search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைரமுத்து"

    • நான் அவருக்குச் சொன்ன பதில்களைவிட அவர் கேட்ட கேள்விகள் மதிப்புமிக்கவை.
    • ஒரு காதலியைப் பிரிவதுபோல் விடைகொண்டு வந்தேன்.

    சென்னை:

    திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து இன்று எக்ஸ் தள பக்கத்தில் ரஜினி உடனான சந்திப்பு குறித்து கவிதை நடையில் கூறியிருப்பதாவது:-

    கடிகாரம் பாராத

    உரையாடல்

    சிலபேரோடுதான் வாய்க்கும்

    அவருள் ஒருவர்

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

    80நிமிடங்கள்

    உரையாடியிருக்கிறோம்

    ஒரே ஒரு

    'கிரீன் டீ'யைத் தவிர

    எந்த இடைஞ்சலும் இல்லை;

    இடைவெளியும் இல்லை

    சினிமாவின் அரசியல்

    அரசியலின் சினிமா

    வாழ்வியல் - சமூகவியல்

    கூட்டணிக் கணக்குகள்

    தலைவர்கள்

    தனிநபர்கள் என்று

    எல்லாத் தலைப்புகளும்

    எங்கள் உரையாடலில்

    ஊடாடி ஓய்ந்தன

    எதுகுறித்தும்

    அவருக்கொரு தெளிவிருக்கிறது

    தன்முடிவின் மீது

    உரசிப் பார்த்து

    உண்மை காணும்

    குணம் இருக்கிறது

    நான்

    அவருக்குச் சொன்ன

    பதில்களைவிட

    அவர் கேட்ட கேள்விகள்

    மதிப்புமிக்கவை

    தவத்திற்கு ஒருவர்;

    தர்க்கத்திற்கு இருவர்

    நாங்கள்

    தர்க்கத்தையே

    தவமாக்கிக் கொண்டோம்

    ஒரு காதலியைப்

    பிரிவதுபோல்

    விடைகொண்டு வந்தேன்

    இரு தரப்புக்கும்

    அறிவும் சுவையும் தருவதே

    ஆரோக்கியமான சந்திப்பு

    அது இது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • உன்னுடைய வாய்ஸ் ரொம்ப அற்புதமாக இருக்கிறது என்பார்.
    • வீட்டுக்கு வா, உனக்கு நான் பரிசு தருகிறேன் என்றார் வைரமுத்து.

    சென்னை:

    மலையாள சினிமாவில் பாலியல் ரீதியாக எழுந்த பிரச்சனைகளால் முன்னணி நடிகர்கள் பலரின் பெயர்கள் வெளிவந்து அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

    இதற்கிடையே, தமிழ் சினிமாவிலும் பாலியல் சீண்டல் தொடர்பான புகார்களை தெரிவிக்க விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பிரபல பாடகியும் நடிகையுமான சுசித்ரா சமீபத்தில் தனியார் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    வைரமுத்துவை பொறுத்த வரைக்கும் பாடகிகளை தான் முதலில் குறி வைப்பார். அதிலும் நான் மே மாதம் 98 பாடலை பாடியிருக்கிறேன். அந்தப் பாடலைக் கேட்ட பிறகு எனக்கு போன்செய்து 'உன் பாடலில் காமம் இருக்கிறது. ஒரு காதல் இருக்கிறது. உன்னுடைய வாய்ஸ் ரொம்ப அற்புதமாக இருக்கிறது.' இப்படித்தான் அவர் வலையில் விழ வைப்பாராம்.

    அந்தப் பாடலில் காதல் இருக்கிறது என்றால், அதில் ஆடிய ரீமாசென்னைப் பார்த்து காதல் வரலாம். அந்தப் பாட்டைப் பற்றி அவ்வளவு பெருமையாக கூறும்போதே நமக்கு தெரிந்துவிடும், ஏதோ ஒன்னுக்கு இவர் ஆசைப்படுகிறார் என.

