என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Telangana CM"
- தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி இன்று பிரதமர் மோடியை சந்தித்தார்.
- அப்போது பிரதமர் மோடிக்கு நந்தி சிலையை பரிசாக அளித்தார்.
புதுடெல்லி:
சமீபத்தில் நடைபெற்ற தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றது. ரேவந்த் ரெட்டி முதல் மந்திரியாக பொறுப்பேற்றார். துணை முதல் மந்திரியாக விக்ரமர்கா மல்லு பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி தலைநகர் டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.
அப்போது துணை முதல் மந்திரியும் உடனிருந்தார். இருவரும் பிரதமர் மோடிக்கு நந்தி சிலையை பரிசாக அளித்தனர்.
இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடந்தது. தெலுங்கானா மாநிலம் தொடர்பான பல முக்கிய பிரச்சனைகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
இதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவையும் ரேவந்த் ரெட்டி சந்தித்துப் பேசினார்.
ஏற்கனவே இன்று காலை ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடியை சந்தித்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.
- மாநிலத்தில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது.
- சந்திர சேகர் ராவுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 65 தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அந்த மாநிலத்தில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது.
இதைதொடர்ந்து, தெலுங்கானா மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்றுக் கொண்டார். இதற்கிடையே, தெலுங்கானா மாநிலம் உருவாக காரணமாக இருந்த சந்திரசேகர் ராவ் இரண்டு முறை ஆட்சியில் இருந்த நிலையில் சரிவைக் கண்டார்.
தொடர்ந்து, சந்திரசேகர ராவ் தனது வீட்டின் குளியலறைக்கு சென்ற போது திடீரென வழுக்கி விழுந்தார். கீழே விழுந்ததில், இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக அவருக்கு இடதுபுற இடுப்பு எலும்பு மாற்றப்பட வேண்டும் என்றும், இது முழுமையாக குணமடைய ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, சந்திரசேகர் ராவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், மருத்துவமனைக்கு நேரில் சென்ற தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி சந்திரசேகர் ராவை சந்தித்து நலம் விசாரித்தார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
- தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்றுக்கொண்டார்.
- பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ரேவந்த் ரெட்டி ராஜினாமா செய்துள்ளார்.
தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள எல்.பி. மைதானத்தில் புதிய மந்திரி சபை பதவி ஏற்பு விழா கடந்த 7ம் தேதி நடைபெற்றது. இதில் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.
அவருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து 20 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ரேவந்த் ரெட்டி ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ரேவந்த் ரெட்டி தாக்கல் செய்துள்ளார்.
- செயல்முறையை நெறிப்படுத்த மென்பொருள் அடிப்படையிலான லட்சுமி ஸ்மார்ட் கார்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
- முதல்வர் ரேவந்த் ரெட்டி, இரண்டு வாக்குறுதிகளையும் நாளை நிறைவேற்றுகிறார்.
தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 65 தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அந்த மாநிலத்தில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது.
இதை தொடர்ந்து, தெலுங்கானா மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி நேற்று முன்தினம் பதவி ஏற்றார். இந்நிலையில், தெலுங்கானாவில் பெண்கள், அனைத்து வயது பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு "6 உத்தரவாதங்கள் - மகாலட்சுமி திட்டத்தின்" கீழ் இலவச பேருந்து பயணத்தை தெலுங்கானா அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
டிசம்பர் 8 தேதியிட்ட அரசு ஆணையின்படி, இத்திட்டம் டிசம்பர் 9ம் தேதி (நாளை) முதல் நடைமுறைக்கு வர உள்ளது மற்றும் தெலுங்கானா மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் கீழ் மாநில எல்லைகளுக்குள் இயக்கப்படும் பல்லே வெலுகு மற்றும் விரைவு பேருந்துகளின் கீழ் பயணிக்க இது பொருந்தும், முற்றிலும் இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனர்களுக்கு தடையற்ற பயண அனுபவத்தை உறுதிசெய்யும் வகையில், செயல்முறையை நெறிப்படுத்த மென்பொருள் அடிப்படையிலான லட்சுமி ஸ்மார்ட் கார்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இதைதொடர்ந்து, அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, இரண்டு வாக்குறுதிகளையும் நாளை நிறைவேற்றுகிறார். அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளை ஒட்டி, இந்த இரண்டு வாக்குறுதிகளும் டிசம்பர் 9ம் தேதி (நாளை) அமலுக்கு வருகிறது.
- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
- ரேவந்த் ரெட்டியை தொடர்ந்து, 20 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள எல்.பி. மைதானத்தில் புதிய மந்திரி சபை பதவி ஏற்பு விழா இன்று நடந்தது. இதில் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.
அவருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து 20 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு மல்லிகார்ஜூன கார்கே சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி தெலுங்கானாவின் புதிய முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-
தெலுங்கானா மாநிலத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கும் ரேவந்த் ரெட்டி அவர்களுக்கு வாழ்த்துகள். மாநில வளர்ச்சி மற்றும் குடிமக்களின் நலனுக்காக தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்பதை உறுதி அளிக்கிறேன்.
