என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு உபகரணம்"

    • மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கையக படுத்துதல் கவுன்சில் கூட்டம் வருகிற 30-ந் தேதி நடைபெற உள்ளது.
    • உள்நாட்டு உற்பத்தி மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் இந்திய ராணுவத்திற்கு பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்படுகின்றன.

    புதுடெல்லி:

    சீனா மற்றும் பாகிஸ்தானுடனான எல்லை பிரச்சினைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்திய ராணுவத்தில் பாதுகாப்பு திட்டங்களை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    உள்நாட்டு உற்பத்தி மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் இந்திய ராணுவத்திற்கு பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்படுகின்றன.

    இந்நிலையில் விமானம் தாங்கி கப்பல் உள்ளிட்ட ரூ.1.4 லட்சம் கோடி மதிப்பிலான 3 மெகா பாதுகாப்பு திட்டங்களுக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கையக படுத்துதல் கவுன்சில் கூட்டம் வருகிற 30-ந் தேதி நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் விமானம் தாங்கி போர் கப்பல், 97 தேஜஸ் ரக விமானங்கள் வாங்குவது மற்றும் 156 இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள் தயாரிக்கும் திட்டம் ஆகிய 3 மெகா திட்டங்களுக்கு பூர்வாங்க ஒப்புதல் அளிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தபடுவதற்கு சில ஆண்டுகள் ஆகும். எனினும் ராணுவத்தை வலுப்படுத்த இந்த திட்டங்கள் முக்கியமானதாக கருதப்படுகிறது. கடந்த 2021-ம் ஆண்டு இந்திய விமான படைக்கு 83 தேஜஸ் எம்.கே.1 ஏ. ஜெட் விமானங்கள் வாங்குவதற்காக இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்திருந்தது.

    இந்நிலையில் தற்போது 97 தேஜஸ் மார்க் 1 ஏ போர் விமானங்கள் சுமார் ரூ.55 ஆயிரம் கோடி செலவில் வாங்கப்பட உள்ளது. இதன் மூலம் இந்திய விமானப்படை வாங்கும் உள்நாட்டிலயே உருவாக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை 180 ஆக உயரும்.

    இதேபோல 3-வது விமானம் தாங்கி கப்பல் மற்றும் 156 இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள் ஆகிய திட்டங்களும் பாதுகாப்பு துறையில் முக்கிய திட்டங்களாக கருதப்படுகிறது.

    இரண்டு வகை தொழில் இனங்களில் பதிவு செய்தோர், பாதுகாப்பு உபகரணங்கள் பெற விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர்:

    அமைப்புசாரா ஓட்டுனர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகன பழுதுபார்க்கும் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள், பாதுகாப்பு உபகரணம் பெற உடனே விண்ணப்பிக்கலாம். இது குறித்து திருப்பூர் மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. அமைப்புசாரா ஓட்டுனர் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு, ஷூ, சீருடை மற்றும் முதலுதவி பெட்டி அடங்கிய உபகரணம் வழங்கப்படுகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில், அமைப்புசாரா ஓட்டுனர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனம் பழுதுபார்க்கும் தொழிலாளர் நலவாரியத்தில், இரண்டு வகை தொழில் இனங்களில் பதிவு செய்தோர், பாதுகாப்பு உபகரணங்கள் பெற விண்ணப்பிக்கலாம்.

    தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்), காமராஜ் நகர் முதல் வீதி, பி.என்., ரோடு, மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகில், திருப்பூர் - 641602 என்கிற முகவரியில் வேலை நாட்களில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0421 2477276 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வருகிற 30-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும். இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.

    ×