என் மலர்
நீங்கள் தேடியது "Thali"
- மஞ்சக்கல்பட்டி கிராமம், அம்பாள் நகரை சேர்ந்தவர் சாந்தி இவர், எடப்பாடி அருகே வட்ராம்பாளையம் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
- நேற்று இரவு வீட்டில் உறங்கினார். வீட்டின் பின் வாசல் கதவை உடைத்து உள்ளே நுழைந்து பூஜை அறையில் உண்டியலில் இருந்த ரூ.2000, தூங்கிக் கொண்டிருந்த சாந்தியின் கழுத்தில் இருந்த 12 பவுன் தாலி செயினை பறிக்க முயன்றார்.
சங்ககிரி:
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே தேவண்ணக் கவுண்டனூர் ஊராட்சி, மஞ்சக்கல்பட்டி கிராமம், அம்பாள் நகரை சேர்ந்தவர் சாந்தி (வயது 56). இவர், எடப்பாடி அருகே வட்ராம்பாளையம் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று இரவு, இவரது கணவர் குமரவேல் (63), மகள் சண்முகப்பிரியா (33), பேரன் லவன்அர்ஷத் (11) ஆகியோருடன் வீட்டில் உறங்கினார். இன்று அதிகாலை 2.30 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், வீட்டின் பின் வாசல் கதவை உடைத்து உள்ளே நுழைந்தான். பூஜை அறையில் உண்டியலில் இருந்த ரூ.2000, தூங்கிக் கொண்டிருந்த சாந்தியின் கழுத்தில் இருந்த 12 பவுன் தாலி செயினை பறிக்க முயன்றார்.
அப்போது விழித்துக் கொண்ட சாந்தி கூச்சலிட்டார். வீட்டில் இருந்தவர்கள் வருவதற்குள், தாலியை பறித்துக் கொண்டு கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். இச்சம்பவம் குறித்து சாந்தி சங்ககிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த சங்ககிரி இன்ஸ்பெக்டர் தேவி, எடப்பாடி இன்ஸ்பெக்டர் சந்திரலேகா, எஸ்.ஐ சுதாகரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் சூரமங்கலம் நரசோதிப்பட்டி பகுதியில் தான் வீட்டில் கழட்டி வைத்திருந்த 11¼ பவுன் தாலி செயினை காணவில்லை எனவும், அருண்பென், அபிராமி, தீபா ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாகவும் சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார்.
- அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் சூரமங்கலம் நரசோதிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் திலக். இவரது மனைவி அருணா (வயது 38). இவர்களது வீட்டிற்கு அருகில் வசிப்பவர்கள் அருண்பென், இவரது மனைவி அபிராமி மற்றும் தீபா.
இந்த நிலையில் அருண்பென், தனது வீட்டிற்கு உறவினரை இடப்பற்றாக்குறை காரணமாக, கடந்த 20-ந் தேதி அருணா வீட்டில் தங்க வைத்துள்ளார். இதற்காக அருண்பென், அபிராமி, தீபா ஆகியோர் அருணா வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இதற்கிடையே அருணா, தான் வீட்டில் கழட்டி வைத்திருந்த 11¼ பவுன் தாலி செயினை காணவில்லை எனவும், அருண்பென், அபிராமி, தீபா ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாகவும் சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாசன திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
- 4 மண்டலங்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் வினியோகம் பெற்று வருகிறது.
உடுமலை :
உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகள் கட்டப்பட்டு உள்ளது. வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற நீராதாரங்கள் அணைகளுக்கு நீர்வரத்தை அளித்து வருகிறது. அதை அடிப்படையாகக் கொண்டு திருமூர்த்திஅணை மூலமாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பிஏபி., பாசன திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் 4 மண்டலங்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் வினியோகம் பெற்று வருகிறது. இதற்கு பி.ஏ.பி., தொகுப்பு அணைகளும் நீர்வரத்தை அளித்து உதவி புரிந்து வருகிறது.
