என் மலர்
நீங்கள் தேடியது "Terrorism"
- நாளை மறுநாள் [திங்கள்கிழமை] இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
- ஒரு குறிப்பிட்ட சமூகத்தைக் குறிவைக்கப் பயன்படுத்தப்பட்டது
மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களின் 4,120 சட்டப்பேரவைத் தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழு அமைத்தது.
இந்த குழு ஒரு நாடு ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் [திங்கள்கிழமை] இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் இந்த மசோதா குறித்து பீகாரை சேர்ந்த பிரபல அரசியல் வியூக வகுப்பாளரும் ஜன் சுராஜ் கட்சி தலைவருமான பிரசாத் கிஷோர் கருத்து தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் பல தேர்தல்களில் ஈடுபட்டுள்ளேன். ஒவ்வொரு ஆண்டும் தேசத்தின் கணிசமான பகுதியினர் தேசிய அல்லது மாநில அளவில் ஏதாவது தேர்தல்களில் ஈடுபடுவதை நான் கவனித்திருக்கிறேன்.
ஒரே நாடு ஒரே தேர்தல் நல்ல நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டால், நாட்டிற்கு நன்மை பயக்கும் என்று தெரிவித்தார்.
ஆனால் பயங்கரவாதத்தை ஒடுக்கும் முகாந்திரத்தில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைக் குறிவைக்கப் பயன்படுத்தப்பட்டது என்ற உதாரணத்தை கூறி பிரசாத் கிஷோர், ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டுவரப்படும் நோக்கம் குறித்தும் எச்சரித்தார்.
- காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், அது நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
- ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகவே இருக்கும்.
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC) கூட்டம் நடைபெற்றது. இதில் ஜம்மு காஷ்மீரில் குறித்து பேசிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது.
ஐநா கூட்டத்தில் பேசியிருந்த பாகிஸ்தானின் மனித உரிமைகள் அமைச்சர் அசாம் நசீர், காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும், அது நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார். மக்களின் சுயநிர்ணய உரிமை தொடர்ந்து மறுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக கூட்டத்தில் பேசிய இந்திய தூதர் க்ஷிதிஜ் தியாகி, பாகிஸ்தானின் தலைவர்கள், அதிகாரிகள் அந்த நாட்டின் ராணுவ பயங்கரவாதத்தினர் எழுதி கொடுக்கும் பொய்களை பரப்புவதை பார்ப்பது வருத்தம் அளிக்கிறது.
இந்த கவுன்சிலின் நேரத்தை, சர்வதேச உதவிகளை நம்பி வாழும் ஒரு தோல்வியுற்ற அரசு தொடர்ந்து வீணடிப்பது துரதிர்ஷ்டவசமானது. பாகிஸ்தானின் கருத்துக்கள் அதன் பாசாங்குத்தனத்தையும், அதன் மனிதாபிமானமற்ற செயல்களையும், அதன் திறமையின்மையையும் வெளிப்படுத்துகின்றன.

இந்தியா ஜனநாயகம், முன்னேற்றம் மற்றும் அதன் மக்களின் கண்ணியத்தை உறுதி செய்வதில் கவனம் செலுத்துகிறது. இவை பாகிஸ்தான் கற்றுக்கொள்ள வேண்டிய மதிப்புகள் ஆகும்.
சர்வதேச தளங்களை தவறாகப் பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிரான பேச்சுக்களை பாகிஸ்தான் தூண்டி வருகிறது. அதே நேரத்தில் அதன் சொந்த உள்நாட்டு நெருக்கடிகளைத் தீர்க்கத் தவறிவிட்டது.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகவே இருக்கும்.
கடந்த சில ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்டுள்ள அரசியல், சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றமே அங்குள்ள நிலைமையை எடுத்துக்காட்டுகிறது.
பல தசாப்தங்களாக பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இயல்பு நிலையைக் கொண்டுவருவதற்கான அரசின் உறுதிப்பாட்டின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு இந்த வெற்றிகள் ஒரு சான்றாகும். பாகிஸ்தான் தனது மக்களுக்கு உண்மையான ஆட்சி மற்றும் நீதியை வழங்குவதில் கவனம் செலுத்தலாம்.
ஒரு நாடாக, பாகிஸ்தான் மனித உரிமைகளை மீறுவதன் மூலமும், சிறுபான்மையினரை ஒடுக்குவதன் மூலமும், ஜனநாயக விழுமியங்களைப் புறக்கணிப்பதன் மூலமும் தனது கொள்கைகளைத் திணிக்கிறது.
ஐநா சபையால் பயங்கரவாதிகள் என்று அறிவிக்கப்பட்டவர்களுக்குப் பாகிஸ்தான் வெட்கமின்றி அடைக்கலம் அளிக்கிறது. எனவே பாகிஸ்தான் யாருக்கும் உபதேசம் செய்யும் நிலையில் இல்லை என்று தெரிவித்தார்.
கொழும்பு:
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் தம்பி கோத்தபய ராஜபக்சே. இவர் ராஜபக்சேவின் அரசில் ராணுவ மந்திரியாக இருந்தார். இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே நடந்த உள் நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வந்தார்.
உள் நாட்டு போர் முடிந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை அன்று 3 தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் குண்டு வெடித்தது. அதில் 253 பேர் பலியாகினர்.
இது குறித்து கோத்தபய ராஜபக்சே நிருபர்களிடம் கூறும்போது, ‘இந்த தாக்குதலை தடுத்து நிறுத்தியிருக்க முடியும். உள் நாட்டு போரின் போது உளவுத்துறையும், வெளிப்புற கண்காணிப்பு அமைப்பும் ஒன்றாக இருந்தது. அதை தற்போதைய அரசு பிரித்து தனி தனியாக மாற்றிவிட்டது.
அதனால் தாக்குதலை தடுக்க முடியாமல் ஒரு பீதியான குழப்பமான சூழ்நிலையை உருவாக்கி விட்டது. வருகிற டிசம்பரில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது.
அதில் நான் வேட்பாளராக போட்டியிடுவது உறுதி. அதில் வெற்றி பெற்று உளவுத்துறை மற்றும் வெளிப்புற கண்காணிப்பை மீண்டும் உருவாக்கி பயங்கரவாதத்தை ஒடுக்குவேன்” என்றார். #GotabayaRajapaksa #srilankablasts
பாகிஸ்தான் நாட்டிற்கு அமெரிக்கர்கள் பயணம் மேற்கொள்வது குறித்து அமெரிக்க அரசு, புதிய பயண அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த பயண அறிவுறுத்தலில், பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் பதற்றம் நிறைந்த பகுதிகள் வகைப்படுத்தப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்கள் பயணத்திட்டங்களை வகுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளது.

