என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 331281
நீங்கள் தேடியது "போலீஸ்"
கஞ்சா வியாபாரிகளை சும்மா விடமாட்டோம்- போலீஸ் ஐ.ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை
தென்மண்டல பகுதியில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தரவிட்டு உள்ளார்.
இதன்படி போலீசார் தென்மண்டலத்திற்கு உட்பட்ட 10 மாவட்டங்களி லும் அதிரடி சோதனை நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 90 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக 6 வழக்குகளில் குற்றவாளிகள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்களின் அசையும்,அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளன.
குற்றவாளிகள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களின் சந்தேகத்திற்குரிய வங்கி கணக்குகளும் முடக்கப்படுகின்றன. குறிப்பாக கடந்த 2 வாரங்களில் சுமார் 494 வழக்குகளில் 813 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.
மதுரையில் பதிவான 191 வழக்குகளில் 114 வங்கி கணக்குகளும், விருதுநகரில் பதிவான 119 வழக்குகளில் 76 வங்கி கணக்குகளும், ராமநாதபுரத்தில் பதிவான 56 வழக்குகளில் 28 வங்கி கணக்குகளும், சிவகங்கையில் பதிவான 16 வழக்குகளில் 12 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன.
கஞ்சா விற்பனையில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் உறவினர்களின் சொத்துக்களும் சட்டப்படி முடக்கப்படும். கஞ்சா மொத்த விற்பனையாளர் மட்டுமின்றி சில்லறை விற்பனையாளர்களின் வங்கி கணக்குகளும் முடக்கம் செய்யப்படும் என்று தென் மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் எச்சரிக்கை விடுத்தார்.
மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறுகையில், நடப்பாண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 11 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஆஸ்டின்பட்டியில் ரூ.37 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் முடக்கப்பட்டு உள்ளது. சேடபட்டியில் 2 வழக்குகளில் ரூ.59 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளது.
மதுரையில் கடந்த 2 வாரங்களில் சுமார் 114 வழக்குகளில் 191 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. ஊமச்சி குளத்தில் பதிவான 21 வழக்குகளில் 13 வங்கி கணக்குகளும், மேலூரில் 3 வங்கி கணக்குகளும், திருமங்கலத்தில் பதிவான 49 வழக்குகளில் 14 வங்கி கணக்குகளும், உசிலம்பட்டியில் பதிவான 57 வழக்குகளில் 39 வங்கி கணக்குகளும், சமயநல்லூரில் பதிவான 44 வழக்குகளில் 28 வங்கி கணக்குகளும், பேரையூரில் 17 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டு உள்ளன” என்று தெரிவித்தார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X