என் மலர்
நீங்கள் தேடியது "slug 106280"




மக்கள் நீதி மய்ய கட்சியை தொடங்கிய கமல் பாராளுமன்றம், சட்டமன்ற தேர்தலை அடுத்தடுத்து சந்தித்தார். திராவிட கட்சிகளுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட அக்கட்சி தேர்தலில் தோல்வியை தழுவியது.
பிப்ரவரி மாதம் நடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு தொடர்ந்து தோல்வியை சந்தித்ததால் கட்சியில் முக்கிய நிர்வாகிகள் வெளியேறினர்.
இந்த நிலையில் கட்சியை பலப்படுத்த கமல் முடிவு செய்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தில் 12 சார்பு அணிகள் உள்ளன. மாணவர், மருத்துவர், விவசாயம், ஆதிதிராவிடர் என பல்வேறு அணிகள் உள்ளன. அவற்றின் நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தி முடிவு செய்ய திட்டமிட்டுள்ளார். முதல் கட்டமாக ஆதிதிராவிடர் அணியின் கூட்டம் கட்சியின் மாநில தலைவர் மவுரியா தலைமையில் நடந்தது.
இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து மற்ற 11 அணிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொடர்ந்து நடைபெற உள்ளது.
11 வாரத்தில் இக்கூட்டம் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் இறுதியாக அனைத்து அணி நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை நடத்துகிறார்.
2024 பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சி நிர்வாகிகளுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் அடிப்படையில் இக்கூட்டம் அமைகிறது. மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கட்சி நிர்வாகிகள் சோர்வடைந்து உள்ள நிலையில் அணி நிர்வாகிகைள அழைத்து கமல் பேச இருப்பதால் உற்சாகம் அடைந்துள்ளனர்.
சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் வெற்றியின் விளிம்பு வரை சென்று கோட்டை விட்டார். அரசியல் களத்தில் வெற்றி என்பது வாழைப்பழத்தை உரித்து சாப்பிடுவது போல அல்ல என்பதை கமல்ஹாசன் நன்றாகவே உணர்ந்துள்ளார். ஆனால் கமல் கட்சியில் இணைந்து பணியாற்றிய நிர்வாகிகள் பலர், வேறு மாதிரி கணக்கு போட்டனர். கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் இல்லாத நிலையில் தமிழக மக்கள், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நிச்சயம் உடனே சிவப்பு கம்பளத்தை விரித்து விடுவார்கள் என்று கனவு கண்டனர். அந்த கனவு பலிக்காததால் கமல்ஹாசன் கட்சியில் இருந்து முன்னணி நிர்வாகிகள் ஓட்டம் பிடித்தனர். மாநில நிர்வாகிகள் பலர் மாற்று கட்சிகளில் போய் தஞ்சம் புகுந்தனர்.
பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் கோட்டை விட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றியை ஈட்டாததால் கட்சிக்குள் கடும் புகைச்சல் ஏற்பட்டது.
இதனால் “எங்கே போகும் இந்த பாதை...” என்கிற மனநிலைக்கு கட்சியினர் தள்ளப்பட்டுள்ளனர்.
இப்படி தொடர் தோல்விகளால் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பலரும் விலகி ஓடி இருக்கும் நிலையில் மிச்சம் மீதி இருக்கும் கட்சியினரும் இங்கேயே இருக்கலாமா? இல்லையென்றால் வேறு கட்சிகளில் போய் சேர்ந்து விடலாமா? என்கிற எண்ணத்திலேயே காலத்தை தள்ளிக்கொண்டு சோர்ந்து போய் காணப்படுகிறார்கள்.
இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் எதிர்காலம் என்ன? என்பது மிகப்பெரிய கேள்வியாகவே உருவெடுத்துள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து இதுபோன்று நிர்வாகிகள் பலர் ஓட்டம் பிடித்ததால் கமல்ஹாசன் மக்கள் செல்வாக்கை பெறுவதற்கு புதிய வியூகம் ஒன்றை வகுத்தார்.
