என் மலர்
நீங்கள் தேடியது "ஆளுநர் ஆர்.என்.ரவி"
- ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
- 2023ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சியில் சாதனைகளை நிகழ்த்தியது.
இந்தியாவில் 2024 புத்தாண்டு இன்னும் சற்று நேரத்தில் பிறக்க இருக்கிறது. இதை முன்னிட்டு, நாட்டின் முக்கிய தலைவர்கள் பொது மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
2024 புத்தாண்டை முன்னிட்டு, அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
2023ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சியில் சாதனைகளை நிகழ்த்தியது. ஜி20 தலைமையில் நீங்காத தாக்கத்தை ஏற்படுத்தியது. விளையாட்டுத் துறையில் நமது வீரர், வீராங்கனைகள் சிறப்பாக பரிணமித்தது என சுயசார்புபாரதத்தின் வலுவான அடித்தளத்தை அமைப்பதற்கான நமது தேசிய உறுதிப்பாட்டின் சான்றாக விளங்கியது.
சட்டசீர்திருத்தங்கள் காலனித்துவ பாரம்பரியத்தை நிராகரித்ததுடன், நமது தேசத்தின் ஜனநாயக நெறிமுறைகளை மேலும் ஆழப்படுத்தியுள்ளன.
உச்சநீதிமன்றம், ஜம்மு & காஷ்மீரின் முழுமையான ஒருங்கிணைப்பு தொடர்பாக வழங்கிய தனது வரலாற்றுபூர்வ தீர்ப்பின் மூலம் "ஒரேபாரதம் உன்னதபாரதம்" என்ற உணர்வை மேலும் வலுப்படுத்தியது.
நமது இளையசக்தி அனைத்து துறைகளிலும் தங்கள் திறமை மற்றும் தொழில்முனைவு மேதைத்துவத்தை நிரூபித்து வருகிறது. நமது புராதன சனாதன தரிசனத்தில் ஆழமாக வேரூன்றிய நமது தெளிவான கலாசாரஆன்மிகம், உலகை ஒரே குடும்பம் ஆக ஒருங்கிணைத்துள்ளது. நாம் நமது சமூக ஒற்றுமையை வலுப்படுத்தி, 'ஒரேதேசம்' ஆக கடுமையான சவால்களை முறியடித்து முன்னேறினோம்.
அதே நம்பிக்கை, அர்ப்பணிப்பு, கூட்டுறுதி மற்றும் ஆற்றலுடனும் நாம் 2024-ல் நுழைகிறோம். நமது முயற்சிகளில் சிறந்து விளங்கவும், நமது தேசத்தின் வளர்ச்சிப் பயணத்திற்கு வேகம் சேர்ப்பதற்காகவும், 2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் இணைந்து செயல்படுவதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவோம்.
'புத்தாண்டு 2024' நம் அனைவருக்கும் மேலும் மகிழ்ச்சி, நல்லிணக்கம், நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியைக் கொடுக்கட்டும்- ஆளுநர் ரவி.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- குடியரசு தின விழா தேநீர் விருந்து, ஜனவரி 26 ஆம் தேதி மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது.
- காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக ஏற்கனவே தெரிவித்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். இதில் தமிழக முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள் எனப் பலரும் பங்கேற்பார்கள்.
அந்த வகையில், இந்த ஆண்டு குடியரசு தின விழா தேநீர் விருந்து, இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெறுகிறது. இந்த விருந்தில் கலந்துகொள்ள அரசியல் கட்சியினர் பலருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில், குடியரசு தினத்தையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் அதிமுக பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆளுநர் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தெரிவித்தது குறிப்பிடதக்கது.
- தேசத்தின் சுதந்திரத்திற்கு நேதாஜியின் பங்களிப்பு போதுமான அளவு பாராட்டப்படவில்லை என்பதை விளக்க முயன்றேன்
- காந்தியை நான் அவமதித்துவிட்டதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானவை
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த நேதாஜி சுபாஸ் சந்திர போஸ்-ன் 127 ஆவது பிறந்த நாள் விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மகாத்மா காந்தியின் வெள்ளையனே வெளியேறு இயக்கம் பெரிதாக எதையும் சாதித்து விடவில்லை. நேதாஜி உருவாக்கிய இந்திய தேதிய ராணுவம் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போரிட்டதால் தான் ஆங்கிலேயர்கள் நாட்டிற்கு விடுதலை அளித்ததாக கூறினார். ஆளுநரின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கு வி்ளக்கம் அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது, "நான் சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் விழாவில் பேசியதை ஊடகங்கள் திரித்து செய்தியாக்கி விட்டன. நான் காந்தியை அவமதிக்கவில்லை. அவருடைய போதனைகள் என்னுடைய வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருந்தன. காந்தியை நான் அவமதித்துவிட்டதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானவை.
