என் மலர்
நீங்கள் தேடியது "P Chidambaram"
- சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் மத்திய அரசு தமிழகத்திற்கு 2152 கோடி ரூபாயை விடுவிக்கவில்லை.
- இந்த நிதியை மாநில அரசே தனது சொந்த நிதி ஆதாரங்களில் இருந்து விடுவித்துள்ளது.
சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழக அரசு மத்திய அரசு வழங்கக்கூடிய 2,152 கோடி ரூபாயை சொந்த நிதி ஆதாரங்களில் இருந்து தமிழக அரசு விடுவித்துள்ளது என பட்ஜெட்டில் தங்கம் தென்னரசு அறிவித்தது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு ப.சிதம்பரம் "மத்திய அரசுக்கு இப்பொழுதாவது வெட்கம் வந்து, அவர்கள் நிதியை தருவார்கள் என நம்புகிறேன்" என்றார்.
முன்னதாக,
2025-2026ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தங்கம் தென்னரசு சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். அப்போது "ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் (Samagra Shiksha) கீழ், பல்வேறு மாணவர் நலன் சார்ந்த திட்டங்களை கடந்த 7 ஆண்டுகளாக மாநில அரசு சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக, மாணவர்களின் அடிப்படைக் கல்வியறிவை உறுதிசெய்யும் எண்ணும் எழுத்தும் திட்டம். மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வி, தொலைதூரக் குடியிருப்புகளிலிருந்து மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்து சென்றிட போக்குவரத்துப்படி, ஆசிரியர்களின் ஊதியம், மாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்கிடும் உயர்கல்வி வழிகாட்டி, மாணவர்களின் தனித் திறன்கள் மிளிர்ந்திட கலைத் திருவிழா, கல்விச் சுற்றுலா, இணைய வசதி உள்ளிட்ட பள்ளிகளுக்கான கட்டமைப்பு வசதிகள் என பல்வேறு திட்டங்கள் மாணவரின் கல்வி நலன் சார்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
எனினும், இந்த ஆண்டு மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கிய ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையினை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாததால், ஏற்கனவே ஒப்புதல் வழங்கிய நிலையிலும் 2,152 கோடி ரூபாயை ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு விடுவிக்காமல் வஞ்சித்துள்ளது என்பதை இம்மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.
ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை விடுவிக்காவிட்டாலும், மாணவர் நலன் கருதி அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி ஒரு துளியேனும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஆசிரியர்களின் ஊதியம் உள்ளிட்ட அத்திட்டங்களுக்குரிய நிதியை மாநில அரசே தனது சொந்த நிதி ஆதாரங்களில் இருந்து விடுவித்துள்ளது" எனக் கூறினார்.
- 2-வது மொழி ஆங்கிலம் என்று புதிய கல்விக்கொள்கை சொல்கிறது.
- தமிழ்நாட்டில் 52 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
60 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இரு மொழிக்கொள்கையை நாம் அமல்படுத்தி இருக்கிறோம். இந்த நிலையில் மும்மொழி கொள்கையை திணிப்பது எந்த விதத்தில் நியாயம். வடமாநிலங்களில் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறேன். அவர்களுக்கு ஒரு மொழி தான் தெரியும். பேச்சு மொழி இந்தி, அரசு மொழி, பயிற்சி மொழி, பாட மொழி என்று அனைத்தும் இந்தி தான்.
2-வது மொழி ஆங்கிலம் என்று புதிய கல்விக்கொள்கை சொல்கிறது. ஆனால் வடமாநிலங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆங்கில ஆசிரியர்களையே நியமிக்கவில்லை. தமிழ், தெலுங்கு ஆசிரியர்கள் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. நான் பார்த்தவரை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படவில்லை. அப்படி இருக்கும்போது தமிழ்நாட்டை மட்டும் குற்றம் சாட்டி, மும்மொழி கொள்கையை அமல்படுத்தாததால் நிதி தரமாட்டோம் என்று கூறுவது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் 52 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. அந்த பள்ளிகளிலும் தமிழையே கற்றுக் கொடுக்கவில்லை. இது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் இந்த பிரச்சனையில் பா.ஜ.க.வை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் ஓரணியில் நிற்கிறார்கள். இதை நான் வரவேற்கிறேன்.
பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்காமல் கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பேசியது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.
- உத்தரபிரதேசத்தில் ‘சி’ பிரிவு வேலைகளுக்கு 37 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள்.
- 40 ஆயிரம் அக்னிவீரர்கள் பணியிடங்களுக்கு 35 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
புதுடெல்லி
நாட்டின் வேலையில்லா திண்டாட்ட பிரச்சினைக்கு மத்திய பா.ஜ.க. அரசையும், அதன் கொள்கைகளையும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தொடர்ந்து சாடி வருகிறது.
அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் இது தொடர்பாக டுவிட்டரில் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
அவற்றில் அவர் கூறி இருப்பதாவது:-
உத்தரபிரதேச மாநிலத்தில 'சி' பிரிவு வேலைகளுக்கு 37 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். 40 ஆயிரம் அக்னிவீரர்கள் பணியிடங்களுக்கு 35 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். வேலையில்லாத இளைஞர்களின் வேதனைக்குரலை அரசு காது கொடுத்து கேட்கிறதா?
நாங்கள் நம்பிக்கையற்ற நிலையில் உள்ளோம். எங்களுக்கு வேறு வழியில்லை.
கடந்த 8 ஆண்டு கால மத்திய அரசின் பாரம்பரியமாக வேலையில்லா திண்டாட்டம் உள்ளது. வேலையில்லா திண்டாட்டத்தின் அளவு 8 சதவீதமாம். இது குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதத்திற்கான மத்திய நிதி அமைச்சக ஆய்வு அறிக்கை, வேலையில்லா திண்டாட்டம் பற்றி ஒரு வார்த்தைகூட குறிப்பிடவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் முடிந்து விட்டதாலும் எதிர்ப்பின் காரணத்தாலும் மாற்றப்படலாம் என்று கூறப்பட்டது.
- தமிழ்நாட்டிலும் மாற்றம் உறுதி என்கிறார்கள் அழகிரி எதிர்ப்பாளர்கள். அதற்கான வாய்ப்பே இல்லை என்கிறார்கள் அழகிரி ஆதரவாளர்கள்.
சென்னை:
காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் கடந்த வாரம் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆதரவாளர்களுக்கும், கே.எஸ்.அழகிரி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சிலருக்கு ரத்த காயமும் ஏற்பட்டது.
இதையடுத்து முன்னாள் மாநில தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி, செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. முன்னாள் எம்.பி. விசுவநாதன் ஆகியோர் டெல்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கேவை சந்தித்து புகார் செய்தனர்.
மாநில தலைவர் பதவியில் இருந்து கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். இதற்கிடையில் 11 எம்.எல்.ஏ.க்கள் கார்கேவை சந்தித்து அழகிரியை மாற்றக்கூடாது என்று வற்புறுத்தினார்கள்.
ஒழுங்கு நடவடிக்கை குழுவின் நடவடிக்கையை தினேஷ் குண்டுராவ் ரத்து செய்தார். இதனால் ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கும், தினேஷ் குண்டுராவுக்கும் இடையே உரசல் ஏற்பட்டது.
இதையடுத்து தினேஷ் குண்டுராவையும், ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமியையும் டெல்லி மேலிடம் நேரில் அழைத்து விளக்கம் கேட்டது.
கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் முடிந்து விட்டதாலும் எதிர்ப்பின் காரணத்தாலும் மாற்றப்படலாம் என்று கூறப்பட்டது. அதே நேரம் 3 ஆண்டு செயல்பாடுகள், தற்போது மாநிலம் முழுவதும் 23,400 கொடியேற்றும் திட்டம் ஆகியவற்றையும் டெல்லி மேலிடம் யோசிப்பதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் டெல்லியில் காங்கிரஸ் காரியகமிட்டி கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்துக்கு பிறகு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை அழைத்து கார்கே ஆலோசனை நடத்தி இருக்கிறார். அரைமணி நேரம் நடந்த இந்த ஆலோசனையில் தமிழக காங்கிரஸ் செயல்பாடுகள் பற்றி கருத்து கேட்டுள்ளார்.
அப்போது 'துடிப்பாக கட்சிக்கு வேலை செய்பவர்களை பார்த்து நியமியுங்கள்' என்று சிதம்பரம் கூறியதாக கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.
என்னதான் நெருக்கடி இருந்தாலும் ராகுல் நடைபயணம் நடந்து வருவதால் பிப்ரவரி மாதத்துக்கு பிறகு தான் மாற்றம் இருக்கும் என்று பேசப்பட்டது.
ஆனால் ஆந்திரா, பீகார் ஆகிய மாநில உட்கட்சி பிரச்சினைகளில் அந்த மாநில தலைவர்களை அதிரடியாக மாற்றி உள்ளார்.
எனவே தமிழ்நாட்டிலும் மாற்றம் உறுதி என்கிறார்கள் அழகிரி எதிர்ப்பாளர்கள். அதற்கான வாய்ப்பே இல்லை என்கிறார்கள் அழகிரி ஆதரவாளர்கள். மேலிடத்தின் முடிவுக்காக தொண்டர்கள் காத்து இருக்கிறார்கள்.
- அரசை நீக்கி தேர்தல் நடத்தினால்கூட பரவாயில்லை.
- அதானிக்கு மோடி நண்பர் என்பதை மறுக்க முடியாது.
சிவகங்கை :
முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் சிவகங்கையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து பிரதமர் பேசியது உரையல்ல. குறிப்பாக எதிர்க்கட்சிகளை திட்டினார். காங்கிரஸ் கட்சி 356-வது சட்டப்பிரிவை பயன்படுத்தவில்லை என்று கூறவில்லை. முந்தைய காலத்தில் இருந்த சூழ்நிலையில், 356-வது சட்டப்பிரிவை பயன்படுத்த வேண்டிய நிலை இருந்தது. அதை தவறாக பயன்படுத்தி இருந்தால் அன்றைக்கே மக்கள் அரசை தண்டித்து இருப்பார்கள்.
இவர்கள் 356-ஐ பயன்படுத்தி அரசை நீக்குவது கிடையாது. அதற்கு பதிலாக எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி விடுகிறார்கள். அரசை நீக்கி தேர்தல் நடத்தினால்கூட பரவாயில்லை. ஆனால் இவர்கள் விலைக்கு வாங்குகிறார்கள். அண்மையில் விலைக்கு வாங்கியது கோவாவில் நடந்தது. 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 8 பேரை விலைக்கு வாங்கினார்கள்.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் ஆளுங்கட்சி சந்திக்கின்ற முதல் இடைத்தேர்தல். தன்னுடைய முழு பலத்தையும் காட்டத்தானே செய்வார்கள். அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. அ.தி.மு.க ஆட்சியில் இடைத்தேர்தல் வந்தபோது, அமைச்சர்கள் எல்லாம் வீட்டிலா இருந்தார்கள்?.
அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி 2024-ல் தொடரும் என்று அறிவித்துள்ளார்கள். அது தொடரட்டும். பா.ஜனதா என்ற பாம்பை கழுத்தில் மாலையாக போட்டுக்கொண்டு அ.தி.மு.க. வரட்டும். அதானிக்கு மோடி நண்பர் என்பதை மறுக்க முடியாது. அவர் நாடாளுமன்றத்திலும் அதை மறுக்கவில்லை
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.
- நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி காலாண்டுகள்தோறும் குறைந்து வருகிறது.