இதன்படி மாவட்ட செயலாளர்கள் பொறுப்பில் இருந்து கட்சியை வழி நடத்தி செல்ல ஆட்கள் தேவை என்கிற விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால் இதனை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
இதனால் காலியாக உள்ள மாவட்ட செயலாளர் பணி இடங்களுக்கு ஆட்களை தேடும் படலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இப்படி கட்சியின் கூடாரம் காலியாகி கொண்டிருக்கும் நிலையில் நிதி நெருக்கடியும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. பெரிய தொழில் அதிபர்கள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றில் பெரும்பாலான கட்சிகள் நிதி வசூல் செய்தே கட்சியை வழி நடத்தி வருகின்றன. ஆனால் கட்சி தொடங்கியதுமே கமல்ஹாசன், அது போன்று நாமும் செயல்படக்கூடாது என்று கட்டளையிட்டார். ஆனால் கட்சி நிர்வாகிகள் சிலரோ நாமும் நன்கொடை என்ற பெயரில் பெரிய அளவில் நிதி வசூலில் இறங்கினால் மட்டுமே கட்சியை நடத்த முடியும் என்கிற கருத்தை முன் வைத்திருக்கிறார்கள்.
ஆனால் கமல்ஹாசனோ அதற்கு சம்மதிக்கவில்லை. அப்படி செயல்பட்டால் மற்ற கட்சிகளுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும் என்றும், மாற்றத்துக்கான கோஷத்தை நம்மால் எப்படி முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றும் கண்டித்துள்ளார்.
கட்சிக்கு வரும் பணத்துக்கு உரிய கணக்கு காட்ட வேண்டும் என்றும் அதுதான் நேர்மையான அரசியலாக இருக்கும் என்றும் கமல்ஹாசன் தெள்ளத் தெளிவாக கூறி இருக்கிறார். இதைத் தொடர்ந்தே மக்களிடம் வெளிப்படையாக வங்கி கணக்கை தெரிவித்து நிதி திரட்டலாம் என்று திட்டமிடப்பட்டது.
இதன்படி கட்சிக்கு நிதி தாருங்கள் என்று கமல்ஹாசனே வெளிப்படையாக அறிவிப்பு வெளியிட்டார்.
மக்களிடம் நிதி திரட்டி கட்சியை வழி நடத்த திட்டமிட்ட மக்கள் நீதி மய்யத்தின் இந்த வியூகமும் பெரிதாக கை கொடுக்கவில்லை.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர் கூறும்போது, எங்கள் தலைவரை பொருத்தவரையில் எதிலும் நியாயமாக செயல்பட வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர். இதன் காரணமாகவே கட்சிக்கு யாரிடமும் நிதி வசூலில் ஈடுபட வேண்டாம் என்று சொல்லி விட்டார். தனது வருமானத்தை வைத்தே அவர் கட்சியை நடத்தி வருகிறார் என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகளே இருக்கும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புத்துயிர் ஊட்டி வலுவான கட்சியாக மாற்ற கமல்ஹாசனும், கட்சி நிர்வாகிகளும் காய் நகர்த்தி வருகிறார்கள். இதற்காக விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிராமப்புறங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அடித்தளம் இல்லை.
அதே நேரத்தில் நகர்புறங்களிலும் வலுவான அடித்தளம் அமையவில்லை. இதைத் தொடர்ந்து இந்த கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
தொடர் தோல்விகள், கட்சியினர் ஓட்டம், கட்சி நிதி நெருக்கடி என தள்ளாடிக் கொண்டிருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியை தூக்கி நிறுத்துவதற்கு கமல்ஹாசன் நிறைய திட்டங்களை கைவசம் வைத்துள்ளார் என்றும் அதன் மூலம் தமிழக அரசியல் களத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் காலங்களில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கும் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இவர்களின் எண்ணத்துக்கு ஏற்ப கமல்ஹாசன், கட்சிக்கு புத்துயிர் ஊட்டி, வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘விக்ரம்’ திரைப்படம், தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்தப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. இதை வரவேற்று மதுரையில் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. அதில் “சில வேடிக்கை மனிதரை போல் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? வா, பாத்துக்கலாம்” என்ற வாசகங்களுடன் மதுரை மாநகரில் திடீர்நகர், தெற்குவாசல் உள்பட பல்வேறு பகுதிகளில் சினிமா போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
இதுதொடர்பாக மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளான மதுரை கிழக்கு-மேலூர் தொகுதி செயலாளர் கதிரேசன், மதுரை மண்டல பொறுப்பாளர் வினோத் சேது ஆகிய இருவரும் அந்த போஸ்டரை மாநகரம் முழுவதும் ஒட்டியது தெரியவந்தது.