தேசத்தின் சுதந்திரத்திற்கு நேதாஜியின் பங்களிப்பு போதுமான அளவு பாராட்டப்படவில்லை என்பதை விளக்க முயன்றேன். ஆங்கிலேயருக்கு எதிரான நேதாஜியின் படைகள் நமது விமானப்படை மற்றும் கப்பல் படைக்கு முக்கியதுவம் அளித்தன. இதுமட்டும் இல்லாமல் நேதாஜியின் பங்களிப்பு இல்லை என்றால் நமக்கு சுதந்திரம் கிடைக்க இன்னும் கூடுதல் ஆண்டுகள் ஆகியிருக்கலாம் " என தெரிவித்துள்ளார்
- ஆளுநர் ஆர்.என்.ரவி 16ம் தேதி தான் சென்னை திரும்புகிறார்.
- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை கடிதம் எழுதினார்.
தமிழக ஆளுநர் திடீர் டெல்லி பயணத்தால் அமைச்சராக பொன்முடி பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் பெறப்பட்டதை தொடர்ந்து பொன்முடி எம்எல்ஏவாக தொடர்வார் என சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பாணை வெளியிட்டது.
இதைதொடர்ந்து, தமிழக அமைச்சரவையில் பொன்முடி இடம்பெறவும், அமைச்சராக பதவி ஏற்கவும், ஆளுநருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை கடிதம் எழுதினார்.
இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை காலை டெல்லிக்கு தீடீர் பயணம் மேற்கொள்கிறார்.
நாளை காலை 7.30 மணிக்கு டெல்லி புறப்படும் ஆளுநர் 16ம் தேதி தான் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.
மக்களவை தேர்தலுக்கான தேதி வரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஆளுநரின் திடீர் பயணத்தால் பொன்முடி அமைச்சராக பதவி ஏற்பது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து, பதவியேற்புக்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதியும் அவசியம் ஆகும்.
மேலும், தமிழக முதலமைச்சரின் பிரந்துரை கடிதத்தின் மீது ஆளுநர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தை, மனித நேய மக்கள் கட்சி ஆகியவை புறக்கணித்துள்ளன.
- தேநீர் விருந்தில் பா.பென்ஜமின் ஆகியோர் கலந்து கெள்கிறார்கள் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை:
சுதந்திர தினத்தையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். கவர்னர் மாளிகையில் நாளை மாலை நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை தி.முக. கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தை, மனித நேய மக்கள் கட்சி ஆகியவை புறக்கணித்துள்ளன.
ஆனால் கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தில் அ.தி.மு.க. பங்கேற்கிறது. அக்கட்சியின் அமைப்பு செயலாளர்கள் டி.ஜெயக்குமார், பா.பென்ஜமின் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறார்.
- ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசுக்கும் எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சியையும், தேநீர் விருந்தையும் புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "ஆர்.என்.ரவி அவர்கள் தமிழ்நாடு ஆளுநராக பதவியேற்றதில் இருந்து தமிழர்களின் நலனுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுக்கும் எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
அவரது செயல்பாடுகளால் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க முடியவில்லை.
சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறார்.
இவரின் செயல்பாடுகளை கண்டிக்கும் வகையில் குடியரசு தின நாளில் அவர் அளிக்கும் குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சியையும், தேநீர் விருந்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம்" என்று பதிவிட்டுள்ளார்.
- ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக நீடிக்கிற தகுதியை இழந்துவிட்டார்.
- குடியரசு தின தேநீர் விருந்தை இந்திய கப்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புறக்கணிக்கிறது.
குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை விசிக, சிபிஎம் ஆகிய கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சிபிஎம் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசு தின தேநீர் விருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புறக்கணிக்கிறது. அரசியலமைப்பு சாசனத்தையும், குடியரசின் விழுமியங்களையும், கூட்டாட்சி கோட்பாடுகளையும், சட்டமன்ற மாண்புகளையும் மதிக்காமல் தொடர்ந்து சிதைத்து வருகிற ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக நீடிக்கிற தகுதியை இழந்துவிட்டார்.
ஆகவே ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கக் கூடிய குடியரசு தின தேநீர் விருந்தை இந்திய கப்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புறக்கணிக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
