search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The voice of the mind"

    • ராமநாதபுரத்தில் பிரதமர் மோடியின் ‘மனதின் குரல்’ ஒலிபரப்பு நடந்தது.
    • மாவட்ட பா.ஜ.க தலைவர் ஏற்பாடு செய்திருந்தார்.

    ராமநாதபுரம்

    பிரதமர் நரேந்திர மோடி 'மனதின் குரல்' என்ற நிகழ்ச்சியின் வாயிலாக ரேடியோவில் பொதுமக்களிடம் பேசி வருகிறார். இதன் 100-வது பகுதியான நேற்றைய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். அவரது பேச்சை ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைவர் தரணி ஆர்.முருகேசன் ஏற்பாட்டில் மாவட்டம் முழுவதும் 800-க்கும் அதிகமான இடங்களில் பொதுமக்கள் கேட்கும் வகையில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. ராமநாதபுரம் அரண்மனை முன்பு பெரிய திரை மூலம் பிரதமரின் உரையை தமிழாக்கம் செய்து நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. மாவட்ட பார்வையாளர் முரளிதரன், மாநில விவசாய அணி பொதுச்செயலாளர் பிரவீன் முன்னிலை வகித்தனர்.

    மாநில கலை கலாச்சார பிரிவு செயலாளர் தாரணி ராமகிருஷ்ணன், மாவட்ட பொதுச் செயலாளர் மணிமாறன், பவர் நாகேந்திரன், ரமேஷ்பாபு, நிகழ்ச்சி பொறுப்பாளர்- மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமவீரபாகு, 'மனதின் குரல்' ஒருங்கிணைப்பாளர்கள் சவுந்திரபாண்டியன், ரமேஷ் பாபு, செய்தி தொடர்பாளர் குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் பா.ஜ.க மாநில விவசாய அணி பொதுச்செயலாளர் பிரவீன் ஏற்பாட்டில் தி.மு.க மாநில மருத்துவரணி இணை அமைப்பாளர் பிரபாகரன் தலைமையில் பலர் அந்த கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தனர்

    அவர்களை பா.ஜ.க. மாவட்ட தலைவர் ஆர்.தரணி முருகேசன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

    • முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு ஒளிபரப்பு செய்யப்பட்டது
    • சமூக ஆர்வலர்கள் உள்பட பலரும் ஆர்வமுடன் பார்வையிட்டனர்

    வேலூர்:

    பிரதமர் மோடியின் மனதின் குரல் 100-வது நிகழ்ச்சியையொட்டி வேலூர் கோட்டை 3டி ஒளி வெள்ளத்தில் ெஜாலித்தது.

    பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் வானொலியில் நாட்டு மக்களுடன் நேரடியாக உரையாடி வருகிறார்.

    அதன் 100-வது நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இந்நிகழ்ச்சியை வெற்றிப்பெறச் செய்யும் வகையில் நாடு முழுவதும் வரலாற்றுச் சிறப்புமிக்க 13 இடங்களில் 2 நாள் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    அந்த வகையில் சுதந்திரப் போராட்ட வரலாற்று சிறப்பு மிக்க வேலூர் கோட்டை மதில்கள் சனி, ஞாயிற்றுக்கிழமை இரவு 3டி ஒளி வெள்ளத்தில் ஜொலித்தன. தவிர முதல் நாளான சனிக்கிழமை சிறப்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    அப்போது வேலூர் கோட்டை சுவற்றில் 3டிதொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமான முறையில் பிரதமர் இதுவரை ஆற்றிய முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    மேலும் விடுதலைப் போராட்ட வரலாற்றின் சுருக்கமும் ஒளிபரப்பப்பட்டது. இதனை பொதுமக்கள், மாணவ, மாணவிகள் சமூக ஆர்வலர்கள் உள்பட பலரும் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

    ×