என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Early Morning"

    • கடலூரில் தனியார் ஹோட்டலில் காளீஸ்வரன் வேலை செய்து வருவதால் தற்போது கடலூர் கூத்தப்பாக்கம் கிருஷ்ணசாமி நகரில் வசித்து வந்தனர்.
    • இவரது மனைவி முத்துமீனா சந்தேகப்பட்டு கேட்கும் போது இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரன் (வயது 30). இவரும் முத்துமீனா என்பவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 4 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடலூரில் தனியார் ஹோட்டலில் காளீஸ்வரன் வேலை செய்து வருவதால் தற்போது கடலூர் கூத்தப்பாக்கம் கிருஷ்ணசாமி நகரில் வசித்து வந்தனர். இந்த நிலையில் காளீஸ்வரன் அடிக்கடி மொபைல் போனில் அதிகளவில் பேசி வந்துள்ளார்.

    இதனால் இவரது மனைவி முத்துமீனா சந்தேகப்பட்டு கேட்கும் போது இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் இவர்களுக்குள் சண்டை வந்ததால் முத்துமீனா கோபித்துக் கொண்டு தனது மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு வெளியில் சென்று விட்டார்.இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த காளீஸ்வரன் தனது வீட்டில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் காளீஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தமிழகத்தில் கோடை வெப்பம் சுட்டெரித்து வந்த நிலையில், தற்போது கோடை மழை தீவிரம் அடைந்துள்ளது.
    • இன்று அதிகாலை சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது

    தமிழகத்தில் கோடை வெப்பம் சுட்டெரித்து வந்த நிலையில், தற்போது கோடை மழை தீவிரம் அடைந்துள்ளது. தென் தமிழக கடலோர மாவட்டங்கள், தமிழக உள்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதற்கிடையே தென் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் 23-ந் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை வெயில் தாங்காமல் சென்னை வாசிகள் சில்லென இருப்பதற்கு சுற்றுலா தளத்திற்கு சென்றுக் கொண்டு இருக்கும் பொழுது தற்பொழுது சென்னையே குழுகுழுவென்று மாறிக் கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே அப்பப்ப மழை பெய்த வண்ணம் தான் உள்ளது. மற்ற தென் தமிழக மாவட்டங்களில் மழை பெய்து வருவதால்  சென்னையில் வானம் மந்தமாகவும் மேக மூட்டதுடனே காணப்படுகிறது. இவ்வளவு நாள் சுட்டெரித்த வெயிலிற்கு அடுத்து  மழை பெய்வதால் சென்னை மக்களுக்கு சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

    இன்று அதிகாலை சென்னையில் பெருமபாலான இடங்களில் மழை பெய்து வந்த நிலையில் சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் , ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

    குமாரபாளையத்தில் அதிகாலை ஆவின் பாக்கெட் பாலை திருடிய சிறுவன் சிக்கினான்.
    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கே.ஓ.என். தியேட்டர் பகுதியில் ஆவின் பால் விற்பனை செய்து வருபவர் சதாசிவம் (வயது 65). இவர் பல வருடங்களாக பால் வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்நிலையில் ஆவின் ஊழியர்கள் நள்ளிரவில் பால் பாக்கெட் பெட்டிகளை ஒவ்வொரு முகவர் வீடு மற்றும் கடைகளின் முன்பு வைத்து செல்வது வழக்கம். அதன்படி  சதாசிவம் கடை முன்பும் ஆவின் பாக்கெட் பெட்டிகள் வைத்து விட்டு செல்வார்கள். 

    இந்த நிலையில் தொடர்ந்து பால் பாக்கெட் திருடப்பட்டு வந்தது. ஆவின் ஊழியர்கள் கடை முன்பு பெட்டிகளை வைத்து விட்டு சென்ற பிறகு மர்ம நபர், அங்கு வந்து பால்பாக்கெட்டுகளை திருடி செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

    இது குறித்து அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பார்த்த போது ஒரு சிறுவன் அதிகாலை நேரத்தில் அங்கு வந்து  பால்  பாக்கெட்டுகளை திருடி செல்வதும், அந்த சிறுவன் நாராயண நகர் பகுதியை சேர்ந்தவன் என்பதும்  தெரியவந்தது.
    ×