அதுமட்டுமின்றி உடுமலை, பூலாங்கிணர், கணக்கம்பாளையம், குடிமங்கலம், மடத்துக்குளம் உள்ளிட்ட கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் தளி வாய்க்கால் மூலமாக ஏழுகுளம் பாசனமும் நடைபெற்று வருகிறது.பி.ஏ.பி., திட்டத்தின் உயிர்நாடியான பிரதான கால்வாய்க்கு கீழே அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை வழியாக தளி வாய்க்கால் கடந்து செல்கிறது. தளி வாய்க்கால் அருகே பி.ஏ.பி., பிரதான கால்வாயின் பக்கவாட்டு சுவரில் துளை ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வந்தது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் துளையை சீரமைக்கக் கோரி கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த சூழலில் பி.ஏ.பி., வாய்க்கால் மற்றும் தளி சுரங்கப்பாதை சந்திக்கும் பகுதியில் கட்டுமான பணி தொடங்கி உள்ளது. அப்போது பி.ஏ.பி, கால்வாய் மற்றும் தளி வாய்க்கால் சுரங்கப்பாதை இடித்து அகற்றப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் பணியை விரைந்து செய்து முடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- விருதுநகர் அருகே கோவிலுக்குள் புகுந்து அம்மன் தாலி, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
- மர்ம நபர்கள் இந்த துணிகர சம்பவம் நடந்துள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக சிறிய கோவில்களில் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இது தொடர்பாக போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஆனாலும் இது வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில் மேலும் ஒரு கோவிலில் துணிகர கொள்ளை நடந்துள்ளது.
அதன் விபரம் வருமாறு:-
விருதுநகர் அருகே உள்ள வெள்ளூர்-புதுப்பட்டி ரோட்டில் மாகாளி பட்டி என்ற இடத்தில் தும்மம்மாள் அம்மன் கோவில் உள்ளது. கிராம கோவிலான இங்கு அதே பகுதியை சேர்ந்த சிவக் குமார் என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் சம்பவத் தன்று இரவு பூஜையை முடித்து விட்டு கோவிலை பூட்டி வீட்டிற்கு சென்றுவிட்டார்.
நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்மநபர்கள் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்குள்ள அலுவலக அறைக்கு சென்ற கொள் ளையர்கள் அம்மனின் தங்க தாலி, வெள்ளி நாகர் சிலை, உண்டியல் பணம் 3 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர். மறு நாள் கோவிலுக்கு வந்த பூசாரி கதவு உடைக்கப்பட்டு தாலி, பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கோவில் நிர்வாகி சுந்தரராஜன் எம்.புதுப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
- நம் வாழ்க்கையில் நடக்கும் கெட்ட விஷயங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் நல்லதுக்கே என்று எடுத்துக்கொள்ளுவது தான் புத்திசாலிதனம்.
- காதல் வயப்படாத பெண்ணாக இருந்தால் காதல் வலையில் விழாமல் இருப்பது மிகவும் நல்லது.
உறங்கும் நிலையில் அனைவருக்கும் இயல்பாக வருவது தான் இந்த கனவு. உலகத்தில் கனவு நிலை வராதவர்கள் யாரும் இல்லை. ஒரு சில சமயங்களில் நம்மை மீறியும் ஏதேனும் ஒரு சக்தி ஆபத்தில் இருக்கும்போது நம்மை பாதுகாக்கும் என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் இது அனைத்து கனவுகளுக்கும் ஒத்துபோகுமா என்று கேட்டால் யாருக்கும் தெரியாத ஒன்றாகும். குறிப்பாக நாம் காணும் சில கனவுகள் நம்மை சில ஆபத்திலிருந்து காப்பாற்றி விட்டுருக்கும். நம் வாழ்க்கையில் நடக்கும் கெட்ட விஷயங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் நல்லதுக்கே என்று எடுத்துக்கொள்ளுவது தான் புத்திசாலிதனம்.
தாலி, குங்குமம், திருமண மோதிரம், மெட்டி, மாலை போன்றவை தவறி கீழே விழுந்தால் அது நம் அனைவரின் மனதிலும் கெட்ட செயலாக தான் தோன்றும். அந்த சமயத்தில் ஏதேனும் பதற்றங்கள் அதிகமாக ஏற்படும். நமக்கு கெட்ட செயல் நடக்கும்போது தான் கோவிலில் உள்ள அனைத்து தெய்வங்களையும் நாம் கூப்பிடுவது வழக்கம். திருமணம் ஆன பெண்ணிற்கு தாலி கழன்று விழுவது போன்று கனவு வந்தால் என்ன பலன், திருமணம் ஆகாத பெண்ணிற்கு தாலி விழுவது போன்று கனவு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரிந்துகொள்ளலாம்.

