என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை மேம்பாட்டு பணி"

    • சாலை மேம்பாட்டு பணியினை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
    • பூமி பூஜை விழாவில் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    விளாத்திகுளம்:

    புதூர் ஊராட்சி ஒன்றி யம், விளாத்திகுளம்- அருப்புக்கோட்டை சாலை, செங்கோட்டை விலக்கில் புதூர் முதல் செங்கோட்டை வரையிலான சாலையில் பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ.2.95 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணியினை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    இதில் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, புதூர் பேரூராட்சி தலைவர் வனிதா அழகுராஜ், விளாத்தி குளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, புதூர் பேரூர் செயலாளர் மருது பாண்டியன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஞானகுருசாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பா ளர்கள் இம்மானுவேல், மகேந்திரன் மாவட்ட பிரதிநிதிகள் வேலுமணி, பால கிருஷ்ணன், வேலுச்சாமி, கார்த்திகை முருகன், ராமலிங்கம் வடக்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர்கள் வேலுச்சாமி, துரைப்பாண்டி யன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் தர்மலிங்கம், கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் பாலகிருஷ்ணன், புதூர் பேரூராட்சி துணைத் தலைவர், பச்சமலை சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் மற்றும் தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

    • மேட்டுக்காட்டுவலசு முதல் வரட்டுக்கரை வரையிலும் ஊராட்சி சாலைகள் தரம் உயா்த்தப்பட உள்ளன.
    • காலக்கெடுவுக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

    வெள்ளக்கோவில் :

    வெள்ளக்கோவில் அருகே ரூ. 5.12 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டுப் பணிகளை மாநில செய்தி மற்றும் தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்.

    வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம் வள்ளியிரச்சல் ஊராட்சி வரட்டுக்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திருப்பூா் மாவட்ட கலெக்டர் .கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா். நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் முருகேசன், உதவிக் கோட்டப் பொறியாளா்கள் இளங்கோ, இளம்பூரணம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நெடுஞ்சாலைத் துறை, நபாா்டு மற்றும் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.5.12 கோடி மதிப்பீட்டில் ஓலப்பாளையம் முதல் மொட்டக்காடு வரையிலும், மேட்டுக்காட்டுவலசு முதல் வரட்டுக்கரை வரையிலும் ஊராட்சி சாலைகள் தரம் உயா்த்தப்பட உள்ளன.

    இப்பணிகளைத் தரமான முறையில், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளிடம் அமைச்சா் அறிவுறுத்தினாா். நிகழ்ச்சியில் துறை சாா்ந்த அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    நன்னிலம் அருகே குச்சிப்பாளையத்தில் தெருவின் நடுவில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பேரூராட்சியில் எல்லைக்குட்பட்ட, குச்சிபாளையம் தெருவில் தற்போது சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாலையின் மையத்தில் மின் கம்பம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மின் கம்பம் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.

    இரவு நேரங்களில் வாகனத்தில் வருபவர்கள், இருசக்கர வாகனம் ஓட்டுபவ ர்களுக்கு, இடையூறாகவும், விபத்து ஏற்படுத்தக் கூடிய வகையிலும் அமைந்து ள்ளது. இந்தச் சாலை பேரூராட்சியின் பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் அமையப் பெற்று உள்ளதால், இப்பகுதியில் அதிக அளவில் வாகனங்கள் வந்து செல்லும் நிலை உள்ளது.

    பள்ளி, கல்லூரி மாண வர்கள், அலுவலகத்திற்கு செல்பவர்கள், சாலைக்கு வந்து செல்வது வழக்கம், நெருக்கடி நேரத்தில், இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் தடுமாறி இந்த மின் கம்பத்தில் மோத அதிக வாய்ப்பு உள்ளது. சாலை மேம்பாட்டு பணி, நடைபெற்று வரும் நிலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தை மாற்றியமை க்கப்பட வேண்டும் என குச்சிபாளையம் தெரு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பொதுமக்களின் கோரி க்கையை மின்சார வாரியத் துறை நிறைவேற்றுவார்களா என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
    ×