என் மலர்
நீங்கள் தேடியது "General"
- 2022-2023-ம் கல்வியாண்டு பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் கடந்த 13-ந் தேதி தொடங்கியது. இத்தேர்வுகள் சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 155 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது.
- இதையடுத்து 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம் ஆகிய 3 பாடங்களுக்கும் தேர்வு நடைபெறுகிறது.
சேலம்:
2022-2023-ம் கல்வியாண்டு பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் கடந்த 13-ந் தேதி தொடங்கியது. இத்தேர்வுகள் சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 155 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இதில் 149 தேர்வு மையங்கள் பள்ளி மாணவர்களுக்காகவும், 6 தேர்வு மையங்கள் தனித் தேர்வர்களுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வு மையங்களில் 18,830 மாணவர்கள், 20,443 மாணவிகள் என மொத்தம் 39,273 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளிவிவரங்கள், நர்சிங் தொழிற்கல்வி, அடிப்படை எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுகளை மாணவ- மாணவிகள் உற்சாகத்துடன் எழுதினர்.
3 நாட்கள் விடுமுறை
தொடர்ந்து நாளை (18-ந்தேதி) மற்றும் நாளை மறுநாள் (19-ந்தேதி), திங்கட்கிழமை (20-ந்தேதி) ஆகிய 3 நாட்கள் தேர்வு கிடையாது. தேர்வுக்கான பாடங்களை படிக்கும் விதமாக மாணவ- மாணவிகளுக்கு இந்த 3 நாட்களும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதையடுத்து 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம் ஆகிய 3 பாடங்களுக்கும் தேர்வு நடைபெறுகிறது.
- ஊர் ஊராக சென்று பிச்சை எடுத்து முதல்-அமைச்சரின் பொது நிவா ரணம் மற்றும் கொரோனா நிவாரணத்துக்கு நிதி வழங்கி வருகிறார்.
- அதன்படி, தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்களுக்கு சென்று இதுவரை ரூ.55 லட்சத்திற் கும் மேல் நிவாரண நிதியாக வழங்கி உள்ளார்.
சேலம்:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆலங்கிணறு பகு தியைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன் (வயது 75). இவர், ஊர் ஊராக சென்று பிச்சை எடுத்து முதல்-அமைச்சரின் பொது நிவா ரணம் மற்றும் கொரோனா நிவாரணத்துக்கு நிதி வழங்கி வருகிறார்.
அதன்படி, தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்களுக்கு சென்று இதுவரை ரூ.55 லட்சத்திற் கும் மேல் நிவாரண நிதியாக வழங்கி உள்ளார்.
ஏற்கனவே சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ரூ.10 ஆயிரம் நிதி வழங்கிய அவர், இன்று மீண்டும் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியாக, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ரூ.10 ஆயிரம் வழங்கினார்.
அப்போது அவர் கூறுகையில், எனது மனைவி இறந்து விட்டார். எனக்கு ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் வேலை செய்து வரு கிறார்கள். நான் அவர்களி டம் செல்வதில்லை.
தமிழகம் முழுவதும் பிச்சை எடுத்து பொது மக்களை காக்கும் நோக்கத்தில் முதல்-அமைச்சரின் பொது நிவா ரண நிதிக்கு பணம் வழங்கி வருகிறேன். எனது இறுதி காலம் வரை இதனை ஒரு பணியாக செய்வேன்.
ஒரு வாரத்திற்கு ரூ.10 ஆயிரம் வரை யாசகம் கிடைக்கும். அதனை வைத்து இந்த நிதி உதவியை செய்து வருகிறேன் என்றார்.
- கண்களில் வறட்சி ஏற்படுவதை தடுக்கலாம்.
- அவ்வப்போது கண்களை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இன்றைய காலத்தில் கம்ப்யூட்டர் முன் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதிலும் இந்த வேலையில் தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வதாக உள்ளது. இதனால் கண்கள் களைப்படைந்து, வறட்சி ஏற்பட்டு, சிவப்பு நிறமடைவது, எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படுகிறது.

ஆகவே சிலர் கண்களுக்கு மருத்துகளை விட்டுக் கொள்கின்றனர். இவ்வாறு மருந்துகளை விட்டுக் கொண்டால், கண்களில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவை நீங்காமல் இருப்பதோடு, அவை கண்களில் வறட்சியை இன்னும் அதிகரித்துவிடும். எனவே இத்தகைய பிரச்சினை இருந்தால், அப்போது கண்களுக்கு மருந்துகளை விடாமல், ஒருசில இயற்கை முறைகளை பின்பற்ற வேண்டும்.

• கண்களில் ஏற்படும் வறட்சி மற்றும் எரிச்சலை தடுக்க சிறந்த வழியென்றால் அது குளிர்ந்த நீரால் கண்களை கழுவுவது தான். அதிலும் கம்ப்யூட்டர் மற்றும் டிவியை அதிக நேரம் பார்த்தால், கண்கள் சோர்வடைந்துவிடுவதோடு, அதில் இருந்து வரும் கதிர்கள் கண்களில் வறட்சி மற்றும் அரிப்பை ஏற்படுத்தும். எனவே அவ்வப்போது கண்களை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
• நீண்ட நேரம் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் முன்பு உட்கார்ந்திருந்தால், அவ்வப்போது கண்களுக்கு சிறிது இடைவேளை கொடுக்க வேண்டும். முக்கியமாக அந்த இடைவேளையின் போது கண்களுக்கான உடற்பயிற்சியை செய்வதால், கண்களில் வறட்சி ஏற்படுவதை தடுக்கலாம். அதிலும் கண்களை அங்கும் இங்கும் சுழற்றுவது மிகவும் சிறந்தது. வேண்டுமெனில் சிறிது நேரம் கண்களை சிமிட்டுவது, மூடிக் கொள்வது என்று செய்யலாம்.

• கண்களில் ஏதேனும் சோர்வு, எரிச்சல், வறட்சி போன்றவை ஏற்பட்டால், கண்ளை ரிலாக்ஸ் செய்வதற்கு சிறிது கண்களுக்கு குளிர்ச்சியானது தேவைப்படுகிறது. எனவே கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும் வகையில் வெள்ளரிக்காய் அல்லது உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி கண்களின் மேல் சிறிது நேரம் வைத்தால் கண்களில் வறட்சி நீங்கி, புத்துணர்ச்சியடையும்.
• கண்களின் வறட்சி மற்றும் அரிப்பை சரிசெய்ய ரோஸ் வாட்டரும் ஒரு சிறந்த பொருள். அதற்கு ரோஸ் வாட்டரை சிறிது கண்களில் விட வேண்டும். இதனால் கண்களில் உள்ள அழுக்குகள் வெளியேறுவதோடு, கண்கள் எப்போதும் வறட்சியின்றி இருக்கும்.