    அதுமட்டுமின்றி, வீட்டுக்கு வா, உனக்கு நான் பரிசு தருகிறேன் என்றார். நான் என் பாட்டியுடன் போயிருந்தேன். நீ தனியா வருவேனு பார்த்தேன் என வைரமுத்து கூறினார். இல்லை, நான் எங்கு போனாலும் பாட்டியுடன்தான் வருவேன் என்றேன்.

    அவருடைய நோக்கம் நான் வந்ததும் என்னை தொடவேண்டும். தொட்டுப் பார்த்து ஆசைப்பட வேண்டும் என்பதுதான். ஆனால் அது நடக்கவில்லை.

    அதன்பின், என் பாட்டி வைரமுத்துவிடம், உங்களைப் போன்றவர்களால்தான் இந்த மாதிரி பிள்ளைகள் சினிமாவில் நிலைத்து நிற்க முடியும். நீங்கள் அடுத்த தலைமுறைக்கு ஒரு தந்தை போல என சொன்னதும் வைரமுத்துவுக்கு வியர்த்து விட்டது.

    உடனே என்னுடைய பாட்டி, பரிசு தருகிறேன் என்று சொன்னீர்களே பரிசு எங்கே என கேட்டார். வீட்டுக்கு பின்னாடி சென்று அங்கிருந்த இரு ஷாம்பு பாட்டில்களை எடுத்து வந்து கொடுத்தார்.

    அதன்பிறகு அங்கிருந்து வந்துவிட்டோம். இருந்தாலும் தொடர்ந்து அவர் தரப்பிலிருந்து எனக்கு போன் வந்து கொண்டே இருந்தது. நான் கட் பண்ணி விடுவேன் என தெரிவித்துள்ளார்.

    • காலத்துக்கு ஏற்ப தன்னை புதுப்பித்து கொள்ளும் கவிஞன் ஆகவும் ஜொலிக்கிறார்.
    • ரசிகர்கள் திரைப்பிரபலங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    தமிழ் திரையுலகில் மட்டும் இல்லாமல் தமிழ் இலக்கியம், பண்பாடு ஆகிய தளங்களில் மிகவும் முக்கியமான ஆளுமையாக விளங்கி வருபவர் கவிப்பேரரசு என அழைக்கப்படும் வைரமுத்து. 1953ஆம் ஆண்டு பிறந்த இவர் இன்று அதாவது ஜூலை 13ஆம் தேதி தனது 71வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இவருக்கு அவரது ரசிகர்கள் திரைப்பிரபலங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    நான்கு தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் திரையுலகில் தனது பாடல் வரிகளால் மக்களை மகிழ்வித்து வரும் கலைஞன் ஆக இருக்கும் கவிப்பேரரசு வைரமுத்து, காலத்துக்கு ஏற்ப தன்னை புதுப்பித்து கொள்ளும் கவிஞன் ஆகவும் ஜொலிக்கிறார்.

    இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் வாழ்த்தை தனது எக்ஸ் தளபக்கத்தில் தெரிவித்து அதில்

    இன்று பிறந்தநாள் கொண்டாடும் மனதிற்கினிய நண்பர், கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பல்லாண்டு வாழ மனதார வாழ்த்தி மகிழ்கிறேன் என்று கூறியுள்ளார்.

    • தியாகத்தைக் கொண்டாட்டக் குறியீடாகக் கொள்ளும் பக்ரீத் சக மனிதனை நேசிக்கச் சொல்கிறது...
    • அண்டை வீட்டாருக்கும் ஏழைகளுக்கும் ஈகைப் பண்பாட்டை போதிக்கிறது.

