என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TATA"

    • இந்த டாடா காரின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது.
    • ஆறு ஏர்பேக்குகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பிரீமியம் ஹேட்ச்பேக் காரான டாடா அல்ட்ரோஸின் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பை மே 21 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது.

    டாடா அல்ட்ரோஸ் ஒரு பிரீமியம் ஹேட்ச்பேக் ஆகும். இது ஒரு கிராஸ்ஓவர் ஹேட்ச்பேக் என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்த ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட காரின் வடிவமைப்பு, குறிப்பாக பாரம்பரிய அல்ட்ரோஸ் கார்களுடன் ஒப்பிடும்போது வித்தியாசமாக இருக்கும். மேலும், சில சிறப்பு அம்சங்கள் சுவாரஸ்யம் ஏற்படுத்துகிறது. சமீபத்தில், இந்த டாடா காரின் சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது.

    இந்த காரின் முன்பக்க தோற்றம் மிகவும் நேர்த்தியானது. டாடா நெக்ஸான் மற்றும் ஹாரியர் போன்ற தோற்றமுடைய இந்த கார், வெளியிடப்பட்டால் அந்த கார்களுக்கு கடுமையான போட்டியை கொடுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக இந்த காரின் கிரில் மற்றும் பம்பர் இதற்கு ஒரு ஸ்போர்ட்டி தோற்றத்தை அளிக்கிறது.

    மேலும், டாடா அல்ட்ரோஸின் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பில் பயணிகளின் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.   

    பட்ஜெட் விலையில் வரும் டாடாவின் இந்த புதிய அல்ட்ரோஸ் காரில் ஆறு ஏர்பேக்குகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ஜின்களைப் பொறுத்தவரை, பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி ஆகியவற்றில் அதிக மாற்றம் இருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

    மேம்பட்ட ADAS அமைப்பு இந்த காரின் சிறப்பு அம்சமாகும். மாருதி சுஸுகி பலேனோ மற்றும் ஸ்விஃப்ட் கார்களுக்கு நேரடி போட்டியாக டாடா அல்ட்ரோஸ் இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 

    • வாய்ப்பு ஒரு முறை நம்மை தேடிவரும் அதை நாம் எப்படி பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதில் தான் நம் வெற்றி அடங்கியிருக்கிறது.
    • ஒரு மிகப்பெரிய ஒப்பந்தம் எப்படி கால் மணி நேரத்தில் முடிந்தது பாருங்கள். அதுதான் வெற்றியின் ரகசியம்.

    அது டாட்டாவின் அலுவலகம்.

    டாட்டா எதேச்சையாக கேமராவில் ஒரு நபரை பார்க்கிறார். உதவியாளரை அழைத்து... யார் இந்த பையன் ஏன் உட்கார்ந்திருக்கிறார்? என கேட்கிறார்.

    அவர் உங்கள் அப்பாயிண்மெண்ட் கேட்டு ஒரு மாதமாக தினமும் வந்து கொண்டிருக்கிறார், என்றார் உதவியாளர்.

    அப்படியா அடுத்த வாரம் திங்கள் காலை 9-9.15 வரை.. கால்மணி நேரம் அப்பாயிண்ட்மெண்ட் கூறி விடுங்கள் என்கிறார்.

    டாட்டாவுக்கு ஒவ்வொரு நொடியும் பணம். நேரத்தை வீணாக்க மாட்டார். அந்த இளைஞனுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் தெரிவிக்கப்பட்டது.

    கொடுத்தது கால் மணி நேரம். அதை சரியாக பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதுவே எனக்கு அதிகமான நேரம் என்ற இளைஞனை ஆச்சர்யமாக பார்த்தனர்.

    குறிப்பிட்ட அந்த நாளும் வந்தது. காலை 8.30 க்கு அந்த இளைஞன் உள்ளே இருந்தான். 9 மணிக்கு அனுமதிக்கப்படுகிறான்.

    இளைஞன்: குட் & க்ரேட் மார்னிங் சார்.

    டாட்டா: குட் மார்னிங். என்ன விசயமாக என்னை பார்க்க வந்தாய்...? உடனே சொல் எனக்கு நேரமில்லை.

    இளைஞன்: ஒரு பிஸ்னஸ் விசயமாக உங்களிடம் பேச வேண்டும்.

    டாட்டா: என்ன பிஸ்னஸ்?

    இளைஞன்: நீங்கள் உப்பு விற்க வேண்டும்.

    டாட்டா: தம்பி என்னை பார்த்தால் உனக்கு எப்படி இருக்கிறது.... எவ்வளவு பெரிய தொழில்களை செய்து கொண்டு உள்ளேன். என்னை உப்ப விற்க சொல்லும் அளவு அது பெரிய பொருளா...?

