என் மலர்
நீங்கள் தேடியது "thailand"
- ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் சட்ட மசோதா இயற்ற தாய்லாந்தில் தொடர்ந்து போராட்டம் நடந்தது.
- மன்னரின் ஒப்புதலுக்கு பின்னர் இது முழுமையாக அமலுக்கு வரவுள்ளது.
பாங்காங்:
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்து சொகுசு விடுதிகளுக்கும், கேளிக்கைகளுக்கும் பெயர்போன நாடாக விளங்குகிறது. புத்த மதத்தை பின்பற்றும் நாடான தாய்லாந்தில் பொதுமக்களுக்கு அதிக அளவில் சுதந்திரம் அளிப்பதில் முன்னுரிமை கொடுத்து வருகிறது.
குடிமக்களுக்கு மட்டுமின்றி வெளிநாட்டினருக்கு சொர்க்கப்பூமியாக நிகழும் தாய்லாந்துக்கு புதுமண ஜோடிகள், வாலிபர்கள் அதிக அளவில் வருகை தருவர். ஓரின சேர்க்கையாளர்கள் அதிக அளவில் வசிக்கும் நாடாக கருதப்பட்டாலும் அவர்களின் திருமணத்துக்கு அங்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
இந்தநிலையில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் சட்ட மசோதா இயற்ற தாய்லாந்தில் தொடர்ந்து போராட்டம் நடந்தது.
இதனையடுத்து பாராளுமன்றத்தில் இதற்கான மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவிற்கு ஆதரவாக எதிர்க்கட்சியினர் உள்பட பெரும்பான்மையான எம்.பி.க்கள் வாக்களித்தனர். 415 எம்.பி.க்கள் எண்ணிக்கை கொண்ட தாய்லாந்து பாராளுமன்றத்தில் 10 பேர் மட்டுமே மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர்.
இந்தநிலையில் பெரும்பான்மை எம்.பி.க்கள் ஆதரவுடன் ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்டமசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. மன்னரின் ஒப்புதலுக்கு பின்னர் இது முழுமையாக அமலுக்கு வரவுள்ளது. இதன் மூலம் தைவான், நேபாளத்தை அடுத்து ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அனுமதி அளிக்கும் ஆசிய நாடுகளில் ஒன்றாக தாய்லாந்து மாறும்.
- புதிய விமான சேவைகள், வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும்.
- பயணிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆலந்தூர்:
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தாய்லாந்து, சவுதி அரேபியாவின் தமாம் ஆகிய இடங்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளன.
அந்தப் பயணிகளின் வசதிக்காக, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், சென்னையில் இருந்து தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக் நகருக்கும், இதை போல் பாங்காக்கில் இருந்து சென்னைக்கும், இரண்டு விமான சேவைகளை புதிதாக, கடந்த 15-ந்தேதியில் இருந்து, இயக்கத் தொடங்கியுள்ளது.
இந்த விமான சேவைகள் வாரத்தில் 4 நாட்கள் இயக்கப்படுகின்றன.
அதேபோல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், சவுதி அரேபியாவின் தமாமிற்கு, சென்னை யில் இருந்தும், தாமாமில் இருந்து சென்னைக்கும் இடையே, இரண்டு விமான சேவைகளை, வருகின்ற ஜூன் மாதம் 1-ந்தேதியில் இருந்து புதிதாக இயக்கத் தொடங்குகிறது.
இந்த விமான சேவைகள் வாரத்தில் இரண்டு நாட்கள், செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் நேரடி விமானமாக இயங்கத் தொடங்குகிறது.
இதேப்போல் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து மேற்குவங்க மாநிலம் துர்காப்பூருக்கும், அதேப்போல் துர்காப்பூரில் இருந்து சென்னைக்கும் புதிதாக நேரடி விமான சேவை, கடந்த 16-ந்தேதி தேதியில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது.
இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் இயக்கும் இந்த புதிய விமான சேவைகள், வாரத்தில் 3 நாட்கள் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படும் என்று அறி விக்கப்பட்டுள்ளது.
சென்னை சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களில், புதிய நேரடி விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது, பயணிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், மோசமான வானிலை காரணமாக கடும் டர்புலன்ஸை எதிர்கொண்டதில் நடு வானில் நிலை தடுமாறி குலுங்கியது.
- தேவையான மருத்துவ உதவிகளை வழங்க தாய்லாந்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறோம், தேவைப்படும் கூடுதல் உதவிகளை வழங்க ஒரு குழுவை பாங்காக்கிற்கு அனுப்புகிறோம் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம், மோசமான வானிலை காரணமாக கடும் டர்புலன்ஸை எதிர்கொண்டதில் நடு வானில் நிலை தடுமாறி குலுங்கியது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், போயிங் 777-300ER விமானத்தில் மொத்தம் 211 பயணிகளும் 18 பணியாளர்களும் இருந்தனர். விமானம் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் கடுமையான டர்புலன்ஸை சந்தித்தபோது, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:45 மணிக்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் சுவர்ணபூமி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது என்றும் இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், தேவையான மருத்துவ உதவிகளை வழங்க தாய்லாந்தில் உள்ள உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுகிறோம், தேவைப்படும் கூடுதல் உதவிகளை வழங்க ஒரு குழுவை பாங்காக்கிற்கு அனுப்புகிறோம் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் 30 பேர் காயம் அடைந்ததாகத் தாய்லாந்து ஊடகங்கள் தெரிவித்தாலும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எத்தனை பேர் காயமடைந்தனர் என்பதைக் குறிப்பிடவில்லை. விபத்து தொடர்பான ரேடார் பதிவுகளில், விமானம் 37,000 அடி உயரத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது மூன்று நிமிடங்களில் 31,000 அடிக்குக் கீழே இறங்கியது. பின் அங்கிருந்து வேகமாக இறங்கி அரை மணி நேரத்திற்குள் பாங்காக்கில் தரையிறங்கியது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள் இதுவரை இதுவரை மொத்தம் ஏழு விபத்துகளைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- மக்கள் பிரதிநிதித்துவ சபையில் ஏற்கனவே சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
- இன்று செனட் சபையில் திருமண சமத்துவ மசோதா நிறைவேற்றப்பட்டது.
தாய்லாந்து நாட்டின் செனட் சபையில் திருமண சமத்துவ மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு 130 பேர் ஆதரவாக வாக்களித்தனர். சிலர் வாக்களிக்காமல் வெளியேறினார். 4 பேர் எதிர்த்து வாக்களித்தனர். ஏற்கனவே, மக்கள் பிரதிநிதிகள் கொண்ட சபையில் கடந்த மார்ச் மாதம் இந்த மசோதா நிறைவேறியது.
இதன்மூலம் விரைவில் தாய்லாந்தில் தன்பாலின திருமணம் சட்டப்பூர்வமாக இருக்கிறது. இதன் மூலம் ஒரு ஆண் மற்றொரு ஆணையுயும், ஒரு பெண் மற்றொரு பெண்ணையும் திருமணம் செய்து கொள்ள முடியும்.
இந்த மசோதா செனட் கமிட்டி ஆய்வு செய்யவும். பின்னர் அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும். அதன்பின் மன்னரிடம் இருந்து ஒப்புதல் வழங்கப்பட்ட பின் சட்டமாக்கப்படும்.
இதன் மூலம் தாயலாந்து தன்பாலிய திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் முதல் தென்கிழக்கு ஆசிய நாடாகும்.
ஏற்கனவே தைவான் கடந்த 2019-ம் ஆண்டு தன்பாலிய திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியுள்ளது.
நேபாளம் இதற்கான முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால் விரிவான சட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. தன்பாலினத்திரின் உரிமையை பாதுகாக்க அரசு சட்ட வரைவை ஏற்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
- கல்லறையில் திரையரங்கில் உள்ளது போல் காலி நாற்காலிகள் போடப்பட்டிருந்தது.
