search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thanks"

    • பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • வாக்களித்து வெற்றிபெற வைத்ததற்காக பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

    திருவனந்தபுரம்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த பாராளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலிலும் அவர் வயநாட்டில் களமிறங்கி வெற்றி பெற்றார். அதேநேரம் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் வென்றுள்ளார்.

    இதையடுத்து வயநாடு, ரேபரேலி தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க ராகுல்காந்தி முடிவு செய்தார். அதன்படி நேற்று ரேபரேலி தொகுதிக்கு ராகுல்காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

    இந்தநிலையில் ராகுல் காந்தி, தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்துவதற்காக இன்று வயநாடுக்கு வந்தார். இன்று காலை கோழிக்கோடு விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை கேரள மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்றனர்.

    பின்னர் அவர் மலப்புரம் மாவட்டம் எடவண்ணாவுக்கு புறப்பட்டு சென்றார். அப்போது அவர் ரோடு ஷோ நடத்தினார். சாலைகளின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்களுக்கு கையசைத்தவாறு ராகுல்காந்தி சென்றார். அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது தனக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்ததற்காக நன்றி தெரிவித்தார்.

    பின்னர் எடவண்ணாவில் நடந்த பொதுமக்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல்காந்தி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    தாயின் மறைவிற்கு பிறகே தான் கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதை உணர்ந்ததாக பிரதமர் மோடி கூறினார். நான் எந்த முடிவும் எடுப்பதில்லை, என்னை பூமிக்கு அனுப்பிய பரமாத்மாவே அனைத்து முடிவையும் எடுப்பதாக கூறினார்.

    அவர் கூறிய பரமாத்மா விசித்திரமான பரமாத்மா. அனைத்து முடிவுகளையும் அதானிக்கும், அம்பானிக்கும் சாதகமாகவே எடுக்குமாறு மோடியின் பரமாத்மா கூறுகிறது.

    நான் சாதாரண மனிதன், மோடியை போல் பரமாத்மாவால் அனுப்பப்பட்டவர் அல்ல. துரதிருஷ்டவசமாக பிரதமர் மோடியை போல் நான் கடவுளால் வழிகாட்டப்படுபவன் அல்ல.

    ரேபரேலி எம்.பி.யாக தொடர்வதா அல்லது வயநாட்டின் எம்.பி.யாக தொடர்வதா என மக்களை கேட்டு முடிவு செய்வேன். எந்த தொகுதி எம்.பி.யாக தொடர்வது என்பதை முடிவு செய்ய தர்மசங்கடமாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாலுகோட்டையில் ரூ.5 ½ லட்சம் மதிப்பில் நிழற்குடை அமைத்தற்கு செந்தில்நாதன் எம்.எல்.ஏ.வுக்கு நன்றி கூறப்பட்டது.
    • வார்டு உறுப்பினர் கண்ணன், அழகர் ஆகியோர் பெற்று கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை வடக்கு ஒன்றியம் நாலுகோட்டை கிராமத்தில் பயணியர் நிழற்குடை அமைத்திட சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான நிர்வாக அனுமதியினை சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் வழங்கினார்.

    இதனை நாலு கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் மணிகண்டன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் துரைப்பாண்டி, முன்னாள் ஊராட்சி உறுப்பினர் கிளைச் செயலாளர் உடையப்பன், வார்டு உறுப்பினர் கண்ணன், அழகர் ஆகியோர் பெற்று கொண்டனர்.

    நிழற்குடை அமைத்து நிதிஒதுக்கிய செந்தில்நாதன் எம்.எல்.ஏ.வுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    • 63-வது வார்டு வார்டு சபை கூட்டத்தில் தீர்மானம்
    • பணிகள் குழு தலைவர் சாந்திமுருகன் தலைமையில் நடந்த கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு

    கோவை.

    கோவை மாநகராட்சி 63-வது வார்டில் நாகப்பன் தேவர் வீதியில் வார்டு சபை கூட்டம் கவுன்சிலர், பணிகள் குழு தலைவர் சாந்திமுருகன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து மனுக்களை அளித்தனர்.

    மேலும் மக்களின் அடிப்படை பிரச்சனை களான சாலை, குடிநீர், ஆழ்குழாய் கிணறு நீர், தினசரி குப்பைகள் சேகரித்தல் உள்ளிட பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மக்களின் குறைகளை உடன டியாக மத்திய மண்டல உதவ ஆணையாளர்,மண்டல சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர்,சுகாதார மேற்பார்வையாளர்களிடம் எடுத்து கூறி உடனடியாக தீர்வு காண அறிவுறுத்தினார்.

