என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்ப்ப கால பிரச்சனை"

    • கர்ப்ப காலத்தில், பருக்கள் பெரும்பாலும் வாயைச் சுற்றிலும் கன்னத்திலும் வரும்.
    • கர்ப்ப காலத்தில் பல பெண்கள் உடல் முழுவதும் அரிப்பு பிரச்சனையை சந்திக்கின்றார்கள்.

    பெரும்பாலான பெண்கள் கர்ப்ப காலத்தில் மிகவும் உணர்திறன் வாய்ந்த சருமத்தைக் கொண்டுள்ளனர், இதன் காரணமாக அவர்கள் நீட்டித்த தழும்புகள், அரிப்பு, பருக்கள், நிறமி மற்றும் பிரசவத்திற்குப் பிறகு தோல் தளர்த்தல் போன்ற பல தோல் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

    பருக்கள்: பருக்கள் பிரச்சனை கர்ப்பிணிக்கு மிகவும் எரிச்சலூட்டும் பிரச்சினை. பல பெண்களுக்கும் தடிப்புகள் ஏற்படுகின்றன. புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அதிகப்படியான சுரப்பு சருமத்தின் உற்பத்தியை அதிகரிக்கிறது, இது சருமத்தின் துளைகளை நிறுத்துகிறது. கர்ப்ப காலத்தில், பருக்கள் பெரும்பாலும் வாயைச் சுற்றிலும் கன்னத்திலும் வரும். பல பெண்களுக்கு அவை முகம் முழுவதும் பரவுகிறார்கள். இவற்றுக்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இவை பிரசவத்திற்குப் பிறகும் நீடிக்கும். சில நேரங்களில் இந்த தழும்புகளும் எஞ்சியிருக்கும். எனவே, மருத்துவரிடம் ஆலோசிக்காமல் வீட்டில் எந்த சிகிச்சையும் செய்ய வேண்டாம். இவற்றின் சிகிச்சைக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகளையும் பயன்படுத்தக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

    மெலஸ்மா: இது கர்ப்ப காலத்தில் ஏற்படும் மிகவும் கடுமையான தோல் பிரச்சினை, இது கர்ப்ப முகமூடி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில், முகத்தில் நிறமி ஏற்படுகிறது. சூரியனின் புற ஊதா கதிர்கள் வெளிப்பாடு, பரம்பரை மற்றும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்களின் அளவு அதிகரிப்பதும் இதற்கு முக்கிய காரணங்கள்.

    அரிப்பு: வாய்வு காரணமாக கர்ப்ப காலத்தில் தசைகளில் நீட்சி ஏற்படுகிறது, இதன் காரணமாக பல பெண்களுக்கு அரிப்பு பிரச்சினைகள் ஏற்படுகிறது. பல பெண்கள் கர்ப்ப காலத்தில் உடல் முழுவதும் அரிப்பு பிரச்சனையை சந்திக்கின்றார்கள். எனவே, இதைத் தவிர்க்க, கலமைன் லோஷன் அல்லது நல்ல தரமான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். அரிப்பு அதிகமாக இருந்தால் ஒரு மருத்துவரை அனுகவும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் கல்லீரல் தொந்தரவுகளாலும் இது ஏற்படலாம் என கூறப்படுகிறது.

    நீட்டித்த தழும்புகள்: குழந்தையின் வளர்ச்சியுடன் வயிற்றுத் தோல் நீட்டப்படுகிறது, இதன் காரணமாக சருமத்தின் மேற்பரப்பில் காணப்படும் மீள் இழைகள் உடைக்கப்படுகின்றன. இதன் விளைவாக நீட்டித்த தழும்புகள் உண்டாகிறது. கர்ப்ப காலத்தில் அதிக எடை அதிகரிக்கும் பெண்கள் இந்த பிரச்சினைக்கு ஆளாகிறார்கள். இந்த சமையத்தில் 11-12 கிலோ எடை அதிகரிப்பு சாதாரணமானது, ஆனால் சில பெண்களுக்கு 20 கிலோ வரை அதிகரிக்கும். இது சருமத்தில் கூர்மையான நீட்டிப்பை ஏற்படுத்துகிறது, இது நீட்டித்த தழும்புகள் பெறும் அபாயத்தை அதிகரிக்கிறது. வைட்டமின் ஈ கொண்ட மாய்ஸ்சரைசர் அல்லது கிரீம் பயன்படுத்துவதன் மூலம் அவற்றைக் குறைக்கலாம், ஏனெனில் இது சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கும்.

    குறிப்பு : மருத்துவம் தொடர்பான எந்தொரு முயற்சியை மேற்கொள்ளும் போதும் உங்கள் மருத்துவரை அனுக மறக்காதீர்...

    • தினமும் குளிப்பது மிக மிக முக்கியம்.
    • ஹார்மோன் மாறுதல்களாலும் தோலில் பாதிப்புகள் ஏற்படலாம்.

    உணவு கருவுற்ற பெண் மூன்று 'G' நிறைய சாப்பிட வேண்டும்.

    Green leaves - கீரை வகைகள்

    Green vegetables - பச்சைக் காய்கறிகள்

    Grains - முழு தானியங்கள்

    முழு தானியங்கள் என்றால் அதிகம் பாலிஷ் போடாத கோதுமை மற்றும் அரிசி சாதம், கஞ்சி போன்றவை நல்லது. புழுங்கலரிசி உபயோகிப்பது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. மல்லிகைப் பூ போன்ற பச்சரிசி சாதம், சத்தில்லாத சக்கைதான். அதிக refine செய்யப்பட்ட ஆட்டா, மைதா போன்றவற்றில் இயற்கையான நார்ச்சத்து இருக்காது.அதிக காரம், மசாலா பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. கருவுற்ற தாய் நிறையப் பழங்கள் சாப்பிட வேண்டும். இது மலச்சிக்கலைத் தவிர்க்கும். அன்னாசி, பப்பாளி போன்றவை உடலுக்கு நல்லது.

    கருவுற்ற தாயின் தோல் வறண்டு அல்லது அதிக எண்ணெய்ப் பசையாக மாறலாம். இதற்குத் தேவையான மாய்ஸ்சரைஸர்கள் அல்லது லோஷன் பயன்படுத்தலாம். சாதாரண தேங்காய் எண்ணெய் மிகவும் நல்லது. நிறைய கெமிக்கல் அடங்கிய மேல் பூச்சுகளைத் தவிர்ப்பது நல்லது. அவற்றால் ஒவ்வாமை ஏற்பட்டு, அதற்கு சிகிச்சை எடுக்கவேண்டி வந்தால் வீணான மன உளைச்சல்தானே! சிலருக்கு தோலில் ஏற்படும் மாற்றங்கள் பிரசவம் ஆன பிறகு தானாக சரியாகிவிடும். ஹார்மோன் மாறுதல்களாலும் தோலில் பாதிப்புகள் ஏற்படலாம்.