- இந்தியப் பொருளாதார நிலைமை மிகச் சிறப்பாகக் கையாளக் கூடியது என்று அரசு கூறி வருகிறது.
புதுடெல்லி :
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி காலாண்டுகள்தோறும் குறைந்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'குறைந்த வளர்ச்சி, உயர் பணவீக்கம் மற்றும் வேலையின்மை ஆகியவை மக்கள் மீது, குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மீது தாங்க முடியாத சுமைகளை சுமத்துகின்றன' என கூறியுள்ளார்.
உலக வங்கியின் கடந்த மாத சர்வதேச பொருளாதார வாய்ப்புகள் குறித்த அறிக்கையில் இந்த ஆண்டின் உலக வளர்ச்சி 1.7 சதவீதமாக குறையும் என கூறியிருப்பதாக குறிப்பிட்டுள்ள ப.சிதம்பரம், ஆனாலும், இந்தியப் பொருளாதார நிலைமை 'மிகச் சிறப்பாகக் கையாளக் கூடியது' என்று அரசும், ரிசர்வ் வங்கியும் தொடர்ந்து கூறி வருவதாகவும் சாடியுள்ளார்.
- ஒவ்வொரு கட்சிக்கும் அதன் சொந்த பலம் உள்ளது.
- பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை அதிகம் எதிர்பார்க்கிறோம்.
புதுடெல்லி :
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
அப்போது 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எதிர்கொள்ளும் வகையில் எதிர்க்கட்சி கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை ஏற்குமா? என கேட்கப்பட்டது.
அதற்கு ப.சிதம்பரம் பதில் அளித்து கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எதிர்கொள்வதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்ட முன்னணியை உருவாக்க வேண்டும் என்ற உணர்வு அதிகரித்து வருகிறது.
ஒவ்வொரு கட்சிக்கும் அதன் சொந்த பலம் உள்ளது. அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பலத்தை கூட்டணிக்கு கொண்டுவருகிறது. காங்கிரசைத் தவிர மற்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் மாநில கட்சிகள் என்பதை ஒப்புக்கொள்வதும் உண்டு.
பாராளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகளின் ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கு காங்கிரசே மையமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இதற்காக காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் பணிவுடனும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடனும் அணுக வேண்டும்.
பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை அதிகம் எதிர்பார்க்கிறோம். ஒவ்வொரு கட்சியும் அதன் மாநில அளவிலான பார்வையை விட்டுவிட்டு, அகில இந்திய பார்வையை கொண்டிருக்க வேண்டும்.
காங்கிரஸ் தலைவர்களும், சரத்பவார், நிதிஷ் குமார், சீதாராம் யெச்சூரி மற்றும் மு.க.ஸ்டாலின் போன்ற கூட்டணி கட்சி தலைவர்களும் புதிய கண்ணோட்டத்துடன் தேர்தலை அணுக அனைத்து கட்சிகளையும் ஈர்க்க முடியும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.
இதைப்போல காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர்களுக்கான தேர்தல் குறித்தும் ப.சிதம்பரம் பல்வேறு கருத்துகளை வெளியிட்டார். குறிப்பாக உறுப்பினர்களில் பாதி பேர் தேர்தல் மூலம் நியமிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
அதேநேரம் இந்த தேர்தலுக்கான வாக்காளர் விவகாரத்தில் சில பிரச்சினைகள் இருப்பதாக தெரிவித்த ப.சிதம்பரம், இந்த பிரச்சினைகள் அனைத்தும் கட்சியின் தேர்தல் கமிஷன் மூலம் தீர்க்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும் கட்சியின் அதிகாரம் மிக்க காரிய கமிட்டியில் இளம் தலைவர்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ப.சிதம்பரம் கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு ராய்ப்பூரில் 24-ந் தேதி தொடங்கும் நிலையில், காரிய கமிட்டி குறித்து ப.சிதம்பரம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
- ராகுல் காந்தியின் இந்த பேச்சு 90 சதவீதம் அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது.
