search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The girl was killed"

    • சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். கட்டிட மேஸ்திரி இவரது மகள் சர்மிளா (4) நேற்று வழக்கம் போல் சர்மிளாவை அவர்களது பெற்றோர் நரசிங்கபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் கொண்டு சென்று விட்டுள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து அங்கன்வாடி மையத்திலிருந்து பிற்பகல் வீட்டிற்கு செல்வதற்காக வெளியே சர்மிளா வந்துள்ளார்.

    அப்போது அருகே இருக்கும் சாலையை கடக்க முயற்சித்த போது வாலாஜாவில் இருந்து சோளிங்கர் நோக்கி வந்த லாரி சாலையை கடக்க முயன்ற சர்மிளா மீது மோதியது. இதில் சர்மிளா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை போலீசார் விபத்தில் இறந்த சிறுமியின் உடலை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஏலகிரி மலை பாதையில் விபத்து
    • 2 பேர் படுகாயம்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அருகே மேல் கொத்தகுப்பம் கூத்தாண்டவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால் இவரது மகன் திலீப்குமார் (வயது 30) இவர் ஆம்பூர் பகுதியில் உள்ள ஷூ கம்பெனி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    ஏலகிரிமலை

    நேற்று விடுமுறை என்பதால் ஜெயபால் தனது மனைவி தனலட்சுமி, மகள்கள் யாக்ஷினி (8), மயூரி (5), ரோஷினி (1 1/2) மற்றும் தனலட்சுமி யின் தங்கை தனம் (24) ஆகிய 6 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு நேற்று காலை ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்று கண்டு களித்தனர்.

    அதன் பிறகு ஏலகிரி மலை சுற்றுலா முடிந்துக்கொண்டு நேற்று மாலை திலீப்குமார் தனது குடும்பத்தினர் உள்பட 6 பேரை மோட்டார் சைக்கிளில் அமரவைத்து மலை உச்சியில் இருந்து கீழ் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    விபத்தில் சிறுமி சாவு

    அப்போது 3 வது திருவள்ளுவர் கொண்டை ஊசி வளைவு அருகே சென்ற போது, மோட்டார் சைக்கிள் தனது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பாறை மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் மோட்டார் சைக்கிள் தூக்கி வீசப்பட்டதில் முன்னாள் அமர்ந்து இருந்த யாக்ஷினி பாறை மீது விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேலும் திலீப்குமார் மற்றும் தனலட்சுமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை அவ்வழியாக சென்று சுற்றுலா பயணிகள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விசாரணை

    இது குறித்து தகவலறிந்ததும் ஏலகிரி மலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுமியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

    இது குறித்து ஏலகிரி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்ற சிறுமி விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • தலைமறைவான தனியார் பள்ளி டிரைவரை தேடி வருகின்றனர்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம் :

    அரக்கோணம் அடுத்த கீழாந்துறை பகுதியை சேர்ந்தவர் தணிகைவேல். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகள் சிவானிஸ்ரீ (வயது8). இவர் சம்பத்ரா யன்பேட்டையில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் 3ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று மாலை சிவானிஸ்ரீ தனது வீட்டிலிருந்து சைக்கிளில் அதே பகுதியில் உள்ள ஆசிரியையிடம் டியூசனுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

    அப்போது சைனபுரத்தில் உள்ள தனியார் பள்ளியின் வேன் மாணவர்களை இறக்கி விட்டு பின்னோக்கி வந்ததாக ெதரிகிறது.

    இதில் எதிர்பாராத விதமாக சிறுமி சிவானிஸ்ரீ மீது மோதி பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது.

    பலத்த காயமடைந்த நிலையில் உடனடியாக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வந்தனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சிவானிஸ்ரீ இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து தகவலறிந்த அரக்கோணம் தாலுகா போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி அரக்கோணம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் பள்ளி நிர்வாகியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவான டிரைவரை தேடி வருகின்றனர்.

    ×