என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 95783"

    சீயக்காய் அபிஷேகத்தினால் மனோரீதியான பொறாமை இல்லாமை, கல்லாமை, இயலாமை போன்ற மன அழுக்குகள் அகன்று தூய ஒருநிலைப்பாட்டுடன் கூடிய மனோ சக்தியை பெறுகிறோம்.
    1. வடைமாலை பலன்:

    சூரியனை ராகுவும், சந்திரனை கேதுவும் பிடிக்கும் நிகழ்ச்சியே கிரகணம் எனப்படுகிறது. அப்பேர்ப்பட்ட சூரிய பகவானை, ஸ்ரீ அனுமான் பிறந்தவுடன் பழம் என்று நினைத்து சூரியனை பிடித்துக் கொள்கிறார். அதைக்கண்ட ராகு பகவான் அனுமானிடம் போர் செய்து தோல்வியைக் கண்டார். அப்போர் நிகழ்ச்சியை இந்திரனிடம் ராகு பகவான் முறையிட இந்திரனுக்கும், அனுமானுக்கும் போர் ஏற்படுகிறது. அப்போரில் இந்திரனின் வஜ்ராயுதம் மாகப்பட்டது அனுமானின் தாடையில் அடிபட்டு வீங்கி விடுகிறது. தாடை முன் நீண்டு பெருத்ததினால் அனுமான் என்ற பெயர் ஏற்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தில் ராகு பகவான் தனக்கு ஏற்பட்டதோல்வி காரணமாக உளுந்து தானியங்களால் என்னுடைய சரீரம் போல் (பாம்பின் உடம்புபோல்) மாலையாக (வடை மாலையாக) உனக்கு சமர்பணம் செய்வோருக்கு ராகு சம்பந்தப்பட்ட அனைத்து விதமான தோஷங்களும் நிவர்த்தியாகி நல்வாழ்வு பெற உதவுகிறோம் என்று ராகு அனுமானிடம் கூறுகிறார். ஆதலால் தாமும் ஸ்ரீ அனுமாருக்கு வடைமாலை சாற்றி ராகு சம்பந்தப்பட்ட தோஷத்தில் இருந்து விடுபடுவதற்கு பிரார்த்தனை செய்வோம்.

    2. நல்லெண்ணை அபிஷேக பலன்:

    இந்து மதத்தின் தர்ம சாஸ்திரப்படி ஒருவன் இயற்கை எய்தினால் அவர் திருமாலின் திருவடி (மோட்சம்) அடைவதே சாஸ்திரமாகும். திருமால் தன்னுடைய வியர்வை துளிகளை எடுத்து தெளித்த உடன் அது கருநீல நிறம் போன்று எள் தானியமாக விளைகிறது. எம்பெருமான் சரீரத்தில் கருநீல நிறம் போன்று உள்ள சனீஸ்வர பகவான் எள் தானியத்தை தனக்கு பிரியமாக எடுத்துக் கொள்கிறார். நவநாயகர்களின் பித்ரு காராக சனிபகவான் உள்ளதால் ஸ்ரீ ஆஞ்சநேயர் பகவானுக்கு எள்ளு எண்ணையால் அபிஷேகம் செய்வதால் பித்ரு தோசமும், சனி தோசமும் நீங்கப் பெற்று வாழ்வில் மேன்மை பெறுகிறோம்.

    3. பஞ்சாமிர்தம் அபிஷேக பலன்:

    மனித வாழ்வில் ஐந்து விதமான இந்திரிய சக்திகள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. அவை கண், காது, வாய், மூக்கு, பிறப்புறுப் பாகப்பட்ட உயிர்நிலை ஆகிய இடங்களில் இருந்து நம்முடைய வாழ்க்கையை செம்மைப்படுத்துகிறது. இவை அனைத்தும் நன்றாக வாழ்நாள் முழுவதும் செவ்வனே இயங்க வேண்டி இறைவனுக்கு பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்கிறோம். ‘பழம், மனோரத பலம்‘ என்று சாஸ்திரம் கூறுவதை எண்ணி காரியங்கள் நிறைவேற பழங்களால் அபிஷேகம் செய்கிறோம்.

    4. சீயக்காய் அபிஷேக பலன்:

    சீயக்காய் அபிஷேகத்தினால் மனோரீதியான பொறாமை இல்லாமை, கல்லாமை, இயலாமை போன்ற மன அழுக்குகள் அகன்று தூய ஒருநிலைப்பாட்டுடன் கூடிய மனோ சக்தியை பெறுகிறோம்.