    சென்னை:

    உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தபடியாக கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத் ஆகும். இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

    அந்த வகையில், தமிழகம் முழுவதும் இன்று இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். இஸ்லாமியர்களுக்கு பக்ரீத் வாழ்த்து தெரிவித்து கவிஞரும், பாடலாசிரியருமான கவிஞர் வைரமுத்து எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    குடும்பம் நிறுவனம் அரசு

    என்ற எந்த அமைப்பும்

    யாரோ ஒருவரின்

    தியாகத்தை முன்வைத்தே

    கட்டமைக்கபடுகிறது

    அந்த தியாகத்தைக்

    கொண்டாட்டக்

    குறியீடாகக் கொள்ளும் பக்ரீத்

    சக மனிதனை

    நேசிக்கச் சொல்கிறது

    அண்டை வீட்டாருக்கும்

    ஏழைகளுக்கும்

    ஈகைப் பண்பாட்டை

    போதிக்கிறது

    குறிக்கோள் மிக்க

    இந்தக் கொண்டாட்டத்தை

    வாழ்த்துவதில்

    மகிழ்ச்சி அடைகிறோம்

    தருவோர் பெறுவோர்

    இருவரும் வாழ்க

    இவ்வாறு வைரமுத்து தெரிவித்துள்ளார்.


    • பதப்படுத்தப்பட்ட துபாயின் கழிவுகளை ஊருக்கு வெளியே கொட்டி மண்ணிட்டு மூடிய குப்பைமேடு.
    • துர்நாற்றம் இல்லை; சுகாதாரக் கேடு இல்லை; சுற்றுச்சூழல் மாசு இல்லை;

    சென்னை :

    கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    துபாயில் இருக்கிறேன்

    எனக்குப் பின்னால்

    மலைபோல் தெரிவது

    மலையல்ல

    பதப்படுத்தப்பட்ட

    துபாயின் கழிவுகளை

    ஊருக்கு வெளியே கொட்டி

    மண்ணிட்டு மூடிய

    குப்பைமேடு

    இதில்

    துர்நாற்றம் இல்லை;

    சுகாதாரக் கேடு இல்லை;

    சுற்றுச்சூழல் மாசு இல்லை;

    நாளை மக்கிய பிறகு

    தாவர எருவாகும்

    சாத்தியங்கள் உண்டு

    வெளிநாடு செல்லும்

    அமைச்சர்களும்

    அதிகாரிகளும்

    இதுபோன்ற உருப்படியான

    திட்டங்கள் கண்டு

    உள்நாட்டில்

    செயல்படுத்துங்களப்பா

    இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.


    • இறந்த பின்தான் தகனம் செய்வார்கள்; தகனம் செய்து இறப்பைத் தந்திருக்கிறது நெருப்பு...
    • உலகம் தோன்றிய நாளிலிருந்து விபத்துகள் புதியனவல்ல...

    சென்னை:

    குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர். இச்சம்பவத்திற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து, குவைத் தீவிபத்து தொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    குவைத்தின் தீ விபத்தில்

    மனிதச் சதைகள்

    கருகிய வாசம்

    உலகக் காற்றில் வீசுகிறது

    இறந்த பின்தான்

    தகனம் செய்வார்கள்;

    தகனம் செய்து

    இறப்பைத் தந்திருக்கிறது

    நெருப்பு

    இதயத்தின்

    மெல்லிய தசைகள்

    மெழுகாய் உருகுகின்றன

    உலகம்

    தோன்றிய நாளிலிருந்து

    விபத்துகள் புதியனவல்ல

    விஞ்ஞானம் வளர்ந்தபின்னும்

    அது தொடர்வது

    பாதுகாப்பு அளவீடுகளின்

    குறைபாடுகளைக் காட்டுகிறது

    மனிதத் தவறுகள்

    திருந்தவில்லை என்று

    வருந்திச் சொல்கிறது

    மாண்டவர்களுக்காக

    அழுது முடித்த இடத்தில்

    அழத் தேவையில்லாத சமூகத்தை

    வார்த்தெடுக்க வழி சமைப்போம்

    உலகத் தொழிலாளர்களுக்கு

    என் இந்தியக் கண்ணீர்

    இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.

