என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamilisai Soundararajan"

    • சுரண்டை நாடார் வாலிபர் சங்கம் சார்பில் காமராஜர் அரங்கம் புதிய கட்டிட திறப்பு விழா இன்று நடைபெறுகிறது.
    • சிறப்பு விருந்தினராக தெலுங்கானா, புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொள்கிறார்.

    சுரண்டை:

    சுரண்டை நாடார் வாலிபர் சங்கம் சார்பில் காமராஜர் அரங்கம் புதிய கட்டிட திறப்பு விழா, நாடார் வாலிபர் சங்க 33-வது ஆண்டு விழா மற்றும் மாணவ- மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. விழாவிற்கு நாடார் வாலிபர் சங்க கவுரவ தலைவர் எஸ்.வி.கணேசன் தலைமை தாங்குகிறார். சிவகுருநாதபுரம் இந்து நாடார் உறவின்முறை மகமை கமிட்டி டிரஸ்ட் நாட்டாண்மை தங்கையா நாடார் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலை வகிக்கிறார்கள். சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொள்கிறார்.

    விழா ஏற்பாடுகளை கவுரவ தலைவர் எஸ்.வி.கணேசன் தலைமையில் நாடார் வாலிபர் சங்க தலைவர் ரத்தின நாடார், பொருளாளர் ராஜேந்திரன், செயலாளர் ராமர், துணைத்தலைவர் ஜெயக்குமார், துணைச்செயலாளர் முருகன் ஆகியோர் செய்துள்ளனர்.

    • தமிழ்நாடு மற்றும் புதுவை மக்களுக்கும், உலகமெங்கும் பரவி இருக்கும் தமிழர்கள் அனை வருக்கும் இனிய தைப் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
    • பொங்கலுக்கு மண்ணால் செய்யப்பட்ட பானை, அடுப்பு வாங்கி மண்பாண்டத் தொழிலை ஆதரிப்போம்.

    புதுச்சேரி:

    பொங்கல் பண்டிகையையொட்டி புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மற்றும் புதுவை மக்களுக்கும், உலகமெங்கும் பரவி இருக்கும் தமிழர்கள் அனை வருக்கும் இனிய தைப் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    தமிழர் பண்பாட்டின் அடையாளமாக இருப்பது பொங்கல் விழா. இயற்கையையும், உழவுத் தொழிலையும் போற்றும் பொங்கல் விழா, தமிழரின் மாண்பை யும், கலை களையும் பெருமைப்படுத்தும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு மண்ணால் செய்யப்பட்ட பானை, அடுப்பு வாங்கி மண்பாண்டத் தொழிலை ஆதரிப்போம்.

    2023-ம் ஆண்டை சிறுதானியங்கள் ஆண்டா க ஐ.நா. சபை அறிவித்திருப்பது இந்திய வேளாண்மை யையும் பாரம்பரிய உணவு தானிய உற்பத்தியையும் மேம்படுத்தும் என்ற செய்தியோடு, இந்த பொங்கல் திருநாளில் அனை வரது வாழ்விலும் அன்பும், மகிழ்ச்சியும், இன்பமும், இனிமையும், நலமும், வளமும் பெருக வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உறுதி
    • ஸ்மார்ட் சிட்டி செயல்பாடுகள் அதிகம் தாமதப்படுத்தப்பட்டது. கடந்த 3 மாதங்களாக அவற்றை விரைவுபடுத்த கூறி வருகிறேன்.

    புதுச்சேரி:

    புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல், முறைகேடுகள் நடை பெறுவதாக சுயேட்சை நேரு எம்.எல்.ஏ. குற்றம் சாட்டினார்.

    மேலும் தலைமை செய லகத்தை சமூக அமைப்பினர் மற்றும் தனது ஆதரவாளர்க ளுடன் சென்று முற்றுகை யிட்டார்.