- சம்பவம் நடந்த 9 நாட்களுக்கு பின் அவதூறு வழக்கு தொடர்ந்த நபர் குஜராத் நீதிமன்றத்தில் மனு செய்கிறார்.
காரைக்குடி:
காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலாரில் நடந்த காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விக்கு ஒரு வார்த்தையை கூறினார். இது தொடர்பாக அந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் குஜராத் மாநிலம், சூரத் நீதிமன்றத்தில் பூர்னேஷ் மோடி என்பவர் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு தொடருகிறார்.
கோலாருக்கும், சூரத்துக்கும் என்ன தொடர்பு உள்ளது? என்று தெரியவில்லை. பின்னர் ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கு 2019-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்த வேண்டுமென சம்பந்தப்பட்ட புகார்தாரர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அவரே 2022-ம் ஆண்டு தன் வழக்கை விசாரிக்கக்கூடாது என குஜராத் நீதிமன்றத்தில் தடை கேட்டு பெறுகிறார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து ராகுல்காந்தி பேசுகிறார். அப்போது பிரதமர் மீதும், குறிப்பிட்ட தொழிலதிபர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறுகிறார்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சு 90 சதவீதம் அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது. இந்த சம்பவம் நடந்த 9 நாட்களுக்கு பின் அவதூறு வழக்கு தொடர்ந்த நபர் குஜராத் நீதிமன்றத்தில் மனு செய்கிறார். அதில் ராகுல்காந்தி மீதான வழக்கு விசாரணைக்கு தடையை நீக்க வேண்டுமென குறிப்பிடுகிறார்.
இதையடுத்து நீதிமன்றம் அவதூறு வழக்கு விசாரணை நடத்த உத்தரவிட்டது. 3 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டு ஒரு ஆண்டு தடை வாங்கப்பட்ட இந்த வழக்கு விசாரணை 21-02-2023ம் ஆண்டு தொடங்கியது. 30 நாட்கள் விசாரணை முடிந்தபின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு மார்ச் 23-ந்தேதி தண்டனை அளிக்கப்பட்டது.
மறுநாள் (24-ந்தேதி) ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுகிறார். 3 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்ட இந்த வழக்கை அவசர அவசரமாக விசாரித்தது ஏன்? 30 நாட்களுக்குள் கிரிமினல் வழக்கில் தீர்ப்பளிக்க வேண்டிய அவசியம் என்ன?
இவ்வாறு ப.சிதம்பரம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
பேட்டியின் போது சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி ப.சிதம்பரம் உடனிருந்தார்.
- கவர்னர் பதவி, வெறும் அரசியல் சட்ட பதவி மட்டுமே.
- அவரது அதிகாரங்கள் குறைவு.
புதுடெல்லி :
மசோதாவை கவர்னர் நிலுவையில் வைத்திருந்தால், அதை நிராகரித்ததாகவே அர்த்தம் என்று தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி கூறியிருந்தார். அதற்கு தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:-
சட்டசபை நிறைவேற்றிய மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பதற்கு வினோதமான விளக்கத்தை தமிழ்நாடு கவர்னர் கூறியிருக்கிறார். அப்படி நிலுவையில் வைத்திருந்தால், மசோதா செத்து விட்டதாக அர்த்தம் என்று சொல்கிறார்.
உண்மையில், ஒரு கவர்னர் உரிய காரணம் இன்றி மசோதாவை முடக்கி வைத்திருந்தால், நாடாளுமன்ற ஜனநாயகம் செத்து விட்டதாக அர்த்தம். கவர்னர் என்பவர் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கலாம் அல்லது நிலுவையில் வைக்கலாம் அல்லது மசோதாவை திருப்பி அனுப்பலாம்.
அதே மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டால், அவர் ஒப்புதல் அளித்தாக வேண்டும்.