    தினமும் குளிப்பது மிக மிக முக்கியம். தண்ணீர் கிடைத்தால் தினம் இரண்டு முறை! தன் சுத்தம் பேணுதல், தோல் நோய்கள் வராமல் பாதுகாக்கும்.

    புத்துணர்ச்சியையும் தரும்.

    அந்தக் காலத்தில் விசாலமான வீடு, முற்றம், கொல்லை என்று நல்ல காற்றோட்ட வசதி இருந்தது. வெந்நீர் போட வீட்டுக்கு வெளியில் அடுப்பு இருக்கும். அதிலிருந்து வரும் புகை வீட்டுக்குள் அதிகம் வராது. யாருக்கும் பாதிப்பு இருக்காது. இந்தச் சின்ன வீட்டில் புகைமூட்டம் இருந்தால் எல்லோருக்கும் சுவாசக் கோளாறு வரும். அதிலும் கர்ப்பிணிப் பெண்ணுக்கு அதிக பாதிப்பு இருக்கும்.

    • உயிரணுக்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தால் குழந்தைப்பேறு தாமதமாகும்.
    • சித்த மருத்துவத்தில் சிறந்த மருந்துகள் உள்ளன.

    உயிரணுக்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தால் குழந்தைப்பேறு தாமதமாகும். தற்போது இளைஞர்கள் மத்தியில் இந்தப்பிரச்சினை அதிகமாக காணப்படுகிறது. இதற்கு சித்த மருத்துவத்தில் சிறந்த மருந்துகள் உள்ளன. அவை:

    1) அமுக்கரா சூரணம் 1 கிராம், பூரண சந்திரோதய செந்தூரம் 100 மி.கி., நாக பற்பம் 100 மி.கி., பவள பற்பம் 100 மி.கி. என்ற அளவில் எடுத்து தினமும் காலை-இரவு, பாலில் கலந்து உணவுக்குப் பின்பு சாப்பிடலாம்.

    2) பூனைக்காலி விதைப் பொடி 1 கிராம் எடுத்து பாலில் கலந்து காலை, இரவு குடிக்கலாம்.

    3) நெருஞ்சில் விதைப் பொடி, நீர்முள்ளி விதைப்பொடி சம அளவில் பொடித்து பாலில் கலந்து சாப்பிடலாம்.

    விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் அசைவ உணவுகள்: நாட்டுக்கோழி முட்டை, இறைச்சி, ஒமேகா-3 கொழுப்பு நிறைந்த கடல் சிப்பிகள், சூரை மீன், மத்திச்சாளை மீன்கள்,

    பருப்பு வகைகள்: பாதாம், பிஸ்தா, அக்ரூட் பருப்புகள், பூசணி விதைகள்,

    பழங்கள்: செவ்வாழைப்பழம், நேந்திர வாழைப்பழம், பேரீச்சம் பழம், திராட்சை பழம், பெர்ரி வகைகள், அவகோடா, பலாப்பழம், மாம்பழம், துரியன் பழம், அத்திப்பழம், நாட்டு மாதுளம்பழம்,

    கீரைகள்: பசலைக்கீரை, தூதுவளை, நறுந்தாளி, முருங்கை, அறுகீரை, தக்காளி, புடலங்காய், அவரை பிஞ்சு, முருங்கை பிஞ்சு, முருங்கை காய், பீன்ஸ், பட்டர் பீன்ஸ், கேரட், சர்க்கரை வள்ளி கிழங்கு, உருளைக்கிழங்கு, பனங்கிழங்கு மற்றும் சின்ன வெங்காயம், பூண்டு இவைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். மது, புகைப்பழக்கம் கூடாது.

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய்.ஆர். மானக்சா எம்.டி. (சித்தா)

    • கர்ப்ப காலத்தில் தான் பெண்களை பல்வேறு பிரச்சனைகள் பாதிக்கின்றன.
    • உடலில் அரிப்பு உண்டாவது என்பது மிகவும் வேதனைக்கு உரிய விஷயம்..

    கர்ப்ப காலத்தில் தான் பெண்களை பல்வேறு பிரச்சனைகள் பாதிக்கின்றன. கர்ப்பிணி பெண்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் ஒரு பிரச்சனை தான் கர்ப்ப காலத்தில் அரிப்பு உண்டாவது, உடலில் அரிப்பு உண்டாவது என்பது மிகவும் வேதனைக்கு உரிய விஷயம்..

    பொதுவாகப் பெண்களுக்குக் கர்ப்பகாலத்தில் ஐந்து மாதங்களுக்கு மேல் வயிற்றுப் பகுதியின் சருமப் பகுதி விரிவடையும்போது தழும்புகள் ஏற்படும். அப்போது, ஒரு மாதிரியான நமைச்சல் உருவாகி, அரிப்பு ஏற்படும். இதுதான் காரணமே தவிர, வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு முடி அதிகமாக இருப்பதால் அரிப்பு ஏற்படும் என்பதற்கு எந்த அறிவியல் நிரூபணமும் இல்லை.

    அனைத்து கர்ப்பிணி பெண்களும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் இந்த அரிப்பு உண்டாவது.. அரிப்பு உண்டாகும் போது நமக்கு சொறிய வேண்டும் என்று கைகள் துடித்தாலும் கூட, அரிப்பு உண்டாகும் போது சொறியக்கூடாது. இவ்வாறு சொறிந்தால் அரிப்பு அதிகரிக்க தான் செய்யும்.. எனவே மறந்தும் இந்த தவறை செய்து விடாதீர்கள்.

    அரிப்பு உண்டாகும் பகுதிகளை எப்போதும் உலர்வாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். இந்த சதை மடிப்புகள் வயிற்றுப் பகுதிகள் போன்ற இடங்களில் வியர்வை அல்லது குளித்து முடித்த பின் ஈரமாக இருப்பது போன்றவை இருக்க கூடாது. இவை அரிப்பை உண்டாக்கும் என்பதால் உலர்வாக வைத்துக் கொள்ளுங்கள். இதனால் அந்த இடங்களில் கொப்புளங்கள் வருவதை தடுக்கலாம்.

