என் மலர்
நீங்கள் தேடியது "விஜயதாரணி"
- விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி அக்கட்சித் தலைமை மீது அதிருப்தியில் உள்ளார்.
- இதன் காரணமாக அவர் விரைவில் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை:
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபைத் தொகுதியில் தொடர்ந்து 3-வது முறையாக எம்.எல்.ஏ.வாக விஜயதாரணி இருந்து வருகிறார்.
சமீப காலமாக கட்சி தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக தீவிர அரசியிலில் ஒதுங்கி இருந்து வரும் அவர், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் இந்த முறை தனக்கு சீட்டு வழங்கவேண்டும் என கோரியுள்ளார்.
ஆனால் தி.மு.க. கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படுமா, அப்படியே வழங்கினாலும் விஜயதாரணிக்கு அந்த சீட்டு வழங்கப்படுமா என்பது சந்தேகமே.
இந்நிலையில், காங்கிரஸ் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக விஜயதாரணி எம்.எல்.ஏ. விரைவில் பா.ஜ.க.வில் இணைய உள்ளார் என தகவல் பரவி வருகிறது.
- காங்கிரஸ் கட்சியில் உழைத்தவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை.
- தி.மு.க. கூட்டணியில் கடந்த தேர்தலை விட குறைவான எம்.பி. தொகுதிகளே காங்கிரசுக்கு கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை என தேர்தல் களம் களை கட்டியுள்ளது.
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி முதல் கட்ட தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை முடித்துள்ள நிலையில் தமிழக காங்கிரசில் மேற்கொள்ளப்பட்டுள்ள திடீர் அதிரடி மாற்றங்கள் புயலை கிளப்பியுள்ளன.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக 3 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த கே.எஸ்.அழகிரி தேர்தல் நேரத்தில் மாற்றப்பட மாட்டார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை அவரை மாற்றி விட்டு புதிய தலைவராக செல்வபெருந்தகையை நியமனம் செய்துள்ளது.
இந்த நிலையில் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. விஜயதாரணி, காங்கிரஸ் தலைமைக்கு எதிராக திடீரென போர்க்கொடி தூக்கியுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியில் விஜயதாரணி சேரப்போவதாக கடந்த சில நாட்களாகவே பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த செய்திகளை மறுக்காமல் டெல்லியிலேயே முகாமிட்டுள்ள அவர் விரைவில் பாரதிய ஜனதா கட்சியில் சேர உள்ளார். அதற்கான காய்களை அவர் நகர்த்தி வருகிறார்.
இது தொடர்பாகவும், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டது பற்றியும் விஜயதாரணி எம்.எல்.ஏ. இன்று மாலைமலர் நிருபருக்கு தொலைபேசி வழியாக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விளவங்கோடு தொகுதியில் 3 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு உள்ளேன்.தொகுதி மக்களுக்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ளேன். குமரி மாவட்டத்தில் விளவங்கோடு தொகுதி முன் மாதிரியான தொகுதியாக விளங்கி வருகிறது.
தொகுதி மக்களுக்காக தொடர்ந்து நான் பாடுபட்டு வருகிறேன். காங்கிரஸ் கட்சிக்காக முழு மூச்சுடன் உழைத்துள்ளேன்.
ஆனால் காங்கிரஸ் கட்சியில் உழைப்புக்கு மரியாதை கிடைக்கவில்லை. தற்போது காங்கிரஸ் கட்சியின் சட்ட மன்ற தொகுதி தலைவராக ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. நியமனம் செய்யப்பட்டுள்ளார். சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் நியமனம் செய்யப்படும் போது எம்.எல்.ஏ.க்களிடம் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் எம்.எல்.ஏ.க்களிடம் கேட்காமலேயே ஆலோசனை செய்யாமல் ராஜேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் உழைத்தவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை.
பெண் என்பதால் என்னை தொடர்ந்து புறக்க ணித்து வருகிறார்கள். நான் பாரதிய ஜனதா கட்சியில் இணைவதாக பேசப்பட்டு வருகிறது. எனது முடிவை விரைவில் முறைப்படி அறிவிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக சட்டசபையில் 18 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களில் விஜயதாரணியை போன்று மேலும் 10 எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களும் விரைவில் கட்சி மாறலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
தி.மு.க. கூட்டணியில் கடந்த தேர்தலை விட குறைவான எம்.பி. தொகுதிகளே காங்கிரசுக்கு கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் தற்போது எம்.பி.யாக உள்ள சிலர் போட்டியிட முடியாத சூழல் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் எம்.பி.க்கள் சிலரும் காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருப்ப தாகவும் தெரிகிறது.
எனவே தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தை முடிந்து காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள் வெளியாகும் போது எம்.பி.க்கள் சிலரும் பாரதிய ஜனதா பக்கம் சாயலாம் என்றும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாராளுமன்ற தேர்தல் களம் பரபரப்பான கட் டத்தை எட்டியிருக்கும் நிலையில் தமிழக காங்கிரசில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் புகைச்சல் கட்சியினர் மத்தியிலும் தேர்தல் களத்திலும் சூட்டை கிளப்பி இருக்கிறது.
- தமிழ்நாடு ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கிறது.
- பா.ஜனதாவால் உண்மை பேச முடியாது. அவர்கள் பொய்தான் கூறுவார்கள்.
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதனையடுத்து சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அவர் வாழ்த்து பெற்றார். அப்போது சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் உடன் இருந்தார்.
அதன்பின்னர் சட்டசபை வளாகத்தில் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கிறது. பேரிடர், கொரோனா என பல கட்டங்களை கடந்து பல புதிய திட்டங்களால் தமிழகத்தை உயர்த்தி வருகிறது. இந்த பட்ஜெட் சிறப்பானது.
பா.ஜனதாவால் உண்மை பேச முடியாது. அவர்கள் பொய்தான் கூறுவார்கள். மத்திய அரசின் வீடு வசதி திட்டம் குளறுபடியானது. இதில் அவர்கள் தோல்வி அடைந்து விட்டார்கள்.
விஜயதாரணி 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். வக்கீல். பா.ஜனதா எப்படி என்றால் பிள்ளை பிடிக்கும் கட்சி. யார், யார் திறமையாக இருக்கிறார்களோ, விவரமாக இருக்கிறார்களோ அவர்களை பிடிக்கலாமா? என்று வலைவீசுவார்கள். அவர்கள் வீசும் வலைக்கு எங்கள் விஜயதாரணி சிக்க மாட்டார். அவர் புத்திசாலி.
ஒரு வழக்கு சம்பந்தமாக, டெல்லி போய் இருக்கிறார். உடனே பா.ஜனதா தலைவர்கள் அவரை சேர்த்துக்கொள்ளலாமா? என்று துடிக்கிறார்கள். அது நடக்காது. அவருக்கு (விஜயதாரணி) காங்கிரஸ் கட்சி மீது எந்த அதிருப்தியும் இல்லை. காங்கிரஸ் கட்சி அவருக்கு நிறைய செய்துள்ளது. இன்னும் செய்ய தயாராக இருக்கிறது.
இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.
இதற்கிடையே செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார், அகில இந்திய செயலாளர் ஸ்ரீவெல்லபிரசாத் முன்னிலையில் நாளை (புதன்கிழமை) மாலை 3.30 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்.
இந்த நிகழ்வில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் குமரிஅனந்தன், கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர் எம்.பி., எம்.கிருஷ்ணசாமி ஆகியோர் பங்கேற்பார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து வந்த கே.எஸ்.அழகிரி அதிரடியாக மாற்றப்பட்டு தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வ பெருந்தகை நியமிக்கப்பட்டு உள்ளார்.
- மவுனம் சம்மதத்துக்கு அறிகுறி என்பது போல விஜயதாரணியின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் தமிழக காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு சத்திய மூர்த்தி பவன் பரபரப்பாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. 5 ஆண்டுகளாக தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து வந்த கே.எஸ்.அழகிரி அதிரடியாக மாற்றப்பட்டு தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வ பெருந்தகை நியமிக்கப்பட்டு உள்ளார்.
தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக காங்கிரஸ் தலைமை மாற்றப்பட்டு இருப்பது தமிழக காங்கிரசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அந்தக் கட்சியின் விளவங்கோடு தொகுதி பெண் எம்.எல்.ஏ.வான விஜயதாரணி பாரதிய ஜனதா கட்சியில் சேரப் போவதாக கடந்த சில நாட்களாகவே பரபரப்பான தகவல்கள் பரவி வருகிறது.
இப்படி பரவி வரும் செய்தியை விஜயதாரணி மறுக்காமலேயே உள்ளார். மவுனம் சம்மதத்துக்கு அறிகுறி என்பது போல விஜயதாரணியின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இந்த நிலையில் டெல்லியில் முகாமிட்டுள்ள விஜயதாரணி பாரதிய ஜனதா கட்சியில் சேர்வதில் கூடுதல் வேகத்துடன் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
காங்கிரசில் இருந்து வெளியேறி பா.ஜனதா கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதில் அவர் தீவிரமாக இருப்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. கன்னியாகுமரி எம்.பி. தொகுதியை தனக்கு வழங்க வேண்டும். இல்லை என்றால் மேல்சபை எம்.பி. பதவியில் தன்னை அமர்த்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியிடம் கோரிக்கை வைத்துள்ள விஜயதாரணி டெல்லியில் பா.ஜ.க.வின் தமிழக பொறுப்பாளரான அரவிந்த் மேனனை சந்தித்து பேசி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இது தவிர பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலரையும் அவர் ரகசியமாக சந்தித்து பேசி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் விஜயதாரணி எம்.எல்.ஏ. பா.ஜ.க.வில் சேர்வது 100 சதவீதம் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எந்த தேதியில் யார் முன்னிலையில் சேருவது என்பது பற்றி முடிவு செய்யப்பட்டதும் விஜயதாரணி பாரதிய ஜனதா கட்சியில் தனது அரசியல் பணியை வேகப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கடந்த சில நாட்களாக டெல்லியிலேயே தங்கி உள்ளார். சட்டசபை கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை.
- விஜயதாரணி விளவங்கோடு தொகுதியில் கடந்த 2011 முதல் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்று இருக்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி. சட்டசபை காங்கிரஸ் கொறடாவாகவும் இருக்கிறார்.
சமீபகாலமாக கட்சியில் அதிருப்தியில் இருந்து வருகிறார். அவர் பா.ஜனதாவில் சேர போவதாக தகவல்கள் பரவி வந்தன. ஆனால் விஜயதாரணி அதை மறுக்கவும் இல்லை. ஒத்துக்கொள்ளவும் இல்லை. இதனால் அவர் என்ன முடிவில் இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது.
கடந்த சில நாட்களாக டெல்லியிலேயே தங்கி உள்ளார். சட்டசபை கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில், டெல்லியில் பா.ஜ.க. பொதுச்செயலாளர் அருண் சிங் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் விஜயதாரணி இணைந்தார்.
- தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக வலுவாக காலூன்ற வேண்டும்.
- தமிழகத்தில் அண்ணாமலை சிறப்பாக செயல்பட்டு பாஜகவை பலப்படுத்தி வருகிறார்.
டெல்லி:
டெல்லியில் பா.ஜ.க. பொதுச்செயலாளர் அருண் சிங் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி இணைந்தார்.
அதன்பின் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜகவில் இணைந்த சகோதரி விஜயதாரணியை வரவேற்கிறேன் என்றார்.
இதன்பின்னர் பேசிய விஜயதாரணி,
* பல வருடங்களாக தேசிய கட்சியான காங்கிரசில் இருந்தேன். தற்போது மீண்டும் ஒரு தேசிய கட்சியில் இணைந்துள்ளேன்.