“பாகிஸ்தானுக்குள் மற்றும் பாகிஸ்தான் அருகே விமான போக்குவரத்து மிகவும் ஆபத்தானது. போக்குவரத்து மையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள், ராணுவ அமைப்புகள், விமான நிலையங்கள், பல்கலைக்கழகங்கள், சுற்றுலா மையங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் பயங்கரவாத குழுக்கள் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டுகின்றனர். கடந்த காலங்களில் அமெரிக்க தூதர்கள் மற்றும் தூதரக அலுவலகங்களை குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோன்ற தாக்குதல்கள் தொடரலாம் என தகவல்கள் வந்துள்ளன.
பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தும் அபாயம் உள்ளதால் பொதுவாக பாகிஸ்தானுக்கு செல்லும் பயணத் திட்டங்களை அமெரிக்க மக்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறிப்பாக, மிகவும் அபாயகரமான தாக்குதல் நடக்கும் பகுதிகளான பலூசிஸ்தான், கைபர் பாக்துன்க்வா மாகாணம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியா-பாகிஸ்தான் எல்லை உள்ளிட்ட இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம்” என வெளியுறவுத்துறை தனது பயண அறிவுறுத்தலில் கூறியுள்ளது. #USTravelAdvisory #USPakAdvisory
அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.
அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவால் உலகளாவிய அளவில் தங்கள் நாட்டின் மீதான நன்மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஹஸன் ரவுகானி தெரிவித்தார்.
அமைதியான முறையில் ஆக்கப்பூர்வமான தேவைகளுக்கு யூரேனியத்தை செறிவூட்டும் உரிமை ஈரானுக்கு உள்ளதாகவும் தெரிவித்த ரவுகானி, அமெரிக்காவின் அழுத்தத்துக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம். எங்கள் நாட்டின் சுதந்திரத்தையும், இஸ்லாமிய நன்முறைகளையும் பாதுகாக்க ஒருநாளும் தவற மாட்டோம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையில், ஈரான் நாட்டின் ராணுவமான புரட்சிகர பாதுகாப்பு படையை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். இதற்கு ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ஈரான் மக்களிடையே தொலைக்காட்சி மூலம் இன்று உரையாற்றிய ரவுஹானி, ‘எங்கள் நாட்டின் புரட்சிகர படைகளுக்கு பயங்கரவாத முத்திரை குத்த நீங்கள் (அமெரிக்கா) யார்? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
எங்கள் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு எதிராக பயங்கரவாத குழுக்களை கருவியாக பயன்படுத்தும் நீங்கள்தான் உலக பயங்கரவாதத்தின் தலைமை என்பதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். #UStheleader #Worldterrorism #Rouhani #Trump #IRG

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் ஐ.நா. சபையின் பொதுக்கூட்டம் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் ஐ.நா. பொதுச்சபையின் 73-வது கூட்டம் இன்று தொடங்கியது.

பயங்கரவாதத்தால் ஏற்படும் பாதிப்புகளை விவரித்த அமைச்சர் சுஷ்மா, எந்த வகையிலும் பயங்கரவாதத்தை ஆதரிக்கக் கூடாது, அனைவரும் ஒன்றிணைந்து பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். பயங்கரவாதம் மற்றும் வெறுப்புணர்வுக்கு எதிராக சர்வதேச தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு, நமது சந்ததியினருக்கு சிறந்த உலகை உருவாக்குவோம் என்றும் அவர் பேசினார்.
இந்த கூட்டம் அக்டோபர் ஒன்றாம் தேதி வரை நடைபெறுகிறது. #SushmaSwaraj #UNGA
தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின்போது கலவரம் வெடித்ததற்கு சமூக விரோதிகள் ஊடுருவியதே காரணம் எனவும், அரசு அமைத்துள்ள விசாரணை ஆணையம் மீது நம்பிக்கை இல்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம், ரஜினியின் கருத்து பற்றி கேட்டனர். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

ரஜினிக்கும் முதல்வருக்கும் ஒரே இடத்தில் இருந்து உத்தரவுகள் வருவதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு. நாங்கள் யாரையும் சார்ந்து இல்லை. எங்களுக்கு என்று ஒரு தனித்தன்மை உள்ளது. மாற்றான் பேச்சைக் கேட்டு அவர்களுக்கு எடுபிடியாக என்றைக்கும் இருந்தது கிடையாது. தி.மு.க. வேண்டுமானால் அப்படி இருந்திருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார். #ThoothukudiFiring #RajiniInThoothukudi #Jayakumar