    சில பெண்கள் ஆறாவது மாதத்திலும், சிலர் எட்டாவது மாதத்திலும் இந்த அரிப்புத்தன்மையை உணர ஆரம்பிப்பார்கள். இதுபோன்ற சமயங்களில் குளிப்பதற்கு முன்பு ஆலிவ் எண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றை வயிற்றுப்பகுதியில் தேய்த்து சிறிது நேரம் ஊறிக் குளித்துவிடலாம்.

    இதனால் அரிப்பு, தழும்பைத் தவிர்க்கலாம். அரிப்பெடுக்கும் நேரங்களில் மேலே சொன்ன எண்ணெயை வயிற்றுப் பகுதியில் தடவியும் வரலாம். சிலருக்குப் பித்தப்பையில் அடைப்பு ஏற்படுவதன் காரணமாகவும் வயிற்றுப் பகுதியில் அரிப்பு ஏற்படலாம். எனவே, அரிப்பு எடுக்கும்போது மருத்துவரிடம் காட்டி அதற்கான தீர்வைத் தேடுங்கள்.

    • தம்பதிகள் இந்த விஷயத்தில் தயக்கம் காட்டக்கூடாது.
    • இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி மருத்துவத்துறையில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன.

    உங்களுக்கு இருக்கும் குழந்தையின்மை பிரச்சினையை நீங்கள் புரிந்து கொண்டவுடன் டாக்டரை சரியான நேரத்தில் அணுகி உங்கள் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு பெற முயல்வது முக்கியம். தம்பதிகள் இந்த விஷயத்தில் தயக்கம் காட்டக்கூடாது. நீங்கள் எப்போது டாக்டரை அணுகவேண்டும் என்பதற்கு இங்கே சில குறிப்புகளை தந்து உள்ளேன்.

    ஆண்/பெண் வயது 35 முதல் 40 இருந்தாலோ, மாதவிடாய் சீராக வரவில்லை என்றாலோ அல்லது மாதவிடாயே ஏற்படவில்லை என்றாலோ, மாதவிடாய் அதிக வலியோடு ஏற்பட்டாலோ கருவுறுவதில் பிரச்சினைகள் இருப்பதை நீங்கள் உணர்ந்தாலோ, உங்கள் குடும்பத்தினரில் யாருக்காவது மரபு வழி கருவுறாமைக்கான பிரச்சினை இருந்தாலோ டாக்டரை அணுகி மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

    இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி மருத்துவத்துறையில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன. இதனால் தீர்க்க முடியாமல் சவாலாக இருந்த பல நோய்களையும் இன்று எளிதாக குணப்படுத்த முடிகிறது. அந்த வகையில் கருவுறாமைக்கான காரணங்களை சரியாக கண்டறிந்து, அதற்கான சிகிச்சை முறையையும் தேர்ந்தெடுத்து உங்கள் பிரச்சினையை சரி செய்து கொள்ள முடியும். அந்த வகையில் பல சிகிச்சை முறைகள் இன்று வழக்கத்தில் உள்ளன.

    இன்விட்ரோ பெர்டிலைஷேசன் (ஐ.வி.எப்.)

    இந்த ஐ.வி.எப். சிகிச்சை முறையில் கருமுட்டைகள் சேகரிக்கப்பட்டு உடலுக்கு வெளியே ஆய்வகத்தில் கருவகத்தட்டில் வைக்கப்பட்டு விந்தணுவுடன் சேர்க்கப்பட்டு கருவுற செய்யப்படுகிறது. இப்போது அதிக மக்கள் இந்த சிகிச்சை முறையில் பயன்பெற்று வருகிறார்கள் என்பது உண்மை.

    இவ்வாறு அன்னை மருத்துவமனை டாக்டர்கள் ஜோ.புல்கானின், பி.ஜி.சுதா ஆகியோர் கூறினார்கள்.

    • குழந்தையின்மைக்கு பெண்களை மட்டுமே காரணம் சொல்ல முடியாது.
    • ஆண்களிடம் காணப்படும் குறைபாடுகள் குழந்தையின்மைக்கு 35 சதவீதம் காரணமாக இருக்கின்றன.

    குழந்தையின்மைக்கு உடல் நலம், உளநலம், சுற்றுச்சூழல் என பல்வேறு காரணிகள் இருந்தாலும் முக்கியமான காரணம் காலம் தாழ்த்தி திருமணம் செய்து கொள்வதுதான். திருமணம் செய்வதற்கு ஏற்ற வயது 22-ல் இருந்து 25 வயது வரையிலான காலகட்டமாகும். அதுதான் தாம்பத்திய வாழ்க்கைக்கு சிறந்தது. 30 வயதுக்குள் குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அந்த வயதில் தான் பெண்ணின் கரு முட்டைகளும், ஆணின் உயிரணுக்களும் குழந்தை பேற்றுக்கான தரத்துடனும் வீரியத்துடனும் இருக்கும்.

    அந்த பருவத்தில் திருமணம் செய்தால் தான் இயற்கையான கருத்தரிப்பு சாத்தியப்படும். முப்பது வயதுக்கு பின்னர் கருமுட்டை மற்றும் உயிரணுக்களின் வீரியம் குறைந்து கொண்டே வரும். எனவே எக்காரணத்தைக் கொண்டும் திருமணத்தை தள்ளிபோடுதல் கூடாது. குழந்தையின்மைக்கு இது மட்டுமே முழு காரணம் அல்ல. மரபணு ரீதியான குறைபாடுகள், சுற்றுச்சூழல் சீர்கேடு, உடல் மற்றும் உளவியல் ரீதியான பிரச்சினைகள் என பல காரணங்கள் உள்ளன. இது போன்ற காரணங்களால் இன்றைக்கு இயற்கையான முறையில் கருத்தரிக்கும் வாய்ப்பு 2 சதவீதமாக குறைந்துள்ளது. அதாவது 100 தம்பதிகளில் 2 தம்பதிகளுக்கு மட்டுமே இயல்பான குழந்தை பேறு சாத்தியமுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.