* மோடி தலைமையிலான அரசு பல சாதனைகளை செய்து வருகிறது.
* அரசின் திட்டங்கள் மக்களை சரியாக சென்றடைவதில்லை.
* தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக வலுவாக காலூன்ற வேண்டும்.
* தமிழகத்தில் அண்ணாமலை சிறப்பாக செயல்பட்டு பாஜகவை பலப்படுத்தி வருகிறார்.
* மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை பாஜக நிறைவேற்றியுள்ளது.
* பெண்களுக்கு பாஜக தொடர்ந்து ஊக்கம் அளித்து வருகிறது என்றார்.
- காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி சட்டசபை காங்கிரஸ் கொறடாவாகவும் இருக்கிறார்.
- விஜயதாரணி பாஜகவில் இணைந்ததை இனிப்பு வழங்கி காங்கிரஸ் கட்சி கொண்டாடினர்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ. விஜயதாரணி. சட்டசபை காங்கிரஸ் கொறடாவாகவும் இருந்தார்.
சமீபகாலமாக கட்சியில் அதிருப்தியில் இருந்து வந்த அவர் பா.ஜனதாவில் சேர போவதாக தகவல்கள் பரவி வந்தன. ஆனால் விஜயதாரணி அதை மறுக்கவும் இல்லை. ஒத்துக்கொள்ளவும் இல்லை. இதனால் அவர் என்ன முடிவில் இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது.
இந்நிலையில், டெல்லியில் பா.ஜ.க. பொதுச்செயலாளர் அருண் சிங் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் விஜயதாரணி இணைந்தார்.
இதையடுத்து விஜயதாரணி காங்கிரசில் இருந்து சென்றது காங்கிரஸ் பேரியக்கத்துக்கு விடிவு நாள் என்று காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தெரிவித்தனர்.
விளவங்கோடு எம்.எல்.ஏ. விஜயதாரணி பாஜகவில் இணைந்ததை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
- ராகுல் காந்தியின் பழைய வீடியோவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தனது 'X' தளத்தில் பகிர்ந்துள்ளது.
- எதற்கும் பயப்படாத அச்சமற்ற உண்மையான போராளிகளை மட்டுமே காங்கிரஸ் விரும்புகிறது
விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான விஜயதாரணி, காங்கிரசில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்துள்ள நிலையில், ராகுல் காந்தியின் பழைய வீடியோவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தனது 'X' தளத்தில் பகிர்ந்துள்ளது.
அதில், "எதற்கும் பயப்படாத அச்சமற்ற உண்மையான போராளிகளை மட்டுமே காங்கிரஸ் விரும்புகிறது. பயப்படுபவர்கள் கட்சியை விட்டு வெளியேறுங்கள், உங்களுக்கு RSS தான் சரியான இடம்" என பதிவிடப்பட்டுள்ளது
- விஜயதாரணிக்கு இன்று என்ன பாஜக மீது பாசம்.
- பாஜகவிலாவது அவர் சந்தோஷமாக இருக்கட்டும்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ. விஜயதாரணி. சட்டசபை காங்கிரஸ் கொறடாவாகவும் இருந்தார்.
சமீபகாலமாக கட்சியில் அதிருப்தியில் இருந்து வந்த அவர் பா.ஜனதாவில் சேர போவதாக தகவல்கள் பரவி வந்தன.
இந்நிலையில், டெல்லியில் பா.ஜ.க. பொதுச்செயலாளர் அருண் சிங் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் விஜயதாரணி இணைந்தார்.

இதையடுத்து விஜயதாரணி காங்கிரசில் இருந்து சென்றது காங்கிரஸ் பேரியக்கத்துக்கு விடிவு நாள் என்று காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியிருப்பதாவது:-
இவ்வளவு காலமாக பாஜக அரசுக்கு எதிராக பேசிய விஜயதாரணிக்கு இன்னைக்கு என்ன பாஜக மீது பாசம்.
