என் மலர்
நீங்கள் தேடியது "tag 95169"
ஓராண்டில் 25 ஏகாதசிகள் வருகின்றன. இந்த நாளில் விரதமிருந்தால் வாழும்போது செல்வச்செழிப்பும் வாழ்விற்குப் பின் மோட்சமும் கிடைக்கும்.
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி விரதம் ஆகும். ஏகாதசி திதி 15 நாட்களுக்கு ஒரு முறை வரும். இந்த திதியை புண்ணியகாலம் என்பர்.
இதில், மார்கழி மாத வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி மிகவும் பிரபலமாக இருக்கிறது. ஓராண்டில் 25 ஏகாதசிகள் வருகின்றன. இந்த நாளில் விரதமிருந்தால் வாழும்போது செல்வச்செழிப்பும் வாழ்விற்குப் பின் மோட்சமும் கிடைக்கும்.
விரதங்களின் சிறப்பு :
ஏகாதசியைவிட சிறந்த விரதம் கிடையாது என்று பதினெட்டு புராணங்களும் கூறுகின்றன. அதனால், ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, விரதத்திற்கு தயாராக வேண்டும். அன்றைய தினம் துளசி இலைகளை பறிக்கக் கூடாது, அதனால், அதை முதல் நாளே பறித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
அன்றைய தினம் முழுவதும் துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி விரதம் இருப்பது நல்லது. முடியாதவர்கள், பழங்களை நிவேதனம் செய்து சாப்பிடலாம். சிறிது பலகாரங்களையும் ஏற்றுக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் பகலில் தூங்கக்கூடாது. இரவில் கண்டிப்பாக பஜனை செய்ய வேண்டும். இது முடியாவிட்டால், விஷ்ணு பற்றிய நூல்களை படிக்கலாம். இந்த விரதம் இருந்தால் பாவங்கள் நீங்கும், உடல் ஆரோக்கியமாகும், வீட்டில் செல்வம் பெருகும், சந்ததி வளரும் என்பது நம்பிக்கை.
வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள், மறுநாள் துவாதசி அன்று 'பாரணை' என்னும் விரதத்தை மேற்கொள்வார்கள்.
ஏகாதசி மரணமும், துவாதசி தகனமும் யோகிகளுக்கு கூட கிடைக்காது என்ற சொல் வழக்கில் இருந்தே இந்த விரதங்களின் சிறப்பை உணர்ந்து கொள்ளலாம்.ஏகாதசிக்கு முன்தினமான தசமி அன்று இரவு பழங்களை மட்டும் சாப்பிடுவது நல்லது.
இதனால், மறுநாள் உண்ணா நோன்பு இருக்கும் போது, உடலில் உள்ள கழிவுகள் விரைவில் வெளியேறும். விரதத்தை முடித்த உடன், ஜீரணமாவதற்கு கடினமான உணவுகளை உட்கொள்ளக்கூடாது.
உபவாசத்தின்போது, சுருங்கிப்போன குடலை இயங்கச் செய்ய முதலில் பழவகைகளையும் சுலபமாக ஜீரணமாகும் உணவுகளையும் மட்டுமே சாப்பிட வேண்டும்.
25 ஏகாதசிகள் :
1. சித்திரை வளர்பிறை ஏகாதசி, காமதா ஏகாதசி.
2. சித்திரை தேய்பிறை ஏகாதசி, பாப மோசனிகா ஏகாதசி.
3. வைகாசி வளர்பிறை ஏகாதசி, மோகினி ஏகாதசி.
4. வைகாசி தேய்பிறை ஏகாதசி, வருதினி ஏகாதசி.
5. ஆனி வளர்பிறை ஏகாதசி, நிர்ஜல ஏகாதசி.
6. ஆனி தேய்பிறை ஏகாதசி, அபரா ஏகாதசி.
7. ஆடி வளர்பிறை ஏகாதசி, விஷ்ணு சயன ஏகாதசி.
