என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிthambidurai"

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தற்போது பா.ஜனதா அரசை புரிந்து கொண்டுள்ளதாக கனிமொழி கூறியுள்ளார். #Thambidurai #ADMK #BJP #kanimozhi #DMK
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்தியில் இருக்கும் பா.ஜனதா அரசு தனக்கு எதிராக குரல் கொடுக்கும் பா.ஜனதா அல்லாத மாநில அரசுகளில் சி.பி.ஐ.யை ஏவி பிரச்சினை கொடுத்து வருகிறது.

    அப்படித்தான் மேற்கு வங்காளத்திலும் செய்து வருகிறது. அதற்கு எதிராக மம்தா பானர்ஜி குரல் கொடுத்து வருகிறார். இது பாராளுமன்றத்தில் எதிரொலிக்கும். எதிர்க்கட்சிகளும் மம்தா பானர்ஜிக்கு ஆதரவு தெரிவிக்கும்.



    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தற்போது பா.ஜனதா அரசை புரிந்து கொண்டு தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை என்று சொல்லி இருக்கிறார். தற்போது பா.ஜனதாவை ஒருவர் புரிந்து கொண்டார். இதேபோல் அவருடன் இருக்கும் ஒவ்வொரு வரும் புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thambidurai #ADMK #BJP #kanimozhi #DMK
    ஓ.பி.எஸ்.சை நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுப்பு தெரிவித்தது வேதனை அளிப்பதாகவும் அ.தி.மு.க.விடம் பாரதிய ஜனதா நட்பு காட்டவில்லை எனவும் தம்பிதுரை கூறியுள்ளார். #Thambidurai #ADMK #BJP #NirmalaSitharaman
    ஆலந்தூர்:

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க.வி.ல் எந்த ஒரு ஜனநாயக முடிவும் எடுப்பதாக தெரியவில்லை. மு.க.ஸ்டாலினை தவிர வேறு யாரும் பேசுவதாக இல்லை. மு.க.ஸ்டாலின் மற்ற கட்சிகளை பற்றி பேசுகிறார். மற்ற கட்சிகளுக்கு ஆலோசனை சொல்கிறார்.

    ஆனால் இவரைப் பற்றி யாரும் பேசுவது இல்லை. இது வேடிக்கையாக இருக்கிறது. தி.மு.க.வில் மு.க.ஸ்டாலின் சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.

    ஒரு மத்திய அரசு பட்ஜெட்டை 5 முறை தாக்கல் செய்ய வேண்டும். மத்தியில் இருக்கும் பா.ஜனதா அரசு அதை ஏற்கனவே செய்து முடித்துவிட்டது. தற்போது 6-வது முறையாக தாக்கல் செய்தது. இதை வாக்கு வங்கிக்காகவும், தேர்தல் ஆதாயத்துக்காகவும் என்றுதான் எடுத்துக்கொள்ள முடியும்.

    பிரதமர் மோடி பட்ஜெட்டை ஒரு டிரெய்லர் என்றுதான் சொல்லி இருக்கிறார். சில நேரத்தில் டிரெய்லர் நன்றாக இருந்தாலும் படம் நன்றாக இருக்காது. இந்த பட்ஜெட்டை போல் கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு செய்திருக்கலாம். கடந்த 5 ஆண்டு ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு எந்த திட்டமும் பட்ஜெட்டில் வரவில்லை. மாறாக தமிழகத்தின் உரிமைகள் தான் பறிபோய் இருக்கிறது.

    கஜா புயல் நிவாரண நிதி வரவில்லை, நீட் பிரச்சினை, காவிரி மேகதாது அணை பிரச்சினை எல்லாம் வேதனை அளிக்கிறது. ஜி.எஸ்.டி. என்று வந்ததோ அன்றே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் எல்லாம் போய்விட்டது. பா.ஜனதாவினர் திராவிட கட்சிகளை வளரவிட மாட்டோம் என்று சொல்லி வருகிறார்கள்.



    அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்திக்க சென்றபோது அவர் சந்திக்க முடியாது என்று சொன்னது வேதனை அளிக்கிறது. பா.ஜனதா அ.தி.மு.கவிடம் நட்புகாட்டவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #Thambidurai #ADMK #BJP #NirmalaSitharaman
    சேகர்பாபு, செந்தில் பாலாஜி போன்ற பலர் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றாலும் அவர்கள்தான் தற்போது தி.மு.க.வை வழிநடத்தி செல்கின்றனர் என்று தம்பிதுரை கூறியுள்ளார். #thambidurai #parliamentelection #admk #mkstalin

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே குஜிலியம்பாறையில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தான் எப்படியாவது முதல்வர் ஆகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் ஊர் ஊராக சென்று ஊராட்சி கூட்டம் நடத்தி வருகிறார்.

