search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "THE PUBLIC"

    • அணைப்புதுார் மற்றும் சுள்ளிக்காடு பகுதியில், 130 வீடுகள்நல்லாறு ஓடை புறம்போக்கில் உள்ளன.
    • கூப்பிடு விநாயகர் கோவில் அருகில் 228 வீடுகள் கட்டுமான பணி நடந்து வருகிறது.

    அவிநாசி:

    ஓடைப்புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்புகளை காலி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.அதன்படி அவிநாசி வருவாய்த்துறை சார்பில், ஓடை புறம்போக்கில் உள்ள வீடுகள் அடையாளம் காணப்பட்டு அங்குள்ள வீடுகள் அகற்றப்படுவதுடன், அங்கு வசித்த குடியிருப்புவாசிகளுக்கு மாற்றிடம் ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது.

    இதில் திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட அணைப்புதுார் மற்றும் சுள்ளிக்காடு பகுதியில், 130 வீடுகள்நல்லாறு ஓடை புறம்போக்கில் உள்ளன. அவற்றை காலி செய்ய நீர்வளத்துறையினர் சார்பில், நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டும் காலி செய்யவில்லை.இதனால், தாசில்தார் ராகவி மற்றும் வருவாய் துறையினர், குடியிருப்புவாசிகளை சந்தித்து, ஓடை புறம்போக்கில் வசிப்பது. பாதுகாப்பற்றது என்றிருந்தாலும் ஒரு நாள், காலி செய்தே ஆக வேண்டிய நிலை வரும். குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் வீடு ஒதுக்க ஏற்பாடு செய்யப்படும்என்றனர். அதனை குடியிருப்புவாசிகளும் ஏற்று கொண்டனர்.

    இது குறித்துவருவாய்த்துறையினர் கூறுகையில்,89குடும்பத்தினர் வீடுகளை காலி செய்ய முன்வந்துள்ளனர். பூண்டியில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் அவர்களுக்கு வீடு ஒதுக்க ஏற்பாடு நடந்து வருகிறது. எஞ்சியோரில் சிலருக்கு வேறு இடத்தில் வீடுகள் இருந்தும், அவர்கள் வெளியேற தயங்குகின்றனர்.அவர்களும் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை எதிர்பார்க்கின்றனர். இவர்களை தவிர தகுதியுள்ளமற்றவர்களுக்கும் மாற்றிடம் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டியுள்ளது. அதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது என்றனர்.

    திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதியில், கூப்பிடு விநாயகர் கோவில் அருகில் 228 வீடுகள் கட்டுமான பணி நடந்து வருகிறது. மொத்தம் 18.8 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பணி இம்மாதம் இறுதியில் நிறைவு பெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.ஒரு வீட்டின் மதிப்பு ரூ. 8.39 லட்சம் .பயனாளிகள் தங்களின் பங்களிப்பு தொகையாக 89 ஆயிரத்து 600 ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி சுற்றுலா தலங்களில் 2-ம் நாளாக இன்று ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளனர்.

    சேலம்:

    உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் பொங்கல் பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இன்று மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது.

    பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி சுற்றுலா தலங்களில் 2-ம் நாளாக இன்று ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளனர். குறிப்பாக ஏற்காட்டில் சேலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இன்று வந்திருந்தனர். அங்கு கடும் குளிர் நிலவிய நிலையிலும், சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாகவே இருந்தது.

    ஏற்காட்டிற்கு வந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள மான் பூங்கா, ரோஜா தோட்டம், அண்ணா பூங்கா, மீன் பண்ணை, படகு குழாம், சேர்வராயன் கோவில், பக்கோடா பாயிண்ட், ஜென்ஸ்சீட், லேடிஸ் சீட் உட்பட பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

    குருவம்பட்டி

    குருவம்பட்டி உயிரியல் பூங்காவுக்கு இன்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்றனர். பின்னர் அங்குள்ள குரங்குகள், கிளிகள், பாம்பு, மான்கள், மயில்கள் உட்பட அனைத்தையும் பார்வையிட்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து சிறுவர்கள் அங்குள்ள ஊஞ்சல்கள், சருக்கு விளையாட்டுகளிலும் விளையாடி மகிழ்ந்தனர்.

    மேட்டூர் அணை

    இதே போல மேட்டூர் அணை பூங்காவுக்கும் சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இன்று காலை முதலே குவிந்தனர். அவர்கள் அங்குள்ள பகுதிகளை பார்வையிட்ட பின் வீடுகளில் இருந்து சமைத்துக் கொண்டு வந்த உணவுகளை குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    மேலும் காவேரி ஆற்றிலும் உற்சாகத்துடன் குளித்தனர். மேட்டூர் அணையின் அழகை அங்குள்ள கோபுரத்தின் மேல் நின்றும் பார்வை யிட்டனர்.

    சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்த தால், அந்த பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

    • திடக்கழிவு மேலாண்மை கூடாரத்தை இடித்து அகற்ற வேண்டும் என தனியார் நபர் ஒருவரால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
    • இதனை அறிந்த கிராம பொதுமக்கள் திரண்டு வந்து பொக்லைன் எந்திரத்தை சிறை பிடித்து உள்ளே செல்ல விடாமல் எந்திரத்தின் முன்பு அமர்ந்து தடுத்தனர்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் சோலார் அருகே உள்ள 46 புதூர் ஊராட்சி பிரியா பாறை அருகில் ஊராட்சிக்கு சொந்தமான 96 சென்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.

    இந்த இடத்தில் கடந்த 2007-ல் அப்போதைய மாவட்ட கலெக்டர் உதயசந்திரன் சுகாதார இயக்கத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை கூடாரத்தை திறந்து வைத்தார்.

    இதனையடுத்து 46 புதூர் பஞ்சாயத்து முழுவதும் உள்ள 10 ஆயிரம் குடும்பங்களில் சேகரமாகும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை கூடாரத்தில் கொட்டப்பட்டு, அங்கு மக்கும் குப்பை, மக்கா குப்பை தரம் பிரிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த பகுதி ஊராட்சிக்கு ஒதுக்குப்புறத்தில் இருப்பதால் கடந்த 15 ஆண்டுகளாக பிரச்சனை இல்லாமல் ஊராட்சி நிர்வாகம் குப்பை கொட்டி வந்தனர்.

    இந்நிலையில் குப்பை கொட்டும் திடக்கழிவு மேலாண்மை கூடாரத்தை இடித்து அகற்ற வேண்டும் என தனியார் நபர் ஒருவரால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    நீதிமன்ற உத்தரவுபடி நீதிமன்ற அட்வகேட் கமிஷனர் தர்மலிங்கம் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் திடக்கழிவு மேலாண்மை கூடாரத்தை இடிக்க பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் ேநற்று மாலை 3 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    இதனை அறிந்த கிராம பொதுமக்கள் திரண்டு வந்து பொக்லைன் எந்திரத்தை சிறை பிடித்து உள்ளே செல்ல விடாமல் எந்திரத்தின் முன்பு அமர்ந்து தடுத்தனர்.

    அப்போது நீதிமன்ற அட்வகேட் கமிஷனரிடம் ஊராட்சிக்கு வேறு பகுதியில் இடம் கொடுத்து விட்டு தற்பொழுது இயங்கும் திடக்கழிவு கூடாரத்தை இடித்து அகற்றுங்கள் என பொது மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

    மேலும் ஊராட்சிக்கு வேறு எங்கும் குப்பை கொட்ட இடம் இல்லாததால் அதே இடத்தை தொடர்ந்து இயங்க அனுமதிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.

    தவிர தற்பொழுது இயங்கும் கூடாரத்தை இடித்து அகற்றினால் ஊராட்சி முழுவதும் குப்பைகள் தேங்கி, குப்பை கள் அகற்ற முடியாமல் குப்பை காடாக மாறிவிடும். நோய் தொற்று அதிகரிக்கும். சுகாதாரம் சீர்குலைந்து விடும் என தெரிவித்தனர்.

    இதனையடுத்து நீதிமன்ற அட்வகேட் கமிஷனர் தர்மலிங்கம் பொதுமக்களின் கருத்தை ஆய்வு செய்வதாக தெரிவித்து சென்றார். இதனால் 46 புதூர் ஊராட்சியில் பரபரப்பு நிலவியது.

    • கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பள்ளிக்குள் நுழைய விடாமல் தடுத்தனர்.

    அரியலூர்:

    செந்துறை அடுத்த சோழன்குடிக்காடு கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பால்குடத் திருவிழாவுக்காக அப்பகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மக்கள், பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். இதற்கு காவல்துறையை சேர்ந்த சிலரும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த சிலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    மேலும் நேற்று காலை பள்ளிக்குச் சென்ற ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களை, பள்ளிக்குள் நுழைய விடாமல் மாற்று சமுகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தடுத்த நிறுத்தியுள்ளனர்.

    இது தொடர்பாக தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணைச் செயலாளர் அன்பானந்தம் தலைமையில் கலெக்டரிடம் மாணவர்கள் மற்றும் ெபற்றோர்கள் மனு அளிக்க கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

    அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், 10 நபர்கள் உள்ளே சென்று மனு அளிக்க கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அனைவரையும் உள்ளே அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியும், கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டம் சுமார் 2 மணி நேரம் நீடித்தது. ஆனாலும் அனைவரையும் உள்ளே அனுமதிக்காததால் ஆத்திரமடைந்த மக்கள், காவல்துறையை கண்டித்தும், கலெக்டர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனிடையே, கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, மக்கள் குறைதீர்க்கும் கூட்ட முகாமை முடித்துக்கொண்டு வெளியில் வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக்கூறி அவர்களிடமிருந்து மனுவினை பெற்றுக் கொண்டார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    ×