search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bharatiya janata party"

    • நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் இருந்து சீலாத்திகுளம் செல்லக்கூடிய சாலை 7 கிலோமீட்டர் தூரம் உள்ளது.
    • ராதாபுரம் தாலுகா அலுவலகம் அருகில் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் இருந்து சீலாத்திகுளம் செல்லக்கூடிய சாலை 7 கிலோமீட்டர் தூரம் உள்ளது. சீலாத்திகுளம் பகுதிகளில் கல்குவாரிகள் அதிக அளவில் இயங்கி வருவதால் இந்த சாலை வழியாக அதிக பாரங்களை ஏற்றிக்கொண்டு கனரக வாகனங்கள் தொடர்ச்சியாக சென்று வருகிறது. இதனால் ராதாபுரம் தாலுகா அலுவலகம் அருகில் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.

    இதனால் இந்த சாலை வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தற்போது இரவு நேரங்களில் செல்லக்கூடிய வெளியூர் வாகனங்கள் சாலைகளில் சிக்கி விபத்துக்குள்ளாகி வருகிறது. ஆகவே நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த சேதம் அடைந்த சாலையை செப்பனிட வேண்டுமென ராதாபுரம் பாரதீய ஜனதா கட்சியின் தெற்கு ஒன்றிய ஊடகப்பிரிவு தலைவர் ராதை காமராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • பிரதமர் மோடி நாட்டுக்கு மிக நல்லத் திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.
    • மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் தலைமையில் சிறப்பாக செயல்பட விரும்புகிறேன்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் பிரபல இந்தி நடிகை ரூபாலி கங்குலி நேற்று பா.ஜனதாவில் இணைந்தார். அனுபமா என்ற இந்தி சீரியல் மூலம் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ரூபாலி கங்குலி. திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தற்போது டி.வி. சீரியல்களில் பிரபலமாக உள்ளார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவரான இவர் தற்போது மும்பையில் வசித்து வருகிறார்.

    டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் ரூபாலி கங்குலி அக்கட்சியில் இணைந்தார்.

    பிரதமர் மோடி நாட்டுக்கு மிக நல்லத் திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அவர் கொண்டு வந்துள்ள தொலைநோக்குத் திட்டங் கள் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கின்றன. அவரது கொள்கைகளால் நான் ஈர்க்கப்பட்டுள்ளேன். பிரத மர் மோடியின் பாதையை பின்பற்றி நாட்டு மக்களுக்கு சேவை செய்ய நான் பா.ஜனதாவில் இணைந்து உள்ளேன். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் தலைமையில் சிறப்பாக செயல்பட விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் பா.ஜனதாவை ஆதரித்துள்ளனர்.
    • உத்தரவாத திட்டங்களால் வெற்றி பெற்றுவிடலாம் என்று அவர்கள் கண்ட கனவு நனவாகிவிட்டது.

    பெங்களூரு:

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து விஜயேந்திரா பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் பா.ஜ.க. கூட்டணி 19 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரசுக்கு 9 தொகுதிகள் கிடைத்துள்ளது. பா.ஜ.க., ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி தேர்தலை எதிர்கொண்டன. 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறிய காங்கிரசாருக்கு ஏமாற்றம் தான் கிடைத்துள்ளது. உத்தரவாத திட்டங்களால் வெற்றி பெற்றுவிடலாம் என்று அவர்கள் கண்ட கனவு நனவாகிவிட்டது. கர்நாடகத்தில் காங்கிரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர்.

    கர்நாடகத்தில் எங்களின் வெற்றிக்கு காரணமான பா.ஜ.க., ஜனதா தளம்(எஸ்) நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறோம். மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் பா.ஜ.க.வை ஆதரித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மண்டியா தொகுதியில் போட்டியிட்ட குமாரசாமி 2 லட்சத்து 84 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றி குறித்து குமாரசாமி மண்டியாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) கையில் இருந்து மண்டியா தொகுதி கை தவறிவிட்டது. இந்த தொகுதி ஜனதா தளம் (எஸ்) கட்சியின் இரும்பு கோட்டையாகும். தற்போது அந்த இரும்பு கோட்டையை ஜனதா தளம் (எஸ்) கட்சி தக்க வைத்துக் கொண்டது. என்னை வெற்றிபெற செய்த மண்டியா தொகுதி மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் வெற்றி சர்க்கரை நாட்டில் வசித்து வரும் ஒவ்வொரு தந்தை-தாய்க்கும், அக்காள்-தங்கைக்கும், அண்ணன்-தம்பிக்கும் கிடைத்த வெற்றி. ஜனதா தளம்(எஸ்)-பா.ஜ.க. தொண்டர்கள் ஒன்று சேர்ந்து வேலை பார்த்துள்ளனர். என்னை இவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மோடி 3-வது முறையாக பிரதமராவார். அவர் நல்லாட்சி வழங்குவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நேற்று வீட்டில் பாஜக மகளிரணி நிர்வாகி தீபிகா படேல் தூக்கில் தொங்கினார்.
    • தீபிகா படேல் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

    குஜராத் மாநிலம் சூரத்தில் 30-வது வார்டு பாரதீய ஜனதா கட்சியின் மகிளா மோர்ச் பிரிவு தலைவராக தீபிகா படேல் (வயது34) என்பவர் இருந்து வந்தார். இவரது கணவர் விவசாயியாக உள்ளார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று வீட்டில் தீபிகா படேல் தூக்கில் தொங்கினார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தீபிகா படேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது செல்போன் அழைப்புகளை பட்டியல் சேகரித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    தீபிகா படேல் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×