    இதனால் அவரது முதல்வர் கனவு நிறைவேறப் போவதில்லை. தமிழகத்தில் மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரே கட்சி அ.தி.மு.க. மட்டுமே.

    சேகர்பாபு, செந்தில் பாலாஜி போன்ற பலர் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றாலும் அவர்கள்தான் தற்போது தி.மு.க.வை வழிநடத்தி செல்கின்றனர். ஏனெனில் அந்த கட்சியில் அதுபோன்ற தலைவர்கள் இல்லாமல் இருப்பதுதான் காரணம்.

    மேகதாது அணை விவகாரத்தில் பாராளுமன்றத்தில் நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து அவையை முடக்கினோம். ஆனால் எங்களுக்கு ஆதரவாக எந்தஒருகட்சியும் குரல் எழுப்பவில்லை.

    தமிழக மக்களின் நலனுக்காக அ.தி.மு.க. எம்.பி.க்கள் காவிரி மேலாண்மை வாரியம், நதி நீர் பிரச்சினை போன்றவற்றுக்காக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம். அ.தி.மு.க. வெற்றி பெற்றால் மட்டுமே காவிரி பிரச்சினையை தீர்க்க முடியும். பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வே அதிக இடங்களை பிடிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #thambidurai #parliamentelection #admk #mkstalin

    பாராளுமன்ற மக்களவையில் இருந்து எம்.பி.க்களை இடைக்கால நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை தாயுள்ளத்துடன் சுமித்ரா மகாஜன் ரத்து செய்ய வேண்டும் என தம்பிதுரை கேட்டு கொண்டார். #Thambidurai #revokedecision #AIADMK #TDP
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பிக்கள் பாராளுமன்ற மக்களவையில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எம்பிக்களின் அமளியால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக கடந்த இரண்டாம் தேதி சபாநாயகர் சுமித்ரா மகாஜன் எச்சரிக்கை விடுத்தார். அதன்பின்னரும் அமளி நீடித்ததால், அதிமுக உறுப்பினர்கள் 24 பேரை 5 நாட்களுக்கு கூட்டத் தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
     
    இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கியதும், அதிமுக எம்பிக்கள் வழக்கம்போல் அமளியில் ஈடுபட ஆரம்பித்தனர். 

    இதனால் அவையை 12 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். 12 மணிக்கு அவை கூடியபோதும் அமளி நீடித்தது. அதிமுக உறுப்பினர்களுடன் தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்களும் அவையின் மையப்பகுதிக்கு சென்று சபாநாயகர் இருக்கையின் அருகே ஒன்றுகூடி அமளியில் ஈடுபட்டதால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. 

    இதையடுத்து, அருண்மொழித்தேவன், கோபாலகிருஷணன், பன்னீர்செல்வம், செந்தில்நாதன், மருதுராஜா உள்ளிட்ட 7 அதிமுக எம்பிக்களை சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். அவர்கள் 7 பேரும் தொடர்ந்து 4 அமர்வுகளில் கலந்துகொள்ள முடியாது என்றும் தெரிவித்தார். இதேபோல், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 15 எம்.பி.க்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

    சஸ்பெண்ட் செய்யப்பட்ட காலத்திற்குள் கூட்டத் தொடரும் முடிவடையும். எனவே இந்த எம்பிக்கள் அனைவரும் வரும் 8-ம் தேதியுடன் முடைவடியும் இந்த குளிர்கால கூட்டத் தொடர் முழுவதும் பங்கேற்க இயலாத நிலை நீடிக்கின்றது.

    இந்நிலையில், இன்று மக்களவை கூட்டத்தில் பேசிய அதிமுக எம்.பி. தம்பிதுரை, அதிமுக மற்றும் தெலுங்கு தேசம் எம்.பி.க்களை இடைக்கால நீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவை தாயுள்ளத்துடன் சுமித்ரா மகாஜன் ரத்து செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார். 

