search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரசவம்"

    ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு ஏற்ப பிறக்கும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்பான பாலின விகிதம் 7 மாநிலங்களில் சரிவை சந்தித்துள்ளது.
    குழந்தைகள் மற்றும் தாய்வழி ஆரோக்கியம், ஊட்டச்சத்து, குடும்ப கட்டுப்பாடு, கல்வி அறிவு, திருமண வயது, நல வாழ்வு, சுகாதாரம் உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாகக்கொண்டு தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு (என்.எப்.எச்.எஸ்) மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கி இரண்டு கட்டங்களாக கள ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது.

    பெரியவர்களிடையே உடல் பருமன் அதிகரித்து வரும் போக்கு நிலவுவதை கள ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 2015-16-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 15-49 வயதுக்குட்பட்ட அதிக எடை கொண்ட பெண்கள் மற்றும் ஆண்களின் விகிதம் அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்துள்ளது. ஆந்திரப் பிரதேசம், கோவா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில், 15 முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்கள் மற்றும் ஆண்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் உடல் பருமனாக உள்ளனர்.

    ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு ஏற்ப பிறக்கும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்பான பாலின விகிதம் 7 மாநிலங்களில் சரிவை சந்தித்துள்ளது. கோவா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில், இந்த விகிதம் 900-க்கும் குறைவாக உள்ளது. ஆயிரம் ஆண்களுக்கு மேல் பெண் குழந்தைகள் பிறக்கும் பாலின விகிதம் கொண்ட ஒரே மாநிலமாக திரிபுரா உருவெடுத்துள்ளது.

    2015-16-ம் ஆண்டு 51 சதவீதமாக இருந்த பதின்ம வயது கர்ப்பம் 43 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் 18 வயதிற்குள் திருமணம் செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது. 2015-16-ம் ஆண்டு கணக்கெடுப்பின்போது குழந்தை திருமண விகிதம் 26.8 சதவீதமாக இருந்தது. தற்போது 23.3 சதவீதமாக குறைந்துள்ளது.

    மருத்துவ மையங்கள், மருத்துவமனைகள் மற்றும் பிற மருத்துவ வசதி கொண்ட இடங்களில் நடக்கும் பிரசவம் 2015-16-ல் 78.9 சதவீதமாக இருந்தது. தற்போது 88.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனினும் சிசேரியன் பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளைக் காட்டிலும் தனியார் மருத்துவ மனைகளில் அதிகம் நடைபெறுகின்றன. தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் சிசேரியன் பிரசவம் 47.4 சதவீதமாகும். அரசு மருத்துவமனைகளில் 14.3 சதவீதம் சிசேரியன் பிரசவம் நடைபெறுகிறது. குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை கவலைக்குரியதாகவே உள்ளது.

    வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் எண்ணிக்கை (வயதுக்கு ஏற்ப உயரம்) சற்று குறைந்துள்ளது. 2015-16-ல் 38.4 சதவீதத்தில் இருந்து சமீபத்திய கணக்கெடுப்பில் 35.5 சதவீதமாக குறைந்துள்ளது. குடும்பத்தின் முக்கிய முடிவுகளை பெண்கள் எடுப்பது அதிகரித்து வருகிறது. தனியாகவோ அல்லது கூட்டாகவோ அதிகமான பெண்கள் சொந்தமாக வீடு வைத்துள்ளனர். இது 38.4 சதவீதத்தில் இருந்து 43.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. சமையலுக்கு கியாஸ் போன்ற எரிபொருளைப் பயன்படுத்தும் குடும்பங்களின் சதவீதம் 43.8 சதவீதத்தில் இருந்து 58.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.
    பண்ருட்டி அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்த நிலையில் ஊழியர்களின் செயலை உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள விசூர்கிராமத்தை சேர்ந்தவர் அருள். இவரது மனைவி கலைச்செல்வி (வயது25) இவருக்கு இன்று காலை திடீர் பிரசவ வலி ஏற்பட்டது.

    உடனடியாக அக்கம் பக்கம் உள்ளவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர் அங்கு விரைந்து சென்று காடாம்புலியூர் 108 ஆம்புலன்ஸில் அவர்களை அழைத்து வரும் போது பிரசவ வலி அதிகமானதால் காடாம்புலியூரில் ஆம்புலன்சிலேயே காலை 10.21 மணிக்கு அழகான ஆண் குழைந்தை பிறந்தது. 