- நிறைவேறாத ஆசைகளால் ஆவிகள் மனித உலகில் தங்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
தாய்லாந்தில் உள்ள ஒரு சீன கல்லறையில் இறந்தவர்களுக்காக திரைப்பட காட்சிகளை நடத்துவதன் மூலம் திரைப்பட அனுபவத்தை ஒரு புதிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.
இந்த பயமுறுத்தும் திரைப்படம் போட்டு காட்டும் நிகழ்வை சவாங் மெட்டா தம்மசாதன் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது.
ஜூன் 2 முதல் ஜூன் 6 வரை, 2,800 கல்லறைகளைக் கொண்ட வடகிழக்கு தாய்லாந்தில் உள்ள நகோன் ராட்சசிமா மாகாணத்தில் கல்லறையில் திரையரங்கில் உள்ளது போல் காலி நாற்காலிகள் போடப்பட்டிருந்தது.
இந்த கல்லறையில் பெரும்பாலும் தாய்லாந்தில் வசிக்கச் சென்ற சீனாவைச் சேர்ந்த மக்களின் சந்ததியினருக்கு சொந்தமானது, மேலும் அவர்களின் ஆவிகளை நினைவுகூரும் வகையில் திரைப்பட காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திறந்தவெளி திரைப்பட காட்சிகளின் போது, நான்கு பணியாளர்கள் மட்டுமே இருந்தனர், மேலும் ஒவ்வொரு நாளும் இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரை படங்கள் காட்டப்பட்டன.
அந்த பணியாளர்கள் ஆவிகளுக்கு விருந்து வைக்கும் விதமான காகிதங்களை எரித்தும், உணவு, உடை, மாதிரி வீடு, வாகனங்கள் என இறந்தவர்களில் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் என அனைத்தையும் விருந்து வைத்தனர்.
ஆவிகளை அமைதிப்படுத்தும் முயற்சியாகவும், நிறைவேறாத ஆசைகளால் ஆவிகள் மனித உலகில் தங்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
- தனது பாஸ்போர்ட்டில் உள்ள 12 பக்கங்களைக் கிழித்து மோசடியில் ஈடுபட்டனர்.
- தாய்லாந்துக்கு பயணம் மேற்கொள்ள இருந்த துஷார் பவார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்
ஜூலை 11 அன்று மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்துக்கு பயணம் மேற்கொள்ள இருந்த துஷார் பவார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
33 வயதான துஷார் பவார், தனது பாஸ்போர்ட்டில் உள்ள 12 பக்கங்களைக் கிழித்து மோசடியில் ஈடுபட்டதாகவும், அதில் அவர் தாய்லாந்து, பேங்காங் உள்ளிட்ட நாடுகளுக்கும் பயணம் செய்த விவரங்கள் உள்ளது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2023 - 2024 ஆம் ஆண்டுகளில் 3 முறை தாய்லாந்து சென்றதாகவும் அந்த விஷயம் தனது மனைவிக்கு தெரிந்தால் பிரச்சனையாகும் என்று பாஸ்போர்ட்டின் சில பக்கங்களை கிழித்ததாக அவர் ஒப்பு கொண்டுள்ளார்.
பாஸ்போர்ட்டில் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட துஷார் தற்போது நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
- உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் விசாரணை நடந்து வருகின்றனர்.
தாய்லாந்தின் மத்திய பாங்காக்கில் உள்ள பாதும் வான் மாவட்டத்தில் நட்சத்திர ஓட்டலில் வெளிநாட்டைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்பட சுற்றுலா பயணிகள் 6 பேர் ஒரே அறையில் பிணமாக கிடந்தனர். அவர்கள் அனைவரும் வெவ்வேறு அறைகளை பதிவு செய்திருந்தனர்.