8. ஆடி தேய்பிறை ஏகாதசி, யோகினி ஏகாதசி.
9. ஆவணி வளர்பிறை ஏகாதசி, புத்திரத ஏகாதசி.
10. ஆவணி தேய்பிறை ஏகாதசி, காமிகா ஏகாதசி.
11. புரட்டாசி வளர்பிறை ஏகாதசி, பரிவர்த்தன ஏகாதசி.
12. புரட்டாசி தேய்பிறை ஏகாதசி, அஜ ஏகாதசி.
13. ஐப்பசி வளர்பிறை ஏகாதசி, பாபாங்குசா ஏகாதசி.
14. ஐப்பசி தேய்பிறை ஏகாதசி, இந்திரா ஏகாதசி.
15. கார்த்திகை வளர்பிறை ஏகாதசி, பிரபோதின ஏகாதசி.
16. கார்த்திகை தேய்பிறை ஏகாதசி, ரமா ஏகாதசி.
17. மார்கழி வளர்பிறை ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி.
18. மார்கழி தேய்பிறை ஏகாதசி, உற்பத்தி ஏகாதசி.
19. தை வளர்பிறை ஏகாதசி பீஷ்ம, புத்திர ஏகாதசி
20. தை தேய்பிறை ஏகாதசி, சபலா ஏகாதசி.
21. மாசி வளர்பிறை ஏகாதசி, ஜெய ஏகாதசி.
22. மாசி தேய்பிறை ஏகாதசி, ஷட்திலா ஏகாதசி.
23. பங்குனி வளர்பிறை ஏகாதசி, ஆமலகி ஏகாதசி.
24. பங்குனி தேய்பிறை ஏகாதசி, விஜயா ஏகாதசி.
25. அதிக ஏகாதசி, கமலா ஏகாதசி.

கூடலழகர் பெருமாள் கோவில் வைகாசி பெருந்திருவிழா நடக்கிறது.
மதுரை
மதுரை கூடலழகர் பெரு மாள் கோவில் வைணவத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு வைகாசி பெருந்திருவிழா வருடந்தோறும் விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா வருகிற 5-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 10.30 மணிக்குள் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடக்கிறது.
14 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை மாலையில் அனு மார், கருடன், சேஷ, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகன ங்களில் பெரு மாள் எழுந்தருளி அருள்பாலிக்கி றார். வருகிற 10-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவில் சிகர நிகழ்ச்சி யான தேரோட்டம் 13-ந் தேதி நடக்கிறது. பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி காலை 6:15 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 14 -ந் தேதி மாலை 7 மணிக்கு திருத்தேர் தடம் பார்த்தல் நிகழ்ச்சியும், 15-ந் தேதி காலையில் தீர்த்தவாரி முடிந்து குதிரை வாகன புறப்பாடு நடக்கிறது.
அன்றிரவு கோவில் தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது. 17-ந் தேதி மாலையில் விடையாற்றி உற்சவமும், 18-ந் தேதி உற்சவ சாந்தி, அலங்கார திருமஞ்சனத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ராமசாமி, உதவி ஆணையர் செல்வி மற்றும் பட்டர்கள், கோவில் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது, பத்மநாபசுவாமி திருக்கோவில். அந்தக் கோவிலின் சிறப்புகள் குறித்த தொகுப்பை காண்போம்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது, பத்மநாபசுவாமி திருக்கோவில். சேரமான் பெருமான் இந்த ஆலயத்தை முதன் முதலாக எழுப்பி, பூஜை செய்ததாக ஓலைச்சுவடிகள் வாயிலாக அறியமுடிகிறது. அந்தக் கோவிலின் சிறப்புகள் குறித்த தொகுப்பை காண்போம்.
