என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Class 10"

    • 10ம் வகுப்பு அறிவியல் செய்முறைத்தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது.
    • வரும் 31ம் தேதி வரை செய்முறைத் தேர்வு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் 6-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. மேலும், 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே 17-ம் தேதி வெளியாக உள்ளது.

    இதனிடையே ,10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வு கடந்த மார்ச் 23-ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைந்த நிலையில், வரும் 31ம் தேதி வரை நீட்டித்து அரசு தேர்வுகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் தேர்வில் பங்கேற்காத மாணவர்கள் பங்கேற்க தனி கவனம் செலுத்த முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மிக குறைந்த தேர்ச்சி விகிதம் கொண்ட மாவட்டமாக தாஹோத் இருக்கிறது.
    • மாநிலத்தின் தாய் மொழியான குஜராத்தியில் 96 ஆயிரம் மாணவர்கள் தோல்வி.

    குஜராத் மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இதில் ஒட்டுமொத்தத்தில் 64.62 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மாநிலத்தின் சூரத் மாவட்டத்தில் அதிகபட்சமாக 76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

    மிக குறைந்த தேர்ச்சி விகிதம் கொண்ட மாவட்டமாக தாஹோத் இருக்கிறது. இந்த மாவட்டத்தில் மொத்தமாக 40.5 சதவீதம் பேர் தான் தேர்ச்சி பெற்றனர். 272 பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. 1084 பள்ளிகளில் 30 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி விகிதம் பதிவாகி இருக்கிறது. 

    இதில் மிகவும் அதிர்ச்சிகர தகவல், 157 பள்ளிகளை சேர்ந்த மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. மறு தேர்வுக்கு விண்ணப்பித்த 1 லட்சத்து 65 ஆயிரத்து 690 மாணவர்களில் 27 ஆயிரத்து 446 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    கிரேடு வாரியாக 6 ஆயிரத்து 111 மாணவர்கள் A1 கிரேடிலும், 44 ஆயிரத்து 480 மாணவர்கள் A2 கிரேடிலும், 1 லட்சத்து 27 ஆயிரத்து 652 மாணவர்கள் B2 கிரேடிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநிலத்தின் தாய் மொழியான குஜராத்தியில் 96 ஆயிரம் மாணவர்களும், கணித பாடத்தில் 1 லட்சத்து 96 ஆயிரம் மாணவர்களும் தோல்வி அடைந்தனர்.

    • பீகாரில் பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி முடிந்தது.
    • விடைத்தாள் திருத்தும் பணி தற்போது மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் கடந்த மாதம் 15-ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி 23-ம் தேதி முடிவடைந்தது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தற்போது மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது. விடைத்தாள் திருத்தும் பணி முடிந்தபின் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.

    இந்நிலையில், பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரது விடைத்தாள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இதுதொடர்பாக, அந்த மாணவி தனது விடைத்தாளில், விவசாயியான எனது அப்பாவுக்கு வருமானம் குறைவு. எனவே நிதி நெருக்கடியால் படிப்பை கைவிடும்படி கூறிவருகிறார். தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் திருமணம் செய்துவைப்பதாக கூறியுள்ளார். தயவுசெய்து எனக்கு நல்ல மதிப்பெண் தந்து எதிர்காலத்தை காப்பாற்ற உதவுங்கள் என தெரிவித்துள்ளார்.

    மாணவியின் இந்த கோரிக்கை சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைந்தது சமூக அறிவியல் தேர்வை மாணவர்கள் உற்சாகமாக எழுதினர்.
    சேலம் :

    தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக எஸ்.எஸ்.எல்.சி.,  பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடக்கவில்லை.

    நடப்பு  ஆண்டு கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்த நிலையில்,  எஸ்.எஸ்.எல்.சி.,  பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள்  நடத்தப்பட்டுள்ளன. இதில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.

    சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள  182    மையங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 80-க்கும் மேற்பட்ட  மையங்களிலும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடைபெற்றது.

    தேர்வு முடிவடைந்தது இம்மையங்களில் அரசு பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதிப்பள்ளிகளை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் உற்சாகமாக தேர்வுகள் எழுதினர்.
     
    கடைசி நாளான இன்று (30-ந்தேதி) திங்கட்கிழமை  சமூக அறிவியல் பாடம் தேர்வு நடைபெற்றது. காலை  10.15 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு தேர்வு முடிவடைந்தது. 

    வாழ்த்துக்கள்... தேர்வு  நிறைவடைந்ததை அடுத்து தேர்வு மையங்களில் இருந்து வெளியே வந்த மாணவ-மாணவிகள் தங்கள் வகுப்பில்  பயின்றவர்களை சந்தித்து,   ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர்.

    மேலும் புகைப்படம் எடுத்தும்,  சீருடைகளில் மாறி மாறி மை தெளித்தும், செல்போன் நம்பர் பரிமாறிக்கொண்டும்   மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.
    ×