    5. பால் அபிஷேக பலன்:

    வேதம் கற்றரிந்த சான்றோருக்கு ஒரு மழை, நீதி வழுவா அரசருக்கு ஒரு மழை, கற்பு நெறி தவறாத மாதர்க்கு ஒரு மழை. இதுபோல் மாதம் மும்மாரி (மழை) பெய்யவும்,தாய்மார்களுக்கு தாய்ப்பால் சக்தி கிடைக்கவும், தேசங்களிலும், வீடுகளிலும் பால் பொருட்கள் பெருகவும், பசுக்கள் நிறைந்த பால் சொரியவும், நீர் நிலைகளில் வற்றாத ஊற்று வரவும், யாகம், பூஜைகள், குருமார்கள் நல்வழிப்பெறவும் பால் அபிஷேகம் செய்கின்றோம்.

    6. தயிர் அபிஷேக பலன்:

    வீடு, மனைவி, மக்கள், வாகனம், நிலம், இவை அனைத்தும் நம்மை படைக்கும் பொழுது நமக்கு இறைவனால் கொடுக்கப்படும் கடனாகவே படைக்கப்படுகிறோம். நாம் பெற்றவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள், பெற்றோர்கள் பெற்ற மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் இவை அனைத்தும் செவ்வனே நடைபெற வேண்டி இறைவனுக்கு தயிர் அபிஷேகம் செய்கிறோம்.

    7. நல்ல மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் அபிஷேக பலன்:

    பெண்கள், சுமங்கலித்துவம் பெறவும், உலகமெங்கும் அமங்கலமான செயல்களை தவிர்க்கவும், வியாதியற்ற வாழ்வு பெற வேண்டியும் மஞ்சள் அபிஷேகம் செய்கிறோம்.

    8. சந்தனம் அபிஷேக பலன்:

    மகாலட்சுமி பிறந்தது சந்தனம் மற்றும் வாசனை பொருட்கள் நிறைந்த இடமாவதால் வீரலட்சுமி அம்சமான ஆஞ்சநேயருக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்வதால் தீர்வில்லா பொரு ளாதாரத்தை அடைகிறோம்.

    9. ஸ்வர்ண அபிஷேக பலன்:

    பூர்ணத்துவமான ஆயுள் சக்தியை பெற இறைவனுக்கு தங்க தீர்த்தத்தை அபிஷேகம் செய்ய வேண்டுமென சாஸ்திரங்கள் கூறுவதால் தம்மால் இயன்ற தங்க ஆபரணங்களை புனித மந்திரங்களை சொல்லி உருவேற்றிய குடத்திற்குள் போட்டு அந்த தீர்த்தத்தை சாமிக்கு அபிஷேகம் செய்வதால் பூர்ண ஆயுள் பெற்று நம்முடைய இல்லங்களில் வற்றாத தங்க ஆபரணங்கள் அடைகிறோம்.
    பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வைகாசி மாத கிருத்திகை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    பரமத்திவேலூர்:

    வைகாசி மாத கிருத்திகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் கோப்பணம்பாளையம் பரமேஸ்வர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலமுருகன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

    இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
     
    அதேபோல் நன்செய் இடையாறு காவிரி ஆற்றங்கரையில் உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன், கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி, பொத்தனூர் பச்சைமலை முருகன் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் எழுந்தருளியுள்ள சுப்ரமணியர், அனிச்சம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவி லில் எழுந்தருளியுள்ள ஆறுமுகன், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனியாண்டவர், அருணகிரிமலையில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், வேலூர் சக்தி நகர் முருகன், பேட்டை பகவதியம்மன் கோவிலில் எழுந்தருளியுள்ள முருகன், அய்யம்பாளையத்தில் உள்ள முருகன் கோவில், ஆனங்கூர் மாரியம்மன் கோவிலில் உள்ள முருகன், பாலப்பட்டி முருகன், மோகனூர் பாலசுப்ரமணிய சாமி கோவில் மற்றும் பரமத்திவேலூர் தாலுகா பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் வைகாசி மாத கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. 

    இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    அருணாசலேஸ்வரர் கோவிலில் உற்சவ மூர்த்தியான பெரியநாயகருக்கு பால், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு சுகந்த திரவியங்களால் மகா அபிஷேகம், பலவண்ண மலர்களால் அலங்காரம் நடந்தது.
    திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோவிலில் பவுர்ணமி, அமாவாசை, சிவராத்திரி உள்ளிட்ட நாட்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடக்கும்.

    அதில் வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு நேற்று கோவிலில் உற்சவ மூர்த்தியான பெரியநாயகருக்கு பால், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு சுகந்த திரவியங்களால் மகா அபிஷேகம், பலவண்ண மலர்களால் அலங்காரம் நடந்தது.

    அதேபோல் சாமி சன்னதி முன்பு 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு யாக பூஜை செய்யப்பட்டது. பின்னர் சாமிக்கு 1008 சங்காபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து மாலை பெரிய நாயகருக்கு பல்வேறு வண்ண மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.
    திருவாடானை சினேகவள்ளி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
    திருவாடானை சினேகவள்ளி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோவிலில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி 108 சங்கு மற்றும் குடங்களில் புனித நீர் நிரப்பப்பட்டு சுவாமி சன்னதியில் சிறப்பு யாகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து சுவாமி அம்மனுக்கு 108 சங்காபிஷேகமும், மகா அபிஷேகமும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் விசேஷ தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை சிவாச்சாரியார்கள் நடத்தினர்.
    திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோவிலில் 108 சங்குகள் வைத்து யாக பூஜைகள் நடந்தது. 108 சங்குகள் சிவலிங்கம் போல் வைத்து யாகம் வளர்த்து அபிஷேகம் நடைபெற்றது.
    திருப்புவனத்தில் புஷ்பவனேஸ்வரர் சவுந்திரநாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இக்கோவிலில் 108 சங்குகள் வைத்து யாக பூஜைகள் நடந்தது. 108 சங்குகள் சிவலிங்கம் போல் வைத்து யாகம் வளர்த்து அபிஷேகம் நடைபெற்றது. பின்பு சுவாமி அம்பாளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. யாக பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்பு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கோவில் சூப்பிரண்டு சரவணன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    எஸ்.புதூர் அருகே உலகம்பட்டியில் உள்ள உலகநாயகி சமேத உலகநாத சாமி கோவிலில் கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    பிரம்மகத்தி தோஷம் போக்கும் தலமாக போற்றப்படும் இத்தலத்தில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேக சிறப்பு ஹோமம் நடைபெற்றது.
    திருவிடைமருதூரில் பிரசித்தி பெற்ற மகாலிங்க சாமி கோவில் உள்ளது. பிரம்மகத்தி தோஷம் போக்கும் தலமாக போற்றப்படும் இத்தலத்தில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேக சிறப்பு ஹோமம் நடைபெற்றது.

    தொடர்ந்து கடங்கள் ஊர்வலமாக மகாலிங்க சாமி சன்னதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது . இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கார்த்திகை சோம வார சிறப்பு வழிபாட்டில் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சாமிகள் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.

    சிறப்பு வழிபாடு ஏற்பாடுகளை கட்டளை ஸ்தானிகம் அம்பலவாண தம்பிரான் சாமிகள், கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
    புன்னை வனநாதீஸ்வரர் கோவிலில் சாமிக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம், மஞ்சள் மற்றும் பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிசேஷகம் செய்யப்பட்டது.
    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே எஸ்.வாழவந்தியில் உள்ள புன்னை வனநாதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி சிறப்பு யாகம், 108 சங்காபிசேஷகம் நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சனம், மஞ்சள் மற்றும் பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிசேஷகம் செய்யப்பட்டது.

    இதையடுத்து சாமிக்கு மலர் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
    கார்த்திகை சோமவாரத்தையொட்டி திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    கார்த்திகை சோம வாரம் (திங்கட்கிழமை) சிவனுக்கு உகந்த நாளாகும். சோம வாரத்தில் சிவனுக்கு சங்குகளில் புனித நீர் நிரப்பி பூஜை செய்து, அதனை அபிஷேகம் செய்வது சிறப்பு வாய்ந்ததாகும்.

