என் மலர்
நீங்கள் தேடியது "போலீசார்"
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிரடி நடவடிக்கை
- அஜாக்கிரதையாக இருந்ததால் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கனிவளங்கள் கொண்டு செல்வதை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தக்கலைப் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது நெல்லையிலிருந்து தக்கலை வழியாக அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றி கொண்டு டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது அங்கு பணியில் இருந்த போலீசார் அந்த வாகனத்தை கவனிக்காமல் அஜாக்கிரதையாக இருந்ததாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்துக்கு புகார் வந்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து இப்புகார் தொடர்பாக அதிகாரிகளால் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் வாகன சோதனையின் போது போலீசார் அதிக பாரம் ஏற்றி வந்த வாகனத்தை கவனிக்காமல் விட்டது தெரிய வந்தது.
இதையடுத்து அங்கு பணியில் இருந்த 2 போலீசாரை உடனடியாக ஆயுதப் படைக்கு மாற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- மர்மநபர் மூதாட்டி அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்து விட்டு தப்பி சென்றார்.
- தனிப்படை போலீசார் மர்மநபரை கைது செய்து பறிமுதல் செய்தனர்.
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் திருவள்ளுவர் நகர் அருகே கடந்த மாதம் 26-ந்தேதி காலை மூதாட்டி ஒருவர் நடை பயிற்சி மேற்கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் மூதாட்டி அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்து விட்டு தப்பி சென்றார்.
இந்த நகை பறிப்பில் ஈடுபட்டவரை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ் ராவத் உத்தரவிட்டார்.
அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் ஆகியோர் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, செல்வகுமார், ஏட்டுகள் பாலசுப்பிரமணியம், நாடிமுத்து, செந்தில்குமார், ஜனார்த்தனன், ராஜ்குமார் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் வழிப்பறி நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெற்றிவேல் (வயது38) என்பதும், இவர் தற்போது கும்பகோணம் பெருமாண்டி பகுதியில் தங்கியிருப்பதும் போலீசாருக்கு தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் வெற்றிவேலை கைது செய்து அவரிடம் இருந்து 7 பவுன் நகை மற்றும் வழிப்பறி செய்ய பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
அவரிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.