search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Food Safety"

    நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பாளை மற்றும் மேலப்பாளையம் மண்டலத்திற்குட்பட்ட கடைகளில் இன்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
    நெல்லை:

    புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பாளை மற்றும் மேலப்பாளையம் மண்டலத்திற்குட்பட்ட கடைகளில் இன்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சசிதீபா அறிவுறுத்தலின்பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கரலிங்கம், ராமசுப்பிரமணியன் தலைமையில் கடைகளில் திடீரென ஆய்வு நடத்தப்பட்டது.

    அப்போது மேலப்பாளையத்தில் ஒரு கடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து கடையில் இருந்த 1 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    நெல்லை புதிய பஸ்நிலையத்தில் பெரும்பாலான கடைகளில் உணவு பொருட்கள் திறந்து வைக்கப்பட்டிருந்தது. இதனைப் பாாத்த அதிகாரிகள் உணவுகளை மூடி வைக்குமாறு வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

    மேலும் காலாவதியான பொருட்களும் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் காலாவதியான பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என வியாபாரிகளுக்கு எச்சரிககை விடுத்தனர்.

    ×