    எனவே திருமணமாகி ஒரு வருடம் ஆன பின்பும் குழந்தை பேறு கிடைக்கவில்லை என்றால் கணவன்-மனைவி இருவரும் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது. பெண்களின் கர்ப்பப் பை, கருமுட்டைப் பை, இவற்றை இணைக்கும் கருக்குழாய் ஆகியன குழந்தைபேற்றுக்கான முக்கிய உறுப்புகளாகும்.கருமுட்டைப் பையில் உற்பத்தியாகும் முட்டையானது கருக்குழாயை வந்தடையும். அங்குதான் ஆணின் உயிரணு வந்து கருமுட்டையினுள் நுழைந்து கருவுறச் செய்யும். 4-5 நாட்களுக்கு பின்னரே கருவுற்ற முட்டை கர்ப்பப் பைக்குள் சென்று குழந்தையாக வளரத் தொடங்கும். இந்த கருமுட்டைப் பை, கருக்குழாய் ஆகியவற்றில் ஏற்படும் குறைபாடுகள் குழந்தையின்மைக்கு 35 சதவீதம் காரணமாக அமைகின்றன. கர்ப்பப்பை பிரச்சினைகள் 20 சதவீதம் காரணமாக அமைகின்றன.

    அதே போல் ஆண்களிடம் காணப்படும் குறைபாடுகள் குழந்தையின்மைக்கு 35 சதவீதம் காரணமாக இருக்கின்றன. அதாவது ஆண்களின் உயிரணுக்கள் வீரியமாக இருந்தால்தான் அது கருமுட்டையை துளைத்துச் சென்று கருவுற செய்ய முடியும். வீரியம் குறைந்த உயிரணுக்களால் சாத்தியமில்லை. சிலருக்கு உயிரணுக்கள் குறைவாக இருக்கும். ஒரு சிலருக்கு உயிரணுக்கள் உற்பத்தி இருக்கும், ஆனால் வெளிவராது.இப்போதெல்லாம் இளைஞர்கள் செல்போனை பேண்ட் பாக்கெட்டில் வைக்கிறார்கள். அதிலிருந்து வெளிவரும் கதிர் வீச்சு ஆண்களின் உயிரணுக்களை பாதிப்பதாக தெரியவந்துள்ளது.

    இது போன்ற பிரச்சினைகள் இருப்பதால் குழந்தையின்மைக்கு பெண்களை மட்டுமே காரணம் சொல்ல முடியாது. மேலும் உடல்சார்ந்த பிரச்சினையில் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இன்றைய காலக்கட்டத்தில் பலருக்கும் மாதவிடாய் சீராய் வருவதில்லை. வந்தாலும் வலி மிகுந்ததாகவே உள்ளது. அது சரியாக இருந்தால் தான் குழந்தைபேறே வாய்க்கும். மாதவிடாய் காலத்தில் வெளியேற வேண்டிய ரத்தம் சிலருக்கு உள்ளே சென்று கர்ப்பபைக்கு பின்பகுதியில் திட்டு திட்டாக படிந்து உறைந்து விடும். சில சமயம் இதுபோன்று முட்டைப்பையிலும் படிந்து விடும். இப்படிபட்டவர்கள் மாதவிடாயின் போது கடும் வேதனைபடுவார்கள். ஈஸ்ட்ரோஜன் அதிகளவில் சுரந்தாலும் கர்ப்பபையில் கட்டி உருவாக வாய்ப்பு உள்ளது. எனவே ஹார்மோன்கள் சுரப்பை சமநிலைபடுத்தும் வகையில் வாழ்க்கை முறையை அமைத்து கொள்ள வேண்டும்.

    அதாவது அதிகம் உணர்ச்சி வசப்படாமலும் பதட்டம் அடையாமலும் அமைத்துக் கொள்ள வேண்டும். மாதவிடாய் சமயத்தில் வைக்கும் நாப்கினை 3 மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். அதுதான் கிருமித் தொற்று பரவாமல் தடுக்கும். தினமும் தலைக்கு குளிக்க வேண்டும். சிலருக்கு தலைக்கு ஊற்றுவது ஆகாது என்றால் வாரத்தில் 3 நாட்களாவது தலைக்கு குளிக்க வேண்டும். ஆரோக்கியமான கருத்தரித்தலுக்கு பெண்கள் தங்கள் வயது மற்றும் உயரத்துக்கு ஏற்ற வகையில் உடல் எடையை வைத்திருப்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். எண்ணெயில் பொரித்த நொறுக்குத்தீனிகள், கொழுப்புசத்து மிகுந்த உணவுகள் அதிகம் உண்பதை தவிர்க்க வேண்டும். உடலுழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உடல் எடை அதிகமான பெண்கள் கர்ப்பம் தரிக்கும்போது சிலருக்கு நீரழிவு நோய் ஏற்படலாம். அது வயிற்றில் வளரும் குழந்தையையும் தொற்றலாம்.

    அதனால் சுகபிரசவத்தில் சிக்கல் ஏற்படலாம். சிலருக்கு குழந்தை பேற்றுக்கு பின்னர் நீரழிவு வரலாம். எனவே உடல் எடையை நார்மலாக வைத்திருப்பதே நல்லது. மேலும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு கரு முட்டை பையில் நீர்கட்டிகள் உருவாக 90 சதவீத வாய்ப்புகள் உள்ளன. ஒல்லியானவர்களுக்கு 10 சதவீத வாய்ப்புதான் உள்ளது. இந்த நீர்க்கட்டிகள் உருவாகுவதற்கும் நீரிழிவு நோய்க்கும் தொடர்பு உண்டு. எனவே பெண்கள் அதற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். இவற்றோடு மனநலமும் முக்கியம். மகிழ்ச்சியான விசயங்களில் மனதை திருப்ப வேண்டும். டென்ஷன் படுவதை தவிர்க்க வேண்டும். இரவு தூக்கத்தை தவிர்க்க கூடாது.

    தூக்கம் கெட்டால் உடலின் இயக்கம் பாதிக்கும். உடல் சூடாகும். அதுவே பல்வேறு நோய்களை வரவழைக்கும். எனவே பகலில் உழைப்பும் இரவில் ஓய்வும் தேவை. இயற்கையான வாழ்வியலை கடைப்பிடிக்க வேண்டும். ரசாயன நச்சு இல்லாமல் விளைவிக்கப்பட்ட தானியங்கள், காய்கறிகள், பழங்களை தேர்ந்தெடுத்து உட்கொள்வது நல்லது. சுகாதாரமான காற்றை சுவாசிப்பது கூடுதல் ஆரோக்கியம். அன்றாடம் உடலுழைப்பு அல்லது உடற்பயிற்சி அவசியம். இப்படியான சூழலில் காலா காலத்தில் திருமணம் செய்து இல்லற வாழ்வை இனிமையாக தொடங்கினால் எல்லோருக்கும் குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டு.