- டெல்லியில் உயர் மட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
- மூத்த எம்.எல்.ஏ.க்கள் மல்லு பாட்டி விக்ரமார்க்கா, ஸ்ரீதர் பாபு ஆகியோர் துணை முதலமைச்சர் பதவி கேட்டு வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 65 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரசின் வெற்றி வேட்பாளர்கள் பட்டியலுடன் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
நேற்று ஐதராபாத் தனியார் ஓட்டலில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் மாணிக் தாகூர் எம்.பி. தலைமையில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தேர்வு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தேர்வு செய்யும் அதிகாரம் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முதல் அமைச்சரை அறிவிப்பார்.
இது தொடர்பாக டெல்லியில் உயர் மட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக தேர்வு செய்யப்படுகிறார். தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி வரும் 7ம் தேதி பதவி ஏற்பார் என கூறப்படுகிறது. மேலும், மூத்த எம்.எல்.ஏ.க்கள் மல்லு பாட்டி விக்ரமார்க்கா, ஸ்ரீதர் பாபு ஆகியோர் துணை முதலமைச்சர் பதவி கேட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவும் உள்ளது. இதனால் ஒரு முதல் முதலமைச்சர், 2 துணை முதலமைச்சர்கள் நியமிக்க காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வருகிறது.
- சந்திரசேகர் ராவின் பண்ணை வீட்டில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
- ஹெலிகாப்டர் புறப்பட்ட 20 நிமிடங்களில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சென்ற ஹெலிகாப்டரில் திடீரென கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து சந்திரசேகர் ராவின் பண்ணை வீட்டில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஹெலிகாப்டர் புறப்பட்ட 20 நிமிடங்களில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
- தனியார் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
- சந்திரசேகர் ராவுக்கு அல்சருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவுக்கு திடீரென வயிற்று உபாதை ஏற்பட்டதை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சந்திரசேகர் ராவுக்கு இன்று காலையில் திடீரென வயிற்று உபாதை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனியார் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
வயிற்றில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக சந்திரசேகர் ராவுக்கு மருத்துவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்தனர். அப்போது, வயிற்றில் சிறிய புண் (அல்சர்) இருப்பது கண்டறியப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, சந்திரசேகர் ராவுக்கு அல்சருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுடன், திருமாவளவன் சந்திப்பு.
- புதிய கட்சி தொடக்க விழாவில் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி பங்கேற்பு.
ஐதராபாத்:
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவரும் தெலுங்கானா முதலமைச்சருமான சந்திரசேகர ராவ் தேசிய அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். 2024 ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை தமது தலைமையின் கீழ் ஒருகிணைக்கும் நடவடிக்கையில் அவர் தீவிரம் காட்டி வருகிறார்.
இதற்காக இன்று பாரத ராஷ்டிரிய சமிதி என்ற புதிய தேசிய கட்சியை அவர் தொடங்கி உள்ளார். ஐதராபாத்தில் உள்ள தெலுங்கானா பவனில் நடைபெற்ற விழாவில் கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநில கட்சியாக இருந்த தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, தேசிய கட்சியாக பாரத ராஷ்டிர சமிதி என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. புதிய கட்சி தொடக்கத்தையொட்டி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தொண்டர்கள் ஐதராபாத்தில் பட்டாசுகளை வெடித்தும், இளஞ் சிவப்பு நிறத்தை தூவியும் கொண்டாடினர்.
முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சந்திரசேகர ராவ், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில் அந்தந்த மாநில அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்து தமது கட்சி போட்டியிடும் என்று அவர் தெரிவித்திருந்தார்.இதற்காக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே நாட்டில் பா.ஜ.க.வை வளர்த்து விடுவதற்காகவே சந்திரசேகரராவ் புதிய கட்சியை தொடங்கியுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியை அழிக்க வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடியின் கட்டளைப்படி சந்திரசேகர ராவ் செயல்படுவதாகவும், தெலுங்கானா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டி உள்ளார்.
தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று மாலை ராமேசுவரம் வந்தார். பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் மணிமண்டபத்துக்கு சென்ற அவர், அப்துல்கலாம் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் மணி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு புகைப்படம், அரிய ஓவியங்களை பார்வையிட்டார்.
அதன் பின்னர் சந்திர சேகரராவ் ராமேசுவரம் பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று இரவு தங்கினார். இதையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இன்று காலை சந்திர சேகரராவ் ராமநாத சாமி கோவிலுக்கு வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ராமநாதசாமி - பர்வதவர்த்தினி அம்மனை தரிசனம் செய்தார்.
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கோவிலில் இருந்து அவர் பிரகார மண்டபத்தை சுற்றிப் பார்த்தார். சந்திர சேகரராவுடன் அவரது குடும்பத்தினரும் வந்திருந்தனர்.
தெலுங்கானா முதல்வர் வருகையையொட்டி கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. #ChandrasekarRao
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்