என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "tamim iqbal"
- சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வங்காளதேச அணி வீரர் தமிம் இக்பால் அறிவித்துள்ளார்.
- ஓய்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த போதே கண்ணீர் விட்டு அழுதார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வங்காளதேச அணி வீரர் தமிம் இக்பால் அறிவித்துள்ளார். ஓய்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த போதே கண்ணீர் விட்டு அழுதார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிப்ரவரி 2007-ல் தமிம் தனது ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். மேலும் வங்காளதேசத்திற்காக அதிக ஒருநாள் ரன்கள் (8313) மற்றும் சதங்கள் (14) அடித்துள்ளார். விராட் கோலி மற்றும் ரோகித் ஷர்மாவுக்கு அடுத்தபடியாக, ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த மூன்றாவது வீரர் இக்பால் ஆவார்.
கிறிஸ்ட்சர்ச்:
வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. வங்காளதேசம்- நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்குவதாக இருந்தது.
இந்த நிலையில் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட இந்த சம்பவத்தில் 49 பேர் பலியானார்கள். தொழுகைக்காக திரண்டு இருந்த போது இந்த பயங்கர சம்பவம் நடந்தது. வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் தொழுகைக்காக அந்த மசூதிக்கு சென்றனர். நல்ல வேளையாக அவர்கள் மயிரிழையில் உயிர் தப்பினார்கள். இதை தொடர்ந்து 3-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து வங்காளதேச பேட்ஸ்மேன் தமிம் இக்பால் கூறியதாவது:-
இந்த சம்பவத்தில் வங்காள தேச வீரர்கள் அனைவருமே மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானோம். என்னால் இதை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. நாங்கள் அனைவரும் தற்போது ஓட்டலில் நலமாக உள்ளோம்.
சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சில மீட்டர் தூரம்தான் நாங்கள் இருந்தோம். இது ஒரு மோசமான பயங்கரம் நிறைந்த அனுபவம் ஆகும். எங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #NZMosqueAttack #tamimiqbal
உலகளவில் அதிக ரசிகர்களை கொண்டுள்ள விராட் கோலி, இளைஞர்களுக்கு உதாரணமாக விளங்குகிறார். விராட் கோலி ஆட்டத்தை பார்த்து எப்படி ஷாட் அடிக்க வேண்டும் என்று கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு கிரிக்கெட் ஷாட்டுகள் அடித்து அசத்தி வருகிறார்.
ரசிகர்கள் மட்டுமல்ல, சர்வதேச அளவில் உள்ள கிரிக்கெட் வீரர்களும் விராட் கோலியின் ஆட்டத்தைப் பார்த்து அசந்துள்ளனர். வங்காள தேச கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஆன தமிம் இக்பால், விராட் கோலி மனிதரே அல்ல என்று நினைக்க தோன்றுகிறது என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
விராட் கோலி குறித்து தமிம் இக்பால் கூறுகையில் ‘‘விராட் கோலி ஒரு மனித பிறவியே அல்ல என்று சில நேரம் நினைக்கத் தோன்றும். ஏனென்றால், அவரது விளையாடும் ஆட்டத்தை வைத்து எனக்கு அப்படி நினைக்க தோன்றுகிறது. அவர் பேட் எடுத்து களம் இறங்கிவிட்டால், ஒவ்வொரு போட்டியிலும் சதம் அடிப்பது தோன்றுகிறது.
மூன்று வகை கிரிக்கெட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அவர் எடுக்கும் கடின முயற்சி நம்ப முடியாத வகையில் இருக்கிறது. அனைத்து வகை கிரிக்கெட்டிலும் அவர்தான் நம்பர் ஒன் வீரர். விராட் கோலியிடம் இருந்து கற்றுக் கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன. அதேபோல் அவரது ஆட்டத்தை மிகவும் ரசிக்கலாம்.
கடந்த 12 ஆண்டுகளாக பல சிறந்த கிரிக்கெட் வீரர்களைப் பார்த்து வருகிறேன். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனிச்சிறப்பு உள்ளது. ஆனால், கோலியைப் போன்று ஆதிக்கம் செலுத்திய ஒருவரை நான் பார்த்ததே இல்லை’’ என்றார்.
இதன்மூலம் 5 ஆயிரம் ரன்களை கடந்த 3-வது வங்காள தேச வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் தமிம் இக்பால், ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் 5 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.
31 வயதாகும் முஷ்பிகுர் ரஹிம் 2005-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியிலும், 2006-ல் ஒருநாள் போட்டியிலும் அறிமுகமானார். ஒருநாள் போட்டியில் 6 சதம், 29 அரைசதங்களும், டெஸ்ட் போட்டியில் ஐந்து சதம், 29 அரைசதங்களும் அடித்துள்ளார்.
கயானாவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்காள தேசம் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தமிம் இக்பால், அனாமுல் ஹக்யூ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஹக்யூ ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட்டில் வெளியேறினார்.
2-வது விக்கெட்டுக்கு தமிம் இக்பால் உடன் ஷாகிப் அல் ஹசன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஷாகிப் அல் ஹசன் 121 பந்தில் 97 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மூன்று ரன்னில் சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். மறுமுனையியல் தமிம் இக்பால் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.
இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 44.3 ஓவரில் 207 ரன்கள் குவித்தது. அடுத்து வந்த சபீர் ரஹ்மான் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் அதிரடியாக விளையாடி 11 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 30 ரன்கள் அடித்தார். தமிம் இக்பால் 160 பந்தில் 130 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க வங்காள தேசம் 50 ஓவரில 4 விக்கெட் இழப்பிற்கு 279 ரன்கள் குவித்தது.
பின்னர் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர் கிறிஸ் கெய்ல் 60 பந்தில் 40 ரன்கள் சேர்த்தார். ஹெட்மையர் 52 ரன்கள் எடுத்தார்.
மற்ற வீரர்கள சராசரி இடைவெளியில் ஆட்டமிழக்க வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் வங்காள தேசம் 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்காள தேச கேப்டன் மோர்தசா சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.
சதம் அடித்த தமிம் இக்பால் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி வரும் 25-ந்தேதி (நாளை மறுநாள்) நடக்கிறது)
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வங்காள தேசம் படுதோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
அதன்படி வங்காள தேசம் - வெஸ்ட் இண்டீஸ் பிரசிடென்ட் லெவன் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்காள தேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. வங்காள தேச அணியின் தொடக்க வீரரும், அனுபவ வீரரும் ஆன தமிம் இக்பால் 125 ரன்கள் சேர்த்தார். அத்துடன் மெஹ்முதுல்லா சதம் அடித்தார். அவர் 102 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இருவரின் சதத்தால் வங்காள தேச அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 84.2 ஓவரில் 403 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் லெவன் அணி சார்பில் அல்சார் ஜோசப் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்