என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "textiles"
- நெல்லை சந்திப்பு சி.என்.கிராமம் ராஜாஜி தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி குப்பம்மாள் என்ற ராஜி (வயது 39).
- இவர் கடந்த 24-ந்தேதி தனது உறவினர் ஒருவருடன் ஜவுளி எடுப்பதற்காக காரில் சென்றுள்ளார்.
நெல்லை:
நெல்லை சந்திப்பு சி.என்.கிராமம் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி குப்பம்மாள் என்ற ராஜி (வயது 39). இவர் கடந்த 24-ந்தேதி தனது உறவினர் ஒருவருடன் ஜவுளி எடுப்பதற்காக காரில் சென்றுள்ளார்.
அன்று மாலை வீடு திரும்பிய ராஜி மகளை மட்டும் வீட்டில் இறக்கி விட்டு விட்டு மீண்டும் காரில் சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி யடைந்த சுப்பிர மணியம் பல இடங் களில் தேடிப் பார்த்தும் ராஜியை காண வில்லை.
அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது 'சுவிட்ச்-ஆப்' ஆகி இருந்தது. எனவே மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு சுப்பிரமணியன் நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மாயமான ராஜியை தேடி வருகிறார்கள்.
- சீனாவில் இருந்து சேலம் வந்த மகுடஞ்சாவடியைச் சேர்ந்த ஜவுளி வியாபாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
- கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜவுளி வியாபாரியை கண்காணிப்பதற்காக மகுடஞ்சாவடியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டுள்ளனர்.
மகுடஞ்சாவடி:
சீனாவில் பி.எப்.7 என்ற புதிய வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் நமது நாட்டிலும் அந்த வகை தொற்று பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவைக்கு விமானத்தில் வந்த சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியை சேர்ந்த ஜவுளி வியாபாரிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அவருக்கு இருப்பது புதிய வகை கொரோனாவா? என்பது குறித்து கண்டறிய சளிமாதிரிகள் மரபணு சோதனைக்காக சென்னையில் உள்ள மாநில சுகாதார ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த ஜவுளி வியாபாரி, மகுடஞ்சாவடியில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். அவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். மேலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் நோய் தொற்று அறிகுறி இல்லை. எனினும் அவர்கள் அனைவரும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த மருத்துவக்குழுவினர் கொரோனா பாதித்த ஜவுளி வியாபாரியை காலை மற்றும் மாலை இருவேளையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதுதவிர, அந்த நபரின் வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நோய் தொற்று அறிகுறியுடன் யாரேனும் வசிக்கிறார்களா? என்பது குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
எனவே, அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்து நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மகுடஞ்சாவடி பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து மகுடஞ்சாவடி பகுதியில் கண்கா ணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுஉள்ளது. சுகாதார, மருத்துவ துறை யினர் மகுடஞ்சாவடியில் முகாமிட்டுள்ளனர்.
- தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் கடைகளில் மக்கள் கூட்டம் அலைேமாதி வருகிறது.
- ஒரே இடத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான கடைகளில், மொத்த விற்பனை மற்றும் சில்லரை விற்பனை நடக்கிறது.
திருப்பூர் :
தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் திருப்பூர் குமரன் ரோடு, பழைய பஸ் நிலையம், காதர் பேட்டை உட்பட திருப்பூரின் பிரதான ரோடுகளில் தற்காலிக துணிக்கடை, பலகார கடைகள், நடைபாதை கடை, பர்னிச்சர் உள்ளிட்ட கடைகளில் மக்கள் கூட்டம் அலைேமாதி வருகிறது.இதுபோன்ற சூழல்களை பயன்படுத்தி, கூட்ட நெரிசலில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் திருடர்கள் கைவரிசை காட்ட முயற்சி செய்வர். இதை தடுக்க போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர். முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.மக்கள் கூடும் இடங்களில், வழிப்பறி திருடர்கள், ஜேப்படி ஆசாமிகளை பிடிக்க தனிப்படை போலீசார் 'மப்டி'யில் ரோந்து சென்று வருகின்றனர்.
