என் மலர்
நீங்கள் தேடியது "3 people"
- தலைவாசல் அருகே சத்துணவு பெண் ஊழியர் கொலையில் 6 மாதத்துக்கு பின் 3 பேர் நேற்று சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
- சரண் அடைந்த 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே தென்குமரை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். அதே ஊரைச் சேர்ந்த ராமசாமி (வயது 49) என்பவரிடம் 6½ ஏக்கர் நிலம் வாங்க வெங்கடாசலம் முடிவு செய்ததாக தெரிகிறது. இதற்காக ரூ.82 லட்சம் விலை பேசி ரூ.21 லட்சம் அட்வான்ஸ் கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால் ராமசாமி நிலத்தை பத்திரப்பதிவு செய்ய மறுத்து அட்வான்ஸ் தொகையை வெங்கடாசலத்திடம் திரும்ப கொடுத்துள்ளார். அதன்பிறகு இருவருக்கும் அடிக்கடி நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி இரவு ராமசாமி, அவருடைய அக்காள் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் பூவாயி (66) மற்றும் குடும்பத்தினர் வீட்டின் முன்பு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் கும்பல் அவர்களை சரமாரியாக தாக்கியது. இதில் பூவாயி பரிதாபமாக இறந்தார்.
இந்த கொலை வழக்கு குறித்து தலைவாசல் போலீசார் அதே பகுதியை சேர்ந்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் பூவாயி கொலை வழக்கு சம்பந்தமாக தென்குமரை பகுதியை சேர்ந்த வரதன் (வயது 30), முருகேசன் (35), கோபால் (28) ஆகிய 3 பேர் நேற்று சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சரண் அடைந்த 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
- கல்கடம்பூர் பிரிவு பஸ் நிறுத்தம் பகுதியில் ஒருவர் சந்தேகம் படும்படி நின்று கொண்டிருந்தார்.
- அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சோதனை செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தினமும் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி ஈரோடு மாவட்டம் சத்தியம ங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கல்கடம்பூர் பிரிவு பஸ் நிறுத்தம் அருகில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது அந்த பகுதியில் ஒருவர் சந்தேகம் படும்படி நின்று கொண்டிருந்தார்.
அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சோதனை செய்தனர். அப்போது அந்த நபர் கட்டப்பை ஒன்று வைத்திருந்தார்.
அதனை சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான, ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் 3.480 கிலோ இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவர் கோபி தாலுகா, பெருமுகை, காந்தி நகரை சேர்ந்த முருகன் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் முருகன் வைத்திருந்த தடைசெய்யப்பட்ட புகை யிலை பொருள்களையும் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.3,480 ஆகும். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோல் கொடுமுடி அருகே மளிகை கடையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட் விற்றதாக சரளா என்ப வரை போலீசார் கைது செய்தனர். அவரிட மிருந்து 23 புகையிலை பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேப்போல் வீரப்பன்சத்திரம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ் பாக்கெட்டை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த முத்துபாண்டி (42) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
- சீனாபுரம் டாஸ்மாக் கடை அருகில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- 2 பேரை பிடித்து சோதனை செய்த போது பிளாஸ்டிக் கவர்களில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
பெருந்துறை:
பெருந்துறை அடுத்துள்ள சீனாபுரம் டாஸ்மாக் கடை அருகில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.
சோதனையில் சந்தேகப்படும் படி நின்றிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்த போது பிளாஸ்டிக் கவர்களில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பெருந்துறை பட்டக்காரன் பாளையம், கிழக்கு ஆயிக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்த செரீப் (54), சத்யா நகரை சேர்ந்த முனியப்பன் (30) என்பது தெரியவந்தது.
இவர்கள் திருவாச்சி வாவிக்கடையை சேர்ந்த பாப்பாத்தி (70) என்ற மூதாட்டியிடம் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து பாப்பாத்தியை போலீசார் கைது செய்தனர். இவர்களி டமிருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
- சந்தேகத்துக்கு இடமாக நின்று இருந்த 3பேரை பிடித்து விசாரணை நடத்தினர்
- பையை வாங்கி பார்த்த போது அதில் 15 குடிநீர் குழாய்கள் இருப்பது தெரியவந்தது
கோபி,
கோபிசெட்டி பாளையம் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பெரிய மொடச்சூர் ரோடு அண்ணாநகர் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நின்று இருந்த 3பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்களிடம் இருந்த ஒரு பையை வாங்கி பார்த்த போது அதில் 15 குடிநீர் குழாய்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் அவை திருடப்பட்டதும் தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.3 ஆயிரம் ஆகும்.
இதையடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது கவுந்தப்பாடியை சேர்ந்த ராஜூ (40), சங்கர் (31), மற்றும் சத்தியமங்கலத்தை சேர்ந்த பரமேஸ் (25), என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது
- 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 30 போலி லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கோபி கலிங்கியம் தேர் வீதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதன்பேரில், கோபி போலீசார் அங்கு சென்று வெளி மாநில லாட்டரி சீட்டுக்களை போலியாக அச்சிட்டு விற்பனை செய்து வந்த, கோபி கலிங்கியம் தேர் வீதியை சேர்ந்த சிவக்குமார்(42), கரட்டடிபாளையம் மாரிசாமி(52), வேட்டைக்காரன் கோவில் செல்வம்(60) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 30 போலி லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனர்.