"விஜயதாரணியால் கட்சிக்கும் பயனில்லை, நாட்டுக்கும் பயனில்லை.. பாஜகவிலாவது அவர் சந்தோஷமாக இருக்கட்டும்."
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி நேற்று பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
- எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறேன் என விஜயதாரணி சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முக்கிய தலைவர்கள் தங்களது சொந்த கட்சியை விட்டு எதிரணிக்கு தாவி வருகின்றனர்.
இதற்கிடையே, தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. விஜயதாரணி நேற்று திடீரென டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்துக்குச் சென்று தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் முதல் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக கட்சித்தலைமைக்கு எழுதிய கடிதத்தை செய்தியாளர்களிடம் காண்பித்தார்.
இதையடுத்து, கட்சித் தாவல் தடைச்சட்டத்தின்படி, ஒரு அரசியல் கட்சியின் எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியில் இருந்து வேறு அரசியல் கட்சிக்கு தாவினால் அவர்களின் பதவி பறிக்கப்பட்டு விடும் என்ற விதியின் அடிப்படையில் விஜயதாரணியின் எம்.எல்.ஏ. பதவியை உடனடியாக தகுதிநீக்கம் செய்து அறிவிக்குமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய விஜயதாரணி, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறேன் என சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர்ந்து 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்ட விஜயதாரணி, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கொள்ளுப்பேத்தி ஆவார். இவர் தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டசபை கொறடாவாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- காங்கிரசில் இருந்து விலகிய விஜயதாரணியின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
- விளவங்கோடு சட்டசபை தொகுதி காலியாக இருப்பது குறித்து முறைப்படி அறிவிக்கப்படும்.
நெல்லை:
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த நிலையில் நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் அப்பாவுக்கு அவர் அனுப்பி வைத்ததுடன், இ-மெயில் மூலமும் கடிதத்தை அனுப்பி வைத்தார். அதுமட்டுமின்றி தனது எக்ஸ் வலைதள பக்கத்திலும், பேஸ்புக் பக்கத்திலும் ராஜினாமா கடிதத்தை வெளியிட்டு உள்ளார்.
இதற்கிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சபாநாயகர் அப்பாவுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வான விஜயதாரணி எங்கள் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து உள்ளதால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அவரது எம்.எல்.ஏ. பதவியை உடனடியாக பறித்து தகுதி நீக்கம் செய்து அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:
காங்கிரசில் இருந்து விலகிய விஜயதாரணியின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ராஜினாமா கடிதம் முறைப்படி இருந்ததால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
இணைய வழியில் கடிதம் அனுப்பியதோடு தொலைபேசியிலும் விஜயதாரணி என்னிடம் பேசினார்.
விளவங்கோடு சட்டசபை தொகுதி காலியாக இருப்பது குறித்து முறைப்படி அறிவிக்கப்படும் என்று கூறினார்.
- விஜயதாரணி ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் அப்பாவு ஏற்றுக் கொண்டதாக அறிவித்திருந்தார்.
- பாநாயகர் அப்பாவுவின் அறிவிப்பு தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை:
விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயதாரணி பாரதிய ஜனதா கட்சிக்கு தாவியதால் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்த ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் அப்பாவு ஏற்றுக் கொண்டதாக அறிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து அந்த தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டது. சபாநாயகர் அப்பாவுவின் அறிவிப்பு தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 190 (3) (பி)ன் கீழ் சட்டப்பேரவை விதிகளின்படி பிப்ரவரி 24 முதல் விளவங்கோடு தொகுதி காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, 'திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி காலியாக இருக்கிறதா என சரியான நேரத்தில் அறிவிப்பு வெளியாகும். இந்த ஆட்சி சட்டத்தின் ஆட்சி. சட்டத்திற்குட்பட்டு சரியான நடவடிக்கை எடுத்து வருவதாக சபாநாயகர் அப்பாவு கூறியிருந்தார்.