என் மலர்
நீங்கள் தேடியது "பாராளுமன்றம்"
- சமூகம், நிறுவனம் மற்றும் தனிநபர்கள் என அனைத்தையும் இவர்கள் இருவரும் இகழ்வாக பேசி வருகின்றனர்.
- அவர்களுக்கு ஆதரவு இல்லையெனில் பிரதமர் அமைதியாக இருப்பது ஏன்?
மசோதாக்களை நிலுவையில் வைத்தது தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநர் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, தினேஷ் சர்மா ஆகியோர் சாடி இருந்தனர்.
சுப்ரீம் கோர்ட்டே சட்டங்களை இயற்ற வேண்டி இருந்தால் பாராளுமன்ற கட்டிடத்தை இழுத்து மூட வேண்டும். இந்தியாவில் உள்நாட்டுப் போர் ஏற்பட உச்ச நீதிமன்றம்தான் காரணமாக அமையும் என்று நிஷி காந்த் துபே தெரிவித்து இருந்தார். பாஜக எம்.பி.க்களின் கருத்துகளுக்கும், கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஜே.பி. நட்டா விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், "உச்சநீதிமன்றம் மற்றும் நீதிபதிகளை விமர்சித்து பாஜகவை சேர்ந்த 2 எம்.பி-க்கள் கருத்து கூறினர். அதற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என அக்கட்சியின் தலைவர் நட்டா கூறியுள்ளார்.
இந்த இரண்டு எம்.பி-க்கள் தொடர்ந்து வெறுப்பு பேச்சில் ஈடுபட்டு வருகின்றனர். சமூகம், நிறுவனம் மற்றும் தனிநபர்கள் என அனைத்தையும் இவர்கள் இருவரும் இகழ்வாக பேசி வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து நட்டாவின் கருத்து வெறும் டேமேஜ் கன்ட்ரோல் தான்.
அந்த இரண்டு எம்.பி-க்களுக்கும் தொடர்ந்து அரசியலமைப்பை விமர்சித்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு இல்லையெனில் பிரதமர் அமைதியாக இருப்பது ஏன்? அவர்கள் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? அவர்கள் இருவருக்கும் விளக்கம் கேட்டு நட்டா நோட்டீஸ் அனுப்பியுள்ளாரா?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
- பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, தினேஷ் சர்மா ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டை சாடி இருந்தனர்.
- சுப்ரீம் கோர்ட்டே சட்டம் இயற்றுமானால் பாராளுமன்றத்தை மூடிவிடுங்கள் என்று நிஷி காந்த் துபே தெரிவித்து இருந்தார்.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்த நிலையில் அது தொடர்பான வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு கவர்னருக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது.
கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்த 10 மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாக கருதப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த 8-ந் தேதி வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.
மேலும் மசோதாவுக்கு ஒரு மாதத்திற்குள் ஒப்புதல் வழங்க வேண்டும் என்பது உள்பட கவர்னருக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கிய சுப்ரீம்கோர்ட்டு மாநில கவர்னர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் ஜனாதிபதி முடிவு எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற இத்தீா்ப்பை முன்வைத்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.
மசோதாக்கள் மீது முடிவு எடுக்க ஜனாதிபதிக்கு சுப்ரீம்கோர்ட்டு காலக்கெடு விதித்துள்ள விவகாரத்தில் நீதித்துறை மீது துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கா் கடும் விமர்சனங்களை முன் வைத்தார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பதிலடி கொடுத்து இருந்தன.
இதற்கிடையே பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே, தினேஷ் சர்மா ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டை சாடி இருந்தனர். சுப்ரீம் கோர்ட்டே சட்டங்களை இயற்ற வேண்டி இருந்தால் பாராளுமன்ற கட்டிடத்தை இழுத்து மூட வேண்டும் என்று நிஷி காந்த் துபே தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் பாஜக எம்.பி.க்களின் கருத்துகளுக்கும், கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஜே.பி. நட்டா விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "நீதித்துறை மற்றும் தலைமை நீதிபதி குறித்து பாஜக எம்.பி.க்கள் நிஷிகாந்த் துபே , தினேஷ் சர்மாவின் கருத்துக்களுக்கும், பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது அவர்களின் தனிப்பட்ட கருத்துகள். ஆனால் பாஜக அவற்றுடன் உடன்பட வில்லை அல்லது அத்தகைய கருத்துக்களை ஒருபோதும் ஆதரிக்கவில்லை. பாஜக அவற்றை முற்றிலுமாக நிராகரிக்கிறது.
