என் மலர்
நீங்கள் தேடியது "Eye"
- கண்மாயில் மூழ்கி 8 வயது சிறுமி பரிதாபமாக இறந்தார்.
- இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள தண்டியனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி தமிழ்செல்வி. இவர்களுக்கு 8 வயதில் பிரீத்தி என்ற மகள் இருந்தாள்.
இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பிரீத்தி அதே பகுதியை சேர்ந்த அன்பழகி என்ற சிறுமியுடன் தண்டியனேந்தல் கண்மாய்க்கு சென்றார். தண்ணீரை பார்த்ததும் 2 பேரும் கண்மாயில் இறங்கி விளையாடியதாக கூறப்படுகிறது.
விளையாட்டின் மீதான ஆர்வத்தால் பிரீத்தி ஆழமான பகுதிக்கு சென்று சிக்கினாள். சிறிது நேரத்தில் மூச்சுத்திணறிய அவர் கண்மாயில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மல்லாங்கிணறு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக பிரீத்தியின் உடலை பார்த்து அவளது பெற்றோர் மற்றும் உறவி னர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
- இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
- கண்ணில் விழிலென்ஸ் பொருத்தி மீண்டும் பார்வை பெற ஏற்பாடு செய்யப்பட்டது
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தானில் நகர அரிமா சங்கம், வேலம்மாள் மருத்துவ கல்லூரியுடன் இணைந்து இலவச கண் மருத்துவ முகாமை நடத்தியது.
சோழவந்தான் நகர அரிமா சங்க தலைவர் லயன்ஸ் டாக்டர் எம்.வி.எம்.மருதுபாண்டியன் ஏற்பாட்டில் நடைபெற்ற இம்முகாமில் அரிமா சங்க ஆளுநர் சசிகுமார் முன்னிலை வகித்தார்.
முன்னாள் ஆளுநர் செல்லப்பாண்டி முகாமை தொடங்கி வைத்தார். இதில் சோழவந்தான் அரிமா சங்க பொருளாளர் காந்தன் மற்றும் நிர்வாகிகள், வேலம்மாள் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.
முகாமில் கண்புரை நோயால் கண் பார்வை குறைவாக உள்ளவர்களுக்கு மற்றும் கண்பார்வை இல்லாதவர்களுக்கும் இலவசமாக கண்ணில் விழிலென்ஸ் பொருத்தி மீண்டும் பார்வை பெற ஏற்பாடு செய்யப்பட்டது.
அரிமா சங்க முன்னாள் தலைவர் ராசி கண்ணன் நன்றி கூறினார். சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
- கலெக்டர் ஆஷா ஆஜித் தலைமை தாங்கி கண்மாய்களை செயல்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
- அரசு அலுவலர்கள் கிராம மக்கள் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் நாலு கோட்டை ஊராட்சி யில் அமைந்துள்ள 7 சங்கிலி தொடர் கண்மாய்களை சின்ஜென்டா நிறுவனத்தின் நிதி உதவியுடன் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவனத்தின் செயலாக்கத்தின் கீழ் ரூ.56 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டது. இதில் மடை சீரமைப்பு, கழுங்குகள் சீரமைப்பு, வரத்து வாய்க்கால் மற்றும் பாசன வாய்க்கால் தூர் வாருதல், கண்மாய் நீர் பிடிப்பு பகுதி தூர்வாருதல் மேலும் அனைத்து கண்மாய் கரையிலும் 1000 மரக்கன்று கள் நடுதல் போன்ற பணிகளை கடந்த ஆண்டு அப்போதைய கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்தார்.
இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததையொட்டி அதன் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது. கலெக்டர் ஆஷா ஆஜித் தலைமை தாங்கி கண்மாய்களை செயல்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
இந்த விழாவில் மாவட்ட திட்ட இயக்குநர் சிவராமன் நாலுகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மணிகண் டன், சின்ஜென்டா நிறு வன இயக்குனர் வைத்தியநாதன், தமிழ்நாடு வர்த்தக மேலாளர் ஜெயமோகன், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் முதன்மை இயக்குனர்-மேலாளர் கொண்டராதாகிருஷ்ணா, துணைத்தலைவர் கண்ணன், துணைப்பொதுமேலாளர் ஏழுமலை, திட்டமேலாளர் கார்த்திக், சமூக ஒருங்கி ணைப்பாளர் பாலமுருகன் மற்றும் அரசு அலுவலகர்கள் கிராம மக்கள் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.
விழாவில் கண்மாய் கரைகளில் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.