- கருங்கல்பாளையம் போலீசார் கே.என்.கே. ரோடு, மூலப்பட்டறை ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- செந்தில்குமார் சட்டவிரோதமாக விற்பனை செய்ய 5 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது.
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் கே.என்.கே. ரோடு, மூலப்பட்டறை ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கே.என்.கே. ரோட்டில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர் அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (47) என்பதும், சட்டவிரோதமாக விற்பனை செய்ய 5 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது.
அதேபோல மூலப்பட்டறை பகுதியில் உள்ள பேக்கரி அருகில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த நபர் ஒருவரை பிடித்து விசாரித்ததில் அவர் மூலப்பட்டறை, காந்திபுரம் பகுதியை சேர்ந்த சங்கர் (35) என்பதும், 6 மதுபான பாட்டில்களை அதிக விலைக்கு விற்பதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து 2 பேர் மீதும் கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 11 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல பெருந்துறை போலீசார் மேற்கொண்ட சோதனையில் பெருந்துறை அருகே உள்ள வாய்க்கால்மேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் அருகில் ஒருவர் சட்டவிரோதமாக அரசு மதுபான பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில் அவர் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை பகுதியை சேர்ந்த ராமலிங்கம் (37) என்பது தெரியவந்தது.
இதையடுத்து பெருந்துறை போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 5 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
- ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருகின்றது
- ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை செய்து கஞ்சா பொட்டலங்கள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருகின்றது. இதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வப்போது வரும் ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை செய்து கஞ்சா பொட்டலங்கள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பெருந்துறையில் பல்வேறு பகுதியில் போலீசார் கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா? என்று சோதனை செய்தனர்.
அப்போது கஞ்சா விற்றதாக திருப்பூர் மாவட்டம் ஊத்துகுளியை சேர்ந்த சக்திவேல்(29), ராமு என்பவரது மகன் தினேஷ்கு மார்–(23), பெருந்துறை குள்ளம்பாளை யத்தை சேர்ந்த தனசேகர்(31) ஆகிய 3 பேரை பெருந்துறை போலீசார் கைது செய்தனர்.
இதில் தனசேகர் பெருந்துறை யில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருவது தெரிய வந்தது.
கைதானவர்களிடம் இருந்து 130 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக பெருந்துறை போலீசார் கூறினர்.
கஞ்சா விற்பனையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
- 10 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவியது.
பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு குறைய தொடங்கியது.
கடந்த சில மாதங்களாகவே கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மாவட்டத்தில் மீண்டும் தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.
நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி ஈரோடு மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதனால் மாவட்டத்தில் மொத்தம் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 682 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.
இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 938 பேர் கொரோ னா பாதிப்பி லிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக உயிரிழந்து ள்ளனர்.
தற்போது மாவட்டம் முழுவதும் 10 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை தினசரி பாதிப்பு 1,2 என பதிவாகி வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 3 பதிவாகி உள்ளது.
- மருமகன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 3 பேரும் தலைமறை வாகினார்.
- போலீசார் வீட்டில் உள்ளே இருந்த 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.
தாளவாடி:
தாளவாடி அடுத்த திகனாரை கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ்கா ர்த்திக் (29). இவர் அதே பகுதியை சேர்ந்த பால்ராஜ், துளசியம்மா ஆகியோரின் மகள் ஜோதி என்பவரை காதலித்து கடந்த 4 மாதத்துக்கு முன்பு திரு மணம் செய்து கொண்டார்.
இவர்களது திருமணம் பெண்ணின் பெற்றோருக்கு பிடிக்க வில்லை. கடந்த மாதம் விக்னேஷ் கார்த்திக் கேரளா வுக்கு வேலைக்காக சென்று ள்ளார். மீண்டும் தனது சொந்த ஊரான திகனாரை கிராமத்துக்கு வந்துள்ளார்.
அப்பொழுது விக்னே ஷ்கார்த்தியின் மாமனார் பால்ராஜ் மற்றும் மாமியார் துளசிம்மா, சிறுவன் என 3 பேர் சேர்ந்து விக்னேஷ்கார்த்தியின் வீட்டுக்குள் நுழைந்து விக்னேஷின் முகத்தில் மாமியார் மிளகாய் பொடியை தூவி உள்ளார்.
பின்னர் மாமனார் பால்ராஜ் தான் கொண்டு வந்திருந்த அரிவாளால் விக்னேஷ் கார்த்திகை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் விக்னேஷ்கா ர்த்தியின் கை, கால், வயிற்று பகுதி பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து அவர் மைசூர் அரசு மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மருமகன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய 3 பேரும் தலைமறை வாகினார்.அவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் 2 தனிபடைகள் அமைத்து தேடிவந்தனர்.
அருகில் உள்ள கர்நாடகா மாநிலத்திக்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் 3 பேரும் தாளவாடி அடுத்த தர்மாபுரம் கிராமத்தில் தனது வீட்டுக்கு வந்துள்ளனர்.