கவர்னர் பதவி, வெறும் அரசியல் சட்ட பதவி மட்டுமே. அரசின் அடையாள தலைவராக அவர் இருப்பார். அவரது அதிகாரங்கள் குறைவு. பெரும்பாலான விவகாரங்களில் அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை.
முதல்-மந்திரி மற்றும் மந்திரிசபையின் ஆலோசனையின்பேரில்தான் கவர்னர் செயல்பட வேண்டும். ஆனால், பா.ஜனதாவால் நியமிக்கப்பட்ட கவர்னர்கள், அதிகார அத்துமீறலில் ஈடுபட்டு, ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பஜ்ரங் தளத்தை தடை செய்வோம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறவில்லை.
- தேர்தலில் தீவிரமாக அரசியல் மொழி பேசுவது அவதூறு அல்ல.
புதுடெல்லி :
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடக சட்டசபை தேர்தலில், மாநிலம் தாராளவாதம் கொண்ட, ஜனநாயகரீதியிலான, பன்முகத்தன்மையும், சகிப்புத்தன்மையும் கொண்ட முற்போக்கான மாநிலமாக வேண்டுமா அல்லது உள்நோக்கமுள்ள, பெரும்பான்மையான, சகிப்புத்தன்மை இல்லாத, பிற்போக்குத்தனமான மாநிலமாக மாற வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில், மாநில மக்கள் புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுப்பார்கள்.
கர்நாடகத்தின் எதிர்காலத்துக்காக, அங்கு பா.ஜ.க. வெற்றி பெறுவதையும், அந்த வெற்றியின்மூலமாக அதன் அண்டை மாநிலங்களில் அந்தக் கட்சி நுழைவதையும் நாம் தடுத்து நிறுத்தியாக வேண்டும்.
பொது சிவில் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை கர்நாடக மாநிலத்தில் கொண்டு வருவதாக பா.ஜ.க. வாக்குறுதி அளித்துள்ளதே என்று கேட்கிறீர்கள். அவை இரண்டுக்கும் சமூகத்தைப் பிளவுபடுத்துகிற, சமூக மோதல்களைத் தூண்டி விடுகிற சாத்தியம் உண்டு.
சில வடக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் என்ன நடந்தது என்று நாம் பார்த்திருக்கிறோம். எனவே கர்நாடக மக்கள் அதில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை நிரகாரிப்பார்கள் என்றே கருதுகிறேன்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பஜ்ரங்தளம் போன்ற அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்ற பேச்சை பா.ஜ.க. பிரச்சினை ஆக்கி இருக்கிறதே என கேட்கிறீர்கள். நாங்கள் பஜ்ரங் தளத்தை தடை செய்வோம் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறவில்லை.
வெறுப்புணர்வை பரப்புகிற எல்லா அமைப்புகளையும் காங்கிரஸ் எச்சரித்து இருக்கிறது.
சட்டத்தின்படி காங்கிரஸ் கட்சி உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்திருக்கிறது.
தவிரவும், சட்டப்படி ஒரு அமைப்பை தடை செய்வது என்பது நிதித்துறை செயல்பாடு.
நாங்கள் சட்டமும், அரசியல் சாசனமும் புனிதமானவை, அவற்றை தனி நபர்களோ, பஜ்ரங் தளம், பாப்புலர் பிரண்ட் அல்லது இது போன்ற வெறுப்புணர்வைப் பரப்புகிற அமைப்புகளோ மீற முடியாது என்று நம்புகிறோம். நாங்கள் தடை விதிப்பது உள்பட சட்டப்படி அவற்றின்மீது உறுதியான நடவடிக்கை எடுப்போம். கர்நாடக மாநிலத்தில் நான் குடியிருக்கவில்லை. எனவே அங்கு முழுமையான ஆய்வு நடத்தி, காங்கிரஸ் எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என என்னால் கூற இயலாது. ஆனால் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துக்கு தேவையான இடங்களைப் பெறும் என்று கர்நாடக காங்கிரஸ் மூத்த தோழர்கள் கூறுகிறார்கள்.