    மேலும் மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்கள் தங்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றை எடுத்துக்கொண்டு மத்திய மண்டல அலுவலகத்தில் உள்ள குறைதீர் மையத்தை அனுகினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் உரிமை தொகை வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    இந்த வார்டு சபை கூட்டத்தில் மத்திய மண்டல உதவி ஆணையாளர் மகேஷ் கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன் மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர்கள் மு.மா.ச.முருகன்,வெ.நா.உதயகுமார்,வார்டு செயலாளர் சண்முக சுந்தரம்,விளையாட்டு மற்றும் இளைஞர்கள் நலன் அணி கோவை மாநகர் மாவட்ட துணை அமைப்பாளர் உதயகுமார், முன்னாள் வட்ட பொறுப்பாளர் திரு செந்தில் குமார், பூத் கமிட்டி நிர்வாகிகள் பழனிசாமி,வசந்தகுமார், சன் செந்தில், சித்தி விநாயகர் கோயில் அறங்காவல் தலைவர் தனபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

    கோதாவரி-கிருஷ்ணா நதிகள் இணைப்பு திட்டம் குறித்து அறிவித்த மத்திய மந்திரி நிதின் கட்கரிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    மத்திய மந்திரி நிதின் கட்கரி டுவிட்டர் செய்தியில், தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டு வர கோதாவரி-கிருஷ்ணா நதிகளை இணைப்பது தான் எனது முதல் வேலை என்று பதிவிட்டு இருந்தார். அவரது டுவிட்டர் பதிவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கோதாவரி-கிருஷ்ணா நதிகள் இணைப்பு திட்டம் குறித்து அறிவித்த மத்திய மந்திரி நிதின் கட்கரிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில்,  தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் என்பதால் இந்த திட்டம் மிகவும் முக்கியமானது. கோதாவரி - கிருஷ்ணா நதிகள் இணைப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்ட நிதின் கட்கரிக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.
    சுபாஷ் சந்திரபோஸ் அணிந்த தொப்பியை வழங்கியதற்காக அவரது குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். #Modi #NetajiBose #LeaderCap
    புதுடெல்லி:

    நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 122-வது பிறந்ததினத்தை முன்னிட்டு நேற்று பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்துக்கு சென்று அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது மோடிக்கு சுபாஷ் சந்திரபோஸ் அணிந்த தொப்பியை அவரது குடும்பத்தினர் வழங்கினர்.



    பிரதமர் மோடி கூறும்போது, “சுபாஷ் சந்திரபோஸ் அணிந்த தொப்பியை வழங்கியதற்காக அவரது குடும்பத்தினருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தொப்பி செங்கோட்டை வளாகத்தில் உள்ள கிராந்தி மந்திர் அரங்கில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும். இதனை பார்வையிடும் இளைஞர்கள் போஸ் வாழ்க்கையை அறிந்து ஈர்க்கப்படுவார்கள் என நம்புகிறேன்” என்றார். #Modi #NetajiBose #LeaderCap 
    தொழில் அதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த உத்தரவிட்ட நிலையில், இந்த வழக்கில் உதவிய இங்கிலாந்து அதிகாரிகளுக்கு இந்தியா பாராட்டு தெரிவித்து உள்ளது. #VijayMallya #VijayMallyaextradition
    புதுடெல்லி:

    தொழில் அதிபர் விஜய் மல்லையா பொதுத்துறை வங்கியில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கி விட்டு அதை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி சென்றார். இது தொடர்பாக அமலாக்க துறை, சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

    விஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்து அதிகாரிகள் மூலமாக இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இந்த வழக்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டில் நடந்து வந்தது. இங்கிலாந்து கோர்ட்டு நேற்று முன்தினம் அளித்த பரபரப்பு தீர்ப்பில், விஜய் மல்லையாவை நாடு கடத்தலாம் என உத்தரவிட்டது.

    இந்த தீர்ப்பை மத்திய மந்திரி அருண் ஜெட்லி, பா.ஜ.க. தேசிய செயலாளர் அமித்ஷா உள்ளிட்ட பலரும் வரவேற்றனர். அமித்ஷா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஊழலை ஒழிக்க இந்தியா எடுத்து வரும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. இந்த பெருமை அனைத்தும் பிரதமர் நரேந்திர மோடியையே சாரும்” என பாராட்டு தெரிவித்தார்.

