என் மலர்
நீங்கள் தேடியது "உதயநிதி ஸ்டாலின் வருகை"
- உதயநிதி ஸ்டாலின் வரும் 23-ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்து, நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
- இதற்கான ஏற்பாடுகள் நடைபெறும் இடங்களை, திண்டுக்கல் (கிழக்கு) மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கொடைரோடு:
தி.மு.க இளைஞரணி செயலாளரும், இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வரும் 23-ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்து, நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். மேலும் விழா கின்னஸ் சாதனைக்காக 6 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கின்றார்.
விழா ஏற்பாடுகளை அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்ட இளைஞரணி சார்பில் நடைபெற உள்ள எளியோர் எழுச்சி நாள் விழா மற்றும் அன்பழகன் நூற்றாண்டு விழா கொடியேற்று நிகழ்ச்சிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார். இதனை அடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் 50அடி உயர கொடிக்கம்பத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க கொடியினை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இதற்கான ஏற்பாடுகள் நடைபெறும் இடங்களை, திண்டுக்கல் (கிழக்கு) மாவட்ட செயலாளர்செந்தில்குமார் எம்.எல்.ஏ., பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து கொடைரோடு சுங்கசாவடி அருகே 50 அடி உயரம் கொண்ட தி.மு.க கொடி ஏற்றுதல், வரவேற்பு நிகழ்ச்சி 22-ந்தேதி நடைபெறுகிறது. அந்த இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் அங்கிருந்த நிர்வாகிகளுடன் விழா நடப்பது குறித்து ஆலோசனையும் மேற்கொண்டார்.
- திருவண்ணாமலை மாவட்டத்துக்கு நாளை வருகிறார்
- பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிக்கை
திருவண்ணாமலை:
பொதுப்பணித் துறை அமைச்சரும், கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இளைஞர் அணி, இயக்கத்தின் புது ரத்தம் என்பார் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி. கட்சியின் வளர்ச்சியும், வெற்றியும் வெறும் கட்சிக்கானது மட்டுமல்ல. அது ஒட்டு மொத்த தமிழ்நாட்டிற்கான வெற்றி.
வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பிற்படு த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கான வெற்றி என அடுத்த கட்டத்திற்கு இளைஞர் அணியை, தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் கருணநிதி, கட்சி தலைவரும், முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆகியோர் எடுத்து சென்றனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை
அந்த வழியில் இளைஞர் அணியை வழிநடத்திடும். இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் திருவண்ணமலை மாவட்டத்திற்கு வருகை தருகிறார். திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 18-ந் தேதி அன்று கட்சி கொடியேற்று விழா, கருணாநிதி சிலை திறப்பு விழா, அரசு விழாக்களான ஜவ்வாதுமலை கோடை விழா மற்றும் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா, கலெக்டர் அலுவகத்தில் பல்வேறு துறைகளின் ஆய்வுக்கூட்டம், நெடுஞ்சா லைத்துறை சார்பில் அமைக்கப்பட்ட காளை சின்னத்துடன் கூடிய ரவுண்டானா திறப்பு விழா, சமூக வலைதள செயற்பாட்டாளர்கள் ஆலோசனைக் கூட்டம், முத்தாய்ப்பாக கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு 10 ஆயிரத்து 100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், மூத்த முன்னோடிகளுக்கு பொற் கிழி வழங்கும் விழா என பிரமாண்டமான பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது.
எழுச்சியான வரவேற்பு
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தரும் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு வருகிற 18-ந் தேதி காலை 9 மணியளவில் மாவட்ட எல்லையான கலசபாக்கம் தொகுதி காவலூர் ஊராட்சியில் எழுச்சியான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
எல்லையில் அளிக்கப்படும் வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கட்சி நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பினர் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து எழுச்சியான வரவேற்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.