    அப்போது ஆம்புலன்ஸ்ல் அவசர கால மருத்துவ நுட்புநர் ஜெரோம் ராஜா மற்றும் சந்திரசேகரன், ஓட்டுனர் செல்வகுமார் மேலும் உடனே தாயும், சேயும் நலமாக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆம்புலன்ஸ் ஊழியர்களின் செயலை உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர்.
    மருத்துவ உதவி, ஸ்கேன் எதுவும் இன்றி பசிபிக் சமுத்திரத்தில் குழந்தை பெற்றெடுத்ததற்கு பலர் பாராட்டுகளை தெரிவித்தபோதிலும், ஒரு சிலர் விமர்சனமும் செய்துள்ளனர்.
    மனகுவா

    நிகரகுவா நாட்டில் பிளேயா மஜகுவால் பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் ஜோசி புக்கெர்ட் (வயது 37) என்ற பெண் தனது குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். அவர் கர்ப்பிணியான காலம் முதல் மருத்துவரை அணுகவோ அல்லது ஸ்கேன் செய்யவோ என எதுவும் மேற்கொள்ளவில்லை. மருத்துவர்களின் உதவி இன்றியே குழந்தை பெற்றும் உள்ளார்.

    இவருக்கு கடந்த பிப்ரவரி 27-ந்தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதற்கு போதி அமோர் ஓசன் கார்னீலியஸ் என பெயரிடப்பட்டு உள்ளது. இதுபற்றி ஜோசி கூறும்போது, சமுத்திரத்தில் குழந்தை பெற்று கொள்ள விரும்பினேன். இது எனது யோசனையில் இருந்தது. அதனுடன், அன்றைய தினம் சூழ்நிலைகளும் சரியாக இருந்தன.

    அதனால், சமுத்திரத்தில் குழந்தையை பெற்று கொண்டேன் என கூறியுள்ளார். இதற்காக பல வாரங்களாக அலையை கண்காணித்து வந்தேன். பின்பு குழந்தை பெற்றெடுக்க சரியான நேரம் வந்தபோது, பீச் பாதுகாப்புடன் இருக்கும் என தெரிந்து கொண்டேன் என கூறுகிறார்.

    ஜோசிக்கு பிரசவ வலி வரப்போகிறது என தெரிந்ததும், அவரது குழந்தைகள் நண்பர்களுடன் தங்க வைக்கப்பட்டனர். அவரது கணவர், ஜோசியை வாகனத்தில் அழைத்து கொண்டு பீச்சுக்கு சென்றுள்ளார். உடன் துண்டுகள், நஞ்சுக்கொடியை எடுக்க பயன்படுத்த சல்லடை, ஒரு கிண்ணம், துணி வலை மற்றும் காகித துண்டுகள் உள்ளிட்ட குழந்தை பிறப்புக்கான உபகரணம் ஒன்றும் எடுத்து சென்றுள்ளார்.

    ஏற்கனவே 3 குழந்தைகளை பெற்றெடுத்துள்ள ஜோசி, அலைகளின் ஓசை உண்மையில் என்னை நன்றாக உணர செய்தது என கூறுகிறார். இதுபற்றி அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், பசிபிக் சமுத்திர கடலோரம் பிரசவத்திற்கு முன் அமர்ந்து இருப்பது போன்றும் மற்றொரு வீடியோவில், தொப்புள் கொடியுடன் புதிதாக பிறந்த தனது மகனை கையில் வைத்திருக்கும் காட்சிகளும் உள்ளன.

    இந்த முறையில் குழந்தை பெற்றெடுத்ததற்கு பலர் பாராட்டுகளை தெரிவித்தபோதிலும், ஒரு சிலர் விமர்சனமும் செய்துள்ளனர். இது தூய்மையானதா? கடலில் பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன என ஒருவர் தெரிவித்து உள்ளார். இதேபோன்று மற்றொருவர், வெப்பம் நிறைந்த கருவறையில் இருந்து குளிரான சமுத்திரத்தில் பிறந்த அந்த குழந்தைக்கு அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும் என தெரிவித்து உள்ளார்.

    ஆனால் அதற்கு ஜோஷி கூறும்போது, போதி நண்பகலில் சூரிய வெப்பம் 35 டிகிரி இருக்கும்போது பிறந்துள்ளான். அதனால், அவனுக்கு குளிர் ஏற்படும் என நாங்கள் கவலை கொள்ளவில்லை. நீர்சார்ந்த தொற்றுகளை பற்றியும் நாங்கள் கவலைப்படவில்லை. அவன் ஆரோக்கியமுடனேயே இருக்கிறான். இதற்காக தேவையான அனைத்து ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு, இது பாதுகாப்பானது என உறுதி செய்தே குழந்தை பெற்றெடுத்தேன் என்று அவர் கூறுகிறார்.
    ×