என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடு புகுந்து திருட்டு"

    • கடன் கேட்பதுபோல் சென்று கைவரிசை
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்,

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த நீலகண்டராயப்பேட்டை கால னியை சேர்ந்தவர் நரசிம்மன். இவரது மனைவி கல்பனா (வயது 45). இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் வாலிபர் கடந்த ஜனவரி மாதம் 21-ந்தேதி கல்பனா வீட்டுக்கு சென்று ரூ.1,000 கடன் கேட்டதாக கூறப்படுகிறது.

    அப்போது கல்பனா பணம் இல்லை என்று கூறிவிட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து மறுபடியும் கல்பனாவின் வீட்டுக்கு வாலிபர் சென்றார். கல்பனாவுக்கு சிறிது கண்பார்வை தெரியாததால், வீட்டின் பின்பக்கமாக சென்று பீரோவில் வைத்திருந்த ரூ.1.50 லட்சம் மற்றும் 1 பவுன் நகை ஆகியவற்றை திருடி சென்றதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து வாலிபரின் உறவினர்களிடம் கல்பனா கூறியிருக்கிறார். அதற்கு அவர்கள் வாலிபர் வெளியூர் சென்று விட்டதாகவும், வந்தவுடன் நகை, பணத்தை வாங்கி தருவதாகவும் கூறி உள்ளனர்.

    ஆனால் அந்த வாலிபர் வராததால் நேற்று கல்பனா சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன், ரவி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டிற்கு சென்று விட்டு வந்து பார்க்கும் போது வீடு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அண்ணாமலை நகர் பகுதி சேர்ந்தவர் பெருமாள் மனைவி செல்வி (வயது 54). இவர் கூலி வேலை செய்து வருகிறார் . சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டிவிட்டு சாவியை வாசலின் மீது வைத்துவிட்டு தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டு வந்து பார்க்கும் போது வீடு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. இதையடுத்து செல்வி கொடுத்த புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் கள்ளுக்கடை மூலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பஸ்ஸில் இருந்து இறங்கிய ஒரு நபர் போலீசை கண்டதும் வேகமாக அங்கிருந்து ஓட முயன்றுள்ளார். அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் கட்டபொம்மன் நகரை சேர்ந்த அமீர் அப்பாஸ் (45) என்பதும் அவரை திருவெண்ணைநல்லூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் சிறுமதுரை சார்ந்த செல்வி வீட்டில் நகை திருடியது தெரியவந்தது .மேலும் அமீர் ஆப்பாஸிடம் சோதனை செய்து 2 பவுன் நகையை பறிமுதல் செய்த திருவெண்ணைநல்லூர் போலீசார் அமீர் அப்பாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • பீரோவை உடைத்து துணிகரம்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையை அடுத்த சு.வாளவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் (வயது 32). புதுச்சேரியில் தங்கியிருந்து கட்டிட உள் அலங்கார வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி நந்தினி மற்றும் தாய் பாரதி ஆகியோர் சு.வாளவெட்டி கிராமத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வீட்டில் இருவரும் தூங்கிய போது வீட்டில் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்து 2 பவுன் நகை, ரூ.13000 ஆகியவற்றை திருடிச் சென்றனர்.

    அதிகாலை வீட்டின் அறைக்குள் சென்று பார்த்த போது திருட்டு நடந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 48). இவர் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சி புரத்தில் செங்கல் சூளையில் வேலை செய்கிறார்.

    இவரது மனைவி ராணி சென்னையில் உள்ள தனியார் மருத்து வமனையில் செவிலியர் ஆக பணிபுரிகிறார். இதனால் இவர்களுடைய வீடு பூட்டி இருந்தது.

    எனவே நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள் மற்றும் ரூ.12000 ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர்.

    இந்த 2 திருட்டு சம்பவங்கள் தொடர்பாக புகாரின் பேரில் வெறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரியில் வீடு புகுந்து திருட்டிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி சத்யசாய் நகரை சேர்ந்தவர் முஹம்மது ஷபீர் . கடந்த 27-ந்தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். திரும்ப வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. 

    இதனால் அதிர்ச்சியடைந்த முஹம்மது ஷபீர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது உள்ளே நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிள் மாயமாகியிருந்தது. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த விலை உயர்ந்த வெளிநாட்டு கைக்கடிகாரங்கள் 5  திருடு போயிருந்தன.  இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் முஹம்மது ஷபீர் புகார் செய்தார் . இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவே செய்து மர்ம திருடனை தேடி வருகின்றனர்.
    ×