திருமணம் ஆன பெண்ணிற்கு தாலி அறுவது போல் கனவு வந்தால்:
திருமணம் ஆன பெண்ணிற்கு கனவில் தாலி அறுவது போல் கனவு வருவது இயல்பான ஒன்றுதான். தாலி அறுவது போன்று கனவு வந்தால் திருமணம் ஆன பெண்ணிற்கு அவருடைய கணவனின் மீது கோபம் கூட இருக்கலாம். அல்லது வீட்டில் கணவன்மார்கள் அந்த பெண்ணிடம் சண்டைகள் எதுவும் போட்டு இருக்கலாம்.
அதுமட்டும் இல்லாமல் வீட்டில் ஏதேனும் பிரச்சனைகள் நிகழ்ந்து இருக்கும். இதில் எதுவும் இல்லையென்றால் கணவனிடம் அந்த பெண்ணிற்கு ஏதேனும் பிடிக்காமல் இருந்து இருக்கலாம். பெண்களுக்கு தாலி அறுந்து விழுவது போன்று கனவு வந்தால் அச்சம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.
திருமணம் ஆகாத பெண்ணிற்கு தாலி அறுவது போல் கனவு வந்தால்:
திருமணம் ஆகாத பெண்ணிற்கு கனவில் தாலி அறுவது போன்று வந்தால் அது இயற்கைக்கு மாறான ஒரு விஷயமாகும். தாலி அறுவது போல் கனவு வந்தால் அந்த பெண்ணிற்கு எந்த ஒரு சிந்தனை செயல்களும் அவர்களிடத்தில் இருக்காது. பிறகு ஏன் இந்த கனவு வர வேண்டும் என்ற கேள்வி அனைவரிடத்திலும் உள்ளதுதான்.
தாலி அறுவது போன்ற கனவு திருமணம் ஆகாத பெண்ணிற்கு வந்தால் அவர்களுக்கு திருமணம் பற்றிய பயமும், பதற்றமும் ஆழ்மனதில் அவர்களுக்கிடையில் அறியாமல் இருக்கும்.

திருமணம் செய்யும் நேரம்:
உதாரணத்திற்கு அந்த பெண்ணிற்கு வீட்டில் வரன் பார்த்து கொண்டிருப்பார்கள். திருமணம் ஆகாத பெண்ணிற்கு இது போன்று கனவு வந்தால் நடக்கவிருக்கும் திருமணத்தில் ஏதோ ஒரு ஆபத்து உள்ளது என்ற அறிகுறியாகும். உள்மனதில் அந்த பெண்ணிற்கு இப்போது திருமணம் நிச்சயிக்க வேண்டாம் என்று கூறுவதாகும்.
வர போகும் ஆபத்தில் இருந்து அந்த பெண்ணை பாதுகாப்படைய செய்கிறது. இது போன்று உள்ளவர்களுக்கு இப்போது திருமணம் நிச்சயிக்காமல் இருப்பது நல்லது. காதல் வயப்படாத பெண்ணாக இருந்தால் காதல் வலையில் விழாமல் இருப்பது மிகவும் நல்லது.
6 மாதம் பொருத்திருந்து அதன் பின்னர் தாலி அறுவது போன்று கனவு வருகிறதா என்று பார்த்து, கனவு வரவில்லை என்றால் அதன் பிறகு திருமண பேச்சை பற்றி யோசிக்கலாம். திருமணம் ஆகாத பெண்ணிற்கு இது போன்று வருவதால் அந்த பெண்ணிற்கு திருமணத்தில் பிரச்சனை ஏற்படப்போகிறது என்று கனவு மூலம் இறைவன் காட்டுகிறார்.
அந்த பெண்ணிற்கு திருமணத்தில் அவசரம் காட்டக்கூடாது என்று அர்த்தமாகும். இது போன்ற சூழலில் யார் மீதும் காதல் கொள்வது, புதிதாக வரன்கள் பார்ப்பதை தவிர்த்து கொள்ளவேண்டும். கனவுகளில் பல வகையான கனவுகள் உள்ளன. அவைகள் அனைத்திற்கும் அர்த்தம் இருக்கிறது என்று கூறமுடியாது. ஆனால் சில கனவுகளுக்கு அர்த்தம் இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.
- பழங்குடிகளின் பண்பாடு இந்துக்களின் பண்பாட்டிலிருந்து வேறுபட்டது.