3 வாசல் தரிசனம் மூலவரான பத்மநாப சுவாமி, மகாவிஷ்ணுவின் அவதாரமாக அனந்தன் என்னும் பாம்புப் படுக்கையில் சயனக் கோலத்தில் காட்சி தருகிறார். 18 அடி நீளம் கொண்ட மூலவர் சிலையை 12 ஆயிரம் சாளக்கிராம கற்களைக் கொண்டும், ‘கடுசர்க்கரா’ என்னும் அஷ்டபந்தன கலவையாலும் உருவாக்கியுள்ளனர். இந்த பிரம்மாண்ட சிலையை கோவிலின் மூன்று வெவ்வேறு வாசல்கள் வழியே மூன்று பிரிந்த கோலத்தில் மட்டுமே தரிசிக்க முடியும். அந்த தரிசனக்காட்சி இதோ...
மூலவர் வரலாறு
1686 -ம் ஆண்டு நடந்த தீவிபத்தில் இலந்தை மரத்தால் ஆன மூலவர் சிலை தீக்கிரையானது.
1729 -ல் மார்த்தாண்ட வர்ம மன்னனின் முயற்சியால், இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, புதிய மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
1750-ம் ஆண்டு மார்த்தாண்ட வர்மன், பத்மநாபசுவாமிக்கு தனது அரசையும், செல்வத்தையும் தானமாக பட்டயம் எழுதித் தந்ததுடன், தனது உடைவாளையும் இறைவனின் பாதத்தில் சமர்ப்பித்தார்.
கோவில் கர்ப்பக்கிரகம் ஒரே கல்லில் உருவாக்கப்பட்டது.
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க, இத்தல இறைவனை வழிபடுகிறார்கள்.
100 அடி உயரத்துடன் ஏழு கலசங்கள் அடங்கிய கோவில் கோபுரம் பிரசித்திப் பெற்றது.
ஆலயத்தில் 6 பாதாள ரகசிய அறைகள் உள்ளன. பல நூற்றாண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த இந்த அறைகள், நீதிமன்ற உத்தரவால் 2011-ம் ஆண்டு திறக்கப்பட்டு ஆய்வு நடந்தது. இதில் விலை மதிப்பற்ற வைர, வைடூரிய, தங்க நகைகள் என பல பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. அந்த வகையில் இந்த மாதம் ஐப்பசியில் வரும் ஏகாதசிக்கு பாபாங்குசா ஏகாதசி என்று பெயர்.
ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு, ‘பாபாங்குசா ஏகாதசி’ என்று பெயர். ஒருவருடைய பாவத்தை அகற்றும் அங்குசம் போன்றது என்பதால், இந்தப் பெயர் வந்தது. இந்த ஆண்டு பாபாங்குசா ஏகாதசி, 14.11.2021 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.41 மணி முதல் மறுநாள் காலை 9.41 மணி வரை உள்ளது.
நாளை விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு, கங்கை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால், யாகங்கள், உயர்ந்த தான - தர்மங்கள் செய்தால் என்ன பலன் கிடைக்குமோ, அந்த பலன்கள் அனைத்தும் கைவரப்பெறும்.
இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், நரக வேதனையை அனுபவிக்க மாட்டார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன. ஐப்பசி ஏகாதசி நாளில், ஏகாதசி விரதத்தை கடைப்பிடிக்கும் வழிமுறை தெரியாமலோ, அல்லது மற்றவர்கள் வியந்து பார்க்க வேண்டும் என்றோ, எப்படிச் செய்தாலும், இந்த விரதத்திற்கான பலன் கிடைக்கப்பெறும் என்பதே, பாபாங்குசா ஏகாதசி விரதத்தின் மேன்மையாகும்.

தஞ்சையில் 15 பெருமாள்கள் நவநீத சேவை விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ராமானுஜ தரிசன சபை சார்பில் 85-ம் ஆண்டு கருட சேவை விழா ஆழ்வார் மங்களாசாசனத்துடன் கடந்த 24-ந் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் 24 பெருமாள்கள் கருட சேவை விழா நடைபெற்றது. நேற்று 15 பெருமாள் கோவில்களில் வெண்ணெய்த்தாழி விழா என்கிற நவநீத சேவை விழா நேற்று நடந்தது.