    • காய்கறிகள், பழவகைகள், பயறு வகைகளை உண்ணலாம்.
    • முதல் மூன்று மாதங்களில் கடல் உணவுகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

    கர்ப்ப காலத்தில் பெண்கள், குழந்தையின் நலனையும் சேர்த்து ஆரோக்கியமான உணவினை உண்ண வேண்டும். இக்காலத்தில் இரும்புச்சத்து, கால்சியம், போலிக் அமிலம் நிறைந்த உணவுகள் தாய் மற்றும் சேய் இருவரின் நலனுக்கும் நன்மை பயக்கும். முதல் மூன்று மாதங்களில் கடல் உணவுகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

    மலச்சிக்கல் ஏற்படாதவாறு நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழவகைகள், பயறு வகைகள் போன்றவற்றை உண்ணலாம். எளிதில் உணவுச் செரிமானம் ஏற்பட சீரகப்பொடியை தண்ணீரில் கலந்து குடிக்கலாம். குமட்டல், வாந்தியை நீக்க மாதுளை பழச்சாறு, கறிவேப்பிலை துவையல் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

    இவற்றுடன் சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள பாவன பஞ்சாங்குல தைலத்தினை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளலாம்.மேலும் உளுந்து தைலம், குந்திரிக தைலம் போன்றவற்றை இடுப்பு மற்றும் வயிற்றுப்பகுதியில் தடவி வரலாம். இவை சுகமகப்பேற்றிற்கு உதவி செய்யும்.

    மகப்பேற்றிற்கு பின்னர் பெண்களின் உடல் இயல்பான பலமாற்றங்களை அடைந்து கொண்டிருக்கும்.மேலும் இக்காலத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதால் அதற்கேற்ற உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உளுந்து, வெந்தயம், வெள்ளைப் பூண்டு, பாதாம் பருப்பு இவை பால்சுரப்பிற்கு சிறந்த உணவாகும்.

    இவற்றுடன் சித்த மருந்துகளான சவுபாக்ய சுண்டி லேகியம் சதாவேரி லேகியம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். இவை பிரசவத்திற்கு பின்னரான உதிரப்போக்கினை சீராக்குவதுடன், பால் சுரப்பினையும் தூண்டுவிக்கும். மேலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களினால் உடலில் கொழுப்புச் சத்தின் அளவு அதிகரித்தல், பித்தப்பைக் கல் போன்றவை மகப்பேற்றிற்கு பின்னர் பெண்களில் காணப்படுகிறது.

    எனவே மைதா மற்றும் எண்ணையில் பொரித்த உணவுகளைத் தவிர்த்தல், சரியான நேரத்தில் அளவுடன் உணவு அருந்துதல், உணவில் பூண்டு, மஞ்சள், பீட்ரூட், கேரட், பப்பாளி போன்றவற்றை சேர்த்துக் கொள்ளுதல் இவற்றுடன் சித்த மருந்துகளான ஏலாதி, நெருங்சில், கீழாநெல்லி, கிச்சிவி மணப்பாகு போன்றவற்றை மருத்துவரின் அறிவுரையின்படி எடுத்துக்கொள்ளுவதால் பித்தப்பை கல்லினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளில் இருந்து வெளிவரலாம்.

    • சில மூட்டுவலி மருந்துகள் கர்ப்ப காலத்தில் பயன்படுத்துவதற்குப் பாதுகாப்பற்றவை.
    • கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது மிக முக்கியம்.

    கர்ப்பம் தரிப்பது மகிழ்ச்சியான, உற்சாகமான ஒரு விஷயமாக இருக்கலாம். ஆனால், அது ஒரு மன அழுத்தமாகவும் மாறிவிடக்கூடும். குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்ணுக்கு மூட்டுவலி (Rheumatoid Arthritis) இருப்பது கண்டறியப்பட்டால் இப்படி ஏற்படலாம். இது ஒரு நாள்பட்ட ஆட்டோ இம்யூன் நோய். இது மூட்டுகள் மற்றும் உடலின் பிற பகுதிகளில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக வலி, வீக்கம், விறைப்புத்தன்மை போன்றவை ஏற்படலாம்.

    மூட்டுவலி என்பது மூட்டு திசுக்களுக்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. மூட்டு வலி உள்ள கர்ப்பிணிப் பெண்களின் ரத்தத்தில் இந்த ஆன்டிபாடிகள் அசாதாரண அளவுகளில் காணப்படுகின்றன. இந்தப் பெண்களின் கருவிலும் இந்த ஆன்டிபாடிகள் குறைந்த அளவில் உள்ளன. இந்த நிலை, ருமாடிக் பரேசிஸ் (rheumatic paresis) அல்லது பிறவி மூட்டுவலி சார்ந்த கோளாறு என்றும் அறியப்படுகிறது. இது கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளை பாதிக்கிறது.

    மூட்டுவலி உள்ள தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு, நோயெதிர்ப்பு சார்ந்த கோளாறின் காரணமாக நோயெதிர்ப்பு மண்டலம் வளராமல் தடுக்கப்படும். குழந்தைகளுக்கு வெளிப்படும் அறிகுறிகளைப் போன்ற சில அறிகுறிகள் காணப்படுவதால் டைப் 1 நீரிழிவு நோய் (பருவமடையும் காலத்தில் தோன்றும் வகை 1 நீரிழிவு நோய்) அல்லது லுகேமியா போன்ற நோய்கள் ஏற்படலாம்.

    கர்ப்பத்தின் அறிகுறிகள் வெளியே தெரிவதற்கு குறைந்தபட்சம் சில வாரங்களுக்கு முன்பே தாய்க்கு மூட்டுவலிக்கான அறிகுறிகள் ஏற்பட்டிருந்தால், அது கருவிலிருக்கும் குழந்தையைப் பாதிப்பதற்கு அதிக வாய்ப்பு உண்டு. அதாவது, கர்ப்பம் தரிக்கும் முன் ஒரு பெண்ணிடம் மூட்டுவலி கண்டறியப்பட்டாலும், மகப்பேறு விடுப்பு எடுக்கத் தொடங்கும்போதுதான், அவர் தீவிரமாக பாதிக்கப்படத் தொடங்குவார். அந்த நேரத்தில், அவர் குழந்தையை முழுநேரமாக கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கும். அதனால், வீட்டிற்கு வெளியே எந்த வேலையையும் அவரால் செய்ய முடியாது.

