என் மலர்
நீங்கள் தேடியது "Taxi Driver"
- தந்தை மகள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது
- டாக்சி டிரைவர்தான் தனது மகளைக் கொன்றதாக போலீசிடம் நாடகமாடியுள்ளார்.
தந்தையர் தின கொண்டாட்டங்களுக்கு மத்தியில் டெல்லியில் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்த தனது மகளை தந்தை கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் கஞ்வாலா பகுதியில் ரத்தத்தில் தோய்ந்த இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் நடந்திய விசாரணையில் அப்பெண்ணின் தந்தையே கொலையை அரங்கேற்றியுள்ளது தெரியவந்தது.
அந்த பெண் தனது காதலனைத் திருமணம் செய்துகொள்ள விரும்பிய நிலையில் அவரது தந்தை தான் பார்த்த மாப்பிளையை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியுள்ளார். இதனால் தந்தை மகள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கஞ்வாலா பகுதிக்கு தனது மகளை டாக்சியில் அழைத்து வந்த தந்தை கண்ணாடி அறுக்கும் உபகரணத்தை வைத்து மகளை அறுத்துக் கொன்றுள்ளார்.
மேலும், டாக்சி டிரைவர்தான் தனது மகளைக் கொன்றதாக போலீசிடம் நாடகமாடியுள்ளார். இறுதியில் உண்மை தெரியவந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை கண்ணாடி அறுக்கும் தொழில் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
- கோவிலில் வாங்கிய பிரசாதத்தை ஓட்டுனருக்கு பயணி கொடுத்துள்ளார்.
- பிரசாதத்தை சாப்பிட்டுவிட்டு காரை எடுத்தபோது வழியிலேயே ஓட்டுநர் மயங்கியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் டாக்சி ஓட்டுநருக்கு மயக்க மருந்து கலந்த கோவில் பிரசாதம் கொடுத்து பயணி ஒருவர் காரை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தப்ரா பேருந்து நிலையத்தில் டாக்சி ஓட்டுநரை அணிகிய நபர், அவரது உறவினருக்கு விபத்து ஏற்பட்டதாகவும் ஜான்சி நகருக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு ஓட்டுநர் 1800 ரூபாய் பணம் வேண்டும் என்று கூற அவரும் ஒப்புக்கொண்டு காரில் எறியுள்ளார்.
செல்லும் வழியில், தாதியாவில் உள்ள புகழ்பெற்ற பீதாம்பர மாயி கோயிலில் நிறுத்த முடியுமா என்று பயணி கேட்க, ஓட்டுநரும் அங்கு காரை நிறுத்தியுள்ளார். அப்போது கோவிலில் வாங்கிய பிரசாதத்தை ஓட்டுனருக்கு பயணி கொடுத்துள்ளார். அந்த பிரசாதத்தை சாப்பிட்டுவிட்டு காரை எடுத்தபோது வழியிலேயே ஓட்டுநர் மயங்கியுள்ளார்.
அவர் கண்விழித்து பார்த்தபோது காரில் இல்லை. சாலையில் படுத்திருந்தார். சுயநினைவு இல்லாமல் சாலையில் படுத்திருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவமனையில் சுயநினைவுக்கு வந்த ஓட்டுநர், தனது கார், மொபைல் போன், பணம் உள்ளிட்டவை காணாமல் போனதை அறிந்து உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். காரை திருடிய நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவை வெள்ளலூரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 35). இவர் கால் டாக்சி நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
சிவக்குமார் இன்று அதிகாலை 3 மணியளவில் காந்திபுரம் கிராஸ்கட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக ஊட்டியில் இருந்து பாலக்காடு சென்ற அரசு பஸ்சை முந்த முயன்றார்.
இதில் ஆத்திரமடைந்த அரசு பஸ் டிரைவர் பஸ்சில் இருந்து இறங்கி வந்து சிவக்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் அங்கு 2 பேருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அந்த வழியாக வந்த மற்றொரு அரசு பஸ், டிரைவர் கண்டக்டர், லாரி டிரைவர் ஆகியோர் உள்பட 6 பேர் சேர்ந்து சிவக்குமாரை தாக்கினர். இதில் காயம் அடைந்த சிவக்குமார் தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே சிவக்குமாரை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி கோவை ரெயில் நிலையத்தில் இருந்து கால்டாக்சி இயக்கும் டிரைவர்கள் 40-க்கும் மேற்பட்ட டாக்சிகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews