search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமானம்"

    • விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நபர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை வெளியில் எடுத்தார்.
    • விமானப் பணிப்பெண்கள் துணிச்சலாகச் செயல்பட்டு மடக்கினர்.

    பறக்கும் விமானத்தில் பயணி ஒருவர் துப்பாக்கியைக் காட்டி சக பயணிகளைக் கொலை செய்யப்போவதாக மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோவும் வெளியாகி உள்ளது.

    மத்திய அமெரிக்காவில் உள்ள ஹோண்டுராஸ் நாட்டில் சமீபத்தில் டெகுசிகல்பாவில் உள்ள டோன்காண்டின் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ரோட்டனுக்கு சென்ற விமானத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நபர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை வெளியில் எடுத்து பயணிகளை நோக்கி நீட்டி அவர்களைக் கொலை செய்யப்போவதாக மிரட்டியுள்ளார்.

    இதனால் அனைவரும் அச்சத்தில் உறைந்தனர். இருப்பினும் விமானப் பணிப்பெண்கள் துணிச்சலாகச் செயல்பட்டு அந்த நபரை மடக்கினர்.

    பயணிகளுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாமல் அவர்கள் தடுத்தனர். விமானி உடனடியாக விமானத்தை மீண்டும் டோன்காண்டின் சர்வதேச விமான நிலையத்திற்குத் திருப்பிவிட்டார்.

    விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதும் தேசிய காவல்துறை அதிகாரிகள் விமானத்தில் ஏறி, அந்த நபரைக் கைது செய்தனர். பின்னர் பயணிகள் மற்றொரு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் தீங்கு ஏற்படவில்லை.

    இந்த சம்பவம் விமான நிலைய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த கவலையை ஏற்படுத்தி உள்ளது. பாதுகாப்பு சோதனைகளை மீறி அந்த நபர் எப்படி விமானத்தில் துப்பாக்கியை கொண்டு வந்தார் என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

    கோவையில் தரை இறங்கிய விமானங்கள் ஒரு மணி நேர காத்திருப்புக்கு பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டு சென்றது.
    கோவை:

    கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது.

    தற்போது கேரள மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

    இன்று காலை கோழிக்கோடு விமான நிலையத்துக்கு வளைகுடா நாடான சவுதி அரேபியாவில் இருந்து விமானம் வந்தது. மோசமான வானிலை காரணமாக விமானத்தை தரை இறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனையடுத்து அருகே உள்ள விமான நிலையமான கோவை விமான நிலையத்துக்கு சவுதி அரேபியா விமானம் திருப்பி விடப்பட்டது. இந்த விமானம் காலை 7.10 மணிக்கு கோவைக்கு வந்து சேர்ந்தது. இதேபோல கோழிக்கோடு விமான நிலையத்துக்கு ஷார்ஜாவில் இருந்து வந்த 2 விமானங்களும் கோவை விமான நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டது. காலை 7.20, 7.40 மணி என ஒன்றன்பின் ஒன்றாக வந்து தரை இறங்கியது.

    பின்னர் கோழிக்கோடு விமான நிலைய பகுதியில் வானிலை சரியானது. இதனையடுத்து கோவையில் தரை இறங்கிய விமானங்கள் ஒரு மணி நேர காத்திருப்புக்கு பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டு சென்றது. இதனால் அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளானார்கள்.

    கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மோசமான வானிலையின்போது கோழிக்கோடு விமான நிலையத்தில் தரை இறங்கிய ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 19-க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.

    ×