ஆனால் அவர்களின் உடல்கள் அனைத்தும் ஒரே அறையில் கண்டுபிடிக்கப்பட்டன.

உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
அவர்கள் விஷம் குடித்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். பலியானவர்கள் வியட்நாம் வம்சாவளியைச் சேர்ந்தவர். இதில் 2 பேர் அமெரிக்க குடியுரிமையும் பெற்றவர்கள்.
- தாய்லாந்து அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.
- சிறப்பாக பந்துவீசிய ரபீயா கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் தாய்லாந்து மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தாய்லாந்து அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய தாய்லாந்து அணி வங்காளதேசம் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. தாய்லாந்து அணியின் நட்டயா பூச்சாத்தம் (40 ரன்கள்) தவிர மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதன் காரணமாக தாய்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்களையேசேர்த்தது. வங்காளதேசம் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரபீயா கான் 4 விக்கெட்டுகளையும் சபிகுன் நஹர் ஜெஸ்மின் மற்றும் ரிது மோனி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
97 எனும் எளிய இலக்கை துரத்திய வங்காளதேசம் அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களை குவித்தது. இதன் மூலம் வங்காளதேசம் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த அணியின் திலாரா அக்தர் 17 ரன்களையும், முர்சிதா கதுன் 50 ரன்களையும், இஷாமா தன்ஜிம் 16 ரன்களையும் சேர்த்தனர்.
- சுட்டிக் குழந்தைகளின் ஒவ்வொரு செயலும் மிகவும் ரசிக்க செய்யும்.
- தாய்லாந்தில் நடைபெற்ற தவழும் குழந்தைகளுக்கான போட்டி.
சுட்டிக் குழந்தைகளின் ஒவ்வொரு செயலும் பார்ப்பவர்களை மிகவும் ரசிக்க செய்யும். அந்த வகையில் தாய்லாந்தில் நடைபெற்ற தவழும் குழந்தைகளுக்கான போட்டி குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பயனர்களை ரசிக்க செய்துள்ளது.
இந்த போட்டிகளை பொறுத்தவரை குழந்தைகள் ஒருபுறம் இருந்து மறுபுறம் இருக்கும் வெள்ளை கோடான இலக்கை வந்தடைய வேண்டும்.
தவழும் குழந்தைகள் மட்டுமே பங்கேற்கும் இந்த போட்டியில் குழந்தைகள் இலக்கை அடைய செய்வதற்கு பெற்றோர்கள் பெரும் பாடுபடுவார்கள்.

அதே போல போட்டியின் போது மழலை குழந்தைகளின் சேட்டைகளும் பார்வையாளர்களை பெரிதும் கவரும். தற்போது வைரலாகி வரும் வீடியோவில், தவழும் குழந்தைகள் இலக்கை அடைவதற்காக பெற்றோர்கள் ஊக்குவிக்கும் காட்சி உள்ளது.
அதில் ஒரு குழந்தை போட்டி நடைபெறும் இடத்திலேயே படுத்து தூங்குவது போன்றும், அந்த குழந்தையை விழிக்கச் செய்வதற்காக அவரது பெற்றோர் பாடுபடுவதும் போன்ற காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- அரசியல்வாதி தாக்கியது தொடர்பாக பெண் பத்திரிகையாளர் புகார் அளித்துள்ளார்.
- பெண் பத்திரிகையாளர் தாக்கப்பட்டதற்கு தாய்லாந்து பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்.
தாய்லாந்து நாட்டின் முன்னாள் ராணுவ தளபதியாக இருந்த பிரவிட் வாங்சுவான், பலத் பிரசாரத் என்ற கட்சியை அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
மூத்த அரசியல் தலைவரான வாங்சுவானிடம் ஒரு பெண் பத்திரிகையாளர், அந்நாட்டின் புதிய பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா பற்றி கேள்வி எழுப்பியுள்ளார். அந்த கேள்வியினால் கோபமடைந்த அவர், பெண் பத்திரிகையாளரின் தலையில் அடித்துள்ளார். பின்னர் கோபத்துடன் அவர் கிளம்பி சென்றார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக பெண் பத்திரிகையாளர் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று அந்நாட்டு பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.