    நீங்கள் ஏற்கனவே அவர்களை தண்டித்து விட்டீர்கள். இரண்டு நாட்களாக அவர்கள் அவைக்கு வரவில்லை. எனவே, தாயுள்ளத்துடன் இந்த உத்தரவை நீங்கள் ரத்து செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

    இதற்கு பதிலளித்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மிகவும் கனத்த உள்ளத்துடன்தான் இந்த நடவடிக்கையை எடுக்க நேர்ந்தது. அவையின் மையப்பகுதிக்கு வந்து அவர்கள் செய்த அமளியை இந்த நாடும் ஒட்டுமொத்த உலகமும் பார்த்தது. முக்கியமான சில விவகாரங்கள் தொடர்பாக மற்ற உறுப்பினர்களை பேச விடாமல் அவர்கள் இடையூறு செய்தனர்.

    இந்த அவையை நடத்த வேண்டும் என்பதற்காகவே அவர்களை இடைநீக்கம் செய்ய நேர்ந்தது. இதுதொடர்பாக, நீங்கள் (தம்பிதுரை) எனது அறைக்கு வந்து பேசலாம். இதர கட்சி தலைவர்களுடன் கலந்துபேசி உங்கள் கோரிக்கை தொடர்பாக பரிசீலிக்கப்படும் என குறிப்பிட்டார். #Thambidurai  #revokedecision #AIADMK #TDP 
    மேகதாது விவகாரத்தை மறைக்கும் விஷயத்தில் பாஜகவும் காங்கிரசும் இணக்கமாக இருப்பதாக தம்பிதுரை குற்றம்சாட்டினார். #MakedatuIssue #Thambidurai
    புதுடெல்லி:

    கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராக மக்களவையில் தொடர்ந்து குரல் எழுப்பிய அதிமுக எம்பிக்கள் 31 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து இன்று அதிமுக எம்பியும், துணை சபாநாயகருமான தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக அதிமுக உறுப்பினர்கள் ஜனநாயக வழியில் போராடினார்கள். ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை செவிசாய்க்கவில்லை.



    தமிழகத்தின் உரிமை காக்கப்படவேண்டுமானால், மேகதாது அணை கட்டப்படுவதை தடுக்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட கிடைக்காது. மேகதாது அணைத் திட்ட ஆய்வுப் பணிக்கு மத்திய நீர்வள ஆணையம் தந்த ஒப்புதலை திரும்ப பெற வேண்டும்.

    இதற்காக ஜனநாயக வழியில் போராட்டம் நடத்திய எம்பிக்களை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். பின்னர் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். இத்தகைய செயல் ஜனநாயகத்திற்கு எதிரானது. இந்த போராட்டம் இதோடு நின்றுவிடாது. அவைக்கு வராவிட்டால்கூட பாராளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்

    காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் பாராளுமன்றத்தில் இணக்கம் உள்ளது. இதைத் தான் கேம் பிக்சிங் என்பார்கள். மேகதாது விவகாரத்தை மறைக்கவே ரபேல் விவகாரத்தை காங்கிரஸ் எழுப்புகிறது. ரபேல் விவகாரத்திற்குப் பதிலளிப்பதுபோல் மேகதாது விவகாரத்தை பாஜக மறைக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #MakedatuIssue #Thambidurai

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி பா.ஜ.க.வுடன் அதிமுக, பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று தம்பிதுரை எம்பி தெரிவித்துள்ளார். #thambidurai #bjp #parliamentelection
    கரூர்:

    கரூரில் இன்று உலக  முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக தெருமுனை கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாகிஸ்தான்,சீனா நாடுகள் இந்திய ரூபாய் கள்ளநோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விடுகிறார்கள். அந்த பணம் தான் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனை மத்திய அரசு தீவிரமாக கண் காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை நான் பாராட்டுகிறேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பான வெள்ளை அறிக்கையை தொழில்துறை அமைச்சர் சம்பத்திடம்தான் கேட்க வேண்டும். தேர்தல் நெருங்கும் போது கூட்டணி பற்றி முடிவு எடுக்கப்படும்.

    எனக்கு தெரிந்தவரை பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி பா.ஜ.க. வுடன் இதுவரை எந்த பேச்சு வார்த்தையும் நடத்த வில்லை. மேலும் கூட்டணி தொடர்பாக பா.ஜ.க., அ.தி.மு.க.வுக்கு எந்தவித நெருக்கடியும் அளிக்க வில்லை. 

