என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "taking"
- சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சேலம் 2-வது அக்ரகாரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
- அப்போது அவரது மனைவி அருகில் இருந்து அவரை கவனித்து வந்தார். பின்னர் 2 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் வீடு திரும்பினர்.
சேலம்:
சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சேலம் 2-வது அக்ரகாரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அப்போது அவரது மனைவி அருகில் இருந்து அவரை கவனித்து வந்தார். பின்னர் 2 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் வீடு திரும்பினர்.
ஆபாச வீடியோ
இந்த நிலையில் அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர் நீ ஆஸ்பத்திரியில் தங்கி இருந்த போது குளித்த வீடியோ என்னிடம் உள்ளது. நான் அழைக்கும் இடத்திற்கு வரவேண்டும் என்று மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கதறினார்.
இதற்கிடையே அந்த பெண்ணின் வாட்ஸ் அப் எண்ணுக்கு அந்த வீடியோவை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
மிரட்டல்
இந்தநிலையில் மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய அந்த நபர் நான் கூப்பிடும் இடத்திற்கு வராவிட்டால் குளிக்கும் வீடியோவை சமூக வலை தளங்களில் வெளியிடுவேன் என மிரட்டினார். இதனால் பயந்து போன அந்த பெண் சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது 2 முறையும் வெவ்வெறு செல்போன் எண்களில் இருந்து அந்த நபர் பேசியது தெரிய வந்தது. மேலும் தனது கணவர் சிகிச்சையில் இருந்த போது பக்கத்து படுக்கையில் இருந்த நபர் நான் குளிக்கும் போது வீடியோ எடுத்திருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக அந்த பெண் கூறி உள்ளார்.
செல்போன் எண்ணை வைத்து விசாரணை
இதையடுத்து அந்த பெண்ணுக்கு பேசிய செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது அந்த நபர் தலைமறைவானது தெரிய வந்தது.
அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
- சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சாலையோரம் வரும் மான், யானைகளை போட்டோ எடுத்தால் வழக்குப்பதிவு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- மனிதர்களின் தேவையற்ற செயல்களால் மனித-விலங்கு மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாவும் ஆபத்து நிகழும் முன் நடவடிக்கையாக வனத்தில் அத்துமீறுவோர் மீது அபராதம், வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
தாளவாடி:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகமானது 1435 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. இந்த புலிகள் காப்பகம் 2013-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி தமிழகத்தின் 4-வது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.
இங்கு யானைகள் புலி,சிறுத்தை, கரடி, செந்நாய்கள், கடமான்கள், புள்ளிமான்கள், கழுதைபுலி என ஆயிரக்கணக்கான வனவிலங்குகளின் புகலிடமாக உள்ளது.
இந்த சரணாலயத்தின் மேற்கு கிழக்கு தொடர்ச்சி மலை சந்திக்கும் தலமலை வனப்பகுதி யானைகள் இடம்பெறும் முக்கிய வழித்தடமாக உள்ளது. அண்மையில் நடந்த கணக்கெடுப்பில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 1200-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ஊட்டி, கொடைக்கானல் போல இதமான கால நிலை நிலவுவதால் திம்பம், ஆசனூர் கேர்மாளம் வனச்சாலையில் ஆயிரக்கணக்கானோர் முகாமிட்டு இயற்கையின் அழகை ரசிக்கின்றனர். யானை, புள்ளிமான்கள் போன்ற விலங்குகள் சாாலையோரம் துளிர்விட்டு பச்சைபசேல் என படர்ந்திருக்கும் புற்களை சாப்பிட அடிக்கடி வருவது வழக்கம்.
அடர்ந்த காட்டுப்பகுதியின் நடுவே தேசிய நெடுஞ்சாலை செல்வதால் இரு மாநிலங்களிடையே பயணிக்கும் வாகன ஓட்டிகள்,சுற்றுலா பயணிகள் யானை, புள்ளிமான்களை பார்த்து மெய்சிலிர்க்கின்றனர். சிலர் வாகனத்தை நிறுத்தி புகைப்படம் எடுப்பது, சப்தமிடுவதும் வனவிலங்குகளின் நேர்மறையான எண்ணங்களை உருவாக்குகின்றன.
சில வாகன ஓட்டிகள் ஆர்வம் காரணமாக யானைகள் அருகே நின்று செல்பி எடுக்கின்றனர். இதனால் யானை அவர்களை துரத்தி தாக்க முற்படுவதும் அவர்கள் தப்பிப்பதும் வாடிக்கையாகி விட்டது. ஆபத்தை உணராத இளைஞர்கள் மலை உச்சியில் நின்று மலைகளின் பின்னணியில் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.
சல சலவென ஓடும் நீரோடைகளில் உள்ள பாறைகள் மீது அமர்ந்து மது அருந்துவதும் எல்லையை மீறிய செயலாககாணமுடிகிறது. இயற்கையான சூழல் கொண்ட விலங்குகள் வாழும் வாழ்விடத்தில் மனிதர்கள் அத்துமீறி நுழைந்து யானை, சிறுத்தை. புள்ளிமான்களின் வாழ்விடத்தில் இடையூறு ஏற்படுத்தும் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சத்தியமங்கலம் புலிகள் காப்பக இணை கள இயக்குநர் கிருபா சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
மனிதர்களின் தேவையற்ற செயல்களால் மனித-விலங்கு மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாவும் ஆபத்து நிகழும் முன் நடவடிக்கையாக வனத்தில் அத்துமீறுவோர் மீது அபராதம், வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்