என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "thaipusam festival"
- எடப்பாடி பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் பழனிக்கு வருகை தருவது வழக்கம்.
- பஞ்சாமிர்தம் தயாரிப்பு பணிக்காக வந்த குழுவினர் பழனி அடிவாரத்தில் கூடாரம் அமைத்து அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சேலம், எடப்பாடி, நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பருவதராஜகுல காவடிக்குழுவைச் சேர்ந்த 50 ஆயிரம் பக்தர்கள் பாத யாத்திரையாக வருகை தருவார்கள்.
தைப்பூசத் திருவிழா முடிந்த பின்னர் வருகை தரும் அவர்கள் மலைக்கோவிலில் தங்கி இருந்து தங்க ரதம் இழுத்து வழிபாடு செய்வார்கள். இவர்களில் அன்னதானக்குழு, பஞ்சாமிர்தம் தயாரிப்புக்குழு என பல்வேறு குழுக்கள் உள்ளனர்.
இதில் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் குழுவினர் சுவாமி தரிசனம் செய்வதற்கு 1 நாள் முன்னதாகவே பழனிக்கு வந்து பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். அதன்படி நடப்பாண்டுக்கான தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு எடப்பாடி பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.
இதே போல் திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தாராபுரம், திண்டுக்கல் மாவட்டம் மானூர் வழியாக அவர்கள் பழனி சண்முக நதி பகுதிக்கு வருகை தர உள்ளனர். அப்போது சண்முக நதியில் சிறப்பு பூஜை நடத்தி காவடிகளுடன் பழனி மலைக்கோவிலுக்கு செல்கின்றனர்.
அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. எடப்பாடி பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் பழனிக்கு வருகை தருவது வழக்கம்.
பஞ்சாமிர்தம் தயாரிப்பு பணிக்காக வந்த குழுவினர் பழனி அடிவாரத்தில் கூடாரம் அமைத்து அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தாங்கள் கொண்டு வந்த 12 டன் வாழைப்பழங்கள், 9 டன் சர்க்கரை, 3 டன் பேரிச்சம்பழம், 1 டன் கற்கண்டு, 200 லிட்டர் தேன், 200 லிட்டர் நெய், 30 கிலோ ஏலக்காய் ஆகியவைகளை கொண்டு ராட்சத அண்டாக்களில் கலந்து சுமார் 15 டன் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணி நிறைவடைந்த பின்னர் பஞ்சாமிர்தத்தை மலைக்கோவிலுக்கு கொண்டு செல்கின்றனர். அதனை முருகப்பெருமானுக்கு படைத்து வழிபாடு செய்து பின்னர் பக்தர்கள் அனைவரும் தங்களுக்குள் பங்கிட்டு எடுத்து செல்வார்கள். மலைக்கோவிலில் மலர்களால் கோலமிடும் பணியும் நடந்து வருகிறது. எடப்பாடி பக்தர்கள் வருகையால் பழனி மலைக்கோவிலில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
- கடந்த 16-ந்தேதி காவடிகளுடன் தேவகோட்டையில் புறப்பட்ட பக்தர்கள் 24-ந்தேதி பழனி வந்தனர்.
- 3 நாட்கள் காவடிகளுடன் சிறப்பு பூஜை செய்து மலைக்கோவிலில் காணிக்கை செலுத்தி தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர்.
பழனி:
தமிழ் கடவுள் முருகனின் 3-ம் படைவீடான பழனிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர். இங்கு கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் தைப்பூச திருவிழா பிரசித்தி பெற்றதாகும். பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 19-ந்தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2-வது நாள் முதல் 6-ம் நாள் வரை காலையில் தங்க பல்லக்கில் சுவாமி வீதிஉலா வந்தார். 6-ம் நாளான 24-ந்தேதி வள்ளி-தெய்வானை, முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது.
அன்று இரவு வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது. 7-ம் நாளான 25-ந்தேதி முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை தேரில் எழுந்தருள திருத்தேரோட்டம் நடைபெற்றது. தைப்பூச திருவிழாவையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்தனர். அதிகளவில் பக்தர்கள் குவிந்ததால் பழனி நகரமே விழாக்கோலம் பூண் டு காணப்பட்டது. குறிப்பாக தேவகோட்டை பகுதியில் இருந்து நகரத்தார் ஒருங்கிணைந்து பல ஆண்டுகளாக பல தலைமுறைகளாக பாத யாத்திரையாக பழனிக்கு வருகின்றனர்.
அதன்படி கடந்த 16-ந்தேதி காவடிகளுடன் தேவகோட்டையில் புறப்பட்ட பக்தர்கள் 24-ந்தேதி பழனி வந்தனர். 3 நாட்கள் காவடிகளுடன் சிறப்பு பூஜை செய்து மலைக்கோவிலில் காணிக்கை செலுத்தி தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர்.