பாஜக எப்போதும் நீதித்துறையை மதித்து அதன் உத்தரவுகளையும் பரிந்துரைகளையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளது. ஏனெனில் சுப்ரீம்கோர்ட்டு உள்பட நாட்டின் அனைத்து நீதிமன்றங்களும் நமது ஜன நாயகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். அரசியலமைப்பு பாதுகாப்பின் வலுவான தூண் என்று நாங்கள் நம்புகிறோம்.
இதுபோன்ற கருத்துக்களை வெளியிட வேண்டாம் என்று அவர்களுக்கும் மற்ற அனைவருக்கும் நான் அறிவுறுத்தி உள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- சுப்ரீம் கோர்ட் உத்தரவுகள் மத்தியில் ஆளும் தரப்பை அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது.
- முதல் நபராக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை சாடினார்.
புதுடெல்லி:
சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் வழங்கிய சில உத்தரவுகள் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை அதிருப்தியில் உள்ளாக்கி இருக்கிறது. இதில் முக்கியமாக, தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது கவர்னர் முடிவு எடுக்க காலதாமதம் ஏற்படுத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியது.
சுப்ரீம் கோர்ட்டின் இந்தத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.
இதேபோல், மத்திய அரசு நிறைவேற்றிய வக்பு திருத்த சட்டத்திலும் சர்ச்சைக்குரிய சில பிரிவுகளுக்கு சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் இடைக்கால தடை விதித்தது.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவுகள் மத்தியில் ஆளும் தரப்பை அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதில் முதல் நபராக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை கடுமையாக சாடினார். குறிப்பாக, ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியதை கடுமையாக விமர்சித்த அவர், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சூப்பர் பாராளுமன்றமாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், ஜார்க்கண்டை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே எமேற்படி வழக்குகள் குறித்து எதுவும் தெரிவிக்காமல் மறைமுகமாக சுப்ரீம் கோர்ட்டை சாடியுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டே சட்டம் இயற்றுமானால் பாராளுமன்றத்தை மூடி விடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
- வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
- இதில் மசோதாவுக்கு ஆதரவாக 128 வாக்குகளும், எதிராக 95 வாக்குகளும் பதிவாகின
புதுடெல்லி:
வக்பு வாரிய சட்டத்தில் கடந்த 1995, 2013-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதில் மேலும் சில திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ம் தேதி தாக்கல் செய்தது. பின் பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 288
வாக்கும் , எதிராக 232 வாக்கும் பதிவாகின.
இதேபோல், பாராளுமன்ற மாநிலங்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் நள்ளிரவு வரை நடைபெற்றது. இந்த மசோதா மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்பட பலர் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
இதற்கிடையே, வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மசோதாவுக்கு ஆதரவாக 128 வாக்குகளும் , எதிராக 95 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து, 17 மணி நேர விவாதத்துக்கு பின் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஜனாதிபதி திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பப்பட்டது.
இந்நிலையில், வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து,
இந்த சட்டம் அமலுக்கு வருகிறது.
- வக்பு மசோதா பாராளுமன்றத்தின் 2 அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- இந்த மசோதாவிற்கு பா.ஜ.க.வின் கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்தன.
பாராளுமன்றத்தின் மக்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட விவாதத்திற்கு பிறகு, இம்மசோதா கடந்த புதன்கிழமை நள்ளிரவில் நிறைவேறியது.
இதையடுத்து, நேற்று முன்தினம் மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சிகள் ஆதரவு அளித்தன.
வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவாக வாக்களித்தற்காக அக்கட்சியில் இருந்து 5 மூத்த தலைவர்கள் விலகியுள்ளனர்.