    இந்த நிலை நிச்சயமாக கர்ப்பத்தை மிகவும் சவாலானதாக மாற்றும் என்றாலும், முறையான மேலாண்மையும் கவனிப்பும் இருந்தால், மூட்டுவலி உள்ள பெண்கள் ஆரோக்கியமான கர்ப்பத்தையும் ஆரோக்கியமான குழந்தையையும் பெற முடியும் என்பதை அறிவது அவசியம்.

    கர்ப்ப காலத்தில் மூட்டுவலியின் தாக்கத்தை குறைக்க, எலும்பு மூட்டு மருத்துவ நிபுணர் மற்றும் மகப்பேறு மருத்துவருடன் தொடர் ஆலோசனை பெறுவது அவசியம். மூட்டுவலிக்கான அறிகுறிகளை நிர்வகிக்கவும், வளரும் கரு மீது மூட்டுவலிக்கான மருந்துகள் ஏற்படுத்த சாத்தியமுள்ள பக்கவிளைவுகளை கண்காணிக்கவும் எலும்பு மூட்டு மருத்துவ நிபுணர் உதவுவார். இதற்கிடையில், மகப்பேறு மருத்துவர் கர்ப்பத்தை கண்காணித்து, தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக இருப்பதை உறுதிசெய்வார்.

    சில மூட்டுவலி மருந்துகள் கர்ப்ப காலத்தில் பயன்படுத்துவதற்குப் பாதுகாப்பற்றவை. அது வளரும் கருவுக்கு தீங்கு விளைவிக்கலாம் என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியம். எனவே, கர்ப்ப காலத்தில் பெண்ணுக்கு பாதுகாப்பான, பயனுள்ள சிகிச்சைத் திட்டத்தைக் கண்டறிய, எலும்பு மூட்டு மருத்துவ நிபுணரிடம் தொடர் ஆலோசனை பெற வேண்டியிருக்கும்.

    கூடுதலாக, கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பது கருவின் மீது தாக்கத்தை குறைக்க உதவும். உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை, மன அழுத்த மேலாண்மை நுட்பங்கள் ஆகியவற்றை பின்பற்றுவது பயன் தரும்.

    *வழக்கமான உடற்பயிற்சி: மூட்டு வலிக்கான அறிகுறிகளைக் குறைக்கவும், உடல் இயக்கம் மற்றும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும், கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும் இது உதவும். மனநலனுக்கும் உடற்பயிற்சி நன்மை சேர்க்கும். மன அழுத்தத்தை குறைக்கும். இது மூட்டுவலி அறிகுறிகளை நிர்வகிக்க உதவும். யோகா, நீச்சல் அல்லது நடைப்பயிற்சி போன்ற மென்மையான நடவடிக்கைகள் கர்ப்ப காலத்தில் செய்ய உகந்தவை.

    *சமச்சீர் உணவு: கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது மிக முக்கியம். ஏராளமான பழங்கள், காய்கறிகள் மற்றும் கொழுப்பு குறைந்த புரதங்களை உள்ளடக்கிய சீரான உணவை உண்பது தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும். பதப்படுத்தப்பட்ட உணவு, அதிக கொழுப்புள்ள இறைச்சி போன்ற மூட்டுவலி அறிகுறிகளைத் தூண்டக்கூடிய உணவு வகைகளைத் தவிர்ப்பதும் முக்கியம்.

    *மன அழுத்த மேலாண்மை: தியானம், ஆழ்ந்த சுவாசம் மற்றும் மைண்ட்புல்னெஸ் போன்ற மன அழுத்த மேலாண்மை நுட்பங்களும் மூட்டுவலி அறிகுறிகளை நிர்வகிக்க உதவும். மன அழுத்தம் மூட்டுவலியைத் தூண்டும். எனவே கர்ப்ப காலத்தில் நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க மன அழுத்தத்தை நிர்வகிப்பதற்கான வழிகளை கண்டுபிடிப்பது முக்கியம்.

    • எந்த ஒரு அரசு மருத்துவமனையிலும் கருத்தரித்தல் சிகிச்சை மையம் இல்லை.
    • தனியார் கருத்தரித்தல் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

    தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், 40-க்கும் மேற்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உள்ளன. ஆனால் எந்த ஒரு அரசு மருத்துவமனையிலும் கருத்தரித்தல் சிகிச்சை மையம் இல்லை. இதனால் குழந்தை இல்லாத தம்பதியினர் தனியார் கருத்தரித்தல் மையங்களை நாடுகின்றனர்.

    எனவே தனியார் கருத்தரித்தல் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அதோடு அங்கு சிகிச்சை பெற அதிக அளவு பணம் செலவிட வேண்டிய நிலை உள்ளது. இதனால் சராசரி குடும்பத்தினர் கடனாளி ஆவதோடு மனச்சுமை மட்டுமின்றி பொருளாதார சுமைக்கும் ஆளாகின்றனர்.

    எனவே தமிழகத்தில் அதிக நோயாளிகள் சிகிச்சைக்காக வரும் சென்னை, மதுரை மற்றும் கோவை உள்ளிட்ட பெரிய அரசு மருத்துவமனைகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் உள்ளன. ஆனால் அந்த அரசு மருத்துவமனைகளில் கூட செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை வசதி இல்லாதது கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது.

    எனவே அரசு மருத்துமனைகளில் ஐ.வி.எப்., விந்தணு ஊசி, கரு வங்கி, கருமுட்டை மற்றும் விந்தணு வங்கி உள்ளிட்ட வசதிகளுடன் கருத்தரித்தல் மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால் மத்திய அரசின் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக செயற்கை கருத்தரிப்பு மையம் செயல்படுகிறது. அதுபோல் கடந்த ஆண்டு தெலுங்கானா மற்றும் கேரளா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் பிரசவம் ஆகும் பெண்களுக்கு தமிழக அரசின் சார்பில் மகப்பேறு கால உதவித்தொகை வழங்கப்படுகிறது. எனவே அரசு மருத்துவ மனைகளில் தான் அதிகப்படியான பிரசவங்கள் நடைபெற்று வருகின்றன. அரசின் ஊக்கத்தொகையும் கர்ப்பிணிகளுக்கு அளிக்கப்படுவதால் பலரும் மேலும் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மகப்பேறு தொடர்பான பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது.

