என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teen girl"

    • சித்ரா தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
    • திருமணத்தில் சித்ராவுக்கு விருப்பம் இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்து நகர் ஜோதிபாசு நகரை சேர்ந்தவர் சந்தோஷ், பஞ்சவர்ணம். இவர்களது மகள் சித்ரா(வயது27). தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் முடிப்பதற்காக மாப்பிள்ளை பார்ப்பது உள்ளிட்ட முன்னேற்பாடு வேலைகளை பெற்றோர்கள் பார்த்து வந்ததை அறிந்த சித்ரா, ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

    திருமணத்திற்கு விருப்பம் இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெற்றோர் வேலைக்கு சென்ற பின் கடந்த 1-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சித்ரா எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று தெரியவில்லை.இதனை யடுத்து உறவினர்கள் வீடுகள் உட்பட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் சித்ராவின் அம்மா பஞ்சவர்ணம் தாளமுத்து நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்கு பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகிறார்.

    • சுப்புலெட்சுமி கோவிலுக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றார்.
    • இசக்கிபாண்டி பல்வேறு இடங்களில் தேடியும் சுப்புலெட்சுமி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கீழக்கருவேலங்குளம், கீழத்தெருவை சேர்ந்தவர் இசக்கிபாண்டி. இவரது மகள் சுப்புலெட்சுமி (வயது21). கடந்த 15-ந் தேதி சுப்புலெட்சுமி, கோவிலுக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். ஆனால் அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த இசக்கிபாண்டி பல்வேறு இடங்களில் தேடியும் சுப்புலெட்சுமி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான சுப்பு லெட்சுமியை தேடி வருகிறார்.

    மும்பையில் 23-வது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக இளம்பெண் குதித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. #Mumbai #GirlSuicide
    மும்பை:

    மும்பை தார்டுதேவ் பகுதியை சேர்ந்தவர் அம்ரிஷ் கோத்தாரி (வயது 48). இவர் அங்குள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் 23-வது மாடியில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் பிரியங்கா (16). நேற்று முன்தினம் வெளியில் சென்றிருந்த பிரியங்கா இரவில் வீடு திரும்பினார். அவருக்காக காத்திருந்த வீட்டு வேலைக்காரர் பிரியங்கா வந்ததும் கதவை திறந்து விட்டு தூங்க சென்று விட்டார். இந்தநிலையில், அதிகாலை 2 மணியளவில் கட்டிட வளாகத்தில் பிரியங்கா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதுபற்றி அறிந்ததும் பிரியங்காவின் பெற்றோர் மற்றும் குடியிருப்புவாசிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    முதற்கட்ட விசாரணையில், பிரியங்கா 23-வது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக குதித்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×