இந்நிலையில், மூத்த பாஜக தலைவரும் பீகார் துணை முதல்வருமான விஜய் குமார் சின்ஹா, வக்பு மசோதாவுக்கு எதிராக பேசுபவர்களை தேச துரோகிகள் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பேசிய அவர், "வக்பு மசோதாவை ஏற்கமாட்டோம் என்று பேசுபவர்கள் சிறைக்கு செல்வார்கள். இது பாகிஸ்தான் கிடையாது. இந்துஸ்தான். இது நரேந்திர மோடியின் அரசு. வக்பு மசோதா பாராளுமன்றத்தின் 2 அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. வக்பு மசோதாவிற்கு எதிராக பேசுபவர்கள் துரோகிகள், அவர்களை உடனடியாக கைது செய்யவேண்டும்" என்று தெரிவித்தார்.
- வக்பு மசோதாவிற்கு பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு அளித்தன.
- பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு தப்ரேஸ் ஹசன் ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.
பாராளுமன்றத்தின் மக்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட விவாதத்திற்கு பிறகு, இம்மசோதா கடந்த புதன்கிழமை நள்ளிரவில் நிறைவேறியது.
இதையடுத்து, நேற்று முன்தினம் மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சிகள் ஆதரவு அளித்தன.
வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவாக வாக்களித்தற்காக அக்கட்சியில் இருந்து 5 மூத்த தலைவர்கள் விலகியுள்ளனர்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் இளைஞர் பிரிவு துணைத் தலைவர் தப்ரேஸ் ஹசன். சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் முகமது ஷாநவாஸ் மாலிக், அலிகாரைச் சேர்ந்த மாநில பொதுச் செயலாளர் முகமது தப்ரேஸ் சித்திக் , போஜ்பூரைச் சேர்ந்த கட்சி உறுப்பினர் முகமது தில்ஷான் ரெய்ன் மற்றும் முகமது காசிம் அன்சாரி ஆகியோர் ராஜினாமா செய்தனர்.
பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு தப்ரேஸ் ஹசன் ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். அந்த ராஜினாமா கடிதத்தில், "வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு அளித்த ஆதரவு, மதச்சார்பற்ற விழுமியங்களை ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரிக்கும் என்று நம்பும் முஸ்லிம்களின் நம்பிக்கையை உடைத்துவிட்டது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் வக்பு மசோதா, பிரிவு 370 ரத்து, முத்தலாக் சட்டம் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற முந்தைய நடவடிக்கைகளைத் தொடர்ந்து வந்துள்ளது. இது முஸ்லிம் நலன்களுக்கு தீங்கு விளைவிப்பதாகவும்" என்று கூறியுள்ளார்.
இது பீகாரில் பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
- வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு ராஷ்ட்ரிய லோக் தளம் ஆதரவு அளித்தது.
- இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் தலைவரான ரிஸ்வி கட்சியில் இருந்து விலகினார்.
லக்னோ:
பாராளுமன்றத்தின் மக்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட விவாதத்திற்கு பிறகு, இம்மசோதா கடந்த புதன்கிழமை நள்ளிரவில் நிறைவேறியது.
இதையடுத்து, நேற்று முன்தினம் மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சிகள் ஆதரவு அளித்தன.
இந்நிலையில், மசோதாவிற்கு ஆதரவு அளிக்கும் ஜெயந்த் சவுத்ரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் உ.பி. மாநில பொதுச்செயலாளரான ரிஸ்வி கட்சி மற்றும் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் ஆயிரக்கணக்கானோர் கட்சியில் இருந்து விலக உள்ளனர் என அவர் தெரிவித்தார்.
- பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31-ந்தேதி முதல் பிப்ரவரி மாதம் 13-ந்தேதி வரை நடைபெற்றது.
- பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 10-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நிறைவடைந்த நிலையில், மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31-ந்தேதி முதல் பிப்ரவரி மாதம் 13-ந்தேதி வரை நடைபெற்றது. இதை தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 10-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. மக்களவையை ஒத்திவைத்த சபாநாயகர் ஓம் பிர்லா இந்த அமர்வின் போது 16 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், அவையின் வேலை நேரம் 118% க்கும் அதிகமாக இருந்ததாகவும் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், வக்ஃபு திருத்த மசோதா விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது என்ற சோனியா காந்தியின் கூற்று துரதிர்ஷ்டவசமானது மற்றும் அவையின் கண்ணியத்திற்கு எதிரானது என்று கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர்.
- மாநிலங்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்தத்தை எதிர்த்து தி.மு.க. கூட்டணி மற்றும் அ.தி.மு.க. வாக்களித்தனர்.
