என் மலர்
நீங்கள் தேடியது "முற்றுகையிட்டு"
- கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1.47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 60 கான்கிரீட் தளங்கள், கான்கிரீட் மேற்கூரைகளுடன், அனைத்து அடிப்படை வசதிகளுடன் அமைக்க பணிகள் தொடங்கப்பட உள்ளது.
- இதற்காக பரமத்திவேலூர் பழைய தற்காலிக பஸ் நிலையம் பகுதிக்கு வாரச்சந்தையை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
பரமத்திவேலூர்:
–நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேரூராட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரசந்தை நடைபெற்று வருகிறது.
இந்த வாரச்சந்தைக்கு வேலூர், குப்புச்சி பாளையம், பொய்யேரி, ஒழுகூர்பட்டி, படமுடி பாளையம், பொத்தனூர், வேலாயுதம்பாளையம், கட்டிபாளையம், தவுட்டுப்பாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளையும் காய்கறிகளை கொண்டு வருகின்றனர்.
மேலும் வியாபாரிகளும் இந்த வாரச்சந்தைக்கு தானியங்கள், காய்கறிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் கொண்டு வருகின்றனர்.
இந்த வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. இதனை கருத்தில் கொண்டு வேலூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1.47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 60 கான்கிரீட் தளங்கள், கான்கிரீட் மேற்கூரைகளுடன், அனைத்து அடிப்படை வசதிகளுடன் அமைக்க பணிகள் தொடங்கப்பட உள்ளது.
இதற்காக பரமத்திவேலூர் பழைய தற்காலிக பஸ் நிலையம் பகுதிக்கு வாரச்சந்தையை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது உள்ள வாரச்சந்தை பகுதியில் இடவசதி போதுமானதாக உள்ளது. அதில் மேற்கூரை அமைத்து கட்டிடம் கட்டினால் எங்களுக்கு இட வசதி பற்றாக்குறை ஏற்படும்.
வாரச்சந்தையில் கடைகள் வைத்திருக்கும் அனைத்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கும் கடைகள் கட்டிதர இயலாது என கூறி புதிதாக கடைகள் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை விவசாயிகள் திடீரென முற்றுகையிட்டனர்.
அதனை தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் செல்வக்குமார், சந்தை வியாபாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் விரைவில் தற்போதுள்ள சந்தை பகுதி அனைத்து வசதிகளுடன் கான்கிரீட் மேற்கூரை, கான்கிரீட் தளங்கள் அமைக்கப்பட உள்ளது. இதில் அனை வருக்கும் இடம் ஒதுக்கி தரப்படும்.
தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட உள்ள சந்தை பகுதியிலும் அனைத்து வியாபாரி களுக்கும் இடம் ஒதுக்கி தரப்படும் என தெரிவித் ததன் அடிப்படையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- காங்கிராசார் திடீர் போராட்டம்
- மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களிலும் இது தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டது.
கன்னியாகுமரி:
விஜய் வசந்த் எம் பி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்தை பரப்பிய வாலிபரை கைது செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் மனு அளித்தனர்.
மேலும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களிலும் இது தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணா விரத போராட்டம் அறி விக்கப்பட்டது. காங்கிரஸ் நிர்வாகியிடம் போலீசார் உடனடியாக அந்த வாலி பரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
இதைத்தொடர்ந்து போராட்டம் ஒத்தி வைக் கப்பட்டது. இந்த நிலை யில் நேற்று மாலை மீண்டும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காங்கிரசார் மனு அளித்த னர். ஆனால் இன்று காலை வரை அந்த வாலிபரை கைது செய்யப்படவில்லை.இந்த நிலையில் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்பினு லால்சிங், மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திரண்ட னர். காங்கிரஸ் கட்சியினர் போலீஸ் சூப்பிரண்டு அலு வலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட் டத்தில் காங்கிரஸ் நிர்வாகி கள் முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், லாரன்ஸ், டைசன்,செல்வன் மற்றும் பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கான நிர்வாகி கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகளிடம் டிஎஸ்பி நவீன் குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். சம்பந்தப்பட்ட நபரை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.ஆனால் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து செல்லவில்லை. சம்பந்தப் பட்ட நபரை உடனே கைது செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது