என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Edappdi palaniswami"

    • மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
    • சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ வசதி உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து தரவில்லை.

    சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையில் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் வீடுகளை சூழ்ந்தது. சென்னை புறநகர் பகுதிகளான மணப்பாக்கம், முகலிவாக்கம், கொளப்பாக்கம் பகுதியில் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

    மேல் தளங்களில் குடியிருந்தவர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். இந்நிலையில், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்று நேரில் பார்வையிட்டார்.

    பின்னர், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    இதையடுத்து சென்னை மதனந்தபுரத்தில் எதிர்க்கட்சி தலைவர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது:-

    சென்னையில் மழைநீர் தேங்கவில்லை என பொய் சொல்கின்றனர்.

    சென்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ வசதி உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து தரவில்லை. பல பகுதிகளில் மழைநீர் வடியாததால் தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னையில் முறையாக மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. அவசர கோலத்தில் திட்டமிடாமல் தமிழக அரசு பணிகளை மேற்கொண்டதால்தான் மழைநீர் தேங்குகிறது.

    சென்னையில் மிதமான மழையே பெய்துள்ளது. பெரிய அளவில் மழை பெய்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.
    • மக்கள் இதயத்தில் நீக்கமற வாழ்ந்து வரும் இதயக்கனி புரட்சித்தலைவருக்கு எங்கள் புகழஞ்சலி.

    முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அரசயல் கட்சி தலைவர்கள், திரைத்துறையினர் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.

    அந்த பதிவில், " வாரி வாரிக் கொடுத்த வள்ளல், சத்துணவு திட்டம் தந்த சரித்திர நாயகர், மக்கள் இதயத்தில் நீக்கமற வாழ்ந்து வரும் இதயக்கனி,

    எம் தலைவன் அவர்களின் நினைவுநாளில் அவர் வகுத்து தந்த பாதையில் பயணிப்பதையே பெருமையென கொண்டு, புரட்சித்தலைவருக்கு எங்கள் புகழஞ்சலி " என்று குறிப்பிட்டிருந்தார்.

    • எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி மெரினா கடற்கரை சாலை பரபரப்பாக காணப்பட்டது.
    • சென்னையில் பல இடங்களில் எம்.ஜி.ஆர். உருவப்படங்களை வைத்து தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    அ.தி.மு.க. நிறுவனரும் மறைந்த முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 35வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. நினைவு நாளையொட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் அவரது படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

    சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனியாக வந்து எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இது தவிர அரசியல் கட்சியினரும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

    எடப்பாடி பழனிசாமி காலை 10.30 மணிக்கு அங்கு வந்தார். அவர் கருப்பு சட்டை அணிந்திருந்தார். அப்போது தொண்டர்கள் அவரை வரவேற்று கோஷமிட்டனர். எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    அவருடன் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், தளவாய் சுந்தரம், டி.ஜெயக்குமார், பா.பென்ஜமின், பொள்ளாச்சி ஜெயராமன், எஸ்.பி.வேலுமணி, வைகை செல்வன், பா.வளர்மதி, கோகுல இந்திரா, மற்றும் மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, ஆதி ராஜாராம், டி.ஜி.வெங்கடேஷ் பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ், வி.என்.ரவி, கே.பி.காந்தன், தி.நகர் சத்யா மற்றும் கோவை சத்தியன், இலக்கிய அணி இணைச்செயலாளர் டி.சிவராஜ், இ.சி.சேகர், முகப்பேர் இளஞ்செழியன், உள்ளிட்ட வர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் அங்கு போடப்பட்டிருந்த மேடையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. உறுதிமொழியினை அவர் படிக்க கூடியிருந்த தொண்டர்கள் ஏற்றனர்.

    இதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணியாக வந்து மரியாதை செலுத்தினர். ஓ.பன்னீர் செல்வம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின்னர் அங்கு உள்ள மேடையில் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் உறுதி மொழி எடுத்தார். அவரை வரவேற்று தொண்டர்கள் கோஷமிட்டனர்.

    அவருடன் முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், மற்றும் ஜே.சி.டி.பிரபாகர், புகழேந்தி, மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. மகிழன்பன், டாக்டர்.சதீஷ், கொளத்தூர் கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக அ.தி.மு.க.வினர் 4 அணியாக தனித்தனியாக வந்து நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினாலும் ஒரே கொடியினை பிடித்து வந்தனர். எடப்பாடி பழனிசாமி அணியினர் ஒரு குழுவாகவும், ஓ.பி.எஸ். அணியினர் மற்றொரு குழுவாகவும் வந்து வரவேற்க காத்து இருந்தனர்.

    இதனால் அங்கு அசம்பாவீதம் எதுவும் நிகழாத வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி மெரினா கடற்கரை சாலை பரபரப்பாக காணப்பட்டது. அரசியல் கட்சியினர் கூட்டம், கூட்டமாக ஆங்காங்கே கூடி நின்றனர். மெரினாவில் பொது மக்களும் அவரது நினைவிடத்தில் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர்.

    மேலும் சென்னையில் பல இடங்களில் எம்.ஜி.ஆர். உருவப்படங்களை வைத்து தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். ஒவ்வொரு பகுதியிலும் அ.தி.மு.க. நிர்வாகிகள் காலையிலேயே எம்.ஜி.ஆர். படத்தின் தத்துவ பாடல்களை ஒலிபரப்பினர்.

    • அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்களாக இருப்பவர்களில் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் என்பதால் தென்னரசுக்கு ஆதரவாக 2,501 பேர் கையெழுத்து.
    • ஓ.பி.எஸ். அணியினர் இதுதொடர்பாக மேல்முறையீடு செய்யவும் முடிவு செய்து காய் நகர்த்தி வருகிறார்கள்.

    அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்கிற விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    அ.தி.மு.க. சார்பில் அங்கு தென்னரசு போயிடுவார் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து ஓ.பி.எஸ். அணி சார்பில் செந்தில் முருகன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இதையடுத்து தங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அ.தி.மு.க. வேட்பாளரை பொதுக்குழு மூலம் தேர்வு செய்து தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களை ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தது.

    இதையடுத்து அவசரம் அவசரமாக 2,750 பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் பொதுக்குழு தொடர்பான படிவங்கள் ஆன்லைன் மூலமாகவும், நேரிலும் வழங்கப்பட்டன.

    இந்த படிவங்களை பூர்த்தி செய்து எடப்பாடி பழனிசாமி ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள் தலைமை கழகத்தில் நேரில் வழங்கினார்கள்.

    அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனிடம் மாவட்டம் வாரியாக உள்ள பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோர் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக கையெழுத்து போட்டு உறுதி மொழி பத்திரத்திலும் கையெழுத்திட்டு வழங்கினார்கள்.

    நேற்று இரவு 7 மணி வரையில் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அமர்ந்து அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஆதரவு கடிதங்களை பெற்றார்.

    அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்களாக இருப்பவர்களில் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் என்பதால் தென்னரசுக்கு ஆதரவாக 2,501 பேர் கையெழுத்து போட்டு தங்களது ஆதரவு கடிதத்தை வழங்கி உள்ளனர்.

    இந்த கடிதங்களுடன் அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் இன்று காலை 10.05 மணி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். 2,501 பேரின் ஆதரவு கடிதங்களை 2 சூட்கேஸ்களில் வைத்து அவர் எடுத்துச்சென்றார்.

    டெல்லியில் அனைத்து ஆதரவு கடிதங்களையும் தேர்தல் ஆணையத்தில் தமிழ் மகன் உசேன் இன்று மதியம் சமர்ப்பித்தார். இது தொடர்பான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சி.வி.சண்முகம் எம்.பி., அ.தி.மு.க. வக்கீல் இன்பதுரை ஆகியோரும் டெல்லி சென்றுள்ளனர்.

    இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தமிழ்மகன் உசேன் முறையாக செயல்படுத்தவில்லை என்று ஓ.பி.எஸ். அணி குற்றம்சாட்டியிருப்பது இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தென்னரசுவின் பெயர் மட்டுமே படிவத்தில் இடம் பெற்றிருந்தது ஒருதலைபட்சமானது என்று கூறியுள்ள ஓ.பி.எஸ். அணியினர், எங்கள் தரப்பு வேட்பாளரான செந்தில் முருகனின் பெயரை ஏன் சேர்க்கவில்லை என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

    ஓ.பி.எஸ். அணியினர் இதுதொடர்பாக மேல்முறையீடு செய்யவும் முடிவு செய்து காய் நகர்த்தி வருகிறார்கள்.

