search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teak"

    • காப்புக்காட்டில் அத்துமீறி உள்ளே நுைழந்து 3 பேர் கும்பல் தேக்குமரங்களை வெட்டி கடத்த முயற்சி செய்வதை கண்டுபிடித்தனர்.
    • இதனை தொடர்ந்து கைதான 3 பேருக்கும் சேர்த்து ரூ.1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கோட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவிட்டார்.

    சேலம்:

    சேர்வராயன் வடக்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட பொம்மிடி ஏரிமலை காப்பு காட்டில் மர்ம கும்பல் தேக்கு மரத்தை வெட்டி கடத்த முயற்சிப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனச்சரக அலுவலர் பரசு ராமமூர்த்தி உத்தரவின்படி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    காப்புக்காட்டில் அத்துமீறி உள்ளே நுைழந்து 3 பேர் கும்பல் தேக்குமரங்களை வெட்டி கடத்த முயற்சி செய்வதை கண்டுபிடித்தனர்.

    அந்த கும்பலை வனத்து றையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்கள் காடையாம்பட்டி தாலுகா வீராட்சியூரை சேர்ந்த பழனிவேல் (வயது 45), வேப்படியை சேர்ந்த அண்ணாமலை (45), பூம ராத்தூர் பகுதியை சேர்ந்த தனக்கொடி (40) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் வெட்டி 4 தேக்கு மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அரசுக்கு சொந்தமான காட்டில் இருந்து விலை உயர்ந்த மரத்தை வெட்டி கடத்துவதை இந்த கும்பல் வாடிக்கையாக வைத்துள்ளனர். மழை , காடு மற்றும் வன விலங்குகளை பாதுகாக்க வேண்டி வனத்துறையினர், சமூக ஆர்வலர்கள் மரங்களை காடுகளில் நட்டு வரும் வேளையில் 3 பேர் கும்பல் மரங்களை வெட்டியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் ேகாரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து பழனிவேல், தனக்கொடி, அண்ணாமலை ஆகிய 3 பேரையும் கைது செய்து சேலம் கோட்ட வன அலுவலர் (பொறுப்பு) கவுதம் முன்னிலையில் வன ஊழியர்கள் ஆஜர்படுத்தினர். இதனை தொடர்ந்து கைதான 3 பேருக்கும் சேர்த்து ரூ.1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கோட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவிட்டார்.

    • ஒரு விவசாயிக்கு 51 தென்னை மரக்கன்றுகளை பசுமை பிறந்த நாளாக வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
    • பயனாளிக்கு 6 அடி உயர ஒரு பலா, கொய்யா, நாவல் மரக்கன்றும், ஒரு தேக்கு மரக்கன்றும் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் தனியார் பள்ளிமுன்னாள் மாணவர்கள், ஆசிரியை புவனேஸ்வரி ஆகியோர் சேர்ந்து கோவில் பத்து கிராமத்தை சேர்ந்த ஒரு விவசாயிக்கு 51 தென்னை மரக்கன்றுகளை பசுமை பிறந்த நாளாக கொண்டாடி மகிழ்ந்தனர். ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளையின் ஸ்ரீஅறுபடை பசுமை சிறகுகளின் ஒருங்கிணைப்பாளர் கோவில்பத்து விவசாயிக்கு மாரியப்பன் பயனாளியை தேர்வு செய்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.

    சிட்டுக் குருவிக்கான கூண்டினை அழகேசன் வழங்கினார்.ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளையின் ஸ்ரீ அறுபடை பசுமை சிறகுகள் சார்பில் பயனாளிக்கு 6 அடி உயர ஒரு பலா, கொய்யா, நாவல் மரக்கன்றும் ஒரு தேக்கு மரக்கன்றும் வழங்க ப்பட்டது.நிகழ்ச்சியில் ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளை நிறுவனர் ராஜ சரவணன் மற்றும் சங்கதினர் சார்பில் செந்தில் குமார் ராஜு ஒருங்கிணைத்தார்.

    ×