என் மலர்
நீங்கள் தேடியது "தடைக்காலம்"
- 15-ந்தேதி தொடங்கி 61 நாட்கள் நீடிக்கிறது
- 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்படுகிறது
கன்னியாகுமரி :
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆழ்கடலில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலங்களில் விசைப்படகுகள் ஆழ்கடலில் சென்று மீன் பிடித்தால் மீன் இனம் அடியோடு அழிந்து விடும் என்று கருதி ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 15-ந்தேதி வரை 61 நாட்கள் கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல இந்த ஆண்டு தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியான கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரை விசைப்படகுகள் மீன்பிடிக்க வருகிற 15-ந்தேதி முதல் தடை அமுலுக்கு வருகிறது. இதைத்தொடர்ந்து வருகிற 15-ந்தேதி முதல் கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தின் கரையோரம் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் 2 மாத காலம் களை இழந்து வெறிச்சோடி காணப்படும். எப்போதும் பரபரப்பாக காணப்படும் மீன்சந்தைகளும் வெறிச்சோடி கிடக்கும். இந்த மீன்பிடி தடை காலங்களில் விசைப்படகு மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையேற்றி பழுது பார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபடுவார்கள்.
வள்ளம் மற்றும் கட்டுமரங்களில் மட்டும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வார்கள். இதனால் சீலா, வஞ்சிரம் நெய்மீன், பாறை, விளமீன், கைக்கழுவை, நெடுவா போன்ற உயர்ரக மீன்கள் அதிக அளவில் கிடைக்க வாய்ப்பு இல்லை. இந்த 2 மாத காலமும் உயர்ரக மீன்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் இந்த உயர்ரக மீன்களின் விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளது.
இந்த மீன்பிடி தடை காலத்தினால் கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை வாய்ப்பை இழந்து தவிக்கும் அபாயநிலை ஏற்படும். இந்த மீன்பிடி தடைகாலத்தினால் சின்ன முட்டம் மீன்பிடிதுறைமுகத்தில் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். அதுமட்டுமின்றி அந்நியசெலாவணி வருவாய் இழப்பும் ஏற்படும்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் தொடங்குகிறது.
- படகுகள் கரைகளில் நங்கூரமிட்டு நிறுத்தப்படுகிறது.
ராமநாதபுரம்
தமிழகத்தில் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை ஆகிய கடற்பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்க காலமாக ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட மாதங்களில் மீன்வளத்தை பெருக்கும் வகையில் விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் மூலம் மீன் பிடிக்க மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தடை விதித்து வருகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் இன்று 14-ந் தேதி நள்ளிரவு முதல் அமலாகிறது. ஜூன் மாதம் 14-ந் தேதி வரை இந்த தடை நீடிக்கும். மீன்பிடி தடை காலங்களில் விசைப்படகுகள் இழுவை படகுகள் ஆகியவை துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்களில் நங்கூர மிடப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கும்.
மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள 2 மாதங்களில் மீனவர்கள் தங்கள் படகுகளை சீரமைப்பது, வலைகளை சரி செய்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவர். பெரும்பாலான மீனவர்கள் குடும்ப சூழல் கருதி மாற்று வேலைகளுக்கும் செல்வது உண்டு.
மீன்பிடி தடை காலத்தை முன்னிட்டு ராமேஸ்வரம், பாம்பன் கடலோரப் பகுதியில் நேற்று மீன் பிடிக்க சென்று கரைக்குத் திரும்பிய ஏறத்தாழ 1000-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளை மீனவர்கள் துறைமுக கடலில் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி உள்ளனர். இதனையடுத்து மீன்பிடி படகுகளில் பயன்படுத்தி வந்த மீன்பிடி சாதனங்களை இறக்கி பாதுகாப்பாக வீட்டிற்கு கொண்டு செல்லும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த 61 நாட்கள் மீன்பிடி தடை காலத்தால் மீனவர்கள் மீன்பிடித் தொழிலை சார்ந்தவர்கள் என ராமேசுவரம், பாம்பன் பகுதியை சேர்ந்த 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
இதனிடையே ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது:-
மீன்பிடி தடை காலத்தை முன்னிட்டு இந்த ஆண்டு ஏப்ரல் 15-ந்தேதி (நாளை) முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு விசைப்படகு மற்றும் இழுவைப்படகு மீனவர்கள் மேற்படி மீன்பிடி கலன்களை உபயோ கப்படுத்தி கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல தடை விதித்து அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
அதன் பொருட்டு 61 நாட்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளை பயன்படுத்தி கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மற்றும் இழுவைப் படகுகளை பயன்படுத்தி கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- குமரி மேற்கு கடற்கரையில் தடைக்காலம் நிறைவடைகிறது
- 60 நாட்களாக மேற்கு மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர்.
கன்னியாகுமரி :
மீன்கள் இனப்பெருக்கத்திற்காக குமரி மாவட்ட கடல் பகுதியில் ஆண்டுக்கு 2 முறை மின்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. குமரி கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15-ந்தேதிமுதல் ஜூன் 15-ந்தேதி வரையிலும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1-ந்தேதி முதல் ஜூலை 31-ந்தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும்.
இந்த காலங்களில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல மாட்டார்கள். அதன்படி மேற்கு கடற்கரை பகுதியில் விதிக்கப்படடிருந்த தடை இன்று நள்ளிரவுடன் முடிகிறது. கடந்த 60 நாட்களாக மேற்கு மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில் இன்றுடன் தடை நீங்குவதால் அவர்கள் மீண்டும் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். கடலுக்கு செல்வதற்கு தங்களின் படகுகளை பழுதுநீக்கி, புதுப்பித்து தயார் நிலையில் வைத்துள்ளனர். அவர்கள் நள்ளிரவுக்கு பிறகு கடலுக்கு செல்ல உள்ளனர்.
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடிக்க செல்லும் விசைப்படகு களுக்கு உதவி பங்குத்தந்தை ஷாஜன் பிரார்த்தனை செய்தார். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட விசைப்படகு மீன் பிடிப்பவர் நலச்சங்கம் செய்திருந்தது.
குளச்சல் மீன் பிடித்துறை முகத்தில் விசைப்படகுகளில் மீன்பிடி தொழிலில் வடநாட்டு தொழிலாளர்கள் ஏராள மானோர் ஈடுபட்டு உள்ளனர். 60 நாட்கள் தடையையொட்டி, அவர்கள் தங்களின் ஊருக்கு சென்றிருந்தனர்.
இன்று நள்ளிரவு முதல் தடை நீங்குவதால் தங்களின் சொந்த ஊருக்கு சென்றி ருந்த வடமாநில தொழி லாளர்கள் கடந்த 3 நாட்க ளாக குளச்சல் திரும்பிய வண்ணம் இருந்தனர்.