இது குறித்து கிராம மக்கள் தாளவாடி போலீ சார்க்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவயிடத்திக்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் வீட்டை சுற்றி வளைத்து வீட்டில் உள்ளே இருந்த 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.
தாக்குதலுக்கு பயன்படுத்திய அரிவாள், கத்தியையும் பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் சத்தியமங்கலம் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
- பின்னர் போலீசார் கைதான 3 பேரையும் பெருந்துறை கிளை சிறையில்அடைத்தனர்.
பெருந்துறை:
பெருந்துறை அருகே உள்ள சென்னிமலை சாலை விக்னேஷ் நகரை சேர்ந்தவர் சேகர். இவர் திருப்பூரில் சொந்தமாக நூல் நிறுவனம் நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இவர் சொந்த வேலை காரணமாக வெளியூர் சென்று விட்டார். அப்போது நள்ளிரவில் இவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து அங்கு இருந்த பீரோவில் இருந்த 11 பவுன் நகை மற்றும் ரூ.1.30 லட்சம் பணத்தை திருடி சென்றனர்.
இதே போல் பக்கத்து வீட்டை சேர்ந்த துர்க்கை ராஜ்-மீனாட்சி ஆகியோரும் வெளியூர் சென்று இருந்தனர். அப்போது அவர்களது வீட்டிற்குள்ளும் புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் பீரோவை உடைத்து அதில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை திருடி சென்றனர்.
இது குறித்து தெரியவந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.அப்போது 2 மர்ம நபர்கள் முகத்தை மறைத்தப்படி வீட்டிற்குள் புகுந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் பெருந்துறையில் இருந்து வெள்ளோடு செல்லும் சாலையில் பெருந்துறை போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் பேசினர்.
தொடர்ந்து போலீசாரின் தீவிர விசாரணையில் அவர்கள் பெருந்துறை மற்றும் காஞ்சிக்கோவில் பகுதியில் தொடர் திருட்டு மற்றும் பல்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபட்டதும், நூல் கம்பெனி உரிமையாளர் சேகர், துர்க்கை ராஜ்-மீனாட்சி ஆகியோர் வீட்டில் நடந்த திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
மேலும் அவர்கள் திருவாரூரை சேர்ந்த சதீஷ், தூத்துக்குடியை சேர்ந்த இசக்கிதுரை, நெல்லையை சேர்ந்த சுபாஷ் என்று தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.
மேலும் இவர்களது கூட்டாளிகள் நெல்லையை சேர்ந்த விக்னேஷ், திருவண்ணாமலையை சேர்ந்த ராமஜெயம் ஆகிய 2 பேர் ஏற்கனவே வேறு ஒரு திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் உள்ளனர். பின்னர் போலீசார் கைதான 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெருந்துறை கிளை சிறை யில்அடைத்தனர்.
- கல்லூரி மாணவி, ஒரு பெண் மற்றும் 10ம் வகுப்பு மாணவன் உள்பட மாயமாகினர்.
- அதன் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி மாவட்டம் மார்க்கையன்கோட்டை 9-வது வார்டு கருப்பையா தெருவைச் சேர்ந்த ரமேஷ் மகள் ஓவியா (வயது 19). இவர் தனியார் நர்சிங் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வருகிறார்.
சம்பவத்தன்று மாணவி கல்லூரிக்கு வராததால் இது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது தாய் ராதிகா கல்லூரியில் வந்து விசாரித்து உறவினர் வீடுகள் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
அதில் மார்க்கையன் கோட்டையைச் சேர்ந்த விஜய் என்பவர்தான் கடத்திச் சென்றிருக்க கூடும் என தெரிவித்துள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெரியகுளம் அருகே உள்ள பங்களாபட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த பரமசிவம் மகள் பேபி ஷாலினி (21). இவர் பி.ஏ. முடித்து விட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் மாயமானார். இது குறித்து அவரது தந்தை பரமசிவம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
ஆண்டிபட்டி தாலுகா கரட்டுப்பட்டி மேற்கு தெருவைச் சேர்ந்த சிவனாண்டி மகன் ஸ்ரீதர் (வயது 16). 10ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மாணவர் மாலையில் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை சிவனாண்டி க.விலக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
- சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
- போலீசார் சோதனையிட்டதில் சிறிய நோட் ஒன்றில் 6 பக்கங்களில் லாட்டரி எண்கள் எழுதப்பட்டிருந்தது தெரியவந்தது.
ஈரோடு:
ஈரோடு சூரம்பட்டி போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
ஈரோடு சென்னிமலை ரோடு, கூட்ஸ் ஷெட் எதிரில் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 3 பேரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், கண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த புகழேந்தி (29), ஈரோடு கனிராவுத்தர் குளம் பகுதியை சேர்ந்த தங்கராஜ் (35), சென்னிமலை ரோடு, கூட்ஸ் ஷெட் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (30) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் போலீசார் சோதனையிட்டதில் சிறிய நோட் ஒன்றில் 6 பக்கங்களில் லாட்டரி எண்கள் எழுதப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.