    காசிக்கு இணையான தலமான திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சோமவாரத்தையொட்டி 1,008 சங்குகள் கொண்டு அபிஷேகம் செய்வது ஆயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக தலவரலாறு கூறுகிறது. நேற்று கார்த்திகை முதல் சோமவாரத்தையொட்டி இக்கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு சிவலிங்க வடிவத்தில் சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

    அதில் புனித நீர் நிரப்பப்பட்டு, யாக பூஜைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து சாமிக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி வெங்கடகிருஷ்ணன், ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் ரவி, நாடி நிபுணர் குணசேகரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாதம் முதல் சோமவாரத்தையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இதில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலை வகித்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பக்தர்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ள கழிவறை, குளியலறை ஆகியவற்றை தருமபுரம் ஆதீனம் திறந்து வைத்தார்.
    சிவசூரியபெருமானுக்கு மகாபிஷேகம் நடைபெற்று மகாதீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக சூரிய புஷ்கரணியில் கார்த்திகை முதல் ஞாயிறு தீர்த்தவாரி நடந்தது.
    கும்பகோணம் அருகே உள்ள சூரியனார்கோவிலில் உஷாதேவி சாயாதேவி உடனாகிய சிவசூரியபெருமான் கோவில் உள்ளது. நவக்கிரக தலமான இங்கு கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி நேற்று யாகம் நடந்தது.

    அதைத்தொடர்ந்து சிவசூரியபெருமானுக்கு மகாபிஷேகம் நடைபெற்று மகாதீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக சூரிய புஷ்கரணியில் கார்த்திகை முதல் ஞாயிறு தீர்த்தவாரி நடந்தது.

    இதில் திருவாவடுதுறை ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள் மற்றும திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
    தஞ்சை பெரியகோவிலில் வருகிற 29-ந்தேதி 2-வது சோமவாரமும், அடுத்த மாதம் (டிசம்பர்) 6-ந்தேதி 3-வது சோமவாரமும், 13-ந்தேதி கடைசி சோமவாரமும் கடைபிடிக்கப்படுகிறது.
    கார்த்திகை மாதம் திங்கட்கிழமை சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று கார்த்திகை மாத முதல் சோமவாரத்தையொட்டி தஞ்சை பெரியகோவிலிலுள்ள பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பெருவுடையார் சன்னதி முன்பு 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிவலிங்க வடிவிலான சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதனையடுத்து 1008 சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரால் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. அபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    வருகிற 29-ந்தேதி 2-வது சோமவாரமும், அடுத்த மாதம் (டிசம்பர்) 6-ந்தேதி 3-வது சோமவாரமும், 13-ந்தேதி கடைசி சோமவாரமும் கடைபிடிக்கப்படுகிறது.

    திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு நேற்று மாலையில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக 1008 சங்குகளில் பல்வேறு புனித நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட நீர் புனித தலங்களின் மண் மற்றும் வாசனை திரவியங்கள் கலந்த புனித நீர் நிறைந்த கலயம் மற்றும் சங்குகளுக்கு ஆராதனை செய்யப்பட்டது. பின்னர் ஐயாறப்பர் சுவாமிக்கு 1008 சங்காபிஷேகம் நடந்தது.
    சுவாமிமலை சுவாமிநாதர் கோவிலில் சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. இதையொட்டி 108 சங்காபிஷேகம் நடந்தது.
    முருகனின் ஆறுபடைவீடுகளில் 4-வது படைவீடான சுவாமிமலை சுவாமிநாதர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றில் சிறப்புடையது. கட்டுமலையால் ஆன இத்தலத்தைப் பற்றி நக்கீரர் திருமுருகாற்றுப்படையிலும், அருணகிரிநாதரால் திருப்புகழிலும் குறிப்பிட்டு உள்ளனர். பிரசித்தி பெற்ற சுவாமிநாதர் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 4-ந் தேதி தொடங்கியது. இதன் தொடக்க நிகழ்வாக சண்முகசுவாமி, விக்னேஸ்வரர், நவவீரர் மற்றும் பரிவாரங்களுடன் மலைக்கோவிலிலிருந்து படி இறங்கி வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளினார். அங்கு சிறப்பு அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றது.