    இவ்வாறு அவர் கூறினார். #thambidurai #bjp #parliamentelection
    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறப்புக்கு காரணம் தி.மு.க.தான் என பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம் சாட்டியுள்ளார். #JayalalithaDeath #DMK #Thambidurai
    கரூர்:

    கரூரில் நேற்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மேகதாதுவில் அணை கட்டுவது தேவையற்ற ஒன்று. இது தொடர்பான வரைவு அறிக்கை தயாரிக்க மத்திய அரசு அனுமதித்தது புதிராகவே உள்ளது. இது குறித்து பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் குரல் எழுப்பி, தமிழக மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவோம்.

    பெங்களூரு மக்களுக்கு தண்ணீர் வேண்டும் எனில், 2 மாநில எல்லையான ஒகேனக்கல்லில் அணை கட்டலாம். இதன் மூலம் மின்உற்பத்தியும் நடக்கும். ஆனால் அரசியல் நோக்கத்திற்காக காங்கிரஸ் கட்சி மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை கையாள்கிறது. தி.மு.க. அந்த கூட்டணியில் இருக்கிறது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து விட்டு, மேகதாதுவில் அணை கட்டுவதை தடுப்போம் என தி.மு.க. கூறுவது வேடிக்கையாக உள்ளது.



    வருகிற பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் தான் முடிவு எடுக்கும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்திய பிரதமரை தேர்வு செய்வதில் அ.தி.மு.க. முக்கிய பங்காற்றும் என்பதில் சந்தேகமில்லை. பா.ஜ.க.வோ, காங்கிரசோ கனவில் கூட இனி தமிழகத்தினை ஆள முடியாது.

    கஜா புயல் பற்றி பாராளுமன்றத்தில் எடுத்துரைக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அப்போது கஜா பாதிப்பின் முழு விவரத்தையும் எடுத்து கூறி நிவாரணம் கேட்போம். கஜா புயல் சேதத்தை பார்வையிட பிரதமர் ஏன் வரவில்லை? என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்புகிறார். ஆனால் தேசிய கட்சி என்று சொல்கிற காங்கிரசின் தலைவரும், பிரதமர் வேட்பாளருமான ராகுல் காந்தி புயல் பாதிப்புகளை பார்வையிட வந்தாரா?.

    கருணாநிதி பிறந்த மண்ணான திருவாரூரில் புயல் பாதிப்பு பணிகளை மேற்கொள்ள மு.க.ஸ்டாலின் வந்தாரா?. தி.மு.க. தொடர்ந்த வழக்கே ஜெயலலிதாவின் இறப்புக்கு காரணம். அதற்கு உடந்தையாக இருந்தது காங்கிரஸ். பெங்களூரு சிறையில் ஜெயலலிதா இருக்கும் போது அவதிப்பட்டார். பின்னர் வழக்கில் வெற்றி பெற்ற போதும் கூட, மேல்முறையீடு செய்து மீண்டும் அவரை சிறையில் அடைத்தனர். இதற்கெல்லாம் வருகிற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார். #JayalalithaDeath #DMK #Thambidurai
    தேசிய கட்சிகள் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்திற்கு வரலாம் என்பது பகல் கனவு எனவும் அவர்கள் கனவில் கூட தமிழகத்தை ஆள முடியாது எனவும் தம்பிதுரை எம்.பி. கூறியுள்ளார். #Thambidurai #ADMK
    பாராளுமன்ற மக்களவையின் துணை சபாநாயகர் தம்பிதுரை எம்.பி. செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, தேசிய கட்சிகள் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்திற்கு வரலாம் என்பது பகல் கனவு.  அவர்கள் கனவில் கூட தமிழகத்தை ஆள முடியாது என கூறினார்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் யார் பிரதமராக வருவார் என்பதில் அ.தி.மு.க. முக்கிய பங்காற்றும்.  மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா பெங்களூரு சிறையில் இருந்தபொழுது அவதிப்பட்டார்.  அவருக்கு கர்நாடகாவில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி உரிய உதவிகளை செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.

    முன்னதாக, மேகதாது உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் திராவிட கட்சிகள் தான் காரணம் என்றும், இதுகுறித்து தன்னுடன் விவாதிக்க தயாரா? என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சவால் விடுத்திருந்தார்.



    இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய தம்பிதுரை, மேகதாது திட்டத்திற்கு அனுமதி அளித்தது யார்? என்னுடன் பொன்.ராதாகிருஷ்ணன் விவாதிக்க தயாரா? என்று பதில் சவால் விடுத்துள்ளார். #Thambidurai #ADMK
    நெஞ்சுவலியால் அப்போலோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ள மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர். #Admk #Thambidurai #EdappadiPalaniswami #OPanneerselvam #ApolloHospital
    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2-வது ஆண்டு நினைவஞ்சலி சென்னையில் இன்று நடைபெற்றது. அவருக்கு அஞ்சலி செலுத்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சென்னை வந்திருந்தார். நிகழ்ச்சிகள் முடிந்த நிலையில் இன்று பிற்பகலில் தம்பிதுரைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. 

    இதையடுத்து நெஞ்சுவலி காரணமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டு ஐசிசியூ பிரிவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.  



    இந்நிலையில்,  நெஞ்சுவலி காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையை  முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று இரவு நேரில் சந்தித்தனர். அப்போது அவரது உடல் நலம் குறித்து விசாரித்து அறிந்தனர். #Admk #Thambidurai #EdappadiPalaniswami #OPanneerselvam #ApolloHospital 
    பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு கிடையாது என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை எம்.பி. கூறினார். #Thambidurai #PonRadhakrishnan
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை எம்.பி. சுற்றுப்பயணம் செய்து பொது மக்களிடம் குறைகளை கேட்டு மனுக்கள் வாங்கி வருகிறார்.

    இந்த நிலையில் இன்று 5-வது கட்டமாக மருங்காபுரி ஒன்றியம் கன்னி வடுகப்பட்டி பகுதியில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் தம்பிதுரை மற்றும் ரத்தினவேல் எம்.பி., கலெக்டர் ராசாமணி ஆகியோர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர். அப்போது தம்பிதுரை எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய ரூ.18 ஆயிரம் கோடி நிதியை தராமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நான் ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இன்னும் வழங்கவில்லை. மத்திய அரசு தருகிற நிதியும் மக்களின் வரிப்பணம்தான். எனவே திட்டப்பணிகளை நிறைவேற்ற காலம் தாழ்த்தாமல் நிதியை வழங்கவேண்டும்.

    பல்வேறு திட்டங்களை அறிவிக்கும் மத்திய அரசு அதற்கான நிதியை ஒதுக்கவில்லை. ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் ஒரு கிராமத்தை தத்தெடுக்க வேண்டும் என்ற திட்டத்தை அறிவித்தது. ஒரு கிராமத்தை தத்தெடுக்க வேண்டும் என்றால் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.5 கோடி ஒதுக்க வேண்டும்.

    அப்படி ஒதுக்கும் பட்சத்தில் பாராளுமன்ற தொகுதியின் மற்ற பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்ற நிதி பற்றாக்குறை ஏற்படும். எனவே இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்பட வேண்டும். நிதி வரவில்லை என்றாலும் தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது.



    இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை கூறும் என்னை பா.ஜ.க.வை விமர்சிக்கிறேன் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறி, என்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார். சுய பரிசோதனை என்ன? அனைத்து பரிசோதனையும் செய்ய தயார். அவரும் நாடு முன்னேற வேண்டும் என்று பாடுபடுகிறார். நானும் அது போல்தான். அவர் ஒரு கட்சியில் இருக்கிறார். நானும் ஒரு கட்சியில் இருக்கிறேன். மற்றப்படி தனிப்பட்ட முறையில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருப்பதாக கருதவில்லை. தி.மு.க. வின் உதவியுடன் தான் தமிழகத்தில் சி.பி.ஐ. உள்ளிட்ட சோதனைகள் நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Thambidurai #PonRadhakrishnan #ADMK #BJP

    திமுக ஆட்சி இருக்கும்போது எந்தெந்த திட்டங்கள் மக்கள் ஒப்புதலுடன் நிறை வேற்றப்பட்டது என முக ஸ்டாலின் விளக்க வேண்டும் என தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார். #MKStalin #Thamidurai #DMK #ADMK
    கரூர்:

    கரூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட் அரவக்குறிச்சி பகுதிகளில் பொது மக்களை நேரடியாக சந்தித்து பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மனு பெற்றார்.

    அப்போது அவர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கரூர் பாராளுமன்ற தொகுதியில் 40 ஆயிரம் கிராமங்கள் உள்ளன. இதுவரை 10 ஆயிரம் கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து பொது மக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெற்றுள்ளேன். வருகிற டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து கிராம மங்களுக்கும் செல்வேன்.