    பின்னர், கம்பன் கலைய ரங்கில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பங்கேற்ற அரசு விழாவில் கேட் ஏறி குதித்து சென்று அங்கு அதிகாரிக ளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    இந்த நிலையில் புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எந்த முறைகேடும் இல்லை என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திட்டவட்டமாக மறுத்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அனைத்தும் நேர்மையாக நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது என்பது எனது கருத்து. ஒப்பந்த புள்ளிகளும் வெளிப்படையாக உள்ளது. தலைமைச் செயலர் இதற்கான வழிமுறைகளை நேர்மையாக நடத்தி வருகிறார்.

    முன்பு, ஸ்மார்ட் சிட்டி செயல்பாடுகள் அதிகம் தாமதப்படுத்தப்பட்டது. கடந்த 3 மாதங்களாக அவற்றை விரைவுபடுத்த கூறி வருகிறேன்.

    மத்திய அரசின் வழிகாட்டு முறை கடந்த ஆட்சியில் பல முறை ஒப்பந்தபுள்ளி மறுக்கப்பட்டு தாமதப் படுத்தப்பட்டது. அந்தந்த நேரத்திற்குள்ளாக முடிக்கப்பட வேண்டிய திட்டங்கள் முடிக்கப் படாமல் இருந்தது. அவற்றை விரைவுப்படுத்த தொடர்ந்து கூட்டங்கள் நடத்தி வருகி றோம்.

    அனைத்தும் நேர்மையாக நடக்க வேண்டும் என்ப தற்காக மத்திய அரசின் வழிகாட்டு முறையை பின்பற்றப்படுகிறது. மற்றொன்று இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நமக்கு கிடைக்க வேண்டிய பெரும்பான்மை நிதி இந்த ஜூன் மாதத்தோடு முடிவ டைய இருந்தது. அதனால் நமக்கு வரவேண்டிய பல கோடி ரூபாய் நின்று விடும் என்ற நிலை இருந்தது.

    ஆனால் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு வேண்டும் புதுவை பலனடைய வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதன்படி ஒரு ஆண்டுக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. பொதுமக்கள் யாரும் அவநம்பிக்கையோடு இருக்கக் கூடாது. தவறுகள் இருந்தால் விசாரணைக்கு உட்படுத்தப்படும். மறைக் கப்படாது.

    தாமதப்படுத்தப் பட்டவை எல்லாம் விரைவுப்படுத்தப்பட்டு உள்ளது. நிறுத்த வேண்டிய சூழலில் இருந்தவை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதெல்லாம் நேர்மறையான வளர்ச்சிகள். தவறுகள் நடைபெறுவது தெரிந்தால் அதற்கான விசாரணை அமைப்பதில் எவ்வித தயக்கமும் இல்லை.

    இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

    • நாங்கள் கடுமையாக படித்ததால்தான் முன்னேறியுள்ளோம்.
    • ஒழுக்கத்தோடு கூடிய வாழ்வியல் முறைதான் சனாதனம்.

    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா நடந்தது.

    கருணாநிதி சிலையை ஆ.ராசா எம்.பி. திறந்து வைத்து பேசினார். அவர் பேசும்போது, திராவிட இயக்கங்களால்தான் கவர்னராக தமிழிசை பதவி வகிக்கிறார் என்று பேசினார். அவர் பேச்சுக்கு கவர்னர் தமிழிசை இன்று பதிலடி கொடுத்தார்.

    புதுவை கடற்கரை சாலையில் நடந்த எய்ட்ஸ் விழிப்புணர்வு ஓட்டத்தை தொடங்கி வைத்த கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாங்கள் கடுமையாக படித்ததால்தான் முன்னேறியுள்ளோம். மற்றொருவரின் முன்னேற்றத்தில் மற்றவர்களுக்கு பங்கு உள்ளது என கூறுவது அவருக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம்.

    அவர்களை தூக்கிக்கொண்டுபோய் மேலே வைத்தனர். நான் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படித்தேன். என் முயற்சியால் வெளிநாட்டிற்கு சென்று படித்தேன். சனாதனம் என்றால் தவறான கருத்தை முன்னிறுத்துகின்றனர். ஆ.ராசா எப்போதும் அப்படித்தான் பேசி வருகிறார். தம்பி உதயநிதி அதைப்பற்றி தெரியாமல் பேசக்கூடாது.

    ஒழுக்கத்தோடு கூடிய வாழ்வியல் முறைதான் சனாதனம். சனாதனம் என்றால் சாதி மட்டும்தான் என சொல்கின்றனர். சாதியை ஒழிக்க வேண்டுமென்றால் எதற்கும் சாதி கேட்காதீர்கள். சாதிரீதியாக ஒதுக்கீடு தராதீர்கள், ஏன் தி.மு.க.வில் மிகவும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு ஏன் முதலமைச்சர் பதவியை தர மறுக்கிறீர்கள்?

    உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தானே பதவிக்கு வர முடிகிறது. உங்கள் கட்சியில் உங்களைப்போல ஒருவர் தலைவராக வர முடியுமா? சனாதனத்தை எதிர்ப்பவர்கள் உங்கள் கட்சியில் உள்ள சர்வாதிகாரத்தை முதலில் எதிருங்கள். உதயநிதியை விட நன்றாக உழைத்தவர்கள் யாருமே தி.மு.க.வில் இல்லையா? ஆனால் அவர்கள் மட்டும்தானே பதவிக்கு வர முடிகிறது.

    ஆ.ராசா கட்சியின் தலைவராகிவிட முடியுமா? மிகவும் அடிமட்டத்தில் உள்ளவர்களை உங்கள் கட்சியின் தலைவராகவோ? முதலமைச்சராகவோ? ஆக்கிவிட முடியுமா?

    நீங்கள் எதையும் செய்வதில்லை. உலகிற்கு சொல்லிக் கொண்டிருப்பதில் என்ன அர்த்தம்? தமிழகம் கல்வியில் உயர பெருந்தலைவர் காமராஜர் போட்ட விதை. நீங்களே எல்லாவற்றுக்கும் சொந்தம் கொண்டாடுவதை ஒப்புக்கொள்ள முடியாது. ஆ.ராசா உங்கள் கட்சியில் நீங்கள் தலைவராக முடியுமா? என முதலில் சொல்லுங்கள். அதன்பின் சனாதனம் பற்றி பேசுங்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கர்நாடக மேலவை குழுவினரிடம் கவர்னர் தமிழிசை வேண்டுகோள்
    • மாநிலத்தின் வளர்ச்சியில் அவர் கொண்டுள்ள அக்கறையை யும் கர்நாடக குழுவினர் பாராட்டினர்.

    புதுச்சேரி:

    புதுவைக்கு அரசு முறை பயணமாக கர்நாடக சட்டப்பேரவை துணைத் தலைவர் எம்.கே.பிரானேஷ் தலைமையிலான சட்ட மேலவை உறுப்பினர்கள் 6 பேர், 4 அதிகாரிகள் கொண்ட குழுவினர் வந்த னர்.

    இந்த குழுவினர் கவர்னர் மாளிகையில் கவர்னர் தமிழிசையை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.

    அப்போது, இந்தியாவில் அனைவரும் சகோதரத்து வத்தோடு வாழ்ந்து வருகி றோம். காவேரி நதிநீர்ப் பகிர்வு பிரச்சினையிலும் சகோதரத்துவ உணர்வோடு பொறுப்புடன் செயல்பட்டு காவிரி நீரைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என கவர்னர் தமிழிசை வலியுறுத்தினார்.

    தமிழ் இலக்கியங்களில் காவிரி நதி கரைபுரண்டு ஓடும் அழகும் மீன்கள் துள்ளி விளையாடும் அழகும் சொல்லப்பட்டி ருப்பதாகவும், காவிரி நதிநீர் பாசனத்தின் மூலம் யானை கட்டி போரடிக்கும் அளவிற்கு தஞ்சாவூர் தமிழகத்தின் நெற்களஞ்சி யமாக சிறப்புடன் விளங்கி யதையும் எடுத்துக் கூறினார்.

    இதன்பின் அந்த குழுவினர் சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்தனர்.

    அப்போது, சட்டப் பேரவையில் உள்ள நிலைக்குழுக்கள், அவற்றின் அதிகாரங்கள், அவை செயல்படும் விதங்கள் குறித்தும் புதுவையில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தனர்.

    மக்கள் நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்து வதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி காட்டும் முனைப்பையும், மாநிலத்தின் வளர்ச்சியில் அவர் கொண்டுள்ள அக்கறையை யும் கர்நாடக குழுவினர் பாராட்டினர்.

    கர்நாடக மேலவை உறுப்பினர்கள் புதுவை சட்டசபையை சுற்றிப் பார்த்தனர்.

    இந்த சந்திப்பின்போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உடனிருந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெண்களுக்கு பொருளாதாரத்தில் சுதந்திரம் கிடைத்துவிட்டால் அனைத்திலும் சுதந்திரம் கிடைத்துவிடும்.
    • வங்கியில் பெற்ற கடனை சரியான முறையில் திருப்பி செலுத்தியவர்கள் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்களே.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் தனியார் அமைப்பின் சார்பில் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநில கவர்னரும், புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்த போதிலும் பெண்களுக்கான இந்நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இதில் கலந்து கொண்டுள்ளேன். பெண்களுக்கு பொருளாதாரத்தில் சுதந்திரம் கிடைத்துவிட்டால் அனைத்திலும் சுதந்திரம் கிடைத்துவிடும்.

    பெண்கள் தனக்காக கவலைப்படுவதில்லை. தங்கள் குடும்பத்திற்காக தான் கவலைப்படுகின்றனர். ஒரு ஆண் எத்தனை வயது ஆனாலும் ஆணாகவே இருக்கின்றார். உங்கள் வெளி தோற்றத்தை வைத்து பல விமர்சனங்கள் இருந்தாலும் நம் உள்ளே இருக்கும் இரும்பு மனதில் இந்த நாட்டிற்காக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்களை இரும்பு பெண்மணியாக மாற்றும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

    வன்முறை என்பது எந்த சமுதாயத்தில் இருந்தாலும் அது தவறு. 10 நபர்களுக்கு கடனுதவி வழங்கினால் அதில் 3 பேர் பெண்களாக இருக்க வேண்டும். அதில் எஸ்.சி, எஸ்.டி சமூகத்தை சேர்ந்தவர் இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

    வங்கியில் பெற்ற கடனை சரியான முறையில் திருப்பி செலுத்தியவர்கள் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்களே. அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.

    பெண்களின் தேவையை அறிந்து அரசு அவர்களுக்கு முன் உரிமை கொடுத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இணையதளங்களில் பெண்கள் செய்யும் வணிகம் அதிக அளவில் இடம்பெறுகின்றது. கொரோனா காலகட்டத்தில் ஆண்கள் குடும்பத்தை காப்பாற்றினார்ளோ இல்லையோ பெண்கள் இணையதளம் வாயிலாக பல்வேறு பொருட்களை விற்பனை செய்து குடும்பங்களை காப்பாற்றினர்.

    பெண்கள் தற்பொழுது தொழில் முனைவோராக மாறி வருகின்றனர். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதியாக இருக்கும். இதில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் வரவேண்டும். சிறிய அளவில் தொடங்கி பெரிய தொழில் முனைவோராக மாற வேண்டும். பெண்களின் கையில் பொருளாதாரம் இருந்தால் வாழ்வாதாரம் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×