search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tamilnadu govt"

    • அழகர்மலை அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி ?
    • எந்த அளவுகோலின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக விளக்கம்.

    மதுரை அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திறகு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், இதுதொடர்பாக தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.

    அரிட்டாபட்டி கிராமம், கடந்த 2022ம் ஆண்டு தமிழகத்தின் முதல் பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டது. 7 மலைகளை கொண்ட இந்த கிராமப்பகுதியில் புராதன சின்னங்கள், அரியவகை பறவைகள் உள்ளன.

    அரிட்டாபட்டி பல்லுயிர் பாராம்பரிய தலம் அழகர்மலை அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியானது.

    இதுதொடர்பாக, மதுரை அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனம் இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது

    மேலும், மத்திய அரசு அனுமதி அளித்துள்ள குறிப்பிட்ட பகுதி எது என்பது குறித்தும் அது எந்த அளவுகோலின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் ஆராய்ந்து வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    • மாணாக்கர்களின் நலனை கருதில் கொண்டு ஆசிரியர்களுக்கு மறுநியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
    • 2025ம் ஆண்டு மே 31ம் தேதி வரை மறுநியமனத்தை நீட்டித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் உத்தரவிட்டுள்ளார்.

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக் கல்லூரி ஆசியர்கள் மறுநியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    மாணாக்கர்களின் நலனை கருதில் கொண்டு ஆசிரியர்களுக்கு மறுநியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    2025ம் ஆண்டு மே 31ம் தேதி வரை மறுநியமனத்தை நீட்டித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அரசு / அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஓர் கல்வி ஆண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் நிலை எழும் பொழுது மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படும் என்ற காரணத்தால், அவ்வாசிரியர்களை வயது முதிர்வு மாதம் ஓய்வு பெற அனுமதித்து மீண்டும் அக்கல்வி ஆண்டின் இறுதி வரை மறுநியமனம் செய்யும் முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

    இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான வகுப்புகள் ஏப்ரல் முதல் வாரத்துடன் முடிவடைந்து விடுவதாலும், மே மாதத்தில் தேர்வுகள் / விடைத்தாள் திருத்தும் பணிகள் மட்டுமே நடைபெறுவதாலும், கல்வி ஆண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி வரை மறுநியமனம் வழங்கி ஆணையிடப்பட்டது.

    முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலனை கருதிற்கொண்டு, நிர்வாக பதவிகளான கல்லூரி கல்வி இணை இயக்குநர் / மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் / கல்லூரி முதல்வர் மற்றும் இதர கல்விசார் பணியாளர்களான கல்லூரி நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பதவிகள், நீங்கலாக கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு சில நிபந்தனைகளுக்குட்பட்டு 2025 மே மாதம் 31 வரை மறுநியமனம் நீட்டித்து உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • நிர்வாக காரணங்களுக்காக கிராம சபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
    • தமிழகம் முழுவதும் 23-ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் நவம்பர் 1-ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், தமிழகம் முழுவதும் வரும் 23-ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

    அதில், கிராம சபை கூட்டத்தை ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் 23-ம் தேதி காலை 11 மணியளவில் நடத்த வேண்டும். கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க ஏதுவாக, கூட்டம் நடைபெறும் இடம், நேரத்தை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    • முதல் தவணையாக ரூ.209 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • மொத்தம் ரூ.209 கோடி ஒதுக்கீடு செய்து ஊரக வள்ச்சி துறை அரைசாணை வெளியிட்டுள்ளது.

    2024- 2025ம் ஆண்டில் ஊரகப் பகுதிகளில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 68,569 வீடுகள் கட்ட முதல் தவணையாக ரூ.209 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, ஒரு வீட்டுக்கு ரூ/1.20 லட்சம் ஒன்ற அடிப்படையில் முதல் தவணையாக ரூ.209 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் பங்கு ரூ.125 கோடி மற்றும் மாநில அரசின் பங்குத் தொகை ரூ.83 கோடி என மொத்தம் ரூ.209 கோடி ஒதுக்கீடு செய்து ஊரக வள்ச்சி துறை அரைசாணை வெளியிட்டுள்ளது.

    பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் நிதி வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    • மெட்ரோ ரெயில் திட்டம் 2ம் கட்டத்திற்கு மத்திய அரசு ரூ.63000 கோடி நிதி வழங்குவதாக தகவல் வெளியானது.
    • தவறான தவலைப் பரப்பாதீர்கள் என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம்.

    மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி அளித்தார்.

    அப்போது பேசிய அவர், "சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது" என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து, மெட்ரோ ரெயில் திட்டம் 2ம் கட்டத்திற்கு மத்திய அரசு ரூ.63000 கோடி நிதி வழங்குவதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் 2ம் கட்டத்திற்கு, மத்திய அரசு ரூ.63,246 கோடி நிதி வழங்கியுள்ளதாக பரவும் செய்தி தவறானது என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    சென்னை மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசின் பங்கு ரூ.7,425 கோடி மட்டுமே. தமிழக அரசின் பங்கு- ரூ.22,228 கோடி, கடன் ரூ.33,593 கோடி பங்கிடப்பட்டுள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் 2ம் கட்டத்திற்கு மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்த நிலையில், தவறான தவலைப் பரப்பாதீர்கள் என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது.

    • சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வராக லியூ டேவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முதல்வராக சிவசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    தமிழ்நாட்டில் 14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முதல்வராக சிவசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி முதல்வராக பவானி, ஈரோடு மருத்துவக் கல்லூரி முதல்வராக ரவிக்குமார், குமரி மருத்துவக்கல்லூரி டீனாக ராம லட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    திருச்சி மருத்துவக் கல்லூரி முதல்வராக குமரவேல், மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக அருள் சுந்தரேஷ் குமார், ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி டீனாக அமுதா ராணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சேலம் மருத்துவக் கல்லூரி முதல்வராக தேவி மீனாள், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வராக லியூ டேவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி முதல்வராக கலைவாணி, தேனி மருத்துவக் கல்லூரி முதல்வராக சித்ரா, கரூர் மருத்துவக் கல்லூரி முதல்வராக லோகநாயகி, விருதுநகர் மருத்துவக்கல்லூரி முதல்வராக ஜெயசிங் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக ரோகிணி தேவியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    • விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.21 ஆயிரமாக உயர்வு.
    • விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு ரூ.11 ஆயிரத்தில் இருந்து ரூ.11,500 ஆக உயர்வு.

    விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு தற்போது வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தினத்தன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.21 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    அதபோல், விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு, மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.11 ஆயிரத்தில் இருந்து ரூ.11,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார் உள்ளிட்டோரின் வழித்தோன்றல்கள் பெறும் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.10,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு காவல் அகாடமி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக முத்துமாணிக்கம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளராக ப்ரீத்தி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    தமிழகத்தின் முக்கிய நகரங்களை சேர்ந்த 9 டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    அதன்படி, திருச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்த எஸ்.குத்தாலிங்கம் கள்ளக்குறிச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாடு காவல் அகாடமி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக முத்துமாணிக்கம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளராக ப்ரீத்தி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    வேலூர் துணை காவல் கண்காணிப்பாளராக வேல்முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    நெல்லை புறநகர் சப்-டிவிஷன் காவல் டிஎஸ்பியாக இருந்த பாலசுந்தரம் மதுரை காவல் மாவட்ட ஊமச்சிக்குளம் சப்-டிவிஷன் டிஎஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    தாம்பரம் காவல் ஆணையராக எஸ்பிசிஐடி டிஎஸ்பியாக இருந்த இளஞ்செழியன் மணிமங்கலம் காவல் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    • ராமதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    • மின்சாரக் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருந்தால் அது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் அடுத்த மாதம் முதல் மின்சார கட்டணத்தை உயர்த்தக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து ராமதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டில் கடந்த 2022ம் ஆண்டு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்திருக்கும் ஆணையின்படி, வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

    மின்சாரக் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருந்தால் அது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த ஆணையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு நிதியாண்டின் ஏப்ரல் மாதத்திற்கான பண வீக்க விகிதம் அல்லது 6 விழுக்காடு இவற்றில் எது குறைவோ அந்த அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

    அதன்படி, நடப்பாண்டின் ஏப்ரல் மாத பணவீக்க அளவான 4.38 விழுக்காடு அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. அதனால் யூனிட்டுக்கு 50 காசுகள் வரை மின்சாரக் கட்டணம் உயரும்.

    அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வறட்சி காரணமாக வேளாண்மை பாதிப்பு, மக்களின் வருவாய்க் குறைவு உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின்சாரக் கட்டணத்தை மீண்டும் உயர்த்தினால் அதை மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் மின்சாரக் கட்டணங்கள் 2.18% உயர்த்தப்பட்டது. அப்போது பொதுமக்களால் அதை தாங்கிக் கொள்ள முடியாது என்பதால், மின் கட்டண உயர்வை அரசே ஏற்றுக் கொள்ளும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நடப்பாண்டில் மட்டும் மின்சாரக் கட்டண உயர்வை மக்களால் எவ்வாறு தாங்கிக் கொள்ள முடியும்?

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பைக் குறைக்க மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது தீர்வல்ல. 2022-ஆம் ஆண்டில் ரூ.31,500 கோடிக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியும் மின்சார வாரியத்தின் நஷ்டம் குறைவதற்கு பதிலாக அதிகரித்துள்ளது.

    எனவே, கட்டண உயர்வால் பயன் இல்லை. மின்சார வாரியத்தில் நடக்கும் ஊழல்களைத் தான் தடுக்க வேண்டும். வீடுகள், தொழிற்சாலைகள் ஆகிய இரு தரப்புக்கும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
    • அரசியல் கட்சி தலைவர்களின் படங்களை ஒட்ட தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை.

    வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், கார்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமெனவும் மனவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    சென்னையை சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

    அந்த மனுவில் வாகனங்களின் கண்ணாடிகளில் மத சின்னங்கள், அரசியல் கட்சி தலைவர்களின் படங்களை ஒட்ட தடை விதிக்க வேண்டும்.

    பேருந்துகளின் பின்புறம் மற்றம் இருபுறங்களில் வணிக விளம்பரங்கள் செய்வதை தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    • 2024 ஆண்டிற்கான பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு வழங்க உத்தரவு.

    பொங்கல் பண்டிகையை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இது தொடர்பாக வெளியாகி இருக்கும் தமிழ்நாடு அரசின் அராசாணையில், "2024 தைப்பொங்கலை ஒட்டி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தாருக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது," என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     


    இதற்காக ரூ. 238 கோடியே 92 லட்சத்து 72 ஆயிரத்து 741 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவர். கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ. 1000 வழங்கப்பட்டது.

    இந்த ஆண்டிற்கான பொங்கல் தொகுப்பில் ரொக்கப்பரிசு குறித்த அறிவிப்பு இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று பொங்கல் தொகுப்பு எப்போது வழங்கப்படும் என்பது குறித்தும் எந்த தகவலும் இல்லை.

    • புயல் கரையைக் கடக்கும் பொழுது சாலைகளில் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு.
    • பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகளை தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் செய்தியாக வெளியிட்டுள்ளது.

    மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் இருந்தே பணி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

    இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மிச்சாங் புயல் இன்று பிற்பகல் 5.30 மணி நிலவரப்படி தென்மேற்கு வங்கக்கடலில், புதுச்சேரியில் இருந்து 240 கிமீ கிழக்கு - தென்கிழக்காகவும், சென்னையில் இருந்து 210 கிமீ தென் கிழக்காகவும், நெல்லூரில் இருந்து 330 கிமீ தெற்கு- தென்கிழக்காகவும் ஆகவும் நிலை கொண்டுள்ளது.

    இது மேலும் வலுவடைந்து 4.12.23 (திங்கட்கிழமை) முற்பகல் தமிழ்நாட்டின் வடக்கு கடற்கரைப் பகுதியை நோக்கி நகர்ந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனத்த மழையுடன் புயல் காற்றும் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    புயல் கரையைக் கடக்கும் பொழுது சாலைகளில் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படவும், காற்று வேகத்தின் காரணமாக மரங்கள் சாய்ந்து விழவும், மின்கடத்திக் கம்பிகள் அறுந்து விடவும் வாய்ப்பு இருப்பதன் காரணமாக பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகளை தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் செய்தியாக வெளியிட்டுள்ளது.

    அரசும் அத்தியாவசியப் பணிகளான காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், உள்ளாட்சி அமைப்புகள், மருத்துவமனைகள், மின்சாரம், பால், குடிநீர் விநியோகம், உணவகங்கள் போன்ற அமைப்புகளின் பணியாளர்களைத் தவிர இம் மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாளை ஒரு நாள் பொது விடுமுறை என அறிவித்துள்ளது.

    இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் இயன்றவரை தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தபடியே பணி செய்ய (Work From Home) அறிவுறுத்துமாறும் தவிர்க்க இயலாத நிலையில் அத்தியாவசியமாகத் தேவைப்படும் பணியாளர்களை மட்டும் கொண்டு செயல்படவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    ×