பெண் பத்திரிகையாளர் தாக்கப்பட்டதற்கு தாய்லாந்து பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
- ஊழியர்களுக்கு இந்த சலுகை இந்தாண்டு ஜூலை முதல் டிசம்பர் வரை 6 மாதங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- இந்த டிண்டர் விடுப்பைப் பயன்படுத்தி ஊழியர்கள் டேட்டிங் செய்யலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்தைச் சேர்ந்த ஒயிட்லைன் குரூப் என்ற மார்கெட்டிங் நிறுவனம் ஒன்று தங்களின் ஊழியர்கள் டேட்டிங் செல்வதற்காக ஊதியத்துடன் கூடிய விடுப்பு (Tinder Leave) வழங்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தாண்டு ஜூலை முதல் டிசம்பர் வரை 6 மாதங்களுக்கு இந்த டிண்டர் விடுப்பைப் பயன்படுத்தி ஊழியர்கள் டேட்டிங் செய்யலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தனது காதலனுடன் வெளியே செல்ல நேரமில்லை என அந்நிறுவனத்தில் பணிபுரியும் பெண் கூறியதை அடுத்து அந்நிறுவனம் இந்த முடிவை அறிவித்துள்ளது.
காதல் செய்வதால் மகிழ்ச்சி அதிகரிக்கும், இது உற்பத்தியை அதிகரிக்க உதவும் என அந்நிறுவனம் நம்புகிறது.
- ஓரினச்சேர்க்கையாளர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்று.
- ஒரே பாலின திருமணத்திற்கு அனுமதி அளித்த 3-வது நாடு தாய்லாந்து.
பாங்காங்:
தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டு உள்ளது.
தென்கிழக்கு ஆசியா நாடுகளின் ஒன்றான தாய்லாந்தில் மன்னராட்சி நடக்கிறது. கடற்கரைகளை அதிகம் கொண்ட இந்த நாட்டின் பொருளாதாரம், சுற்றுலாத்துறையின் வருமானத்தை நம்பி உள்ளது.
மேலும் வெளிநாட்டவர்களை அதிகளவில் ஈர்க்கும் வகையில் பல்வேறு சலுகைகளை தாய்லாந்து வழங்குகிறது. இதனால் கேளிக்கைகளின் தேசமாக விளங்கும் தாய்லாந்துக்கு ஏராளமான வெளிநாட்டவர்கள் சுற்றுலாவுக்காக செல்கிறார்கள்.
ஓரினச்சேர்க்கையாளர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்றாகவும் தாய்லாந்து விளங்குகிறது. இருப்பினும் தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு சட்டப்பூர்வமாக அனுமதியளிக்கப்படாமல் இருந்தது. இதனால் ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக கடுமையான எதிர்ப்பை எதிர் கொண்டனர்.
மேலும் அவர்கள், தங்களுடைய திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க வலியுறுத்தி தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படலாம் என கருதப்பட்டது.
இதனையடுத்து தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு அனுமதி அளிக்கப்படுவதற்கான மசோதா அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு பெரும்பான்மையான எம்.பி.க்கள் ஆதரவுடன் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் அந்த நாட்டின் மன்னரின் ஒப்புதலுக்காக ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமண சட்டமசோதா அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தநிலையில் தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமண சட்ட மசோதாவுக்கு அந்த நாட்டின் மன்னர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் வருகிற ஜனவரி மாதத்தில் இந்த சட்டம் அமலுக்கு வரும் என அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
தைவான் மற்றும் நேபாளத்திற்கு அடுத்தபடியாக ஆசியாவில் ஒரே பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வ அனுமதி அளிக்கும் 3-வது நாடு என்ற சிறப்பை தாய்லாந்து பெறுகிறது.