இதைத்தொடர்ந்து வெண்ணாற்றங்கரை நீலமேக பெருமாள், நரசிம்ம பெருமாள், மணிகுன்ற பெருமாள், கல்யாண வெங்கடேச பெருமாள், மேலவீதி நவநீத கிருஷ்ணன், எல்லையம்மன் தெரு ஜனார்த்தன பெருமாள், கரந்தை யாதவ கண்ணன், கீழவீதி வரதராஜ பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள், பள்ளியக்ரஹாரம் கோதண்டராமசாமி பெருமாள், மகர்நோம்புசாவடி நவநீத கிருஷ்ணன், பிரசன்ன வெங்கடேச பெருமாள், மேல அலங்கம் ரெங்கநாத பெருமாள், படித்துறை வெங்கடேச பெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் ஆகிய கோவில்களிலிருந்து பெருமாள்கள் வெண்ணெய்த்தாழி அலங்காரத்தில் புறப்பட்டு தஞ்சை கொடிமரத்து மூலைக்கு வந்தடைந்தது.
பின்னர் அங்கிருந்து 15 பெருமாள்களும் புறப்பட்டு கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்கு வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று(திங்கட்கிழமை) விடையாற்றி விழா நடக்கிறது.

திருவேங்கடவன் கோவில் கொண்டுள்ள சப்தகிரி எனப்படும் ஏழுமலைகளின் பெயர்கள் கருடாத்ரி, விருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, நீலாத்ரி, சேஷாத்ரி, வேங்கடாத்ரி, நாராயணாத்ரி ஆகியவையாகும்.

ஏழு தீர்த்தங்கள்: திருப்பதியில் உள்ள முக்கியத்துவம் பெற்ற தீர்த்தங்கள் 108 இருந்தாலும் அவற்றில் குறிப்பிடத்தக்கவையாக ஏழு தீர்த்தங்கள் உள்ளன. அவை, குமார தீர்த்தம், தும்புரு தீர்த்தம், ராமகிருஷ்ண தீர்த்தம், ஆகாச கங்கை, பாண்டு தீர்த்தம், பாபவிநாச தீர்த்தம், ஸ்வாமி புஷ்கரணி என்பவையாகும்.
ஏழு பெயர்கள்: பெயரற்ற பரம்பொருளாகவும், அடியார்களால் பல்வேறு நாமங்களால் அழைக்கப்பட்டாலும் திருமலைவாசனுக்கு ஏழு முக்கிய பெயர்கள் இருக்கின்றன. அவை : ஏழுமலையான், திருவேங்கடமுடையான், திருவேங்கடநாதன், வேங்கடேசன், வேங்கடேசுவரன், சீனிவாசன், பாலாஜி ஆகியனவாகும்.
ஏழு தலை ஆதிசேஷன்: ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷனது ஏழு தலைகள்தான் ஏழுமலையாக விளங்கி வருவதாக ஐதீகம். பிரம்மோத்சவத்தில் கொடியேற்றத்திற்கு பிறகு வேங்கடவன் `பெத்தசேஷ வாகனம்’ என்ற ஏழுதலை நாக வாகனத்தில் திருவீதி உலா வருவது வழக்கம்.
ஏழு இடங்கள்: கோவிந்தராஜர் சன்னிதி, பூவராக சாமி சன்னதி, திருச்சானூர் கோவில், ஸ்ரீபேடி ஆஞ்சநேயர் கோவில், ஸ்ரீவாரி சிகர தரிசனம், சிலாதோரண பாறைகள், ஸ்ரீவாரி பாதாள மண்டப கோவில் ஆகியவை திருப்பதியில் அனைவரும் அவசியம் தரிசிக்க வேண்டிய இடங்களாக விளங்குகின்றன.