    இளைஞன்: சார். உப்பு சிறிய பொருள் தான். ஆனால் தினமும் பயன்படக்கூடியது. அது இல்லாமல் நீங்களோ நானோ உண்ணவே முடியாது. தினமும் பயன்படுத்தக்கூடியது. அடிக்கடி வாங்கப்படக்கூடியது. நமக்கு இவ்வளவுக்கு உப்பு கிடைக்கிறது. நாம் இவ்வளவுக்கு விற்கலாம். உங்கள் டாட்டா ப்ராண்டு என்றால் மக்கள் நம்பிக்கையோடு வாங்குவார்கள். அதனால்தான் வேறு எங்கும் போகாமல் இங்கு வந்தேன்.

    டாட்டா இரண்டு நிமிடம் யோசிக்கிறார். பின் இளைஞனிடம்... சரி.. காண்ட்ராக்ட்டில் சைன் பண்ணி விட்டு, அட்வான்ஸ் பெற்றுக்கொள். நாளை மறுநாள் முதல் நம் உப்பு வெளிவர வேண்டும்.

    ஒரு மிகப்பெரிய ஒப்பந்தம் எப்படி கால் மணி நேரத்தில் முடிந்தது பாருங்கள். அதுதான் வெற்றியின் ரகசியம்.

    ஒருவேலை அந்த இளைஞனின் வார்த்தையை நிராகரித்திருந்தால் அவன் வேறு நிறுவனத்தை நாடியிருப்பான்.

    வாய்ப்பு ஒரு முறை நம்மை தேடிவரும் அதை நாம் எப்படி பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதில் தான் நம் வெற்றி அடங்கியிருக்கிறது.

    -ஆர். எஸ். மமோகரன்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆலை விரிவாக்கத்தால் அடுத்த 6 ஆண்டுகளில் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • முதலீட்டுக்கான ஒப்பந்தம் சென்னையில் நாளை நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    ஓசூர்:

    ஐபோன் உதிரிப்பாகம் தயாரிப்பு தொழிற்சாலை விரிவாக்கம் செய்வதற்காக ஓசூரில் டாடா நிறுவனம் கூடுதலாக ரூ.7000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஓசூரில் உள்ள டாடா எலெக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆலை விரிவாக்கத்தால் அடுத்த 6 ஆண்டுகளில் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முதலீட்டுக்கான ஒப்பந்தம் சென்னையில் நாளை நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    • உ.பி. வாரியர்ஸ் அணிக்கெதிராக அடித்த சிக்ஸ் பரிசளிக்க நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை தாக்கியது.
    • உடைந்த கண்ணாடியை டாடா ஃபிரேம் செய்து எலிஸ் பெர்ரிக்கு பரிசாக அளித்துள்ளது.

    பெண்கள் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. நாளை இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    ஆர்சிபி- உபி வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி கடந்த 4-ந்தேதி சின்னசாமி மைதானத்தில் மோதின. அப்போது ஆர்சிபி அணியின் எலிஸ் பெர்ரி அடித்த பந்து மைதானத்தின் பவுண்டரி லைனுக்கு வெளியே தொடரில் சிறந்த வீராங்கனைக்காக வழங்க இருந்த காரின் கண்ணாடியை தாக்கியது. இதில் கண்ணாடி உடைந்து சிதறியது.

    இந்த நிலையில் ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில், உடைந்த கார் காண்ணாடியை ஃப்ரேம் (Frame) செய்து எலிஸ் பெர்ரிக்கு டாடா பரிசாக அளித்துள்ளது. அத்துடன் அதில் "பெர்பரி பவர்புல்பஞ்ச் (PerryPowerfulPunch)" என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 33 வயதான எலிஸ் பெர்ரி வலது கை பேட்ஸ்மேன் ஆவார். இந்த சீசனிலா் எலிஸ் பெர்ரி 8 போட்டிகளில் 312 ரன்கள் குவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக எலிமினேட்டர் போட்டியில் 50 பந்தில் 66 ரன்கள் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 2024 ஆம் வருடத்தின் முதல் 3 மாதங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 17,483 கோடியை பதிவு செய்துள்ளது.
    • கடந்த வருடத்தை விட இந்தாண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 213.7% வளர்ச்சி அடைந்துள்ளது.

    கடந்த 10 ஆண்டுகளில் முதல்முறையாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தை விட டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் அதிகரித்துள்ளது.

    2024 ஆம் வருடத்தின் முதல் 3 மாதங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.17,483 கோடியை பதிவு செய்துள்ளது.

    2023 ஆம் வருடத்தின் முதல் 3 மாதங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.5,573.8 கோடியாக இருந்தது. இந்நிலையில், கடந்த வருடத்தை விட இந்தாண்டு அந்நிறுவனத்தின் நிகர லாபம் 213.7% வளர்ச்சி அடைந்துள்ளது.

