி படிப்பை தவறவிட்ட, கல்வி அறிவு பெறாத முதியவர்களுக்கு எழுத்தறிவை புகட்டும் வகையில் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.
வண்ணார்பேட்டை புதிய மாநகராட்சி பள்ளியில் தொடங்கிய வட்டார அளவிலான விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதனை உதவி திட்ட அலுவலர் சிவராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாடசாமி, தலைமை ஆசிரியர் கஸ்தூரி பாய், வட்டார வள மைய மேற்பார்வையாளர் செண்பகதேவி உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
பேரணியில் ஆசிரியர் பயிற்றுனர்கள் வீரராகவன், எஸ்தர், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நெல்லை மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் வண்ணார்பேட்டை ரவுண்டானா அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- தொழிலாளர்களின் பணிநேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக மாற்றுவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்ட ஏ.ஐ.டி. யூ. சி சார்பில் வண்ணார்பேட்டை ரவுண்டானா அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொது செயலாளர் சடையப்பன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் லட்சுமணன் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், தொழிலாளர்களின் பணிநேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக மாற்றுவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. துணைத் தலைவர் ரங்கன், மாநில குழு உறுப்பினர் முருகன், செயலாளர் முத்துகிருஷ்ணன், மற்றும் நிர்வாகிகள் உலகநாதன், சேதுராமலிங்கம், மணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்..
நெல்லை மாநகர பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டே செல்கிறது.
டவுன், வண்ணார் பேட்டை, பாளை, சமாதானபுரம் உள்ளிட்ட இடங்களில் ஆக்கிரமிப்புகள் காரணமாக போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் சிக்கித் தவிக்கின்றனர்.
அதேநேரத்தில் வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலம் பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதியாக உள்ளது.
இங்கு தினமும் பணி நிமித்தமாகவும் பல்வேறு காரணங்களுக்காகவும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் அவர்களுக்கு மேம்பாலம் பகுதியில் கழிப்பிட வசதி இல்லாமல் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.
வண்ணார்பேட்டை மேம்பாலத்திற்கு கீழே பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்ட உடனேயே இது தொடர்பான கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து மாநகராட்சி சார்பில் மேம்பாலத்தின் அருகே தற்காலிகமாக கழிப்பிடம் அமைக்கப்பட்டது.
ஆனால் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் கழிப்பிடத்தில் இருந்து வெளியேறும் சிறுநீர் சாலைகளில் ஓடியது. தற்போது அந்த தற்காலிக கழிப்பிடத்தை பொதுமக்கள் யாரும் பயன்படுத்தவில்லை.
ஆனால் அதன் பின்னர் வேறு தற்காலிக கழிப்பிடம் அமைக்கப்படாததால் பஸ் ஏறுவதற்கு வரும் பயணிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.
இதேபோல் அங்கு காவல் பணியில் ஈடுபடும் போலீசாரும் கழிப்பிடம் செல்லமுடியாமல் சிரமம் அடைகின்றனர். குறிப்பாக பெண் பயணிகள் அதிக அளவில் சிரமம் அடைகின்றனர்.
எனவே மாநகராட்சி நிர்வாகம் அந்த பகுதியில் தற்காலிக கழிப்பிடங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.