ஏழு கலச ராஜகோபுரம்: திருவேங்கடவன் சன்னிதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ராஜ கோபுரத்திற்கு ஏழு உலகங்களுடனும் தொடர்பு கொள்வதுபோல ஏழு கலசங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஏழு மகிமைகள்: திருமலைவாசனின் பெருமைக்கு அணிகலனாக ஏழு மகிமைகள் உள்ளன. அவை, சீனிவாச மகிமை, தல மகிமை, தீர்த்த மகிமை, பக்தர்கள் மகிமை, கோவிந்த நாமத்தின் மகிமை, பகுளாதேவியின் மகிமை, பத்மாவதியின் மகிமை ஆகியவையாகும்.

வைணவத் திருத்தலங்களில் திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் கோவில் ராமாயண வரலாற்றுடன் தொடர்புடையதாக உள்ளது. இந்த ஆலயம் பற்றி சில தகவல்கள் இங்கே பார்க்கலாம்.
வைணவத் திருத்தலங்களில் திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் கோவில் சிறப்பு வாய்ந்தது. ராமநாதபுரம் அருகில் இருக்கிறது திருப்புல்லாணி திருத்தலம். இந்த பெருமாள் கோவில் ராமாயண வரலாற்றுடன் தொடர்புடையதாக உள்ளது. இந்த ஆலயத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் சேதுக்கரை அமைந்திருக்கிறது. இந்த ஆலயம் பற்றி சில தகவல்கள் இங்கே பார்க்கலாம்.
சமுத்திர ராஜன் உருவம்
ராமபிரான், கடலில் பாலம் கட்ட அனுமதி வேண்டி நின்றான். ஆனால் கடல் அரசன், ராமர் முன்பாக தோன்றவில்லை. எனவே ராமர், கடலின் மீது பாணம் எய்த முயன்றார். இதனால் பயந்து போன சமுத்திர ராஜன், தன் மனைவியுடன் அங்கு தோன்றி ராம பிரானை சரணடைந்தான். இதை நினைவூட்டும் விதமாக, இந்த ஆலயத்தில் சயனராமர் சன்னிதி முன் மண்டபத்தில், சமுத்திர ராஜனும், சமுத்திர ராணியும் வீற்றிருக்கின்றனர். அருகில் ராமருக்கு உதவிய விபீஷணனும் இருக்கிறார்.
சயன ராமர்
கடலில் பாலம் அமைக்க சமுத்திரராஜனிடம் அனுமதி வேண்டி, மூன்று நாட்கள் காத்திருந்தார், ராம பிரான். அந்த மூன்று நாட்களும் தர்ப்பைப் புல்லின் மீது சயனம் கொண்டார். அதன் அடிப்படையில் இந்த ஆலயத்தில் ராமர், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து சயனித்த நிலையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. சீதையை மீட்கச் செல்லும் முன் தங்கிய தலம் என்பதால் இங்கு சீதை இல்லை. ஆதிசேஷன் இருப்பதால், அவரது வடிவமான லட்சுமணனும் இங்கு இல்லை. ஆஞ்சநேயர் மட்டும் உள்ளார். கருவறை சுவரில், கடலில் பாலம் அமைக்க ஆலோசனை செய்த சூரியன், சந்திரன், தேவர்கள் ஆகியோரும் இருக்கிறார்கள்.
குழந்தை வரம்
குழந்தை பாக்கியத்திற்காக தசரதர், புத்திர காமேஷ்டி யாகம் நடத்தினார். யாககுண்டத்தில் இருந்து தேவதூதன் ஒருவன் அளித்த பாயசத்தை தனது மூன்று மனைவிகளுக்கும் வழங்கினார். அவர்கள் அதை சாப்பிட்டனர். அதன் பலனாக அவர்களுக்கு ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்ணன் ஆகியோர் பிறந்தனர்.
