என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்சோவில்"

    • ஆத்தூர் அருகே உள்ள தென்குமரை கிரா மத்தை சேர்ந்தவர் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 8-ம் வகுப்பு மாணவியை பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது வழிமறித்து பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.
    • இந்த சில்மிஷம் குறித்து மாணவி அவரது பெற்றோரிடம் கூறினார். இது குறித்து மாணவியின் தாயார் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தென்குமரை கிரா மத்தை சேர்ந்தவர் கோவர்த்தனன் (வயது 33), கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 8-ம் வகுப்பு மாணவியை பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது வழிமறித்து பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த சில்மிஷம் குறித்து மாணவி அவரது பெற்றோரிடம் கூறினார். இது குறித்து மாணவியின் தாயார் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், கோவர்த்தனன் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் பெரமனூரில் 17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
    • கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அதன் பின்னர் வெளியில் சென்று விட்டு சின்னவர் வீட்டிற்கு வந்தபோது, மகாலட்சுமி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    ேலம்:

    சேலம் 4 ரோடு அருகே உள்ள பெரமனூர் நாராயண பிள்ளை தெருவில் வசிப்பவர் சின்னவர் (28).

    இவர் கடந்த ஓராண்டிற்கு முன்பு நடந்த ஒரு கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த சின்னவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிச்சிபாளையத்தைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவரை காதல் திருமணம் செய்தார்.

    இருவரும் பெரமனூர் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினர்.

    இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதி சின்னவர், மகாலட்சுமியிடம் ஏன் வீட்டை சுத்தப்படுத்தி வைக்கவில்லை என கேட்டார். இதனால் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

    அதன் பின்னர் வெளியில் சென்று விட்டு சின்னவர் வீட்டிற்கு வந்தபோது, மகாலட்சுமி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே திருமணமாகி 9 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்ததால் சேலம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தினார்.

    இதில் மகாலட்சுமியின் பள்ளி சான்றிதழ் ஆய்வு செய்தபோது 17 வயதில் மகாலட்சுமியை சின்னவர் திருமணம் செய்தது தெரியவந்தது.

    இது தொடர்பாக ஆர்.டி.ஓ. சேலம் பள்ளப்பட்டி போலீசுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து பள்ளப்பட்டி போலீசார் 17 வயது சிறுமியை திருமணம் செய்ததாக சின்னவரை போக்சா வழக்கில் கைது செய்தனர். பின்னர் அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ஜேடர்பாளையம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவன் போக்சோவில் கைது.
    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் பகுதியை சேர்ந்த  17 வயது சிறுமி வெளியில் செல்வதாக கூறி சென்றார். அங்கிருந்து திரும்ப வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில்  சிறுமியை தேடிப்பார்த்தனர். இருப்பினும் கண்டுபிடிக்க முடியவில்லை. 

    இது குறித்து ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது.புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யாக்கண்ணு வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தார். 

    இந்த நிலையில் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த சிறுமியை  ஈரோடு மாவட்டம் கருமாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த   17 வயது சிறுவன் கடத்தி  பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது.  

    இதையடுத்து அவரை போலீசார்  போக்சோ சட்டத்தில் கைது செய்து  நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    ×