என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 95834
நீங்கள் தேடியது "ஏர்டெல்"
- வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகியபோது சிம்கார்டை மீட்டெடுக்க ரூ.1,792 செலுத்துமாறு கூறினர்.
- பெண்ணின் பதிவு வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டெல்லியை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஒருவர் சமீபத்தில் பீகாருக்கு சென்றார். அப்போது அவருக்கு ரோமிங் கட்டணமாக ரூ.1 லட்சம் பில் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டார்.
அதில், இது ஒரு பயங்கரமான மோசடி. நான் பீகாரில் உள்ள வால்மீகி நகரில் இருக்கிறேன். ஏர்டெல் எனக்கு ரூ.1 லட்சம் ரோமிங் பில் அனுப்பி உள்ளது. நான் இந்தியாவிற்குள்ளேயே தான் பயணம் செய்துள்ளேன். எல்லை தாண்டி எங்கும் செல்லவில்லை. சர்வதேச ரோமிங்கிற்கும் ஒப்புதல் அளிக்காத நிலையில் எனக்கு இந்தளவு ரோமிங் பில் வந்துள்ளது.
இதுதொடர்பாக வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகியபோது, எனது சிம்கார்டை மீட்டெடுக்க ரூ.1,792 செலுத்துமாறு கூறினர். பின்னர் எனது மொபைல் எண் துண்டிக்கப்பட்டது என குறிப்பிட்டிருந்தார். பெண்ணின் இந்த பதிவு வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் மீண்டும் சேவை கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ரிலைன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வி (வோடபோன் ஐடியா) சேவை கட்டணங்களை மீண்டும் உயர்த்த திட்டமிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி இந்த ஆண்டு தீபாவளி காலக்கட்டத்தில் டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் சேவை கட்டணங்களை உயர்த்தலாம் என கூறப்படுகிறது.
நிறுவனங்கள் சார்பில் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து கிடைக்கும் வருவாயை (ARPU) அதிகப்படுத்தும் முயற்சியாக ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வி போன்ற நிறுவனங்கள் தங்களது சலுகைகளின் விலையை 10 முதல் 12 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
விலை உயர்வு அமலுக்கு வந்தாலும், மூன்று நிறுவனங்கள் கூட்டாக சேர்ந்து சுமார் 35 முதல் 40 மில்லியன் பயனர்களை கூடுதலாக சேர்க்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. புது வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் ஊரக பகுதிகளை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்த விலை உயர்வை கொண்டு மூன்று முன்னணி நிறுவனங்களும் அடுத்த ஆண்டு இறுதியில் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து பெறும் வருவாயை (ARPU) பத்து சதவீதம் வரை அதிகரித்துக் கொள்ள முடியும் என தனியார் ஆய்வு நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பாரதி ஏர்டெல் நிறுவன தலைமை செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குனருமான கோபால் விட்டல், இந்த ஆண்டு டெலிகாம் சேவை கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்படலாம் என ஏற்கனவே அறிவித்து இருந்தார். எனினும், வரும் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு இந்த விலை உயர்வு அமலுக்கு வராது என அவர் தெரிவித்து இருந்தார்.
ஏர்டெல் நிறுவனம் தனது பிராட்பேண்ட் பயனர்களுக்கு புது சலுகையை அறிவித்து இருக்கிறது. இதனுடன் 17 ஒ.டி.டி. சேவைகளுக்கான சந்தா வழங்கப்படுகிறது.
ஏர்டெல் நிறுவனம் மூன்று புது பிராட்பேண்ட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவை ஜியோஃபைபர் சேவைக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளன. இன்றைய கனெக்டெட் வீடுகளுக்கான பொழுதுபோக்கு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், இந்த சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது என ஏர்டெல் தெரிவித்துள்ளது.
புதிய ஏர்டெல் பிராட்பேண்ட் சலுகைகள் விலை முறையே ரூ. 699, ரூ. 1099 மற்றும் ரூ. 1599 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இவை முறையே 40Mbps, 200Mbps மற்றும் 300Mbps வேகத்தில் இணைய சேவை வழங்குகின்றன. இவற்றுடன் 14 பிரீமியம் ஒ.டி.டி. சேவைக்கான சந்தா வழங்கப்படுகிறது. ரூ. 699 சலுகையுடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா, ரூ. 1099 சலுகையுடன் அமேசான் பிரைம் வீடியோ, ரூ. 1599 சலுகையுடன் நெட்ப்ளிக்ஸ் சந்தா வழங்கப்படுகிறது.
ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் பிரீமியம் சேவையில் சோனிலிவ், லயன்ஸ்கேட், ஹொய்சொய், மனோரமாமேக்ஸ், ஷீமாரூ, அல்ட்ரா, ஹங்காமாபிளே, டிவோடி.வி., க்ளிக், நம்மஃப்ளிக்ஸ், டாலிவுட் மற்றும் ஷார்ட்ஸ் டி.வி. சந்தா வழங்கப்படுகிறது. ஏர்டெல் 4K ஹைப்ரிட் டி.வி. பாக்ஸ்-இல் 350-க்கும் அதிக டி.வி. சேனல்களை ஒற்றை சாதனம் மற்றும் ரிமோட்டில் வழங்குகிறது. இந்த பாக்ஸ்-க்கான கட்டணம் ரூ. 2 ஆயிரம் என ஏர்டெல் தெரிவித்துள்ளது.
பிராட்பேண்ட் சலுகைகளுடன் 3333GB டேட்டா வழங்கப்படும். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் முதல் மாதத்திற்கான வாடகையை மற்றும் இன்ஸ்டாலேஷனை இலவசமாக வழங்குகிறது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X