இத்தலம் அருகில் உள்ள சேதுக்கரையில் நீராடி விட்டு, கோவிலுக்கு வந்து நாகர் சிலைக்கு முன்பாக கணவனும் மனைவியும் உபவாசம் இருக்க வேண்டும். பின்பு அன்றிரவு கோவிலில் தங்கிவிட்டு, மறுநாள் காலையில் நாக பிரதிஷ்டை மற்றும் புத்திர காமேஷ்டியாகம் செய்ய வேண்டும். யாகம் முடிந்ததும் பிரசாதமாக பால் பாயசம் தரப்படும். இதனை அருந்தினால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.

சேலம் கோட்டை பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சேலத்தில் அழகிரிநாதர் என்று அழைக்கப்படும் கோட்டை பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் வைகாசி மாதத்தில் வரும் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்தாண்டுக்கான வைகாசி விசாக தேர்த்திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் அழகிரிநாதருக்கும், தாயாருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது.
தேரோட்டத்தையொட்டி சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவியுடன் அழகிரிநாதர் சாமி, ராஜகணபதி கோவில் முன்பு இருக்கும் தேர்நிலையம் பகுதிக்கு ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவமூர்த்திகள் எழுந்தருளினர்.
இதையடுத்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
சேலம் கடைவீதியில் அமைந்துள்ள ராஜகணபதி கோவில் முன்பு தொடங்கிய தேரோட்டம், முதல் அக்ரஹாரம், 2-வது அக்ரஹாரம், பட்டைக்கோவில், சின்னக்கடை வீதி, பெரிய கடைவீதி, கன்னிகா பரமேஸ்வரி கோவில் வழியாக மீண்டும் தேர் நிலையை அடைந்தது. வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் நின்று சாமியை தரிசனம் செய்ததுடன் தேர் மீது பூக்கள் தூவினர். தேர்த்திருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

காஞ்சீபுரம் ஸ்ரீ தேவராஜ சுவாமி என்று அழைக்கப்படும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காஞ்சீபுரம் ஸ்ரீ தேவராஜ சுவாமி என்று அழைக்கப்படும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதையொட்டி, வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தருகே எழுந்தருளினார். பட்டாச்சாரியார்கள்வேத மந்திரங்கள் ஒலிக்க கோலாகலமாக கருடாழ்வார் பொறித்த கொடி, கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.
பின்னர் வரதராஜ பெருமாள் தங்க சப்பர வாகனத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.
இத்திருவிழாவில் பெருமாள் சிம்மவாகனம், சேஷ வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை, யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி காலை மாலை இரு வேளைகளிலும் காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
மேலும் பிரம் மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளின் கருடசேவை வருகிற 19-ந் தேதியும், திருத்தேர் விழா 23-ந் தேதி (வியாழக்கிழமை) விமர்சையாக நடைபெற உள்ளது.
வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவில் தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநில பக்தர்களும் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்வர்.
இதையொட்டி காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமாணி உத்திரவின் பேரில் காஞ்சிபுரம் டிஎஸ்பி பாலசுப்பிரமணியன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பதியில் பத்மாவதி பரிநய உற்சவம் நிறைவு நாளில் ஏழுமலையானை தங்க கருட வாகனத்திலும் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களை பல்லக்கில் வைத்தும் ஊர்வலமாக கோவிலில் இருந்து நாராயணகிரி பூங்காவுக்கு கொண்டு சென்றனர்.
திருப்பதியில் பத்மாவதி பரிநய உற்சவம் 2 நாட்களாக நடந்தது. நிறைவு நாளான நேற்று மாலை 6 மணியளவில் ஏழுமலையானை தங்க கருட வாகனத்திலும் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களை பல்லக்கில் வைத்தும் ஊர்வலமாக கோவிலில் இருந்து நாராயணகிரி பூங்காவுக்கு கொண்டு சென்றனர்.