    அதே சமயம் தீர்ப்பு குறித்து விஜய் மல்லையா கூறுகையில், “இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. மேல்முறையீடு செய்ய எங்களுக்கு 14 நாட்கள் அவகாசம் தரப்பட்டு உள்ளது” என்றார்.

    இதனிடையே இந்த தீர்ப்பு குறித்து இந்திய வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பாக இங்கிலாந்து கோர்ட்டு அளித்த தீர்ப்பு எங்களுக்கு மிகுந்த மனநிறைவை தருகிறது. இந்த வழக்கில் உதவிய இங்கிலாந்து அதிகாரிகளுக்கு எங்களுடைய பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துகொள்கிறோம்.

    மிக விரைவில் அவரை இந்தியாவுக்கு கொண்டு வர தீவிர முயற்சி எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விஜய் மல்லையாவுக்கு எதிரான கடன் மோசடி வழக்கு மும்பை சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. கோர்ட்டில் விஜய் மல்லையாவின் வக்கீல் நேற்று ஆஜராகி, தேடப்படும் குற்றவாளி என அறிவிக்க கோரும் அமலாக்க துறையின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அவர் வாதிடுகையில், “அமலாக்க துறை கூறுவது போல விஜய் மல்லையா இந்தியாவை விட்டு ரகசியமாக தப்பவில்லை. அவர் வெளிநாடு வாழ் இந்தியர். லண்டனில் அவர் தங்கியிருக்கும் இடம் அனைவருக்கும் தெரியும்” என்றார்.  #VijayMallya #VijayMallyaextradition

    கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தியவர்களுக்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். #KarunanidhiDeath #MKStalin #DMK
    சென்னை:

    கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தியவர்களுக்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஓய்வறியா சூரியனாகத் திகழ்ந்த தலைவர் கருணாநிதியை அவரது உயிரினும் மேலான உடன்பிறப்புகளான நீங்களும், நானும் மட்டுமின்றி, உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் இழந்து கண் கலங்கி நிற்கிறோம்.



    தலைவர் நம்மை விட்டுப் பிரிந்த வேதனை மிகுந்த நிலையில் ஒட்டுமொத்த இந்தியாவே அவரது மரணத்தினால் கலங்கி நின்று இரங்கல் தெரிவித்தபோது, 95 வயதில், 81 வயது பொதுவாழ்வுக்கு சொந்தக்காரரான தலைவரின் பேராற்றலும் பெரும் சாதனைகளும் தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, இந்திய திருநாட்டுக்கே எந்த அளவு பயன் தந்திருக்கிறது என்பதை உணர்த்தியது.



    ஜனநாயகத்தின் அணையா தீபமாகவும், சுயமரியாதைக் கொள்கையின் குன்றாகவும், நாட்டின் பன்முகத்தன்மையை பாதுகாக்கும் போர்ப்படை தளபதியாகவும், தமிழர்களின் அழுத குரலுக்கு ஓடி வரும் உத்தம தலைவராகவும் திகழ்ந்த கருணாநிதி திராவிட இயக்கத்தின் தன்மான உணர்வுகளை போற்றிப் பாதுகாத்தவர்.

    அந்த மாபெரும் தலைவருக்கு இறுதி மரியாதை செலுத்திய பிரதமர், மத்திய மந்திரிகள், கவர்னர்கள், பல்வேறு மாநில முதல்-மந்திரிகள், அமைச்சர்கள், அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்கள், தமிழ்ச் சான்றோர், கலைத்துறையினர், பல்வேறு துறை சார்ந்த பெருமக்கள், தலைவர் கலைஞர் அவர்களின் உயிர்காக்கப் போராடிய காவேரி மருத்துவமனை நிர்வாகத்தினர், மருத்துவர்கள் மற்றும் அல்லும், பகலும் மருத்துவமனை வாசலிலேயே இருந்த பொதுமக்களுக்கும், தி.மு.க. தொண்டர்களுக்கும் கருணாநிதி உடல்நிலை குறித்த செய்திகளை உடனுக்குடன் வழங்கிய பத்திரிகை ஊடகத்துறையினர் என அனைவருக்கும் தி.மு.க.வின் செயல் தலைவர் என்ற முறையிலும், கருணாநிதியின் மகன் என்ற முறையிலும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.