    ஆனால் அரசு மருத்துவமனைகளில் செயற்கை முறை கருத்தரித்தல் உள்ளிட்ட சிகிச்சை அளிக்க தேவையான ஆய்வுக்கூட வசதிகள் இன்னும் ஏற்படுத்தப்படாத நிலையே நீடிக்கிறது. அதில் ஆய்வக வசதிகளை செய்தால் குழந்தைக்காக ஏங்கும் ஏழை, எளிய தம்பதிகள் அதிக எண்ணிக்கையில் பயன் அடைவார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

    • கர்ப்பகாலம் முழுவதும் இரும்புச்சத்து குறையாமல் பார்த்துகொள்ள வேண்டும்.
    • இரத்த சோகையால் பாதித்த தாயின் கரு பலவீனமாக இருக்கும்.

    இரத்தத்தில் இரும்பு சத்து (Iron), விட்டமின் பி (Vitamin B) சத்துகள் குறைவாக இருந்தாலோ இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் குறைந்து காணப்பட்டாலோ, இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவதாலோ இரத்த சோகை ஏற்படுகிறது.

    உடலுக்கு கொண்டு செல்லும் ஆக்சிஜனை உடலின் மற்ற உடல் உறுப்புகள் மற்றும் அனைத்து பாகங்களுக்கும் எடுத்து செல்லாமல் தடை ஏற்பட்டு விடுகிறதல்லவா இதனால்தான் இதை 'இரத்த சோகை நோய்' என்கிறார்கள்.

    கர்ப்பக்காலத்தில் ஆரோக்கியமாக இருந்தால் தான் குழந்தையும் பிரசவ நேரத்தில் தாயும் நலமாக இருக்கமுடியும். கர்ப்பக்காலம் முழுவதுமே சத்துக்கள் குறைபாடு இல்லாமல் இருக்க வேண்டும் இல்லையென்றால் குழந்தையின் வளர்ச்சியில் குறைபாடு நேரலாம். ஆனால் குறையவே கூடாது என்று சொல்லகூடிய சத்து என்றால் அது இரும்புச்சத்து தான். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த சத்து குறைபாடு கொண்டிருக்கும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே போகிறது.

    கர்ப்பகாலத்தில் அவசியமான சத்துகளில் முதன்மையானதும் முக்கியமானதும் இரும்புச்சத்து தான். கர்ப்பகாலம் முழுவதும் இரும்புச்சத்து குறையாமல் பார்த்துகொள்ள வேண்டும். இதனால் பிரசவக்காலம் சிக்கல் இல்லாமல் இருக்கும்.

    கர்ப்பக்காலத்தில் குழந்தையின் ஆரோக்கியத்தை காக்க அதிகப்படியாக உடல் உறுப்புகள் வேலை செய்கின்றன. அதனால் வழக்கத்தை விட இரண்டு மடங்கு அளவு இரும்புச்சத்து தேவையாக இருக்கிறது. இரும்புச்சத்து நிறைந்த உணவு பொருள்கள் மற்றும் மாத்திரைகள் வழியாக இவை பூர்த்தியடயாத போது கர்ப்பிணிகள் இரத்த சோகை பிரச்சனைக்கு உள்ளாகிறார்கள்.

    இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய வெள்ளை அணுக்களின் உற்பத்தி தடுக்கப்படுகிறது. மேலும் வைட்டமின் பி, ஃபோலிக் ஆசிட் சத்தும் குறையும் போது இரத்த சோகை மேலும் தீவிரமாகிறது. இதை அலட்சியப்படுத்தும் பெண்கள் கர்ப்பக்காலம் முழுவதுமே இந்த பிரச்சனையை கொண்டிருந்தால் சமயத்தில் அது குழந்தையின் உயிரையோ அல்லது தாயின் உயிரையோ பறித்துவிடும் வாய்ப்பும் உண்டு என்பது அதிர்ச்சி தரும் உண்மை.

    பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல்களாலும் ரத்த இழப்பாலும் பெண்களின் இறப்பு விகிதம் அதிகரிக்கிறது. அதற்கு காரணம் இரத்த சோகை.

    மரபியல் வழியாகத் தாய் குள்ளமாக இருப்பதாலும் இரும்புச்சத்து குறைபாட்டால் இரத்த சோகை ஏற்பட்டு தாய் பிரசவத்தின் போது இறக்கும் அபாயம் (Maternity Death) அதிகரிக்கிறது. இந்த பிரச்னைகளால் ஏற்படும் இறப்பு விகிதம் 20%.

    இரத்த சோகையால் பாதித்த தாயின் கரு பலவீனமாக இருக்கும். அதனால் அந்த தாய் குறை பிரசவம் (Early delivery) அல்லது குறைந்த எடையுள்ள குழந்தையை (under weight babies) பெற்றெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஒரு யூனிட் அளவு அதிகரித்தால் குழந்தை இறக்கும் அபாயம் 24% சதவிகிதம் குறையும் என ஒரு ஆய்வு கூறுகிறது.

    இரத்த சோகை உள்ள தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளாக இருக்கவும் நோய்கள், தொற்றுக்கள் வருவதுமான பிரச்னைகள் அதிகமாக இருக்கும்.

    • மன அழுத்தம் அதிகமாகும்போது, அது தாய்க்கும் குழந்தைக்கும் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
    • தியானம் மற்றும் சுவாசத்தில் கவனம் செலுத்துவது மன அழுத்தத்தைக் குறைக்கும்.

    கருவுற்றிருக்கும் பெண், அதிலும் குறிப்பாக முதல் முறையாக கர்ப்பமாக இருக்கும் பெண்ணிற்கு கர்ப்பம் குறித்து மன அழுத்தம் ஏற்படுவது வழக்கம். இது பலவிதமான உணர்ச்சிகளையும், கவலைகளையும் கொண்டு வரலாம். ஆரோக்கியமான கர்ப்பத்தைப் பற்றி கவலைப்படுவது ஒரு மோசமான விஷயம் அல்ல, ஏனெனில் இது புதிய சவால்களை எதிர்கொண்டு நடவடிக்கை எடுக்க மக்களைத் தள்ளும். எனவே கர்ப்ப காலத்தில் மன அழுத்தத்தை குறைப்பது எப்படி என்று பார்ப்போம்..

    கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணின் உடலில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மாற்றங்கள் உடல் ரீதியாக மட்டுமல்ல, உணர்ச்சி மற்றும் மனரீதியானவை. இது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. எதிர்பார்ப்புள்ள தாய்மார்களையும் மன அழுத்தம் கடுமையாக பாதிக்கும்.