    விழா நாட்களில் காலை, மாலை நேரத்தில் படிச்சட்டத்தில் சுவாமி உள்பிரகாரத்தில் மட்டுமே புறப்பாடு நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை சண்முகசுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. சூரசம்ஹார தினமான நேற்று காலை முதல் மதியம் வரை பக்தர்கள் கோவிலுக்குள் வழிபட அனுமதிக்கப்பட்டார். பின்னர் மாலை முதல் இரவு வரை பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

    நேற்று மாலை சண்முகசுவாமி அம்பாளிடத்தில் சக்திவேல் வாங்கி, கோவில் உள் பிரகாரத்தில் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் கோயில் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இன்று (புதன்கிழமை) மாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
    சிவபெருமானுக்கு உகந்த பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். எந்த பொருளால் அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

    சிவனைத் தூய நல்லெண்ணையில் வாசனைத் திரவியங்கள் கலந்து நூறு குடம் அபிஷேகம் செய்தால் வாழ்வில் நோய் நீங்கி நோயற்ற வாழ்வு கிடைக்கும்.

    கோமூத்திரம் கலந்த பஞ்சகவ்யத்தைப் பத்துக்குடம் அபிஷேகம் செய்தால் உடலில் உள்ள அழுக்குகள் நீங்கி, மாசு மருவற்ற தேத்தினைப் பெறலாம்.

    சுத்தமான பசுவின் கறந்த பால் ஆயிரம் குடம் அபிஷேகம் செய்தால் தீர்க்காயுசு கிடைக்கும்.

    சுத்தமான தேன் கொண்டு அபிஷேகம் செய்தால்  இனிய கானம் பாடும் திறமையும், குயிலினும் இனிய குரலும் கிடைக்கும்.

    எலுமிச்சம்பழம் ஆயிரம் கொண்டு அபிஷேகம் செய்தால் அஞ்ஞானம் நீங்கிவிடும்.

    சர்க்கரையினால் நூறு மூட்டை அபிஷேகம் செய்ய வாழ்வில் இல்லாமை நீங்கி, மனநிறைவு உண்டாகும்.

    இளநீர் ஆயிரம் குடம் அபிஷேகம் செய்தால் பேரானந்தமும், கைலாசவாசனின் காலடியில் வாழும் பேறும் கிட்டும்.

    பத்தாயிரம் பழங்கள் சேர்த்து செய்த பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் வாழ்வில் வீரத்துடன் எதையும் சாதிக்கும் மனோபலமும், சகல காரியங்களில் வெற்றியும் கிடைக்கும்.

    தயிர் நூறு குடம் அபிஷேகம் செய்தால் மேலான சம்பத்து கிடைக்கும்.

    கரும்புச்சாறு நூறு குடம் அபிஷேகம் செய்தால் தேக ஆரோக்கியம், உடல் வலிமை பெற்று விளங்கும்.

    மஞ்சள் தூளினால் அபிஷேகம் செய்தால் அரசனின் அன்பிற்கு பாத்திரமாகும் நிலை உண்டாகும்.

    திராட்சை ரசம் செல்வத்தினை அளிக்கும்.

    பசு நெய் கொண்டு அபிஷேகம் செய்தால் இகபரசுகங்களில் இருந்து நம்மை விடுவித்து சுவர்க்க நிலையை நமக்கு அளிக்கும்.

    அரிசிமாவினால் அபிஷேகம் செய்தால் எத்தகைய கடன்கள் இருந்தாலும் அவற்றில் இருந்து நம்மை விடுவிக்கும்.

    அன்னாபிஷேகம், பதினொரு மூட்டை அரிசியால் அன்னம் சமைத்து அதனை லிங்கஸ்வரூபமான சிவனுக்கு அபிஷேகம் செய்தால் வயிற்றில் உண்டாகும் சகலவிதமான நோய்களும் பஞ்சாகப் பறந்துவிடும்.

    தூய்மையான மங்களகரமான கங்கை நீர் நூறு குடம் கொண்டு அபிஷேகம் செய்தால் மனத்திலுள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி , பயம் போய், மனநிம்மதி உண்டாகும்.

    சந்தனக்குழம்பினைப் பன்னீரில் கரைத்து அபிஷேகம் செய்தால் இறைவனிடம் மாசற்ற பக்தி உண்டாகி அஞ்ஞானம் விலகும்.

    ருத்ரம் ஜபித்த ஆயிரம் கலசங்களில் வைக்கப்பட்டுள்ள கங்கை நீரால் கங்காதரனைக் குளிர்வித்தால் மந்திரசித்தி ஏற்படும்.

    ஈசனின் திருமேனியில் இருந்து தோன்றிய விபூதியினால் அபிஷேகம் செய்ய சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

    தங்கத்தாமரை மொட்டுகள் செய்து அதனால் அபிஷேகம் செய்தால் சொர்க்க போகம் கிடைக்கும்.
    ×