    • கனிமொழியின் பதின் பருவத்தில் கலைஞர்தான் எனக்கு அறிமுகம் செய்தார்.
    • காற்றோடு உரையாடும் பூவைப்போன்ற மென்மையும் கல்லுறுதி போன்ற சொல்லுறுதியும் சிங்கத்தின் இருதயமும் கனிமொழியின் தீராத குணங்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தி.மு.க. குழு தலைவராக கனிமொழி எம்.பி. தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் கனிமொழி எம்.பி.க்கு கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைரமுத்து எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஒரு பெரும் பெருமை

    வாய்த்திருக்கிறது

    கனிமொழி கருணாநிதிக்கு

    பாராளுமன்றங்களின்

    குழுத் தலைவராய்

    தி.மு.க அவரைத் தேர்ந்துள்ளது

    கலைஞர் திருமகள்

    கவிஞர்

    முதலமைச்சரின் தங்கை

    பகுத்தறிவாளர் என்ற

    பிறவிப் பெருமைகளைத் தாண்டி

    மாதர் குலத்துக்கு

    மகுடம் என்றுதான்

    இந்திய அரசியல் இதைக்

    கணக்கிட்டுக் களிக்கும்

    கனிமொழியின்

    பதின் பருவத்தில்

    கலைஞர்தான் எனக்கு

    அறிமுகம் செய்தார்

    காற்றோடு உரையாடும்

    பூவைப்போன்ற மென்மையும்

    கல்லுறுதி போன்ற

    சொல்லுறுதியும்

    சிங்கத்தின் இருதயமும்

    கனிமொழியின் தீராத குணங்கள்

    கனிமொழியை

    அமைச்சராக்கவில்லையா

    என்று கலைஞரை

    ஒருமுறை கேட்டேன்

    'காலம் வரட்டும்' என்றார்

    இப்போது ஒருகாலம்

    அருகில் வந்து

    நழுவியிருக்கிறது

    ஐந்தாண்டுகளில் ஆகலாம்

    அல்லது

    அதற்கு முன்பேகூடக்

    காலம் 'கை'சேரலாம்

    கனவு மெய்ப்பட

    வாழ்த்துகிறேன்

    இவ்வாறு வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

    • தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சியையும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானையும் பாராட்டுகிறேன்.
    • இந்த வளர்ச்சியால் தமிழ்நாட்டு அரசியலில் அவரைப் பழிப்பது குறையாது ஆனால் இனி -கழிப்பது இயலாது.

    சென்னை:

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 8.19 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதால் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இதையடுத்து சீமானுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மக்களவைத் தேர்தலில்

    8.19 விழுக்காடு

    வாக்குகள் பெற்றுத்

    தேர்தல் ஆணையத்தின்

    அங்கீகாரம் பெற்ற

    நாம் தமிழர் கட்சியையும்

    அதன் தலைமை

    ஒருங்கிணைப்பாளர்

    சீமானையும் பாராட்டுகிறேன்

    ஆலின் விதையொன்று

    தனித்து நின்று

    ஓசையின்றித் துளிர்விடுவதும்

    இலைவிடுவதும்போல

    சீமானின் வளர்ச்சி

    கவனம் பெறுகிறது

    இந்த வளர்ச்சியால்

    தமிழ்நாட்டு அரசியலில்

    அவரைப்

    பழிப்பது குறையாது

    ஆனால் இனி -

    கழிப்பது இயலாது

    வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.

    • விஜய் சேதுபதியின் 50 -வது படமாக 'மகாராஜா' படம் உருவாகியுள்ளது. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்குகிறார்.
    • படம் வரும் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தற்பொழுது படத்தின் முதல் பாடலான 'தாயே தாயே' என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.

    விஜய் சேதுபதியின் 50 -வது படமாக 'மகாராஜா' படம் உருவாகியுள்ளது. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்கின்றனர்.

    இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.

    இந்த படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர், சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதில் இதுவரை கண்டிராத அவதாரத்தில் விஜய் சேதுபதியின் தோற்றம் அமைந்திருந்தது.