    இதுதொடர்பாக அவர்களும் தேர்தல் ஆணையத்தில் முறையிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் இரட்டை இலை சின்னத்துக்கு மீண்டும் சிக்கல் ஏற்படுமோ? என்கிற ஐயம் எழுந்துள்ளது. இதனால் அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பும் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையடுத்து இரட்டை இலை சின்னத்துக்கு ஏற்பட்டிருந்த சிக்கல் தீர்ந்து எடப்பாடி பழனிசாமி அணிக்கு எளிதாக ஈரோடு கிழக்கு தொகுதியில் சின்னம் கிடைத்துவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஓ.பி.எஸ். அணியினர் போட்டுள்ள திடீர் முட்டுக்கட்டையால் எடப்பாடிபழனிசாமி அணியினர் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஓ.பி.எஸ். அணியினரின் எதிர்ப்பால் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 107 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்ட பின் நடைபெறும் முதல் ஆலோசனை கூட்டம் இதுவாகும்.

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணியின் சார்பில் அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறது.

    தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், அதிமுக தேர்தல் பணிக்குழுவினருடன் ஈரோடு வில்லரசம்பட்டி பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில், கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.

    முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் 107 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்ட பின் நடைபெறும் முதல் ஆலோசனை கூட்டம் இதுவாகும்.

    • அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு, ஈபிஎஸ் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
    • அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு, ஈபிஎஸ் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

    இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    • பரமக்குடி நகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் சிகாமணியை கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
    • கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.

    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தனியார் பள்ளி ஒன்றில் 15 வயது மாணவி ஒருவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். பரமக்குடி வைகை நகர் பகுதியை சேர்ந்தவர் சிகாமணி (வயது 44). இவர் பரமக்குடி நகராட்சி அ.தி.மு.க.கவுன்சிலராக உள்ளார். இவரும், அவரது நண்பரான மாதவன் நகரை சேர்ந்த ராஜா முகமதுவும் (36) சேர்ந்து காரில் அந்த மாணவியை ஏற்றி சென்றுள்ளனர். பின்பு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை செல்லும் வழியில் உள்ள ஒரு மகாலுக்கு மாணவியை அழைத்து சென்றனர். அங்கு வைத்து அந்த மாணவியை சிகாமணி, ராஜா முகமது மற்றும் பரமக்குடி புது நகரை சேர்ந்த பிரபாகரன் (42) ஆகிய 3 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுபோன்று பலமுறை அந்த மாணவியை இவர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், சிகாமணி அலுவலகத்தில் பணியாற்றி வரும் பரமக்குடி புது நகரை சேர்ந்தவர்களான கயல்விழி (45), அன்னலட்சுமி என்ற உமா (34) ஆகியோரும் அவர்களுக்கு உடந்தையாக இருந்துள்ளனர். இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் புகார் அளித்தனர்.

    அவரது உத்தரவின் பேரில் பரமக்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் சிகாமணி, பிரபாகரன், ராஜா முகமது ஆகியோர் மீது போக்சோ சட்டத்திலும், கயல்விழி, அன்னலட்சுமி என்ற உமா ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களை போலீசார் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் மேலும் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் பாலியல் வழக்கில் சிக்கி கைதாகி உள்ள பரமக்குடி நகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் சிகாமணியை கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், ஜி. சிகாமணி, (பரமக்குடி நகரக் கழக அவைத் தலைவர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார்.
    • அஜித் தந்தை மறைவுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் இன்று அதிகாலை 3:15 மணியளவில் உடல் நலக்குறைவால் காலமானார். இவரின் மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் மறைவுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தன்னைத்தானே தகவமைத்து கொண்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், அன்புச்சகோதரர் திரு.அஜித்குமார் அவர்களின் தந்தை திரு.பி.சுப்ரமணியம் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன், தந்தையை இழந்து வாடும் திரு.அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள் என்று பதிவிட்டுள்ளார்.

    • எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • இந்த உரையாடல் தொலைப்பேசியின் வாயிலாக நடந்துள்ளது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடலநலக்குறைவால் கடந்த 24-ந் தேதி காலமானார். அஜித் தந்தையின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் மற்றும் ஆறுதல் கூறினர்.

    இந்த நிலையில், தந்தை மறைவுக்கு நடிகர் அஜித்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எடப்பாடி பழனிசாமி இன்று ஆறுதல் கூறினார். அதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித்குமார் வாழ்த்து கூறியுள்ளார். 

    ×