- பா.ம.க. வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
வக்பு வாரிய திருத்த மசோதா மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே நேற்று நள்ளிரவில் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையிலும் மசோதா நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 128 உறுப்பினர்களும், எதிராக 95 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
மாநிலங்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்தத்தை எதிர்த்து தி.மு.க. கூட்டணி மற்றும் அ.தி.மு.க. வாக்களித்தனர்.
பா.ம.க. வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. பா.ஜ.க.விற்கு தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் கிடையாது.
மாநிலங்களவையில் தமிழகத்தில் இருந்து வக்பு வாரிய சட்டத்திருத்தத்தை ஆதரித்து ஒற்றை ஓட்டு பதிவானது. த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மட்டும் வக்பு வாரிய சட்டத்திருத்தத்தை ஆதரித்து வாக்களித்துள்ளார்.
- மாநிலங்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
- அதன் மீதான விவாதம் நேற்று நள்ளிரவு வரை நடைபெற்றது.
புதுடெல்லி:
வக்பு வாரிய சட்டத்தில் கடந்த 1995, 2013-ம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதில் மேலும் சில திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ம் தேதி தாக்கல் செய்தது. பின் பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 288
வாக்கும் , எதிராக 232 வாக்கும் பதிவாகின.
இதற்கிடையே, பாராளுமன்ற மாநிலங்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் நள்ளிரவு வரை நடைபெற்றது. இந்த மசோதா மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்பட பலர் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
இந்நிலையில், வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மசோதாவுக்கு ஆதரவாக 128 வாக்குகளும் , எதிராக 95 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
- வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
- இந்த மசோதாவிற்கு தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் ஆதரவளித்தன.
புதுடெல்லி:
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த மசோதாவிற்கு பா.ஜ.க,வின் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் ஆதரவு அளித்தன.
இந்நிலையில், மாநிலங்களவையில் சிறுபான்மை நலத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு பேசியதாவது:
வக்பு மசோதாவால் நாங்கள் முஸ்லிம்களை பயமுறுத்தவில்லை, அது எதிர்க்கட்சிகள்.
வக்பு திருத்த மசோதாவில் மக்களை தவறாக வழிநடத்த எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. இந்த மசோதா கோடிக்கணக்கான முஸ்லிம்களுக்கு பயனளிக்கும்.
வக்பு திருத்த மசோதா முதலில் வரைவு செய்யப்பட்டபோதும், இப்போது நாம் நிறைவேற்றும் மசோதாவிலும் நிறைய மாற்றங்கள் உள்ளன. யாருடைய பரிந்துரைகளையும் நாங்கள் ஏற்கவில்லை என்றால் மசோதா முற்றிலும் வேறுபட்டிருக்கும்.
வக்பு வாரியம் ஒரு சட்டப்பூர்வ அமைப்பு. ஏன் முஸ்லிம்கள் மட்டுமே சட்டப்பூர்வ அமைப்பில் சேர்க்கப்பட வேண்டும்? இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஒரு தகராறு இருந்தால், அந்த தகராறு எவ்வாறு தீர்க்கப்படும்?
வக்பு வாரியத்திலும் முஸ்லிம் அல்லாதவர்களுடன் தகராறுகள் இருக்கலாம். சட்டப்பூர்வ அமைப்பு மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும், மேலும் அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.
- வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு அளித்தது.
- இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய ஜனதா தள எம்.பி.க்கள் 2 பேர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தனர்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் மக்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட விவாதத்திற்கு பிறகு, இம்மசோதா நேற்று முன்தினம் நள்ளிரவில் நிறைவேறியது.
இதையடுத்து, மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த மசோதாவிற்கு பா.ஜ.க,வின் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.
இந்நிலையில், மசோதாவிற்கு ஆதரவு அளிக்கும் நிதிஷ்குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சி எம்.பி.க்கள் முகமது காசிம் அன்சாரி மற்றும் முகமது நவாஸ் மாலிக் ஆகியோர் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தனர்.
இதுதொடர்பாக நிதிஷ்குமாருக்கு கடிதம் அனுப்பிய அவர்கள், முஸ்லிம் மக்களின் நம்பிக்கையை நாம் இழந்து விட்டோம் என தெரிவித்தனர்.