    கர்ப்பிணிப் பெண்கள் மன அழுத்தத்தில் இருந்தால், தாய் மற்றும் குழந்தை பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும். அடிப்படையில் இது உங்கள் குழந்தையை உணர்ச்சி ரீதியாக பலவீனப்படுத்துகிறது. இருப்பினும், மன அழுத்தம் அதிகமாகும்போது, அது தாய்க்கும் குழந்தைக்கும் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே, சுமூகமான மற்றும் ஆபத்து இல்லாத கர்ப்பத்திற்கு உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

    சீரான முறையில் சுவாசிக்க:

    சுவாச முறைகள் மன அழுத்தத்தால் கணிசமாக பாதிக்கப்படுகின்றன. இதன் பொருள் நீங்கள் குறைவாக சுவாசிக்கிறீர்கள். இது உங்கள் உடலில் ஆக்ஸிஜனின் அளவைக் குறைக்கிறது. இதனால் உங்கள் உடலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது. இது உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும். தியானம் மற்றும் சுவாசத்தில் கவனம் செலுத்துவது மன அழுத்தத்தைக் குறைக்கும். கர்ப்ப காலத்தில் சரியாக சுவாசிக்கவும் மற்றும் உட்கார்ந்து அல்லது படுத்து, கண்களை மூடி சுவாசிக்க வேண்டும். நீங்கள் கவலையாக உணரும் போதெல்லாம் குறைந்தது ஐந்து ஆழமான சுவாசங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

    நிம்மதியான நித்திரை:

    கர்ப்ப காலத்தில் ஏற்படும் மன அழுத்தம் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். கர்ப்பிணிப் பெண்கள் மன அழுத்தம் காரணமாக தூங்குவதில் சிரமம் மற்றும் உடல் வலி போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். மேலும் மனச்சோர்வு, எடை அதிகரிப்பு அல்லது இழப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் அதிகம். உங்களுக்கு போதுமான தூக்கம் வராவிட்டால், உங்கள் உடலும் மனமும் விரைவாக ஆற்றலை இழக்கின்றன. குறிப்பாக அழுத்தத்தில் இருக்கும்போது. ஏனெனில் அது எதிர்மறையான எண்ணங்களுக்கும் வழிவகுக்கிறது. உங்களுக்கு இரவில் தூங்குவதில் சிக்கல் இருந்தால், பகலில் சிறிது நேரம் தூங்க முயற்சிக்கவும்.

    உடற்பயிற்சி:

    மன அழுத்தத்தின் போது வெளியாகும் ஹார்மோன்கள் உங்கள் தசைகளை பதற்றம் மற்றும் சுருங்கச் செய்யும். கர்ப்ப காலத்தில் இந்த பிரச்சனையை சமாளிக்க, உடலில் உள்ள பதற்றத்தை குறைக்க, இது ஒரு சிறந்த நுட்பமாகும். நீங்கள் பதற்றமாகவோ அல்லது பதட்டமாகவோ உணர்ந்தால், உங்கள் கழுத்து, முதுகு, கைகள் மற்றும் கால்களை நீட்டி சில நிமிடங்கள் செலவிடுங்கள். உங்கள் இடது காது உங்கள் இடது தோள்பட்டைக்கு அருகில் இருக்கும்படி உங்கள் தலையைத் திருப்புங்கள். மேலும் உங்கள் கழுத்தை நீட்டவும். இந்த நிலையில் 20 வினாடிகள் இருங்கள்.

    மிளகுக்கீரை சாப்பிடவும்:

    புதினா இலைகளில் மெந்தோல் என்ற பொருள் உள்ளது. இது தசை பதற்றத்தை குறைக்கிறது. இதை குடித்தால் அழுத்தம் குறையும். புதினா வீக்கம், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற இரைப்பை குடல் பிரச்சனைகளை நீக்குகிறது. நீங்கள் எங்கிருந்தாலும் மன அழுத்தம் மற்றும் வயிற்று பிரச்சனைகளை குறைக்க மிளகுக்கீரை மிகவும் உதவியாக இருக்கும்.

    • நீரிழிவு நோய் உள்ள கர்ப்பிணி பெண்கள் கீழ்க்கண்டவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
    • துரித உணவுகள், எண்ணெய்யில் வறுத்த அல்லது பொரித்த உணவுகளை உட்கொள்ளக்கூடாது.

    கர்ப்பகாலத்தின் ஹார்மோன்கள், இன்சுலின் செயல்பாட்டை எதிர்த்து, ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்வதை, கர்ப்பகால நீரிழிவு நோய் என்று அழைக்கிறார்கள். இது பொதுவாக கர்ப்பத்தின் 24 முதல் 28-வது வாரங்களுக்கு இடையில் ஏற்படுகிறது. நீரிழிவு நோய் உள்ள கர்ப்பிணி பெண்கள் கீழ்க்கண்டவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

    *கார்போஹைட்ரேட் மிக அதிகமாக உள்ள உணவுகள், மைதா போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை தவிர்த்து, கோதுமை, தினை, சோளம் போன்ற தானிய வகைகளை உட்கொள்ள வேண்டும்.

    *நன்கு வேக வைத்த பருப்பு வகைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    *பால், மீன், முட்டையின் வெள்ளை, போன்ற புரதங்கள் மற்றும் கிளைசிமிக்ஸ் இன்டெக்ஸ் (சர்க்கரை உயர்தல் குறியீடு) குறைவாக உள்ள கொய்யா, மாதுளம், சாத்துக்குடி, ஆரஞ்சு, அத்திப்பழம் போன்ற பழங்களை சாப்பிடலாம்.

    *நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக இருக்கும் சிவப்பு இறைச்சி (ஆடு, மாடு போன்ற பாலூட்டிகளின் இறைச்சி), பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள், சோடா, பாட்டிலில் அடைத்து விற்கப்படும் பழச்சாறுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

    *தினமும் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்து உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    *ரத்த சர்க்கரை மற்றும் ரத்தக்கொதிப்பை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும்.

    *மன அழுத்தத்தை குறைக்க தியானம், யோகா போன்றவற்றையும் செய்யலாம்.

    *துரித உணவுகள், எண்ணெய்யில் வறுத்த அல்லது பொரித்த உணவுகளை உட்கொள்ளக்கூடாது.

    நீரிழிவு நோய் பாதித்த கர்ப்பிணிகளுக்கு பனிக்குடநீர் அதிகமாக இருப்பதால் கருக்கலைப்பு ஏற்படும் அபாயம், ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்குள் இல்லாதபோது அதிகரிக்கிறது.

    ×