தீபாவளியையொட்டி, என்னதான் போலீசார் பாதுகாப்பு அளித்தாலும் கூட்டத்தை பயன்படுத்தி, கடை உரிமையாளரை திசை திருப்பி பொருட்களை திருடிச் செல்வது, வாங்கிய பொருளுக்கு பணத்தை கொடுக்காமல் கொடுத்தேன் என்றும், சில்லறை வாங்குவது போன்று நடித்தும் நூதன மோசடியில் ஈடுபடும் கும்பல் மாநகருக்குள் வலம் வருகிறது.வியாபாரிகள் உஷாராக இருந்து பொருட்கள், பணம் போன்றவற்றை இழக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும். இதேபோல், பொதுமக்களும், விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.சந்தேகப்படும் நபர்கள் இருந்தால், உடனே அருகே உள்ள போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.குறு, சிறு பனியன் நிறுவனங்களும் திருப்பூரில் ஏராளமாக உள்ளன. காதர்பேட்டையில் ஆண்களுக்கான பர்முடாஸ், இரவு நேர பேன்ட், டி-சர்ட், குளிர்கால ஸ்வெட்டர், பெண்களுக்கான வீட்டு உபயோக ஆடைகள், உள்ளாடைகள், பனியன் ஆடை, உள்ளாடைகள், ஆயத்த ஆடைகள், குழந்தைகளுக்கான ஆடைகள் என ஏ-டு இசட் ரகங்கள் ஆண்டு முழுவதும் விற்கப்படுகிறது.ஒரே இடத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான கடைகளில், மொத்த விற்பனை மற்றும் சில்லரை விற்பனை நடக்கிறது. வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்கிறது.கொரோனா தொற்று ஏற்படுத்திய பாதிப்புகள் ஏராளம். ஊரடங்கு முழுமையாக நீங்கிய பின் வர உள்ள இந்த தீபாவளியையொட்டி காதர்பேட்டையில் விற்பனை நடந்து கொண்டிருக்கிறது.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில்,ஆண்டு முழுவதும் காதர் பேட்டையில் குழந்தைகள் ஆடைகள், டி-சர்ட், பேன்ட், பர்முடாஸ் விற்பனை நடக்கும். பெங்களூருவில் இருந்து வரும் சில்லரை வியாபாரிகள் வாங்கி சென்றனர். ஆந்திரா, தெலுங்கானா வியாபாரிகளும் வாங்கி சென்றனர். தற்போது பல மாவட்டங்களிலும், நெடுஞ்சாலை ரோடுகளிலும் ஆண்டு முழுவதும் கடை அமைக்கும் வியாபாரிகளும் வாங்கி செல்கின்றனர்.'ஆன்லைன்' வர்த்தகம் வந்த பிறகு காதர்பேட்டையில் வியாபாரம் மந்தமாகிவிட்டது. பொதுமக்கள், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து தேவையான ஆடையை வாங்கிவிடுகின்றனர். இதனால் மொத்த வியாபாரமும் பாதிக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக கடை அமைப்போர் மொத்தமாக ஆடைகளை வாங்கி செல்கின்றனர்.திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் சில்லரை விற்பனை கடைகள் அமைவதால், எங்களுக்கு மொத்த விற்பனை நடக்கிறது. கொரோனா தொற்றால், வெளிமாநிலங்களில் இருந்து வரும் விற்பனை கிடைப்பதில்லை. ஜனவரி மாதத்திற்கு பிறகு வியாபாரம் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.வரும் 21, 22, 23 ந் தேதி ஆகிய 3 நாட்களில் வியாபாரம் சூடுபிடிக்கும். அதற்காக பெண்கள், குழந்தைகளுக்கான புதுரக ஆடைகளுடன் கடை அமைத்துள்ளோம் என்றார்.
தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் திருப்பூர் மாவட்டம் திருப்பூர், பல்லடம் ,தாராபுரம், காங்கயம், உடுமலை உள்பட பல்வேறு ஊர்களில் கடை வீதிகளில் உள்ள ஜவுளி, நகை, மளிகை, பட்டாசு, இனிப்பு கடை உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வாங்க ஜவுளி, நகை, மளிகை கடைகள் மற்றும் மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் குவிகின்றனர். இதனால் கடைவீதிகள் அனைத்தும் களை கட்டியுள்ளன.
புதுச்சேரி:
புதுவை திருமலை நகரை சேர்ந்தவர் இளவரசன் (வயது28). இவர் புதுவை காந்திவீதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் இளவரசன் ஜவுளிக்கடையை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை வழக்கம் போல் இளவரசன் ஜவுளிக்கடையை திறந்து வியாபாரம் செய்ய வந்தார்.
அப்போது ஜவுளிக்கடையில் ரூ.25 ஆ யிரம் மதிப்புள்ள பேண்ட், சர்ட் மற்றும் டிசர்ட்டுகள் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் கல்லாபெட்டியில் வைத்திருந்த ரூ.1500 ரொக்க பணமும் காணவில்லை. இவற்றை யாரோ மர்ம நபர்கள் திருடிசென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து இளவரசன் ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் ஜவுளிக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி. கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது 2 வாலிபர்கள் ஜவுளிக்கடையையொட்டி உள்ள ஆலமரத்தின் வழியாக ஏறி ஷோரூம் கண்ணாடியை உடைத்து ஜவுளி வகைகளையும். பணத்தையும் திருடி சென்றிருப்பது பதிவாகி இருந்ததை கண்டனர்.
இதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று மாலை 2 வாலிபர்கள் ஒரு பெரிய துணி மூட்டையுடன் தலைச்சுமையாக ரெயில் நிலையம் நோக்கி வந்ததை ஓதியஞ்சாலை போலீசார் கண்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்கள் வைத்திருந்த துணிமூட்டையை சோதனையிட்டனர். அதில் புத்தம் புதிய பேண்டு, சட்டைகள், டீசர்ட்டுகள் இருந்தது.
இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் கொச்சினை சேர்ந்த ஜேவியர்அஜய் (21) மற்றும் பெஞ்சமின் ஜோசப்(18) என்பதும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு புதுவையில் நண்பரை காண வந்த இவர்கள் ஒரு ஓட்டலில் அறைஎடுத்து தங்கி பல்வேறு இடங்களில் சுற்றி பார்த்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் மதுகுடித்த இவர்கள் குடிபோதையில் ஜவுளிக்கடையில் புகுந்து ஜவுளி மற்றும் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஜவுளி வகைகள் மற்றும் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்