    சில நாட்களுக்கு முன் படத்தின் டிரைலர் வெளியாகிய மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் சேதுபதி ஒரு சலூன் கடையை வைத்துள்ளார். வீட்டில் உள்ள லட்சுமி காணாமல் போனது என்று போலிஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கிறார். அந்த லட்சுமி யார் என போலிஸ் விசாரிக்கிறது. யார் அந்த லட்சுமி என்பதை மர்மமாகவே வைத்திருக்கின்றனர். டிரைலர் மிகவும் சஸ்பன்சோடு அமைந்திருக்கிறது.

    படம் வரும் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தற்பொழுது படத்தின் முதல் பாடலான 'தாயே தாயே' என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. இப்பாடலை பிரபல பின்னணி பாடகரான சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். பாடல் வரிகளை வைரமுத்து எழுதியுள்ளார். இப்பாடலின் காட்சிகள் தற்பொழுதுசமூக வலைத்தளங்கலில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த வெற்றி உங்கள் ஆட்சியின் மாட்சிக்குக் கிடைத்த சாட்சி...
    • பதற்றமில்லாமல் வெற்றியின் பகட்டு இல்லாமல் இயல்பான புன்னகையோடு இருந்தார்.

    சென்னை:

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40-க்கு 40 என்று வெற்றி பெற்றுள்ளது. இது சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க.வுக்கு கிடைத்த முழு வெற்றியாகும். இதற்கு பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நாற்பதுக்கு நாற்பது என்பது

    மாயத்தால் நிகழ்ந்ததல்ல

    நிர்வாகத் திறம் என்ற

    நியாயத்தால் நிகழ்ந்தது

    இந்த வெற்றி

    உங்கள் ஆட்சியின்

    மாட்சிக்குக் கிடைத்த சாட்சி

    என்று சொல்லி

    முதலமைச்சருக்குப்

    பொன்னாடை பூட்டினேன்

    பதற்றமில்லாமல்

    வெற்றியின் பகட்டு இல்லாமல்

    இயல்பான புன்னகையோடு இருந்தார்

    வென்றார்க்கு அழகு

    தோற்றாரை மதித்தல்

    தோற்றார்க்கு அழகு

    வென்றாரை வியத்தல்

    பதவிக்கு அழகு

    உதவிகள் தொடர்தல்

    மக்களுக்கு அழகு

    மறுவேலை பார்த்தல்

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


    • திருப்பாச்சிக்கு முதலில் ஒரு தலைப்பு வைத்தோம்.
    • பாடல் வரிகளை மட்டும் கொடுக்கவில்லை தலைப்புகளையும் கொடுத்து வருகிறார்.

    ஸ்ரீ கருப்பர் பிலிம்ஸ் சார்பில் விஷ்ணுப்பிரியா வேலுச்சாமி தயாரிப்பில், காளிமுத்து காட்டமுத்து இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் "வேட்டைக்காரி." புதுமுக நடிகர் ராகுல் நடித்துள்ள இந்த படத்தில் சஞ்சனா சிங் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் இசை, டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

    இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் பேரரசு, "சில தினங்களுக்கு முன்பு ஒரு இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டேன், அப்போது அந்த பட இயக்குநர் படத்திற்கு தலைப்பு வைத்தவர் வைரமுத்து என்றார், இந்த படத்தின் இயக்குநர் காளிமுத்துவும் இந்த படத்திற்கு வைரமுத்து சார் தான் தலைப்பு வைத்ததாக சொன்னார். எனவே வைரமுத்து சார் பாடல் வரிகளை மட்டும் கொடுக்கவில்லை தலைப்புகளையும் கொடுத்து வருகிறார்."

     


    "அவர் தமிழ்ப் பட தலைப்புகள் மீது கடும்கோபம் கொண்டிருக்கிறார். அதனால் தான் இப்போது அவரே களத்தில் இறங்கி தலைப்பு வைக்க தொடங்கி விட்டார். இந்த நேரத்தில் நான் ஒரு உண்மையை சொல்ல வேண்டும், திருப்பாச்சி என்ற தலைப்பும் வைரமுத்து சார் தான் கொடுத்தார்."