இதையடுத்து மேற்கண்ட 2 கட்சி நிர்வாகிகள் மீதும் திடீர்நகர், தெற்குவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களிடம் இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சிகளில் மக்கள் பங்கேற்புடன் கூடிய மக்களாட்சி நிலைப்பெற ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டி அமைப்புகளை நடைமுறைப்படுத்த மக்கள் நீதி மய்யம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது. கடந்த பிப்ரவரி 21-ந்தேதி தமிழக தலைமைச் செயலாளரிடம் மனுகொடுத்தோம்.
12 ஆண்டுகளுக்கு முன்னரே சட்டமியற்றப்பட்டு இன்னமும் செயல்பாட்டுக்கு வராத இந்த அமைப்புகளை உடனே நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தமிழகம் முழுக்க உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளும் மனு கொடுத்தார்கள்.
சமீபத்தில் நடந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை, வனத் துறை அலுவலர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் விரைவில் ஏரியா சபை, வார்டு கமிட்டிகள் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் சார்பாக வரவேற்கிறேன். பாராட்டுகிறேன்.
அதேசமயம், இந்த நடை முறையை நகராட்சி, மாநகராட்சிகளில் மட்டுமல்லாமல் பேரூராட்சிப் பகுதிகளிலும் நடைமுறைப் படுத்த வேண்டும். அதற்குரிய சட்ட திருத்தத்தை தமிழக அரசு கொண்டுவரவேண்டும் என்று தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்... போரில் காயம் அடைந்த உக்ரைன் வீரர்களுக்கு அதிபர் நேரில் ஆறுதல்

சென்னை ராயபுரம் தங்கசாலை பகுதியில் நடைபெறும் 11-வது மெகா தடுப்பூசி முகாமினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.

60 நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், கொரோனா தொற்று நேற்று உயர்ந்துள்ளது. தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதே கொரோனா தொற்று உயர்வுக்கு காரணம். எனவே தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும்.
கடந்த 7 நாட்களில் சிங்கப்பூரில் 14 ஆயிரம் பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 74 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் 75 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். ஆனால் கடந்த 7 நாட்களில் 2.84 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,029 பேர் உயிரிழந்துள்ளனர். இதேபோல் ரஷ்யாவில் 44 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். கடந்த 7 நாட்களில் 2.57 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 8,739 பேர் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைன் நாட்டில் 30 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதில் 1.11லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4,451 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், தடுப்பூசி போடாத நாடுகளில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என ஆய்வு தெரிவிக்கிறது.
சென்னையில் குடிசை பகுதிகள் மற்றும் நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதிகளில் முக கவசம் செலுத்துவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது. ஆறுதல் அளிக்கும் விதமாக சென்னையில் உள்ள மால்களில் 51 சதவீதம் பேர் முககவசம் அணிகின்றனர்.
சென்னையில் வீடு தேடி தடுப்பூசி திட்டத்தின் மூலம் இதுவரை 1.27 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இன்று இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
ஒட்டுமொத்த பொதுமக்களை காப்பதற்காக அரசு தடுப்பூசி செலுத்துவதை உறுதிப்படுத்த வலியுறுத்தியது. 2 தவணை தடுப்பூசி செலுத்தியதால் தான் நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியானலும் பெரிய அளவில் பாதிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