தொடர் விடுமுறை காரணமாக கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்தனர். இதனால் அடிவாரம், கிரிவீதி, யானைப்பாதை, படிப்பாதை, மலைக்கோவில் என எங்கும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். தைப்பூச திருவிழாவில் இன்றிரவு தெப்பதேரோட்டம் நடைபெறுகிறது. அதன்பின்னர் கொடியிறக்குதலுடன் விழா நிறைவுபெறுகிறது.
- இன்று சுவாமிக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு தேரோட்டம் தொடங்கியது.
- தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
கொண்டையம்பாளையம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கொண்டையம்பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பொன்மலை ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இன்று சுவாமிக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். வீதியில் உலா வந்த தேர் வளைவில் திரும்பும் போது, சாலையோரம் இருந்த குழியில் தேரின் சக்கரங்கள் இறங்கியதால் நிலைத்தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தேர் கவிழ்வதை பார்த்த பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் இன்றி பக்தர்கள் உயிர் தப்பினர். இதனையடுத்து, பொக்லைன் இயந்திரம் மூலம் தேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தேரோட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
- பழமையான சிவாலயங்களில் ஒன்று நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில்.
- வங்க கடலோரம் அமைந்துள்ள இக்கோவிலில் தைப்பூச தேரோட்டத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திசையன்விளை:
தமிழகத்தில் உள்ள பழமையான சிவாலயங்களில் ஒன்று நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில். இக்கோவிலில் சுவாமி லிங்க வடிவில் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். வங்க கடலோரம் அமைந்துள்ள இக்கோவிலில் தைப்பூச தேரோட்டத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு இன்று காலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க சுவாமி சந்திரசேகரர்-மனோன்மணி அம்மாள் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் மேளதாளம் முழங்க கொடி பட்டம் ஊர்வலம் நடந்தது. கோவில் முன்பு உள்ள கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து கோவில் பரம்பரை தர்மகர்த்தா ப.க.சோ.த.ராதா கிருஷ்ணன் கொடி மரத்தில் கொடியேற்றி வைத்த பின்னர் கொடி மரத்திற்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
விழாவில் தேர் கமிட்டி தலைவர் சிவானந்தன், செயலாளர் தர்மலிங்க உடையார், உவரி பஞ்சாயத்து தலைவர் கவிதா ராஜன், துணைத்தலைவர் ராஜன் கிருபாநிதி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் உதய மார்த்தாண்ட அபிஷேகம், விநாயகர் வீதி உலா, இரவு சாய ரட்சை பூஜை, சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்மாள் அன்ன வாகனம், கைலாய பர்வத வாகனம், காமதேனு வாகனம், வெள்ளி குதிரை வாகனத்தில், சிகப்பு சாத்தி, பச்சை சாத்தி வீதி உலா நடக்கிறது. மேலும் இரவில் சமய சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள், பரத நாட்டியம், பட்டிமன்றம், வாண வேடிக்கை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.
சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 25-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு நடக்கிறது. தேர் நிலைக்கு வந்ததும் தீர்த்தவாரியும், மூலவர் சுயம்புலிங்க சுவாமிக்கு சிறப்பு பூஜையும், உச்சிகால பூஜை, உற்சவர் சந்திரசேகரருக்கு சிறப்பு அபிஷேகம், இரவு சந்திரசேகரர்-மனோன்மணி அம்பிகை ரிஷப வாகனத்தில் வீதி உலா நடக்கிறது. 26-ந் தேதி காலை பஞ்சமூர்த்தி வீதி உலாவும், இரவு சந்திரசேகரர்-மனோன்மணி அம்பிகை தெப்பத்திற்கு எழுந்தருளி தெப்பத்திருவிழாவும் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்ம கர்த்தா ப.க.சோ.த.ராதா கிருஷ்ணன் செய்து வருகிறார்.
- தைப்பூச விழா நேற்று முன்தினம் தமிழ்நாடு முழுவதும் வெகுவிமரிசையாக நேற்று கொண்டாடப்பட்டது.
- உணவு வகைகளை ஒருவொருக்கொருவர் பறிமாறி நிலாச்சோறு உண்டு வந்தனர்.
திருப்பூர் :
அனுப்பர்பாளையம் கே.பி.எஸ். காலனியில் தைப்பூச விழாவையொட்டி விநாயகருக்கு வெள்ளைப்பூ ண்டு ரசம் படைத்து வழிபாடு செய்த பெண்கள்-குழந்தைகள் கும்மியடித்தது கோலாகலமாக இருந்தது.