    "திருப்பாச்சிக்கு முதலில் ஒரு தலைப்பு வைத்தோம், அதை விஜய் சார், செளத்ரி சார் ஏற்றுக்கொண்டார்கள். பதிவு செய்யும் போது அந்த தலைப்பு வேறு ஒருவரிடம் இருந்தது, நாங்கள் எவ்வளவு கேட்டும் கொடுக்கவில்லை. புதிய தலைப்பு என்ன வைப்பது என்று தெரியாமல் எங்கள் குழுவே குழப்பமடைந்த நிலையில், தொலைக்காட்சியில் ஒரு பாடல் பார்த்தேன், "திருப்பாச்சி அருவாள தூக்கிக்கிட்டு வாடா...வாடா." என்ற பாடல் அது. அந்த பாடலை கேட்டதும், என் பட நாயகன் அருவா செய்பவர், என்றவுடன் திருப்பாச்சி என்ற தலைப்பு சரியாக இருக்கும் என்று தோன்றியது, உடனே அந்த தலைப்பை வைத்துவிட்டேன். ஆகையால், எனக்கும் தலைப்பு கொடுத்தவர் வைரமுத்து சார் தான்," என்று தெரிவித்தார்.

    • இசைஞானி இளையராஜா தனது பாடல்களை அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக்கூடாது என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
    • நிகழ்ச்சி ஒன்றில் கவிஞர் வைரமுத்து, "இசை பெரிதா? மொழி பெரிதா? இசைக்கு நிகரானது மொழி என்று கொள்ளாதவர்கள் அங்ஞானி" என்று பேசி இருந்தார்.

    இசைஞானி இளையராஜா தனது பாடல்களை அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக்கூடாது என்று தொடர்ந்து கூறி வருகிறார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 'கூலி' பட அறிமுக டீசரில் தனது பாடலை அனுமதி இன்றி பயன்படுத்தியுள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து இளையராஜாவைச் சுற்றி சர்ச்சைகள் உருவாகத் தொடங்கின.

    இதனையடுத்து நிகழ்ச்சி ஒன்றில் கவிஞர் வைரமுத்து, "இசை பெரிதா?  மொழி பெரிதா? இசைக்கு நிகரானது மொழி என்று கொள்ளாதவர்கள் அங்ஞானி" என்று பேசி இருந்தார். இதன்மூலம் இளையராஜாவை மறைமுகமாக அவர் சாடியுள்ளார் என்ற விவாதம் எழுந்தது.

    இந்த விவாதத்தை மேலும் வளர்க்கும் வகையில், இளையராஜாவின் சகோதரர் கங்கையமரன், அறிக்கை வெளியிட்டு வைரமுத்துவை சாடினார். இந்த சர்ச்சை சமூக வலைத்தளங்களில் பூதாகரமாக மாறியுள்ள நிலையில் இதுகுறித்து தற்போது இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், "என்னை பற்றி ஏதாவது ஒரு வகையில் தினமும் இது போன்ற வீடியோக்கள் வந்துகொண்டு இருக்கிறது என்று எனக்கு வேண்டியவர்கள் சொல்கிறார்கள். ஆனால் நான் இதில் கவனம் செலுத்துவதில்லை. மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை.

     

     

    என் வேலைகளை கவனிப்பது தான் என் வேலை. நான் என் வழியில் ரொம்ப க்ளீனா சுத்தமா போய்கிட்டு இருக்கேன். நீங்கள் என்னை வாழ்த்திக்கொண்டிருக்கும் நேரத்தில் கடந்த ஒரு மாதத்தில், ஒரு சிம்பொனியை எழுதி முடித்துவிட்டேன் என்ற சந்தோஷமான செய்தியை நான் உங்களிடம் சொல்லிக்கொள்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×