- பழங்குடியின பெண்கள் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும்.
ராஜஸ்தான் மாநிலத்தில் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருபவர் மேனகா தாமோர். இவர் கடந்த 19 ஆம் தேதி ஜெய்ப்பூர் பன்ஸ்வாராவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டார். இதில் ஆயிரக்கணக்கான பழங்குடியின பெண்கள் கலந்துகொண்டனர்.
அக்கூட்டத்தில் பேசிய அவர், பழங்குடி மக்கள் இந்துக்கள் கிடையாது. பழங்குடிகளின் பண்பாடு இந்துக்களின் பண்பாட்டிலிருந்து வேறுபட்டது. இந்து பெண்களை போல பழங்குடி பெண்கள் தாலி அணிய வேண்டாம். குங்குமமும் வைக்க வேண்டாம். நான் கூட தாலி அணிவதில்லை. குங்குமம் வைப்பதில்லை. விரதம் கூட இருப்பதில்லை.
பள்ளிக்கூடங்கள் என்பது, கல்வியின் கோயில். ஆனால் இன்று பள்ளிக்கூடங்கள் கடவுள்களின் இல்லமாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலை மாற வேண்டும். பழங்குடியின பெண்கள் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். நீங்கள் விரதங்கள் கடைபிடிப்பதை நிறுத்துங்கள். சாமியார்கள், பூசாரிகள் சொல்வதை கேட்காதீர்கள். நாம் இந்துக்கள் அல்ல" என்று பேசினார்.
மேனகா பேசிய இந்த வீடியோ வைரலான நிலையில், ராஜஸ்தான் கல்வித்துறை இணை இயக்குநர், மேனகா தாமோரை இன்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேனகா ராஜஸ்தான் கல்வி நிர்வாகத்திற்கு கலங்கம் ஏற்படுத்திவிட்டார். நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்" என்று அம்மாநில கல்வித்துறை இதற்கு விளக்கம் அளித்துள்ளது.
அரசுப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் மேனகா, ராஜஸ்தானில் ஆதிவாசி பரிவார் சன்ஸ்தா (Adivasi Parivar Sanstha) என்ற கல்வி நிறுவனத்தின் நிறுவனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மன்றத்தின் நடவடிக்கைகளை பார்வையிட அனுமதி கேட்டோம். ஆனால் பொதுமக்களை அனுமதிக்கவில்லை
- கூட்டம் முடிந்ததும் சந்திப்பதாகவும் அதுவரை வெளியில் காத்து இருக்கும் படியும் பொதுமக்களிடம் தெரிவிக்கப்பட்டது.
உடுமலை :
உடுமலை அருகே உள்ள தளி ஊராட்சி மன்ற கூட்டம் அதன் தலைவர் வெ. உதயகுமார் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் கல்பனா மற்றும் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் திருமூர்த்தி மலை அருகே உள்ள இலங்கைத்தமிழர்கள் முகாமிற்கு ரூ. 4 லட்சம் செலவில் 10.000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி அமைப்பது உட்பட மே மாதத்திற்கான தொழில், சொத்து ,குடிநீர் வரி வசூல் விவரங்கள் உட்பட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தின் போது தளி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மன்றக் கூட்டத்தை பார்வையாளர் பகுதியில் இருந்து காண வந்தனர். இதற்கு மன்ற உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் பொதுமக்கள் பார்வையிட அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர் அதனால் அவர்கள் கூட்ட அரங்கிற்கு வெளியே அமர்ந்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, மன்றத்தின் நடவடிக்கைகளை பார்வையிட அனுமதி கேட்டோம். ஆனால் எங்களை அனுமதிக்கவில்லை இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து செயல் அலுவலர் கல்பனாவிடம் கேட்டபோது, மன்ற கூட்டம் நடைபெறும் போது பொதுமக்கள் வந்து பார்வையாளர் பகுதியில் அமர முற்பட்டனர். அப்போது சில கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக வந்ததாக தெரிவித்தனர். எனவே கூட்டம் முடிந்ததும் சந்திப்பதாகவும் அதுவரை வெளியில் காத்து இருக்கும் படியும் மட்டுமே தெரிவிக்கப்பட்டது. அதன்படி கூட்டம் முடிந்ததும் அவர்களை அழைத்து கோரிக்கை விபரம் கேட்கப்பட்டது என்றார்.