தைப்பூச விழா நேற்று முன்தினம் தமிழ்நாடு முழுவதும் வெகுவிமரிசையாக நேற்று கொண்டாடப்பட்டது. தைப்பூச விழாவையொட்டி திருப்பூர் அனுப்பர்பாளையம் கே.பி.எஸ். காலனியில் உள்ள விநாயகர் கோவிலில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் கடந்த 1 வாரமாக தினமும் பூஜை செய்து வழிபட்டு வந்தனர். மேலும் தினமும் வீடுகளில் இருந்து பல்வேறு உணவு வகைகளை விநாயகர் கோவிலுக்கு கொண்டு வந்து சாமி முன்பு படைத்து, பாட்டு பாடி கும்மியடித்து, பின்னர் அங்கேயே அனைவரும் கொண்டு வந்த உணவு வகைகளை ஒருவொருக்கொருவர் பறிமாறி நிலாச்சோறு உண்டு வந்தனர். நேற்று முன்தினம் தைப்பூச விழாவையொட்டி விநாயகருக்கு மாவு, பழம் உள்ளிட்டவற்றை படைத்து வழிபட்டனர். இந்த நிலையில் நேற்று மாவு, பழம் சாப்பிட்ட விநாயகருக்கு செமிக்கும் வகையில் வெள்ளைப்பூண்டு ரசமும், சாதமும் படைத்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
இதில் ஏராளமான பெண்களும், குழந்தைகளும் கலந்து கொண்டு விநாயகருக்கு படைக்கப்பட்ட உணவு வகைகள் முன்பு கும்மி யடித்து, விநாயகரை வழிபட்டனர். முடிவில் அனைவரும் வெள்ளைப்பூண்டு ரசத்துடன் நிலாச்சோறு உண்டனர். இன்று (செவ்வாய்கிழமையுடன்) தைப்பூச விழா நிறைவடை கிறது.
- தென்தமிழகத்தில் பிரசித்திபெற்ற சிவாலயங்க ளுள் நெல்லை நெல்லையப்பர்- காந்திமதியம்மாள் கோவிலும் ஒன்றாகும்.
- இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அதன் ஒரு நிகழ்வாக தைபூசத் திருவிழா இன்று காலை கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
நெல்லை:
தென்தமிழகத்தில் பிரசித்திபெற்ற சிவாலயங்க ளுள் நெல்லை நெல்லையப்பர்- காந்திமதியம்மாள் கோவிலும் ஒன்றாகும்.
இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அதன் ஒரு நிகழ்வாக தைபூசத் திருவிழா இன்று காலை கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
விழாவினை முன்னிட்டு கோவில் திருநடை அதிகாலையில் திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை , விஸ்வரூப பூஜை ஆகியவை நடைபெற்றது. பின்னர் திருக்கொடி பல்லக்கில் ரதவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
தொடா்ந்து சுவாமி சன்னதி முன் அமைந்துள்ள தங்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. கொடி மரத்திற்கு மஞ்சள்பொடி, மாப்பொடி, வாசனைப்பொடி, பால், தயிா், இளநீா், விபூதி, சந்தனம் உள்ளிட்ட அபிசேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிசேகமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது.
ெதாடர்ந்து 12 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருநெல்வேலி என மாவட்டத்திற்கு பெயர் வர காரணமான நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் வைபவம் வருகிற 29-ந் தேதி நடைபெறுகின்றது.
தைப்பூச தீர்த்தவாரி நிகழ்ச்சி வருகிற 4-ந் தேதியும், சவுந்தர சபையில் நடராஜபெருமான் திருநடனக் காட்சி 5-ந் தேதியும், தெப்பத்திருவிழா 6-ந் தேதியும் நடைபெறுகிறது.
பழனியில் கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினசரி காலை முத்துக்குமார சுவாமி வள்ளி தெய்வானையுடன் தந்தப்பல்லக்கில் சுவாமி புறப்பாடும், மாலை 8.30 மணிக்கு மேல் புதுச்சேரி சப்பரம், வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேணு, வெள்ளி யானை, பெரிய தங்கமயில் வாகனம், மற்றும் தங்கக்குதிரை வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.
விழாவில் வருகிற 20-ந் தேதி இரவு 7.45 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் முத்துக்குமார சுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணமும், இரவு 9.30 மணிக்குமேல் வெள்ளி ரதத்தில் மணக்கோலத்தில் சுவாமி நான்கு ரதவீதிகளில் உலாவும் நடைபெறுகிறது.
வருகிற 21-ந் தேதி தைப்பூசம். அன்று காலை 5 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் சண்முக நதியில் தீர்த்தம் வழங்குதல். பகல் 12.40 மணிக்கு மேல் 1.30 மணிக்குள் முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளளும், மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
வருகிற 24-ந் தேதி தெப்பத்தேர் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகிறார்கள்.
தைப்பூச திருவிழாவையொட்டி இம்மாதம் 19 -ந்தேதி முதல் 23- ந்தேதி வரை 5 நாட்களுக்கு தங்கரதத்தில் சாமி புறப்பாடு நடைபெறாது என்றும், தைப்பூச திருவிழா 5 ம் திருநாளான 19 ந்தேதி திருக்கோவில் சார்பில் தங்கரதபுறப்பாடு நடைபெறும் என்றும், கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்