தன் மீது அவதூறு வாரி இறைக்கப்படுவதாக பிரதமர் மோடி பிரச்சினை எழுப்பி இருக்கிறாரே என்கிறீர்கள். அவதூறு வாரி இறைப்பது என்றால் என்ன என்பது பார்க்கப்பட வேண்டும். தேர்தலில் தீவிரமாக அரசியல் மொழி பேசுவது அவதூறு அல்ல.
சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக பா.ஜ.க. தலைவர்கள் வீசிய அவதூறுகளை எண்ணிப் பார்ப்போமா? இது அர்த்தமற்ற செயல் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவது என்பது எளிதானது அல்ல.
- ஆர்.பி.ஐ. 2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்ப பெற்றுள்ளது.
புதுடெல்லி :
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
எதிர்பார்த்தது போலவே மத்திய அரசு, ஆர்.பி.ஐ. 2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்ப பெற்றுள்ளது. இந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற செப்டம்பர் 30-ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவது என்பது எளிதானது அல்ல என 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் சொன்னோம். தற்போது அது நிரூபிக்கப்பட்டுள்ளது.
எளிதாக பரிமாற்றம் செய்வதற்கு வசதியாக இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை பணமதிப்பு நீக்கம் என்ற முட்டாள்தனமான முடிவின் மூலம் செல்லாததாக்கி விட்டு அதனை மறைக்க ரூ.2 ஆயிரம் நோட்டுகள் கொண்டுவரப்பட்டன.
பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட சில வாரங்களுக்கு பிறகு அரசும், ஆர்.பி.ஐ.யும் ரூ.500 நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
1,000 ரூபாய் நோட்டை அரசும், ஆர்.பி.ஐ.யும் மீண்டும் அறிமுகம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சாதாரண மக்கள் பயன்படுத்தாத, புறக்கணித்துவிட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தியது யார்? என்பதற்கு பதில் தெரிவிக்க வேண்டும்.
- கருப்பு பணத்தை ஒழிக்கவே ரூ.2 ஆயிரம் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதாவினர் கூறிவருகிறார்கள்.
புதுடெல்லி:
ரிசர்வ் வங்கி ரூ.2 ஆயிரம் நோட்டுக்களை திரும்ப பெறப்போவதாக அறிவித்து உள்ளது.
இந்த ரூபாய் நோட்டுக்களை அனைத்து வங்கிகளிலும் மாற்றி கொள்ளலாம், இதற்கு ஆதாரம் எதுவும் சமர்ப்பிக்க வேண்டியது இல்லை எனவும் கூறியுள்ளது. இது பற்றி காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் கூறியதாவது:-
2016-ம் ஆண்டு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அறிமுகம் செய்தபோதே இது சரியான நடவடிக்கை இல்லை என்று அப்போதே கூறினேன். சாதாரண சில்லறை வியாபாரத்துக்கு இந்த ரூபாய் நோட்டுக்கள் பலனளிக்காததால் அப்போது மக்கள் இதனை புறக்கணித்து விட்டனர்.
சாதாரண மக்கள் பயன்படுத்தாத, புறக்கணித்துவிட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தியது யார்? என்பதற்கு பதில் தெரிவிக்க வேண்டும்.
இப்போது கருப்பு பணத்தை ஒழிக்கவே ரூ.2 ஆயிரம் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதாவினர் கூறிவருகிறார்கள்.
ஆனால் ரிசர்வ் வங்கி ரூ. 2 ஆயிரம் நோட்டை வங்கிகளில் மாற்ற அடையாள சான்று தேவையில்லை, ஆதாரம் தேவையில்லை எனக்கூறியுள்ளது. அப்படி என்றால் இந்த நோட்டை பதுக்கி வைத்துள்ளவர்களை எப்படி கண்டுபிடிப்பீர்கள்? இதன்மூலம் பாரதிய ஜனதா கட்சியினர் கூறிய கருத்தும் தவறாகிவிட்டதே?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.