அங்குள்ள பத்மாவதி பரிநய மண்டபத்தில் வைத்து உற்சவர்களுக்கு மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை சிறப்பு பூஜைகள் நடந்தது. இரவு 8.30 மணியளவில் நாராயணகிரி பூங்காவில் இருந்து உற்சவர்கள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டனர். அத்துடன் பத்மாவதி பரிநய உற்சவம் நிறைவடைந்தது.
நிகழ்ச்சியில் திருமலை - திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை அதிகாரி லட்சுமிகாந்தம், கோவில் துணை அதிகாரி ஹரேந்திரநாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சித்திரை மாதத்திற்கான பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ரெங்கமன்னாருடன் மேளதாளங்கள் முழங்க நந்தவனத்திற்கு ஆண்டாள் கொண்டு வரப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
ஒவ்வொரு மாதம் வரும் பூரம் நட்சத்திரத்தன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் தான் பிறந்த இடமான நந்தவனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். சிறப்பு பூஜையும் நடைபெறும். அதேபோல் சித்திரை மாதத்திற்கான பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ரெங்கமன்னாருடன் மேளதாளங்கள் முழங்க நந்தவனத்திற்கு ஆண்டாள் கொண்டு வரப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
பொதுவாக ஒவ்வொரு பூரத்திற்கும் ஆண்டாள் மட்டுமே கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க நந்தவனத்திற்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம்.
ஆனால் தற்போது வசந்த உற்சவம் நடைபெற்று வருவதால் ஆண்டாள் சித்திரை பூர நட்சத்திரத்தை முன்னிட்டு ரெங்கமன்னாருடன் நந்தவனத்தில் எழுந்தருளினார். ரெங்கமன்னாருடன் நந்தவனத்தில் ஆண்டாள் காட்சியளித்ததை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் நந்தவனத்தில் திரண்டு இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்திருந்தனர்.

கோடை விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இலவச தரிசன வரிசையில் பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து சாமியை தரிசித்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
குறிப்பாக கடந்த 2 நாட்களாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதன் காரணமாக நேற்று முன்தினம் பக்தர்கள் 1 மணி நேரம் முன்னதாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இலவச தரிசனத்திற்காக செல்லும் பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வழியாக அனுப்பி வைக்கப்படுவார்கள். சாதாரண நாட்களில் இலவச தரிசனத்திற்கு காலை 8 மணி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். நேற்று முன்தினம் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால் 1 மணி நேரம் முன்னதாக 7 மணி முதலே அனுமதிக்கப்பட்டனர்.
இலவச தரிசனத்திற்காக அனுமதிக்கப்படும் 32 கியூ காம்ப்ளக்ஸ், பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்கு படுத்தினர். சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை வரிசையில் நின்ற பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
இதேபோல் ‘டைம்ஸ்லாட்’ தரிசன பக்தர்கள் 5 மணி நேரமும், ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் பக்தர்கள் 5 மணி நேரமும் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர். சாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்று காத்திருந்த பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் மோர், பால் மற்றும் அன்னபிரசாதங்கள் வழங்கப்பட்டது.
கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் தங்கும் விடுதிகளும் நிரம்பியது. மேலும் இடம் கிடைக்காத பக்தர்களை தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகள் கோவில் மைதானத்திலும், அமைனிட்டிஸ் காம்ப்ளக்சிலும் தங்க வைத்தனர். மேலும் இடம் கிடைக்காத பக்தர்கள் தங்கள் வாகனங்களில் படுத்து தூங்கினர்.
நேற்று முன்தினம் ஒருநாள் மட்டும் 92 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதில் ‘டைம்ஸ்லாட்’ முறைப்படி 32 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர். மேலும் 2 நாட்களுக்கு கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் என்று தேவஸ்தான அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.