    வங்கக் கடலோரம் துயில் கொள்ளும் தங்கத் தலைவரான பேரறிஞர் அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்றவரான நம் தலைவர் கருணாநிதி தான் திரும்பி வரும்போது அந்த இதயத்தை பத்திரமாக அண்ணாவின் காலடியில் ஒப்படைப்பதாக கவிதை வழியாக உறுதி மொழி அளித்திருந்தார்.

    அதனை நிறைவேற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு உள்ள நிலையில், மெரினா கடற்கரையில் அண்ணா சதுக்கத்தில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்கக்கோரி முறைப்படி கோரிக்கை விடுத்தோம். நேரிலும் சென்று வலியுறுத்தினோம். ஆனால், வஞ்சக அ.தி.மு.க அரசின் காழ்ப்புணர்சிகளாலும், அவர்களை ஆட்டுவிப்போரின் சூழ்ச்சிகளாலும் அண்ணா சதுக்கத்தில் இடம் ஒதுக்க மறுத்தனர்.



    அண்ணாவுக்கு கருணாநிதி அளித்த உறுதிமொழியை நிறைவேற்றிட உறுதிபூண்டு, சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி கண்டுள்ளோம். கருணாநிதி நிறைவேற்றிய திட்டங்களையும் நிகழ்த்திய சாதனைகளையும் போற்றும் வகையில் அண்ணாவுடன் இணையும் “இறுதிப் பரிசை” நீதிபதிகளே வழங்கி இருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கும், கடற்கரையில் நினைவிடங்கள் தொடர்பாக தொடுத்திருந்த வழக்குகளை திரும்பப் பெற்ற நல் உள்ளங்களுக்கும், நீதிமன்றத்தில் போராடிய தி.மு.க. சட்டத்துறையினருக்கும், குறிப்பாக உயர்நீதிமன்ற அமர்வில் அழுத்தந்திருத்தமான வாதங்களை வைத்து நீதி கிடைக்க செய்த தி.மு.க. சட்டதிட்ட திருத்த குழு செயலாளரும், மூத்த வழக்கறிஞருமான வில்சனுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    கருணாநிதியின் முகத்தை ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என்று சென்னைக்கு உணர்ச்சிப்பெருக்குடன் ஓடோடி வந்த லட்சோபலட்சம் தி.மு.க. தொண்டர்களையும், பொதுமக்களையும் தாங்கிப் பிடிக்க முடியாமல் ராஜாஜி அரங்கம், மெரினா கடற்கரை ஏன் ஒட்டு மொத்த சென்னையே தத்தளித்து நின்றது.

    கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள அனைத்து தலைவர்களும் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்து கருணாநிதிக்கு கனத்த இதயத்துடன் அஞ்சலி செலுத்தியதை உடன்பிறப்பே நீ கண்டாய், கதறி அழுதாய், கண் கலங்கி நின்றாய்.

    காவிரி நதி தீரத்தில் பிறந்து வளர்ந்த கருணாநிதியை காவேரி மருத்துவமனையிலிருந்து கொண்டு சென்றதிலிருந்து மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்தது வரை நீங்கள் கலங்கி நின்றாலும், ராணுவக் கட்டுப்பாட்டுடன் உனது “கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை” சிரமேற்கொண்டு நிறைவேற்றியதை இந்தியாவே திரும்பிப் பார்த்திருக்கிறது. கருணாநிதியின் புகழுக்குப் பெருமை சேர்த்துள்ளது. அதற்கு நன்றி சொல்ல வார்த்தைகள் கிடைக்காமல் தவிக்கிறேன்.

    வங்கக்கடல் மாநகரத்தில் புகுந்ததுபோல மக்கள் கடலாக காட்சியளித்த நிலையில், அதனை ஒழுங்குபடுத்துவதில் அக்கறை செலுத்திய காவல்துறையினருக்கும், அரசின் ஏற்பாடுகளை செய்த அரசு அதிகாரிகளுக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மிக சோதனையான காலகட்டத்தில் கருணாநிதியின் லட்சிய தீபத்தை நம் கையில் எடுத்துக் கொண்டு, தமிழர்களுக்கும், இந்திய திருநாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும் கடமையும் நம் அனைவருக்கும் இருக்கிறது.

    ஈடு செய்ய முடியாத பேரிழப்பான கருணாநிதியின் மரணத் துயரச் சுமையைத் தாங்கியபடி திரும்பிச் செல்கின்ற பயணத்தில் மிகவும் பத்திரமாகவும், அமைதியாகவும் செல்ல வேண்டும் என்றும் இரு கரம் கூப்பி வேண்டுகோள் விடுக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #KarunanidhiDeath #MKStalin #DMK 
    ×