    இந்த ஆட்சி நல்லாட்சி என்பதில் மக்கள் மிகுந்த நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். இன்னும் 3 ஆண்டு காலம் ஆட்சி சிறப்பாக செயல்படும். இதில் பல்வேறு நல்ல திட்டங்களும் செயல்படுத்தப்படும் என மக்கள் நம்புகிறார்கள்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஜனநாயக முறைப்படி கருத்துக்களை தெரிவித்து வருகிறார். ஆனால் அதே நேரத்தில் தி.மு.க. ஆட்சி இருக்கும்போது எந்தெந்த திட்டங்கள் மக்கள் ஒப்புதலுடன் நிறை வேற்றப்பட்டது என அவர் விளக்க வேண்டும்.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு தி.மு.க. ஆட்சியின்போது நிலம் வழங்கப்பட்டது. மக்கள் ஒப்புதலுடன் தான் அவர்கள் நிலத்தை வழங்கினார்களா? குறை சொல்ல வேண்டும் என்பதற்காக புழுதிவாரி தூற்றுவது ஏற்புடையது அல்ல.



    கவர்னர் அலுவலகத்தில் இருந்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில்தான் நக்கீரன் கோபால் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அரசியல் அமைப்பு தலைமை அங்கீகாரம் படைத்தவர் கவர்னர். அவரைப் பற்றி கருத்து கூறவோ, விமர்சிக்கவோ விரும்பவில்லை.

    ஆனால் அதே நேரத்தில் கவர்னர் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியுமா? கருத்து சுதந்திரம் இந்த ஆட்சியில் முழுமையாக இருக்கிறது. அதற்காக அந்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தகூடாது.

    இந்த ஆட்சி யாருடைய குரல் வளையையும் நசுக்கவில்லை. இந்த அரசை செயல்படாத அரசு என்று கூறி வருபவர்கள் இப்போதாவது நாங்கள் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    ரபேல் விமான ஒப்பந்தத்தை பொறுத்தவரை பிரான்ஸ் மற்றும் இந்திய நிறுவனங்கள் புரிந்துணர்வு செய்துகொண்ட ஒப்பந்த அடிப்படையில்தான் வாங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

    தற்போது வரை காங்கிரஸ் கூட்டணியில் தான் தி.மு.க. அங்கம் வகித்து வருகிறது. ஆனால் இதுவரை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தியை பிரதமர் ஆக்குவோம் என்று கூறவில்லை. பிரதமர் வேட்பாளராக நிறுத்துவோம் என்று கூட தெரிவிக்கவில்லை. ஏனென்றால் பா.ஜ.க.வுடன் தி.மு.க. மறைமுக தொடர்பு வைத்துள்ளது. அவர்களுடன் கூட்டணி வைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #Thambidurai #MKStalin
    அ.தி.மு.க. அணையும் விளக்கு அல்ல என்றும் எல்.இ.டி. விளக்கு போல் 5 வருட கியாரண்டியுடன் பிரகாசமாக எரியும் விளக்கு என்றும் தம்பிதுரை தெரிவித்துள்ளார். #ADMK #Thambidurai #DMK #MKStalin
    கரூர்:

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, கரூர் பாராளுமன்ற தொகுதியில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு மனுக்கள் பெற்று வருகிறார். இன்று அவர் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள காகித ஆலை பகுதியில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு பிறகு ஒட்டுமொத்த நிதியும் மத்திய அரசின் கைக்குள் சென்று விட்டது. ஜி.எஸ்.டி. வரிக்கு அ.தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    அதனால் வியாபாரிகள் மற்றும் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெட்ரோல்- டீசல் விலை உயர்வாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல்- டீசல் விலையை ரூ.10 வரை மத்திய அரசு குறைத்திருக்க வேண்டும்.


    அ.தி.மு.க.வை பார்த்து அணையும் விளக்கு என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அ.தி.மு.க. அணையும் விளக்கு அல்ல. எல்.இ.டி. விளக்கு போல் 5 வருட கியாரண்டியுடன் பிரகாசமாக எரியும் விளக்கு.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் எத்தனை அணிகள் போட்டியிட்டாலும் அ.தி.மு.க.வுக்கு கவலையில்லை. 40 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #Thambidurai #DMK #MKStalin
    ×