    அதே சமயம் 2023 ஆம் வருடத்தின் முதல் 3 மாதங்களில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.11,392 கோடியாக இருந்தது. இந்நிலையில், ஒரே வருடத்தின் அந்நிறுவனத்தின் நிகர லாபம் 9.1% வளர்ச்சி அடைந்து இந்தாண்டு ரூ.12,434 கோடியை எட்டியுள்ளது.

    இதன்மூலம், டாடா நிறுவனங்களில் அதிக லாபம் தரும் நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் உருவெடுத்துள்ளது.

    அதே சமயம் வருடத்திற்கான நிகர லாபத்தில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனமே இன்னமும் முன்னிலையில் உள்ளது. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் வருட நிகர லாபம் ரூ.45,908 கோடியாகவும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வருட நிகர லாபம் ரூ.31,399 கோடியாக உள்ளது.

    • டாடா நிறுவனத்தின் சியாரா மாடல் இந்தியாவில் அதிக பிரபலம்.
    • தனது சியாரா மாடலை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவர டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    கார் கம்பெனிகளில் முன்னோடியாக திகழ்கிறது டாடா நிறுவனம். டாடா நிறுவனத்தின் சியாரா மாடல் இந்தியாவில் அதிக பிரபலம். இந்த மாடலை வெளிவந்ததில் இருந்தே மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

    இதுவரை இந்தியாவில் பல்லாயிரத்திற்கு மேற்பட்ட சியாரா யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. சியாரா கார் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் கொண்ட மால்கள் கடந்த காலங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், தனது சியாரா மாடலை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவர டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    அதன்படி கடந்த 2020 மற்றும் 2023 ஆம் ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் டாடா மோட்டார்ஸ் சார்பில் அவர்களது சியாரா EV கான்செப்ட் வடிவில் காட்சிக்கு வைத்தது. கடந்த ஆண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட டாடா சியாரா EV கான்செப்ட் கிட்டத்தட்ட உற்பத்திக்கு தயாரான வடிவிலேயே காட்சியளித்தது.

    வருகிற 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சியெரா எலக்ட்ரிக் கார் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து, இதே காரின் பெட்ரோல்/ டீசல் எஞ்சின் ஆப்ஷன்களையும் விற்பனைக்கு கொண்டுவர டாடா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • பாரிஸ் ஒலிம்பிக்கில் மனு பாக்கர் இரட்டை வெண்கல பதக்கம் வென்றார்.
    • மனு பாக்கருக்கு, Tata Curvv EV எலெக்ட்ரிக் காரை டாடா நிறுவனம் பரிசாக வழங்கியுள்ளது.

    பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் தனிநபர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் வெண்கலம் வென்றார் .

    இந்நிலையில், துப்பாக்கிச் சுடுதலில் இரட்டைப் பதக்கம் வென்ற வீராங்கனை மனு பாக்கருக்கு, Tata Curvv EV எலெக்ட்ரிக் காரை டாடா நிறுவனம் பரிசாக வழங்கியுள்ளது.

    இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    • விக்ரம் சோலார் லிமிடெட் தொழிற்சாலை அமைப்பதற்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்.
    • தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த சோலார் பேனலில் "வாழ்த்துகள்" என்று எழுதி கையொப்பமிட்டார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு, நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், அப்துல் வகாப் எம்.எல்.ஏ. ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    அங்கிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லைக்கு காரில் புறப்பட்டார். அவருக்கு பாளை கே.டி.சி.நகர் மேம்பாலம் அருகே தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் 3,800 கோடி ரூபாய் முதலீட்டில் 4,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா பவர் சோலார் நிறுவனம் அமைத்துள்ள 4.3 GW Solar Cell மற்றும் Module உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து, உற்பத்தியையும் தொடங்கி வைத்தார்.

    பின்னர், தொழிற்சாலையை பார்வையிட்டு, அங்கு பணிபுரியும் பெண் பணியாளர்களிடம் உரையாடி, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும், தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த சோலார் பேனலில் "வாழ்த்துகள்" என்று எழுதி கையொப்பமிட்டார்.

    பெண்களுக்கு 80 சதவிகித வேலைவாய்ப்பு என்பது மட்டுமின்றி, பெண்களுக்கு தங்கும் விடுதி வசதிகளும் அளிக்கப்படவுள்ளது இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும்.

    தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்காவில் 2574 கோடி ரூபாய் முதலீட்டில், 2500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 3 GW solar Cell மற்றும் 6 GW Module உற்பத்தித்திறன் கொண்ட விக்ரம் சோலார் லிமிடெட் தொழிற்சாலை அமைப்பதற்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்.

    இந்த நிறுவனத்திலும் பெரும்பான்மையான வேலைவாய்ப்புகள் பெண்களுக்கானவை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×